Daily Thanthi |
- “ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது ஓரவஞ்சனை” பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
- பாராளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு, மேலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு; நடிகர் அஜய் ரத்னம் கட்சியில் இணைந்தார்
- கொலை முயற்சி வழக்கில் தி.மு.க.வினர் 6 பேருக்கு ஜாமீன் சென்னைக்குள் நுழையக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு
- தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை வருகை
- மதசார்பற்ற நிலையை தொடர்ந்து பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு உலமாக்கள் நலவாரிய பேரவை முடிவு
- தேர்தல் பாதுகாப்பு பணிக்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கோவை வந்தனர்
- ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை அணிக்கு முதல் வெற்றி டெல்லியை சுருட்டியது
- டாஸ்மாக் கடையில் ரூ.6 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
- தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப்–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
| “ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது ஓரவஞ்சனை” பிரேமலதா விஜயகாந்த் பேச்சு Posted: 21 Apr 2014 02:12 PM PDT மதுரை, "ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது, ஓரவஞ்சனை" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். குப்பை நிரம்பிய மதுரை மதுரை பாராளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்ப £ளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதா விஜய காந்த் நேற்று கீழவாசல் அரசம ரத்துப் பிள்ளையார் கோவில் அருகே வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- கீழவாசல், காமராஜர் சாலை பகுதியில் சவுராஷ்டிரா சமுதாய மக்கள் அதிகம் வசிக் கிறீர்கள். உங்களின் நீண்டநாள் கோரிக்கையான மிகவும் பிற்ப டுத்தப்பட்ட வகுப்பில் சவுரா ஷ்டிரா வகுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை யை நாங்கள் நிறைவேற்று வோம். மதுரையில் 40 ஆண்டுகளு க்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட் டது. அதன்பின் விரிவுபடுத்தப் படவில்லை. இதனால் மதுரை முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் 2-வது பெரிய நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரை யில் எங்கு பார்த்தாலும் சாக் கடைகளும், குப்பைகளும் நிரம்பி காணப்படுகிறது. மின் வெட்டு, குடிநீர் பிரச்சி னையால் தவிக்கிறது மதுரை. வைகை குடிநீர் திட்டம், மண லூர் குடிநீர் திட்டம் செயல் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய ஆஸ்பத்திரியில் எந்த வசதியும் இல்லை. வேதனை ஆட்சி இதற்கு காரணம் தி.மு.க.-அ.தி.மு.க. தான். அரசு கஜான £வை சுரண்டுவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். ஜெயலலிதா அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு சாதனையையும் செய்யவில் லை. அதனால் தான் அ.தி.மு. க.வினர் பணம் கொடுத்தாவது ஓட்டுகளை பெற்றுவிட வேண் டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டி ருக்கி ன்றனர். தற்போது தமிழகத்தில் நடைபெறுவது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி. நிர்வாகத்திறமை அற்ற ஆட்சி. காசுக்காக ஓட்டுப் போடாதீர். உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று ஒவ்வொரு வீட்டின் வாச லிலும் எழுதி வையுங்கள். தி.மு.க.-அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அப்போது தான் உங்களுக்கு பாவவிமோசனம் கிடைக்கும். 3 முறையாக ஆட்சி செய்யும் நரேந்திரமோடி, அவரது செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் ஜெயலலிதா ஒரு விரு தாவது பெற்றாரா. மாறாக வாய்தா ராணி, அறிக்கை அரசி என 2 பட்டங்களை பெற்றுள்ளார். நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய ஜெய லலிதா, காய்ச்சல் இருந்த போதிலும் பிரசாரம் செய்து வருகிறேன் என்றார். அவருக்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாகவே காய்ச்சல் வந்துள்ளது. அழகிரி நீக்கம் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஊழல் செய்தவர் ராஜா. அவருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்து, தனது பக்கத் திலேயே வைத்துள்ளார் கரு ணாநிதி. ஸ்பெக்டரம் ஊழ லில் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் ஒரு குற்றமு ம் செய்யாத அழகிரியை தி.மு.க. அடிப்படை உறுப்பி னரில் இருந்து நீக்கி உத்தர விட்டார். அதற்கான காரண த்தை கருணாநிதி வெளியிட வேண்டும். இதற்கு அழகிரி கூறியதுபோல, அவரை மிரட் டியே சிலர் இந்த செயலை செய்ய வைத்துள்ளனர். ஒரு நல்ல தந்தையாக இருப்பவர், தன் குழந்தைகள் அனைவ¬ ரயும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். அதைவிட்டு ஓரவஞ்சனை செய்கிறார் கடந்த பா.ஜனதா ஆட்சியி ன்போது தங்கநாற்கர சாலை யை வாஜ்பாய் செயல்படு த்தினார். தற்போது தேசிய நதிகளை மோடி இணைத்து சாதனை படைப்பார். எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்று, தமிழக பிரச்சி னைகள் அனைத்தையும் போ க்குவோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் ஜெய் ந்த்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். image: category: |
