Daily Thanthi |
- தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட வெற்றி பெற முடியாது ப.சிதம்பரம்
- காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 40 முதல் 50 சீட்கள் வரை தான் கிடைக்கும் ராம்தேவ் குரு சொல்கிறார்
- எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுகள்
- தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் புகார் தேர்தல் கமிஷனிடம் மனு
- தாய்–மகன் அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன்வர வேண்டும் நரேந்திர மோடி பேச்சு
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்
- வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாத 10 கட்சிகளுக்கு வரி விலக்கை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை
- பெரம்பலூர் பிரசாரத்தின்போது, பாடலூர் விஜயை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்
- தயாநிதிமாறனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம்
- சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் பிரசாரம்
| தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட வெற்றி பெற முடியாது ப.சிதம்பரம் Posted: 20 Apr 2014 08:43 AM PDT திருமயம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து திருமயம் ஒன்றியம் மனைப்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், இன்றைக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் யார் அரசை அமைப்பது என்பது குறித்து நடைபெறும் தேர்தல் ஆகும். இது மத்திய அரசை நிர்ணயம் செய்வது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு இடையே நடக்கும் போட்டியாகும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையே நடைபெறும் போட்டி அல்ல. சட்டமன்றத்திற்கு நடக்கும் போட்டியானால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்குமான போட்டி என்று சொல்லலாம். தமிழகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட வெற்றி பெற முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்கு போடும் ஓட்டு செல்லாத ஓட்டுகள்தான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்திற்கு பாதுகாவலனாக விளங்கும். பருவ மழை பொய்த்த இந்த காலத்தில் இந்த திட்டம் தான் மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதியம் ரூ.167ஐ தர முடியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என்று கூறினார். image: category:News Group Category: |
| காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 40 முதல் 50 சீட்கள் வரை தான் கிடைக்கும் ராம்தேவ் குரு சொல்கிறார் Posted: 20 Apr 2014 08:35 AM PDT மும்பை, நரேந்திர மோடியின் ஆதரவாளரான யோகா ராம்தேவ் குரு மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– காங்கிரஸ் என்பது தாய்–மகன் கட்சி. தாயும் (சோனியா காந்தி), மகனும் (ராகுல் காந்தி) சேர்ந்து நாட்டை ஆண்டு வருகிறார்கள். சோனியா காந்தி தான் நாட்டின் தலைமை பிரதமர். அவர்களுக்கு ஏழைகள் மீது ஈவு, இரக்கம் எதுவும் கிடையாது. ஏழை மக்களின் துயரங்களை எண்ணி அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவில் பின்தங்கி இருப்பதால், காங்கிரஸ் கட்சியினர் செய்த பாவங்களை அவர்கள் அறியவில்லை. ஆட்சியில் இருந்து காங்கிரஸ் விடைபெற்று செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வெறும் 40 முதல் 50 சீட்கள் வரை தான் கிடைக்கும். இந்தியாவில் மோடி அலை மட்டும் வீசவில்லை, புயலும் சேர்ந்து வீசுகிறது. அத்தகைய புயல் பெரிய மரத்தையும் வேறோடு சாய்த்துவிடும். பாராளுமன்ற தேர்தலுக்கு பின், ஊழலில் சிக்கி திளைத்த மந்திரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். இவ்வாறு யோகா ராம்தேவ் குரு தெரிவித்தார். image: News Group Category: |
| எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுகள் Posted: 20 Apr 2014 08:28 AM PDT எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுடன் நம்பமுடியாத புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பூப்பெய்தும் போது பொருத்தப்படும் இந்த தகட்டை அவர்கள் அழகாக கருதுகின்றனர். தகடுகள் மூலிகைப்பொருட்கள் சேர்த்து களி மண்ணால் செய்யப்படுகிறது. வினோதமான சடங்கில் பெண்கள் பூப்பெய்ததும் அவர்களுடையை கீழ் தாடையில் உள்ள இரண்டு பற்கள் நீக்கப்படுகிறது. முன்னதாக அவர்களது கீழ் உதட்டில் துழைகள் போடப்பட்டு தகடுகள் பொறுத்தப்படுகிறது. பின்னர் அது படிபடியாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் உதடு விரிந்து நீண்டு கொண்டே வருகிறது. உதடு நீட்டமாகுவதை கொண்டு பெண்களின் தந்தைகள் அவர்களுக்கு திருமணம் ஆகும் போது வரதட்சணையை இதன் மூலம் நிர்ணையிக்கின்றனர். ஆனால் இந்த வன்முறையை சமீப காலமாக பழங்குடியின பெண்கள் மறுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category: |
| தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் புகார் தேர்தல் கமிஷனிடம் மனு Posted: 20 Apr 2014 08:20 AM PDT டெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஒன்றில் தனது விசாரணைக்கு கீழ் உள்ள மிகவும் உணர்ச்சிகரமான அரசியல் வழக்கு (ராஜீவ்காந்தி கொலை வழக்கு) குறித்து கருத்து வெளியிட்டு இருக்கிறார். அப்போது தனது ஓய்வுக்கு முன்பு, அதாவது 25-ந்தேதி முன் இந்த வழக்கிற்கு நல்ல தீர்ப்பு வழங்க போவதாக கூறி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு உறுதிமொழியின்படி, ஒரு நீதிபதி தனது வழக்கு குறித்த கருத்துகளை வெளியே கூறுவது தவறு என்று நம்புகிறேன். அதன்படி, மிகவும் உணர்ச்சிகரமான ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்த கருத்துகள் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுமக்கள் மத்தியில் நீதிபதி வெளியிட்டுள்ள கருத்து தேவையில்லாத ஒன்றாகும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கூறியிருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தலைமை தேர்தல் அதிகாரியான நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். image: category:News Group Category: |
| தாய்–மகன் அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன்வர வேண்டும் நரேந்திர மோடி பேச்சு Posted: 20 Apr 2014 08:16 AM PDT நாசிக், மத்தியில் தாய்–மகன் (சோனியா, ராகுல்) அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று நரேந்திர மோடி பேசினார். பிரசாரம் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மராட்டிய மாநிலம் நாசிக்கில் தேர்தல் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்கள் ஏ.டி.நானா பாட்டீல் (ஜல்காவ் தொகுதி), ரக்ஷய கட்சே (ராவேர் தொகுதி) ஆகியோரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் பேசி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:– தூக்கி எறியுங்கள் மத்தியில் தாய்–மகனின் (சோனியா, ராகுல்) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டும். இதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். எங்களது பா.ஜனதா –சிவசேனா கூட்டணியை ஆதரிப்பதன் மூலம், அந்த அரசை விரட்டியடிக்க முடியும். உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த தொகுதியான அமேதியை (ராகுல்காந்தி தொகுதி) தக்க வைத்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள், நாட்டை வழிநடத்த நினைப்பது முடியாத காரியம். தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் தலைவரான மத்திய மந்திரி சரத்பவாருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டது. இதனால் தான் அவர் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதை தவிர்த்து, மேல்–சபைக்கு சென்று விட்டார். ஜல்காவ் பருத்தி விவசாயிகள் தங்களது விளைபொருளை விற்க குஜராத் வரவேண்டிய நிலை உள்ளது. இதற்கு யார் காரணம்?. இதனால் காங்கிரசை புறக்கணியுங்கள். பா.ஜனதா– சிவசேனா கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். image: category:Tagging:News Group Category: |
| முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள் Posted: 20 Apr 2014 08:02 AM PDT சென்னை, புதியதாக என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலை முறை மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாத 10 கட்சிகளுக்கு வரி விலக்கை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை Posted: 20 Apr 2014 07:55 AM PDT புதுடெல்லி வரவு, செலவு கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத 10 அரசியல் கட்சிகளின் வரி விலக்கு பலன்களை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், வருமான வரிக்கு இசைவான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29சி படி (அரசியல் கட்சிகளுக்கு வந்த நன்கொடைகள் பற்றி தெரிவிக்காதது) 10 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள அந்த 10 கட்சிகளும் காலக்கெடுவுக்கு பின்னர் மிகவும் தாமதமாக கணக்கை தாக்கல் செய்தவை ஆகும். image: category:Tagging:News Group Category: |
| பெரம்பலூர் பிரசாரத்தின்போது, பாடலூர் விஜயை மு.க.ஸ்டாலின் சந்தித்தார் Posted: 20 Apr 2014 07:42 AM PDT |
| தயாநிதிமாறனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் Posted: 20 Apr 2014 07:37 AM PDT |
| சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் பிரசாரம் Posted: 20 Apr 2014 07:35 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


