Daily Thanthi |
- ஐ.பி.எல். கண்ணோட்டம்
- சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்து என்ஜின்-2 பெட்டிகள் தடம் புரண்டன
- அபுதாபியில் இன்று நடக்கிறது 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழா விருந்து நிகழ்ச்சி மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே நடனமாடுகிறார்கள்
- அமெரிக்க ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் தீபிகா பலிக்கல் தோல்வி
- ஐ.பி.எல். அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் வெங்கடேஷ் பிரசாத் வற்புறுத்தல்
- தேசிய 20 ஓவர் கிரிக்கெட் கடைசி பந்தில் பரோடா அணி ‘சாம்பியன்’ உத்தரபிரதேசத்தை வீழ்த்தியது
- மாநில கூடைப்பந்து செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி
- பார்முலா1 கார் பந்தய ஜாம்பவான் சூமாக்கர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்
- வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் சோனியாகாந்தி, நரேந்திரமோடி நாளை வாக்கு சேகரிக்கிறார்கள்
- ஆம் ஆத்மி கட்சியில் கோடீசுவர வேட்பாளர்கள்
| Posted: 14 Apr 2014 01:00 PM PDT 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. அதற்கு முன்பாக இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளை பற்றி திரும்பி பார்த்து வருகிறோம். நேற்று, முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டியை அலசினோம். இன்று எஞ்சிய 4 போட்டிகள் பற்றிய அலசல் வருமாறு:– 2010–ம் ஆண்டு... 3–வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் மார்ச் 12–ந் தேதி முதல் ஏப்ரல் 25–ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டிக்கான இறுதி ஏலப்பட்டியலில் இடம் பெற்ற 66 வீரர்களில் 11 பேர் ஏலம் போனார்கள். வழக்கம் போல பாகிஸ்தான் வீரர்களை எந்தவொரு அணியும் சீண்டவில்லை. வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பொல்லார்ட்டை, மும்பை இந்தியன்ஸ் அணியும், நியூசிலாந்தை சேர்ந்த ஷேன்பான்ட்டை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதிகபட்சமாக தலா ரூ.3.42 கோடிக்கு ஏலம் எடுத்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. முதலாவது அரை இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், இரண்டாவது அரை இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியையும் சாய்த்தன. இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ்ரெய்னா ஆட்டம் இழக்காமல் 57 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி கோப்பையை முதல் முறையாக உச்சி முகர்ந்தது. தெண்டுல்கர் அடித்த 48 ரன்கள் அணியின் வெற்றிக்கு கைகொடுக்காமல் போனது. இந்த போட்டி தொடரில் 4 ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர் சச்சின் தெண்டுல்கர் (15 ஆட்டங்களில் 618 ரன்கள்) அதிக ரன்கள் குவித்தார். ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் பிரக்யான் ஓஜா விக்கெட்டுகள் வீழ்த்தியதில் (21 விக்கெட்டுகள்) முதலிடம் பிடித்தார். இந்த சீசனில் 4 பேர் சதம் கண்டனர்.பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா தொடரில் அதிக சிக்சர்கள் (27 சிக்சர்கள்) விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 2011–ம் ஆண்டு புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்ததால் இந்த முறை அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. அரைஇறுதிக்கு பதிலாக பிளே–ஆப் சுற்று முறை அறிமுகம் ஆனது. மொத்தம் 74 ஆட்டங்கள் அரங்கேறின. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்தன. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. எம்.விஜய் 95 ரன்களும், மைக் ஹஸ்சி 63 ரன்களும் திரட்டினர். அடுத்து ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதுவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் விசுவரூபம் எடுத்த பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல் முக்கியமான இந்த ஆட்டத்தில் டக்–அவுட் ஆனார். சென்னை அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன் கோப்பையை தக்க வைத்துக் கொண்ட முதல் அணி என்ற பெருமையை பெற்றது. இந்த சீசனில் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 12 ஆட்டத்தில் களம் புகுந்து 2 சதம், 44 சிக்சருடன் 608 ரன்கள் குவித்தார். ஒரு போட்டி தொடரில் 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் தனது பெயரில் இணைத்துக் கொண்டார். இந்த சீசனில் மொத்தம் 6 சதங்கள் எடுக்கப்பட்டன. அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா (28 விக்கெட்) முதலிடம் பிடித்தார். அதிக தொகையாக ரூ.1702 கோடிக்கு வாங்கப்பட்ட புனே வாரியர்ஸ் 14 ஆட்டங்களில் 4–ல் மட்டுமே வெற்றி பெற்று 9–வது இடத்திற்கும், ரூ.1533 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கொச்சி அணி 6 வெற்றியுடன் 8–வது இடத்திற்கும் தள்ளப்பட்டன.
