Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


அனுமதியின்றி பிரசாரம் நடிகர் ராமராஜன் மீது வழக்கு

Posted: 18 Apr 2014 09:12 AM PDT

பொன்னேரி

திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து கடந்த புதன்கிழமை நடிகர் ராமராஜன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அதன் பின்னர் அவர் கோளூர் மெதூர் பகுதியிலும் ஆதரவு திரட்டினார். கோளூரில் பிரசாரம் செய்ய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

category:

News Group Category:

ஜனநாயகத்துக்கு ஆபத்து; பதவியை கைப்பற்ற பாரதீய ஜனதா எதையும் செய்வதையும் சோனியா காந்தி பேச்சு

Posted: 18 Apr 2014 08:46 AM PDT

போபால்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சத்தீஷ்கார் மாநிலம் சர்குஜா, மத்தியபிரதேச மாநிலம் மந்த்சார் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது, பிரதமர் பதவியை கைப்பற்ற எந்த எல்லையையும் கடக்க பா.ஜனதா தயாராக உள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்து. தேர்தல் வரும், போகும். சிலர் தோற்பார்கள், ஜெயிப்பார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக எதையும் செய்வதையும், பொய்யை உண்மையாக முத்திரை குத்துவதையும் ஜனநாயகம் தாங்குமா? நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.

ஒற்றை நபரின் கையில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது என்பது எனக்குத் தெரியும். எனவே, நீங்கள் கவனமாக முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் காங்கிரஸ் அரசா, மற்ற கட்சி அரசா என்ற பாரபட்சம் பார்க்காமல், மத்திய நிதியை வழங்கி வருகிறோம். ஆனால், சத்தீஷ்கார் மாநில அரசு அவற்றை முறையாக பயன்படுத்தவில்லை. தற்போது, குஜராத் மாடல் வளர்ச்சி என்று எவ்வளவோ சொல்லப்படுகிறது. ஆனால், அங்கு 40 சதவீதம் பேருக்கு குடிநீர் கிடையாது. குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 27 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, பதவி ஆசையில் பா.ஜனதா பொய் சொல்லி வருகிறது.

மத்தியபிரதேசம், ஊழல் பிரதேசமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிப்பதாக கூறிவிட்டு, ஊழலை மட்டுமே அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, தகுதியற்றவர்கள் வேலை பெற்றுள்ளனர். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

News Group Category:

மனநலம் பாதித்த பெண் கற்பழித்து கொலை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு நிராகரித்தது

Posted: 18 Apr 2014 08:21 AM PDT

மும்பை,

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மனநலம் பாதித்த பெண்

நாசிக் மாவட்டம் சந்த்வாடு பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2010–ம் ஆண்டு மர்மமான முறையில் தன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதே பகுதியை சேர்ந்த அசோக் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றதும், அதனால் அந்த பெண்ணின் சகோதரர் சஞ்சயிடம் அடிவாங்கியதும் தெரியவந்தது.

விடுதலை

பின்னர் அசோக்கை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், கீழ்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹரிதாஸ், கத்காரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மனுதாரர் அங்கு தான் இருந்தார் என்பதற்கு அரசு தரப்பில் எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை சுட்டிகாட்டினார்கள். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார் என்பதை உணர்ந்த நீதிபதிகள், அசோக்கை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தனர்.
 

category:

News Group Category:

'நான் தேர்தலில் தோற்கவும் தயாராக இருக்கிறேன், அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்' நரேந்திர மோடி

Posted: 18 Apr 2014 08:12 AM PDT

புதுடெல்லி,

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி  ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது வாரணாசியில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உங்களுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விடுப்பீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு மோடி பதில் கூறுகையில், ''இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் என யாரும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க மாட்டேன். ஆனால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் ஒன்றை வேண்டுகோளாக வைக்கிறேன். அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் அது நல்லது. பொருந்தவில்லை என்றால் நான் தேர்தலில் தோற்கவும் தயாராக இருக்கிறேன். நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன். எனது தாரக மந்திரம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று என்பதுதான். மதச் சார்பின்மை என்ற பெயரால் நாட்டின் சகோதரர்கள் பிளவு படுத்தப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். மதச்சார்பின்மை நாட்டை பிளவுபடுத்தி விடும்'' என்று கூறினார்.
 