| Posted: 21 Apr 2014 01:52 PM PDT சென்னை, அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 24–ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரான முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இன்று (நேற்று), கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள் வாக்கு அருள்வோர் பேரவை கூட்டமைப்பின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் எஸ்ராஜ.£, பூ கட்டுவோர் பேரவையின் மாநில அமைப்பாளர் துரை. ரமேஷ், அருள்வாக்கு அருள்வோர் பேரவையைச் சேர்ந்த முனியம்மாள் உள்ளிட்டோரும், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன், மாநில அமைப்புச் செயலாளர் ச.அருண் மாசிலாமணி, தலைமை நிலையச் செயலாளர்களான இரா.வினோத்குமார், அலெக்சாண்டர் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரான முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். நடிகர் அஜய் ரத்னம் மற்றும் அவருடைய மனைவி சத்யஸ்ரீ ஆகியோர் நேரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 21 Apr 2014 01:44 PM PDT சென்னை, சென்னை ராயப்பேட்டையில் கடந்த 19–ந்தேதி தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க. தேர்தல் குழு பொறுப்பாளர் வக்கீல் சிவகுமாரை கொடூரமாக தாக்கியதாக, தி.மு.க.வை சேர்ந்த யுவராஜ், ஜெயகுமார், கருணாதங்கம், வினோத், கேசவன் ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் ராயப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் அன்புதுரையை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் அன்புதுரை முன்ஜாமீன் கேட்டும், யுவராஜ் உட்பட 5 தி.மு.க.வினர் ஜாமீன் கேட்டும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அருணாஜெகதீசன், அனைவரும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், 'மனுதாரர் அன்புதுரைக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீனும், யுவராஜ் உட்பட 5 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீனும் வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை செங்கல்பட்டில் தங்கியிருந்து, அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24–ந்தேதி மட்டும் வாக்களிப்பதற்காக, இவர்கள் அனைவரும் சென்னைக்கு வரலாம்' என்று கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை வருகை Posted: 21 Apr 2014 01:39 PM PDT சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மூன்று கட்டங்களாக 5 ஆயிரத்து 500 துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கார் மாநிலத்திலிருந்து பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு கம்பெனி (83 பேர்) மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மார்க்கமாக போலீஸ் வாகனங்களில் புதுச்சேரிக்கு தேர்தல் பணியில் ஈடுபட அழைத்து செல்லப்பட்டனர். தமிழகத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் கடைசி கட்டமாக இன்றும், நாளையும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. image: category:Tagging:News Group Category: |
| மதசார்பற்ற நிலையை தொடர்ந்து பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு உலமாக்கள் நலவாரிய பேரவை முடிவு Posted: 21 Apr 2014 01:22 PM PDT கோவை, மதசார்பற்ற நிலையை தொடர்ந்து பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உலமாக்கள் நலவாரிய பேரவை முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து உலமாக்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சி.டி.அஸ்ரப் அலி கூறியதாவது:- எதிரான அறிக்கை பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், மதமாற்றத்திற்கு தடை விதிக்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்பன போன்றவை இடம்பெற்றுள்ளன. இது சிறுபான்மையினருக்கு எதிரான அறிக்கையாகும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். கோவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரபுவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மதசார்பற்ற நிலையை தொடர்ந்து பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பேணி பாதுகாக்கவும் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அஸ்ரப் அலி கூறினார். பேட்டியின்போது கோவை மாவட்ட தலைவர் எஸ்.அஸ்ரப்அலி, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ், ஹசன் சிராஜ், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாய்சாதிக் உள்பட பலர் உடன் இருந்தனர். image: category: |
| தேர்தல் பாதுகாப்பு பணிக்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கோவை வந்தனர் Posted: 21 Apr 2014 01:16 PM PDT கோவை. கோவையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கோவை வந்தனர். எல்லை பாதுகாப்பு படையினர் தமிழகத்தில் நாளைமறுநாள் (24-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிகளில் உள்ளூர் போலீசாருடன் வெளிமாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 20 நாட்களுக்கு முன்பு ஒரு கம்பெனி ஆந்திர சிறப்பு போலீசார் கோவை வந்து முகாமிட்டுள்ளனர். அவர்கள் பறக்கும் படையில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கட்டாக் நகரிலிருந்து சிறப்பு ரெயிலில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று சேலம், ஈரோடு, கோவை, திருப்பூருக்கு வந்தனர். நவீன ரக துப்பாக்கிகள் கோவைக்காக ஒதுக்கப்பட்ட 2 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்த ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வீரர்கள் தங்களுடன் ஏ.கே.47 ரக எந்திர துப்பாக்கி, டி.56 தானியங்கி துப்பாக்கி உள்பட பல்வேறு நவீன ரக துப்பாக்கிகள், உடைகள், சமையல் சாதனங்கள், படுக்கைகள் உள்பட அனைத்து தளவாட பொருட்களையும் கொண்டு வந்திருந்தனர்.