2012–ம் ஆண்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டதால் அணிகளின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது. மொத்தம் 76 ஆட்டங்கள் நடந்தன. தொடக்கம் மந்தமாக இருந்தாலும் போகப் போக போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை முந்தைய சீசனை விட உயர்ந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. காரணம், பல ஆட்டங்கள் ரொம்ப பரபரப்பாக நகர்ந்தன. 19 ஆட்டங்களின் முடிவுகளை கடைசி ஓவர் தான் தீர்மானித்தன. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றை எட்டின. பிளே–ஆப் முடிவில் சென்னை சூப்பர் கிங்சும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சென்னையில் நடந்த இறுதிசுற்றில் முதலில் பேட் செய்த சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் கொல்கத்தா அணி மன்விந்தர் பிஸ்லா (89 ரன்கள்), காலிஸ் (69 ரன்கள்) ஆகியோரின் அதிரடியின் உதவியுடன் 2 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக கோப்பையை வசப்படுத்திய கொல்கத்தா அணி, சென்னை அணியின் 'ஹாட்ரிக்' கனவை தகர்த்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 733 ரன்கள் சேகரித்து தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தாலும் அந்த அணியால் லீக் சுற்றை கூட தாண்ட முடியவில்லை. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து சுழலில் மாயாஜாலம் காட்டிய வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சுனில் நரின் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். சுனில் நரின், ஓவருக்கு சராசரியாக 5.47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமான பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். உள்ளூர் டி.வி. சேனல் நடத்திய ரகசிய பேரத்தில் சுதிந்திரா, மொனிஷ் மிஸ்ரா, அபினவ் பாலி உள்பட 5 உள்ளூர் வீரர்கள் சூதாட்ட வலையில் சிக்கியது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாதுகாவலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கானுக்கு இந்த மைதானத்திற்குள் நுழைய 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது போன்ற சலசலப்புகளும் இந்த சீசனில் முக்கியமான இடத்தை பெற்றன. 2013–ம் ஆண்டு பல்வேறு விதிகளை மீறிய ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய அணியை தேர்வு செய்ய ஏலம் விடப்பட்டது. இதில் சன் குழுமம் ஐதராபாத் அணியை வாங்கி ஐதராபாத் சன் ரைசர்ஸ் என்று பெயர் சூட்டியது. டி.எல்.எப். நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள விரும்பாததால் பெப்சி நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றது. போட்டியில் வழக்கம் போல் 9 அணிகள் கலந்து கொண்டன. லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐத அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற கவுரவ தொப்பி இந்த முறை பல வீரர்களிடம் மாறி மாறி வந்து கொண்டே இருந்தது. கடைசியில் கிறிஸ் கெய்லை (708 ரன்) பின்னுக்கு தள்ளிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்சி (733 ரன்) அந்த தொப்பியை தட்டிச் சென்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் வெய்ன் பிராவோ 18 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி, ஓரு ஐ.பி.எல். சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார். இந்த ஐ.பி.எல்.–ல் சர்ச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது. போட்டி நடந்து கொண்டிருந்த போதே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சில அணிகளின் நிர்வாகிகளும் சிக்கினர். இந்த விவகாரம் இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. 2013–ம் ஆண்டுடன் ஐ.பி.ல். கிரிக்கெட்டில் இருந்து சச்சின் தெண்டுல்கரும் (மும்பை இந்தியன்ஸ்), ராகுல் டிராவிட்டும் (ராஜஸ்தான் ராயல்ஸ்) விடைபெற்றனர். image: category: |
| சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்து என்ஜின்-2 பெட்டிகள் தடம் புரண்டன Posted: 14 Apr 2014 12:57 PM PDT திருச்சி, திருச்சி குட்ஷெட் யார்டில் சரக்கு ரெயில்கள் மோதிய பயங்கர விபத்தில் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரெயில்கள் மோதி விபத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே குட்ஷெட் யார்டு உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில்களில் வரும் உரம், கோதுமை, அரிசி, சிமெண்டு உள்ளிட்டவை பாதுகாப்பாக இறக்கப்பட்டு அரசு கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களும் சரக்கு ரெயில்களில் இந்த மார்க்கத்தின் வழியாக வந்து செல்லும். இந்த நிலையில் நேற்று மாலை 5.50 மணிக்கு அரியலூரில் இருந்து தும்கூர் நோக்கி சிமெண்டு லோடு ஏற்றிய சரக்கு ரெயில் குட்ஷெட் யார்டுக்குள் 2-வது தண்டவாளத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று 1-வது தண்டவாளத்தில் இருந்து மெதுவாக புறப்பட்டு சென்றது. எதிர், எதிர் திசையில் அடுத்தடுத்த தண்டவாளங்களில் இரு சரக்கு ரெயில்களும் சென்று கொண்டு இருந்தபோது சிமெண்டு லோடு சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் கடந்து சென்று விட்டன. ஆனால் 21 மற்றும் 22 ஆகிய 2 பெட்டிகள் மட்டும் 2-வது தண்டவாளத்தில் இருந்து 1-வது தண்டவாளத்துக்குள் தடம் மாறி சென்றது. அப்போது 2 பெட்டிகளும் 1-வது தண்டவாளத்தில் காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது. என்ஜின்-2 பெட்டிகள் தடம் புரண்டன இதில் சரக்கு ரெயில் என்ஜின் தண்டவாளத்தில் இருந்த கீழே இறங்கி தடம் புரண்டது. அதேபோல் சிமெண்டு லோடு இருந்த 2 பெட்டிகளும் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. திடீரென்று 'பாயிண்ட்' திறந்து கொண்டதால் பெட்டிகள் தடம் மாறி சென்று விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனே இது குறித்து என்ஜின் டிரைவர் மைக் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து சிமெண்டு லோடுடன் சென்ற சரக்கு ரெயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா ரெங்கராஜன், கூடுதல் மேலாளர் இக்பால், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் செந்தில், இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை அவர்கள் தடம் புரண்ட 2 பெட்டிகளில் இருந்தும் சிமெண்டு லோடுகளை கீழே இறக்கி, ராட்சத கிரேன் மூலம் பெட்டிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் சரக்கு ரெயில் பெட்டிகள் மோதி சேதம் அடைந்த என்ஜினையும் அப்புறப்படுத்தி பழுது பார்க்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்றன. இதற்கிடையே குட்ஷெட் யார்டுக்குள் வரும் சரக்கு ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அனைத்து சரக்கு ரெயில்களும் 3, 4, 5 ஆகிய தண்டவாளங்களில் மாற்றி அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த திடீர் விபத்துக்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு சரக்கு ரெயில்களும் அடுத்தடுத்து தண்டவாளங்களில் ஒரே நேரத்தில் எதிர், எதிர்திசையில் கடந்து சென்றபோது பாயிண்ட் திறந்து கொண்டது எப்படி? இதற்கு யார் காரணம் என துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. image: category: |
| Posted: 14 Apr 2014 12:38 PM PDT அபுதாபி, 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இரவு விருந்து நிகழ்ச்சி அபுதாபியில் இன்று நடக்கிறது. இதில் இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோரின் நடனம் இடம் பெறுகிறது. மும்பை–கொல்கத்தா மோதல் 2008–ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் முதல் கட்ட (இருபது) லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 30–ந் தேதி வரை நடக்கிறது. எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் மே 2–ந் தேதி முதல் ஜூன் 1–ந் தேதி வரை நடைபெறுகிறது. அபுதாபியில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா விருந்து வழக்கமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்க லீக் ஆட்ட மோதலுக்கு முந்தைய நாளில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறும். பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான 7–வது ஐ.பி.எல். போட்டியில் கோலாகலமான தொடக்க விழா நிகழ்ச்சி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இருப்பினும் 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான இரவு விருந்து நடைபெறுகிறது. இதில் எல்லா அணியின் வீரர்களுடன், உரிமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான ஷில்பா ஷெட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தி நடிகைகள் நடனம் இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் இன்னிசை விருந்துடன், இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோர் இந்தி பாடல்களுக்கு நடனமாடி கலக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. image: category:News Group Category: |