News Group Category:

கெஜ்ரிவால் மீதுச் சரமாரியாக கற்கள் வீச்சு, பாதுகாப்பு தர தயார் பா.ஜனதா அறிவிப்பு

Posted: 18 Apr 2014 07:48 AM PDT

வாரணாசி,

வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நேற்று இரவு 500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு அவர் மீது சரமாரியாக கற்களையும், செங்கற்களையும் வீசினார்கள். இதற்கு காரணம் பா.ஜனதாதான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நளின் ஹோக்லி கூறுகையில், ''இந்தியாவில் அரசியல் என்பது திரைப்பட கதை வசனம் அல்ல. அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவில் திரைப்பட பாணி நடிப்பின் மூலம் தீர்வு காணவும் முடியாது'' என்றார். குஜராத் மாநிலத்தின் மூத்த பா.ஜனதா தலைவர் சுனில் ஓசா கூறும்போது, ''வாரணாசி மக்களுக்கு யார் மீதும் இதுபோல் முட்டையை வீசி பழக்கமில்லை. கெஜ்ரிவால் விரும்பினால் அவருக்காக எங்களது தொண்டர்களை அனுப்பி பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

News Group Category:

மேட்டூர் அணையின் வலது கரை பகுதி

Posted: 18 Apr 2014 07:46 AM PDT

மேட்டூர் அணையின் வலது கரை பகுதி தண்ணீர் இன்றி வறண்டு இருப்பதை படத்தில் காணலாம்.

8

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

Posted: 18 Apr 2014 07:44 AM PDT

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்ந்து உள்ள பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.

9

‘கை’க்கு எதிராக ‘எதிர்க்கட்சிகளின் கை’ மீண்டும் ஓங்கிய 1989 தேர்தல்

Posted: 18 Apr 2014 07:42 AM PDT

பாரதீய ஜனதா ஆதரவுடன் 'தேசிய முன்னணி' ஆட்சி அமைத்தது

நமது பாராளுமன்றத்துக்கு 1951 முதல் 1971 வரை நடந்த 5 தேர்தல்களிலும் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 6–வது தேர்தலில் (1977) முதல் முறையாக காங்கிரஸ் தோல்வியைத்தழுவியது. அடுத்த இரு தேர்தல்களிலும் (1980, 84) சுதாரித்துக்கொண்டு மீண்டும் ஆட்சி பீடம் ஏறியது. ஆனால் 1989 தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் சறுக்கல் ஏற்பட்டது.

இந்தியாவின் 9–வது பொதுத்தேர்தலான அது, 1989–ம் ஆண்டு நவம்பர் மாதம் 22–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடந்தது. 24 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 529 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்த வாக்காளர்கள் 49 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 129 பேர். ஆண்கள் 26 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரத்து 142 பேர். பெண்கள் 23 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரத்து 987 பேர்.

 30 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 61.95 ஆகும். தேசிய கட்சிகளைச் சேர்ந்த 1,378 பேர், மாநில கட்சிகளைச் சேர்ந்த 143 பேர், அங்கீகாரம் பெறாத கட்சிகளைச் சேர்ந்த 926 பேர், சுயேச்சைகள் 3 ஆயிரத்து 713 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 160 பேர் போட்டியிட்டனர். அதில் 5 ஆயிரத்து 3 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தனிமெஜாரிட்டி இல்லை

இந்திய தேர்தல் வரலாற்றில், முதன் முதலாக இந்த தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை.