அவற்றை தள்ளுவண்டியில் ஏற்றி ரெயில் நிலையத்தின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன்களில் ஏற்றினார்கள். அதன் பின்னர் கோவை மாநகருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு கம்பெனி(90 பேர்) எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வேன்களில் ஏறி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு சென்றனர். அவர்கள் அங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை புறநகருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு கம்பெனி (90 பேர்) எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் சூலூர் மற்றும் துடியலூருக்கு வேன்களில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் கோவை மாநகருக்கு ஒதுக்கப்பட்ட 'எப்' பிரிவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துணை சூப்பிரண்டு கவுதம்குமார் தலைமையிலும், புறநகருக்கு ஒதுக்கப்பட்ட 'டி' பிரிவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துணை சூப்பிரண்டு ஜிதேந்தர் சோப்ரா தலைமையிலும் செயல்படுவார்கள். இவர்கள் நாளை (புதன்கிழமை)முதல் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் ரோந்து பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய ரிசர்வ் போலீசார் இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 2 பட்டாலியன் மத்திய ரிசர்வ் போலீசார் (சி.ஆர்.பி.எப்.) ரெயிலில் புறப்பட்டு நேற்று இரவு கோவை வந்தனர்.இதில் ஒரு பட்டாலியன் போலீசார் கோவை மாநகருக்கும், ஒரு பட்டாலியன் போலீசார் கோவை புறநகருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளனர். image: category: |
| ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை அணிக்கு முதல் வெற்றி டெல்லியை சுருட்டியது Posted: 21 Apr 2014 01:07 PM PDT அபுதாபி, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பிராவோ ஆடவில்லை 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 8–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வெய்ன் பிராவோ மற்றும் நெஹரா, பவான் நெஜி ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹில்பனாஸ், மிதுன் மன்ஹாஸ், ஐஸ்வர் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தினேஷ் கார்த்திக் கேப்டன் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை தினேஷ்கார்த்திக் கவனித்தார். மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கடந்த ஆட்டத்தை போல் சென்னை அணி நேற்று பேட்டிங்கில் தொடக்கத்தில் அதிரடி காட்டவில்லை, நிதானமான போக்கை கடைப்பிடித்தது. 4–வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் டுமினியிடம் எளிதான கேட்ச்சில் இருந்து தப்பிய பிரன்டன் மெக்கல்லம் (9 ரன்கள்) அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். சுரேஷ்ரெய்னா அரை சதம் அடுத்து களம் கண்ட சுரேஷ்ரெய்னா நிலைத்து நின்று அடித்து ஆடினார். 10 ஓவர்களில் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 65 ரன்னை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் 29 ரன்னில் (28 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் போல்டு ஆனார். எம்.விஜய் வீசிய ஒரு ஓவரில் சுரேஷ்ரெய்னா 3 பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்தார். 36 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை எட்டிய சுரேஷ்ரெய்னா 56 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து தங்கள் பங்குக்கு டுபிளிஸ்சிஸ் 24 ரன்னும் (17 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் டோனி 32 ரன்னும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), ரவீந்திர ஜடேஜா 7 ரன்னும், அஸ்வின் ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
178 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. மிதுன் மன்ஹாஸ் 13 ரன்னுடனும் (5 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஹில்பனாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஷபாஸ் நதீம், ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சென்னை அணி வெற்றி டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15.4 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜிம்மி நீஷம் 22 ரன்னும், கேப்டன் தினேஷ்கார்த்திக் 21 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். காயம் காரணமாக நாதன் கவுல்டர் நிலே பேட்டிங் செய்யவில்லை. சென்னை அணி தரப்பில் ஐஸ்வர் பாண்டே, ரவீந்திரஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், ஹில்பனாஸ், மொகித் ஷர்மா, வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சென்னை வீரர் சுரேஷ்ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். 2–வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோற்று இருந்தது. 3–வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 2–வது தோல்வியாகும். image: category:Tagging: |
| டாஸ்மாக் கடையில் ரூ.6 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு Posted: 21 Apr 2014 01:06 PM PDT சரவணம்பட்டி, கோவை அருகே மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி டாஸ் மாக் கடையில் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இரும்பு பெட்டகம் உடைப்பு கோவையை அடுத்த சரவணம்பட்டி உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையின் பொறுப்பாளர் கருப்பையா, உதவியாளர் முருகன் ஆகியோர் கடந்த 19 மற்றும் 20-ந் தேதி வசூலான தொகையான ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்தை கடையின் இரும்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்றனர். நேற்றுக்காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை இதுகுறித்து கோவை சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தனபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.இதில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பணத்துடன் மேற்கூரை வழியாக வெளியே செல்ல முயன்ற போது 100 ரூபாய் கட்டு மட்டும் கீழே விழுந்து விட்டது.