| அமெரிக்க ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் தீபிகா பலிக்கல் தோல்வி Posted: 14 Apr 2014 12:37 PM PDT ஹவுஸ்டன், டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் நடந்தது இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 12–வது இடத்தில் இருக்கும் 22 வயதான இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், உலக ஜூனியர் சாம்பியனும், 13–ம் நிலை வீராங்கனையுமான 18 வயதான எகிப்து நாட்டின் நூர் எல் ஷெர்பினியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இருவருமே தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்கள். முதல் செட்டை எல் ஷெர்பினியும், 2–வது செட்டை தீபிகா பலிக்கலும் தனதாக்கினார்கள். வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3–வது செட்டில் இருவரும் 7–7 என்ற புள்ளிகள் வரை சமநிலை வகித்தனர். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய நூர் எல் ஷெர்பினி அந்த செட்டை தனதாக்கி, தீபிகா பலிக்கலின் சாம்பியன் பட்ட கனவை கலைத்தார். 48 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் நூர் எல் ஷெர்பினி 11–7, 5–11, 11–7 என்ற செட் கணக்கில் தீபிகா பலிக்கலை வீழ்த்தி 4–வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். category: |
| ஐ.பி.எல். அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் வெங்கடேஷ் பிரசாத் வற்புறுத்தல் Posted: 14 Apr 2014 12:36 PM PDT பெங்களூர், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை அதிகமாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு இந்தியர் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த சஞ்சய் பாங்கர் உள்ளார். மற்ற 7 அணிகளின் தலைமை பயிற்சியாளர்களாகவும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் எந்த அணியிலும் பணியாற்றும் வாய்ப்பு கிட்டவில்லை. வெங்கடேஷ் பிரசாத் வேண்டுகோள் இந்த நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:– இது இந்தியன் பிரிமியர் லீக் போட்டியாகும். இதில் வெளிநாடு பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் இடம் பெறுவது நல்ல விஷயம் தான். இதன் மூலம் நமது வீரர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் காண முடியும். அதேநேரத்தில் எல்லா வெளிநாட்டினரும் அறிவாளிகள் என்று சொல்ல முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் உள்ள பல வீரர்கள், நிறைய பயிற்சியாளர்கள் வெளிநாட்டினரை விட சிறந்தவர்களாக செயல்படுவதை நான் பார்த்து இருக்கிறேன். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் அங்கம் வகிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. எல்லா அணிகளும் தமது நிர்வாகத்தில் இந்திய பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆடும் லெவன் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இடம் பெறுவார்கள். எஞ்சிய வீரர்கள் அனைவரும் இந்தியர்கள். அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் வெளியில் இருந்து நடக்கும் விஷயங்களை ஆய்வு செய்து எனது திறமையை வளர்த்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். வெங்கடேஷ் பிரசாத் 1996 முதல் 2001–ம் ஆண்டு வரை 33 டெஸ்ட் மற்றும் 161 ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. image: category: |
| தேசிய 20 ஓவர் கிரிக்கெட் கடைசி பந்தில் பரோடா அணி ‘சாம்பியன்’ உத்தரபிரதேசத்தை வீழ்த்தியது Posted: 14 Apr 2014 12:35 PM PDT மும்பை, தேசிய 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் பரோடா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 20 ஓவர் கிரிக்கெட் சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பரோரா–உத்தரபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிதி வாக்மோடே 42 ரன்கள் சேர்த்தார். உத்தரபிரதேச அணி தரப்பில் பிரவீன்குமார், முர்தசா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். கடைசி பந்தில் வெற்றி பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உத்தரபிரதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தாகர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், 2–வது விக்கெட் ஜோடியான பிரசாந்த் குப்தா–எக்லவா திவேதி ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். அணியின் ஸ்கோர் 116 ரன்னை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. குப்தா 68 ரன்னிலும், திவேதி 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே வெளியேறினார்கள். கடைசி ஓவரில் உத்தரபிரதேச அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷி அரோத் வீசிய அந்த ஓவரில் பிரவீன்குமார் 4–வது பந்தில் தான் ஒரு ரன் எடுத்தார். 