காங்கிரஸ் கட்சி 510 இடங்களில் போட்டியிட்டு, 197 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி 11 கோடியே 88 லட்சத்து 94 ஆயிரத்து 702 வாக்குகளை பெற்றது.

இரண்டாம் இடத்தை வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் பெற்றது. அந்த கட்சி 244 இடங்களில் போட்டியிட்டு 143 இடங்களில் வென்றது. அந்த கட்சி 5 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 521 வாக்குகளை பெற்றது.

மூன்றாம் இடத்தை பாரதீய ஜனதா பிடித்தது. அந்த கட்சி 225 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 33 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 12 இடங்களிலும், அ.தி.மு.க.11 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ராஜீவ் காந்தி அமேதி தொகுதியிலும், வி.பி.சிங் உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அதே போல் பிற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.

ஆனால் ஜனதா தள தலைவர் வி.பி.சிங் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இதனால் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு, வி.பி.சிங் 1989–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2–ந் தேதி பிரதமர் ஆனார். ஆனால் ஜனதா தள கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக சந்திரசேகர், அதில் இருந்து விலகி சமாஜ்வாடி ஜனதா கட்சியை தொடங்கினார். அவருக்கு 55க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு கொடுத்தனர்.  இந்த கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்று ராஜீவ் காந்தி அறிவித்தார். அதோடு பாரதீய ஜனதாவும் ராமர் கோவில் பிரச்சினையை கிளப்பி, வி.பி. சிங்குக்கு ஆதரவை வாபஸ் பெற்றது.  இதனால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, சந்திரசேகர் 1990–ம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ந் தேதி பிரதமர் ஆனார்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் உளவு பார்த்ததாக கூறி, காங்கிரஸ் கட்சி சந்திரசேகருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் அவரது ஆட்சியும் ஒரேஆண்டில்கவிழ்ந்தது.

தமிழகம் தந்த மாறுபட்ட முடிவு

1989 தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தின் தீர்ப்பு மாறுபட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர். மறைவையடுத்து, 1989 ஜனவரியில் சட்டமன்றத்தேர்தல் நடந்தபோது, தி.மு.கழகம் பெரும்வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க.–ஜெ. அணி, காங்கிரஸ், அ.தி.மு.க.–ஜா.அணி ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. பிளவுபட்டு இருந்த அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 1989 இறுதியில் நடந்த பாராளுமன்றத்தேர்தலை சந்தித்தது. இதில் அந்தக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் நாகப்பட்டினம் தவிர, மீதி 38 இடங்களையும் அந்தக்கூட்டணி கைப்பற்றியது. அதுவரை தி.மு.க. வின் அசைக்கமுடியாத கோட்டைகளாக இருந்த வடசென்னை, மத்திய சென்னை ஆகியவை கூட 'கை'மாறின. வடசென்னையில் காங்கிரசின் கை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியனும், மத்திய சென்னையில் காங்கிரஸ் வேட்பாளர் இரா.அன்பரசுவும் வெற்றி பெற்றனர்.

நாகப்பட்டினத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் எம்.செல்வராசு 21,523 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வீரமுரசுவை வென்றார்.

போபர்ஸ் ஊழல்

1984ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம், இந்திரா காந்தியின் மறைவு ஏற்படுத்திய அனுதாப அலை. பிரதமரான ராஜீவ் காந்தி, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். சிலவற்றில் அவருக்கு எதிரான கருத்து தான் உருவாகியது. உதாரணமாக, பணக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்த வி.பி.சிங்கின் நிதித்துறையை மாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போல் போபர்ஸ் ஊழல், இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கை போன்ற பிரச்சினைகளால், ராஜீவ் காந்தியால், 1989–ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற முடியவில்லை.
 