ஆனால் கொள்ளையர்கள் மீண்டும் இறங்கி அந்த பணத்தை எடுக்க முடியாது என்பதால் கையில் கிடைத்த ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்துடன் தப்பி சென்று விட்டனர். டாஸ்மாக் கடையில் அதிக பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை.மேலும் இரும்பு பெட்டகத்தை கொள்ளையர்கள் உடைத்த போது அந்த சத்தம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு எப்படி கேட்காமல் போனது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்ணிடம் நகை பறிப்பு கோவை கணபதி அலமேலு மங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 65) இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் தனலட்சுமி அருகில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மாயமாகி விட்டான். இதுகுறித்து தனலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category: |
| Posted: 21 Apr 2014 01:04 PM PDT சென்னை, பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார். சூறாவளி பிரசாரம் புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார். அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். சென்னையில் 3 நாட்கள் அதன் பின்னர், கடந்த 19–ந் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் (வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை) வேன் மூலம் வீதி, வீதியாக சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 19–ந் தேதி வாக்கு சேகரித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆலந்தூர் தாலுகா அலுவலகம், ஆலந்தூர் நீதிமன்றம், ரசாக் கார்டன், சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பேசினார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார். 40 வேட்பாளர்கள் தொடர்ந்து, தென்சென்னை தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கந்தன்சாவடி பஸ் நிறுத்தம், ஐந்துவிளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் ஆகிய இடங்களில் பேசினார். இறுதியாக, தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேரும் பங்கேற்றனர். ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமனும் இதில் பங்கேற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேனில் இருந்தபடி அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசினார். வேனின் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் 40 வேட்பாளர்களும் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். பிரசாரத்தை நிறைவு செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பா.வளர்மதி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் பூசனிக்காய் கொண்டு ஆரத்தி எடுத்து உடைத்தனர். பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பினார். அங்கேயும், திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தி பூசனிக்காய் உடைத்தனர். 1½ மாத பயணம் மார்ச் மாதம் 3–ந் தேதி பிரசாரத்தை தொடங்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1½ மாத கால தொடர் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு நேற்று தனது பிரசாரத்தை முடித்துள்ளார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப்–ஐதராபாத் அணிகள் இன்று மோதல் Posted: 21 Apr 2014 01:03 PM PDT ஷார்ஜா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப்–ஐதராபாத் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இந்த போட்டியில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 9–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இமாலய இலக்கை எட்டுவதில்... கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், 2–வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தியது. பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் 205 ரன் இலக்கையும், 2–வது ஆட்டத்தில் 191 ரன் இலக்கையும் எளிதாக கடந்து, எத்தகைய இமாலய இலக்கையும் எங்களால் எட்டுப்பிடிக்க முடியும் என்று பறைசாற்றி வீறுநடை போடுகிறது. அந்த அணியின் மேக்ஸ்வெல் முதல் ஆட்டத்தில் 43 பந்துகளில் 95 ரன்னும், 2–வது ஆட்டத்தில் 45 பந்துகளில் 89 ரன்னும் குவித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவருக்கு பக்கபலமாக டேவிட் மில்லரும் இரண்டு ஆட்டத்திலும் அரை சதம் கண்டு அசத்தினார். அதிரடிக்கு அணை போடுமா? மேக்ஸ்வெல், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்துக்கு ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் அணை போட மறந்தால் அவர்களின் நிலை அதோ கதி தான் ஆக நேரிடும். அதேநேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு கடந்த இரண்டு ஆட்டங்களிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினார்கள். 3–வது முறை ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் களம் காணும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு முறையும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியே வென்று இருக்கிறது. அணி வீரர்கள் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் வருமாறு:– கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), புஜாரா, ஷேவாக், விருத்திமான் சஹா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஜான்சன், முரளி கார்த்திக், அக்ஷர் பட்டேல், பர்விந்தர் அவனா, எல்.பாலாஜி. ஐதராபாத் சன் ரைசர்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், லோகேஷ் ராகுல், டேரன் சேமி, வேணுகோபால் ராவ், கரண் ஷர்மா, ஸ்டெயின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