5–வது பந்தை உபேந்திரயாதவ் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால் கடைசி பந்தில் உபேந்திர யாதவ், விக்கெட் கீப்பர் ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பரோடா 'சாம்பியன்' இதனால் திரில்லான இந்த ஆட்டத்தில் பரோடா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரோடா அணி இந்த கோப்பையை வெல்வது 2–வது முறையாகும். ஏற்கனவே 2012–ம் ஆண்டில் வென்று இருந்தது. image: category: |
| மாநில கூடைப்பந்து செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி Posted: 14 Apr 2014 12:34 PM PDT சென்னை, ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் மற்றும் கெட்ஜீ.காம் சார்பில் மாநில அளவிலான 9–வது கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடல், ராயபுரம் பீட்டர்ஸ் பள்ளி, நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்துஸ்தான் ஜாமர்ஸ் அணி 57–13 என்ற புள்ளி கணக்கில் எஸ்.எஸ்.பி.சி. அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் ராக்வேந்திரா கிளப் அணி 48–28 என்ற புள்ளி கணக்கில் ஐ.சி.எப்.இன்ஸ்டிடியூட்டையும், அம்பத்தூர் கிளப் அணி 43–25 என்ற புள்ளி கணக்கில் பாக்ப் கிளப் அணியையும், ஷலோம் அணி 45–25 என்ற புள்ளி கணக்கில் கொரட்டூர் அணியையும், எழும்பூர் அணி 40–14 என்ற புள்ளி கணக்கில் என்.எம்.கிளப் அணியையும், செயின்ட் பீட்டர்ஸ் அணி 68–30 என்ற புள்ளி கணக்கில் துறைமுக கழக அணியையும், அசோக் லேலண்ட் அணி 70–50 என்ற புள்ளி கணக்கில் தெற்கு ரெயில்வேயையும் தோற்கடித்தன. image: category: |
| பார்முலா1 கார் பந்தய ஜாம்பவான் சூமாக்கர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் Posted: 14 Apr 2014 12:32 PM PDT சிட்னி, பார்முலா1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவரான ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் சூமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பர் 29–ந் தேதி பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் மயக்க (கோமா) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமாவில் இருந்து சூமாக்கர் தேறுவது சந்தேகம் என்று பலரும் தெரிவித்த நிலையில் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் சூமாக்கரின் மானேஜர் சபிம் கேம் அளித்த பேட்டியில், 'சில சமயங்களில் கண்விழிப்பதிலும், உடல் அசைவிலும் சூமாக்கரிடம் லேசான முன்னேற்றம் தென்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினரின் நலன் கருதி வேறு எதையும் என்னால் சொல்ல முடியாது' என்று தெரிவித்துள்ளார். image: category: |
| Posted: 14 Apr 2014 12:23 PM PDT சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 5 முனைப்போட்டி தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்த பாராளுமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும், தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டும் தேர்தலை சந்திக்கின்றன. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தனியாக இணைந்து 19 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மேலும், முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் ஆம் ஆத்மி கட்சியும் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. களத்தில் 875 வேட்பாளர்கள் இவ்வாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அரசியல் கட்சிகள் இடையே விறுவிறுப்பான போட்டி ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, இம்மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி முடிவடைந்தது. அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் தமிழ்நாட்டில் மொத்தம் 1,256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது 348 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 875 பேர் களத்தில் உள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பல கட்சிகள் பிரசாரத்தை தொடங்கினாலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான கடந்த 9-ந் தேதிக்கு பிறகு, தமிழகத்தில் படிப்படியாக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. 