தேசிய முன்னணியின் வெற்றிக்கு முன்னோடி 'அலகாபாத்  இடைத்தேர்தல்'

ராஜீவ்காந்தி 1984–ம் ஆண்டு பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்). அப்போது வி.பி.சிங் பெரும் பணக்காரர்கள் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் ராஜீவ் காந்தி, அவரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராணுவ அமைச்சராக மாற்றினார்.அப்போது போபர்ஸ் ஊழலில் நடந்த முறைகேட்டை வி.பி.சிங் அம்பலப்படுத்தினார். இந்த ஊழலில் ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜீவ் காந்தி வி.பி.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் மனமுடைந்த வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். ஜன்மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கிய அவர் பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 1988–ம் ஆண்டு அக்டோபர் 11–ந் தேதி அலகாபாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார். வி.பி.சிங்கை தோற்கடிக்க ராஜீவ் காந்தி தீவிர முயற்சி எடுத்தார். ஆனால் பலன் இல்லை. வி.பி.சிங் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சாஸ்திரி தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 65க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர். ஆனால் வி.பி.சிங் வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலே 1989–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்கான ஒருமுன்னோட்டமாக அமைந்தது.

கேபினட் அந்தஸ்தில் தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி பதவி

1989 தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதபோதிலும், பிரதமர் வி.பி. சிங் தனது மந்திரிசபையில் தி.மு.க. வை சேர்த்துக்கொண்டார். அதாவது அப்போது ராஜ்ய சபை எம்.பி.யாக இருந்த முரசொலி மாறன் மத்திய மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க ஆசிரியர்களுக்கு மிரட்டல்; முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 18 Apr 2014 07:37 AM PDT

லக்னோ,

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அம்மாநில ஆசிரியர்களை சமாஜ்வாடி கட்சிகே வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டினார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி முலாயம் சிங் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முலாயம் சிங் யாதவ், மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக உள்ள ஆசிரியர்கள் நிரந்தர அரசு ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்றால் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

News Group Category:

எந்த மாநிலத்தையும் பழிவாங்க மாட்டேன்;நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும்

Posted: 18 Apr 2014 07:34 AM PDT

கொல்கத்தா

நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் எந்த மாநிலத்தையும் நான் பழிவாங்க மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார்.

பழிவாங்க மாட்டேன்

குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி ஒரு வங்காள மொழி பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

பா.ஜனதாவும் திரிணாமுல் காங்கிரசும் ஒன்றையன்று விமர்சித்து வருகின்றன. இரு கட்சிகளும் வெவ்வேறானவை. கொள்கைரீதியாகவும் வேறுபட்ட கட்சிகள். தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் விமர்சித்துக்கொள்வது இயல்பானதுதான். ஆனால் நான் பதவிக்கு வந்தால் எந்த மாநிலத்தையும் பழிவாங்க மாட்டேன்.

என்னை பற்றி மேற்கு வங்காள முதல்&மந்திரி மம்தா பானர்ஜி என்ன சொன்னாலும் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்க மாட்டேன். மாறாக நான் ஆட்சிக்கு வரும்போது வளர்ச்சி விஷயத்தில் மேற்கு வங்காளத்தை புறக்கணிக்க மாட்டேன் என்று உறுதி அளிப்பேன். எங்களுக்கிடையே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மத்திய&மாநில அரசு உறவு பிரச்சினை எழாது.

ஒத்துழைப்பு

நான் பிரதமர் ஆனால் மேற்கு வங்காளத்தை தொழில்மயமாக்க விரும்புகிறேன். அதற்குரிய சூழ்நிலையை உருவாக்குவதில் மம்தா பானர்ஜி அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வளர்ச்சி விஷயத்தில் மம்தா அரசு ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடாது என்று கருதுகிறேன்.

கடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியின்போது சிங்குரில் நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்தபோது அத்தொழிற்சாலையை குஜராத்துக்கு வரச் செய்தேன். மேற்கு வங்காளத்துக்கான வாய்ப்பை பறிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இருப்பினும் அது எனக்கு ஒரு குற்ற உணர்வாகவே உள்ளது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

image: 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™