22-ந் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எங்கும் பிரசார முழக்கங்கள், இரவு நேரங்களில் பொதுக்கூட்டங்கள் என்று சுறுசுறுப்பாக ஓட்டு வேட்டை நடந்து வருகிறது. ஜெயலலிதா - கருணாநிதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆரணி, வேலூர் ஆகிய தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 17-ந் தேதி (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி, தர்மபுரியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், இறுதியாக 19, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீபெரும்புதூரில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறார். 17, 19, 20, 21 ஆகிய தேதிகளில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளும் அவர் சென்னையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். பா.ஜ.க. தேசிய தலைவர்கள் இதேபோல், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாளை மற்றும் நாளை மறுநாள் (17-ந் தேதி) தமிழகத்தில் ஹெலிகாப்டர் மூலம் சூறாவளி பயணம் மேற்கொண்டு, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி நாளையும், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி 18-ந் தேதியும், வெங்கையாநாயுடு 17, 18, 19-ந் தேதிகளிலும், தேசிய செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி 20-ந் தேதியும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். சோனியாகாந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாளை (புதன்கிழமை) நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திரிபுரா முதல்-அமைச்சர் மாணிக் சர்க்கார், திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசுகிறார். அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா கரத், மன்னார்குடி, நாகப்பட்டினத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். விஜயகாந்த் இதேபோல், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ஆம் ஆத்மி கட்சியில் கோடீசுவர வேட்பாளர்கள் Posted: 14 Apr 2014 12:16 PM PDT புதுடெல்லி 'ஆம் ஆத்மி' என்றால் சாமானிய மக்கள் என்று அர்த்தம். ஆம் ஆத்மி கட்சி தொடங்கி ஒரு வருடமே கடந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலை சந்தித்த அந்தக் கட்சி முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலையும் எதிர்கொள்கிறது. சாமானிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீசுவரர்கள் என்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.189 கோடி. காசியாபாத் வேட்பாளருக்கு ரூ.30 கோடி சொத்தும் சோனிபட் வேட்பாளருக்கு ரூ.25 கோடி, சாலக்குடி (கேரளா) ரூ.20 கோடி, நாக்பூர் தொகுதி வேட்பாளருக்கு ரூ.19 கோடி மதிப்பிலான சொத்தும் உள்ளது. பாலி (ராஜஸ்தான்) தொகுதி வேட்பாளருக்கு ரூ.18 கோடி, பதான் (உ.பி.) தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தும் உள்ளது. டெல்லியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.9 கோடிவரை மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்திக்கு ரூ.5 கோடி அளவிலும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவருக்கு ரூ.8 கோடி மதிப்பு சொத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். image: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

ராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் பிளே–ஆப் சுற்றை எட்டின. இதில் இருந்து சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் இறுதிப்போட்டிக்கு வந்தன. இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி, பொல்லார்ட் 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்ததன் விளைவாக 9 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இலக்கை நெருங்க முடியாமல் தவித்த சென்னை அணியால் 9 விக்கெட்டுக்கு 125 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நீண்ட நாள் கோப்பை தாகத்தை தணித்தது.