Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எல்.ஏ. உயிர் ஊசல்

Posted: 23 Apr 2014 11:11 PM PDT

ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகி ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் ஆலகண்டா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று நந்தியாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் ஷோபாநாகி ரெட்டி பங்கேற்று விட்டு நள்ளிரவு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். தூபகுண்டம்

டி.வி., மொபைல் போன்: ஆந்திரா வாக்காளர்களுக்கு ஜாக்பட்

Posted: 23 Apr 2014 10:58 PM PDT

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டீரிய சமிதி கட்சிகளிடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அது போல சீமந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திராவில் இந்த தடவை காங்கிரஸ் கட்சி கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கூறப்படும் நிலையில் மாநில கட்சிகள் புதிய உத்வேகம் பிடித்துள்ளன. அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று சந்திரசேகரராவ், சந்திர பாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி மூவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி பிரதமரானால் தீவிரவாதிகள் பயப்படுவார்கள்: அமித்ஷா

Posted: 23 Apr 2014 10:39 PM PDT

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் அமித்ஷா மிர்சாபூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நரேந்திரமோடி வெறுமனே வெற்றி பெறுவதற்காக மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் தேர்தலை எதிர் கொள்கிறார். அந்த அடிப்படையில்தான் அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே நிச்சயமாக அவர் ஏழைகளை மனதில் வைத்து ஆட்சி நடத்துவார். சீன ராணுவ வீரர்கள் ஏதோ சுற்றுலா வந்து செல்வது போல நம் இந்திய எல்லைக்குள் வந்து செல்கிறார்கள். காங்கிரஸ் அரசு அவர்களை கண்டு கொண்டதே இல்லை.

பவன்கல்யாணுடன் சந்திரபாபுநாயுடு சந்திப்பு

Posted: 23 Apr 2014 10:02 PM PDT

மத்திய மந்திரியும் சீமாந்திரா காங்கிரஸ் பிரசார குழு தலைவருமான நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன்கல்யாண். இவர் ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சந்தித்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். நேற்று முன்தினம் ஆந்திராவில் பிரசாரம் செய்ய வந்த நரேந்திரமோடி கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தேர்தலில் பாரதீய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து இருந்தாலும் தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்யவில்லை. மோடி கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவை கூட கண்டு கொள்ளவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

Posted: 23 Apr 2014 06:56 PM PDT

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று காலை 7.00 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 6 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நிகழ்ச்சிகளை இணையதளம் மூலம் பார்க்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

பாலியல் தொந்தரவு அளிப்பதாக பிரின்சிபால், மானேஜர் மீது ஆசிரியை புகார்

Posted: 23 Apr 2014 02:54 PM PDT

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விகாரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் அப்பள்ளியின் பிரின்சிபால் மற்றும் மானேஜர் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

பெண்களை மதிக்காத தலைவர்களை தூக்கி எறியுங்கள்: பிரியங்கா

Posted: 23 Apr 2014 01:11 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா அங்கே கிராமம் கிராமமாக சென்று தனது தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அங்குள்ள உன்சகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிஜாபூரில் நேற்று நடந்த தெருமுனை கூட்டம்

வாரணாசி தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் போட்டி

Posted: 23 Apr 2014 12:56 PM PDT

பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜய்ராய் உள்ளிட்டோர் போட்டியிடும் நிலையில்

சல்மான் குர்ஷித்திற்கு எதிராக வழக்குப் பதிவு

Posted: 23 Apr 2014 12:38 PM PDT

மத்திய அமைச்சராக இருப்பவர் சல்மான் குர்ஷித். இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பருக்காபாத்தில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிந்தது. ஆனால் சல்மான் குர்ஷித் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக பிரச்சாரம் செய்துள்ளார். இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும் என அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் புகார் செய்தார்.

குஜராத்தில் மோடி பிரசாரம் தொடங்கினார்

Posted: 23 Apr 2014 12:11 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்தார். அப்போது அவர் தன் கணவர் மீதும், குடும்பத்தினர் மீதும் பாரதீய ஜனதா கூறுகிற குற்றச்சாட்டுக்கள் வேதனை அளிப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுகளால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2.14 கோடி

Posted: 23 Apr 2014 12:02 PM PDT

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய சொத்து மதிப்பு

டைம் கருத்துக்கணிப்பு: மோடியை முந்திய கெஜ்ரிவால்

Posted: 23 Apr 2014 11:19 AM PDT

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் டைம் நாளிதழ் உலக அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முந்தி இடம்பிடித்துள்ளார்

மம்தாவின் குற்றச்சாட்டிற்கு சோனியாவின் செயலாளர் மறுப்பு

Posted: 23 Apr 2014 10:13 AM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அகமத் படேல் மேற்கு வங்காள மாநிலத்தில் அதிகாரிகளின் இடமாற்றத்தில் கருவியாக செயல்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்

அமேதியின் பிரச்சனைகளை பா.ஜ.க தீர்க்கும்: ஸ்மிருதி இராணி

Posted: 23 Apr 2014 08:50 AM PDT

பா.ஜ.க மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கும். அதற்கு அமேதியின் பங்களிப்பும் இருக்கும் என அமேதி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். இதுகுறித்து அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த பிரசாரத்தில் அவர் கூறுகையில், "நரேந்திர மோடி அடுத்த

லாலு காங்கிரசின் கைக்கூலி: நிதிஷ் கடும் சாடல்

Posted: 23 Apr 2014 08:39 AM PDT

'லாலு பிரசாத் யாதவ் காங்கிரசின் கைக்கூலி. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் கடந்த கால சாதனைகளை பார்த்தால் லாலுவை யாரும் நம்ப மாட்டார்கள்' என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளர் குலாம் கவுசை ஆதரித்து மதுபானி பிரசாரத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:-

பஞ்சாப்பில் ரூ. 731 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்

Posted: 23 Apr 2014 08:09 AM PDT

பஞ்சாப்பில் ரூ 731 கோடி மதிப்பிலான போதை பொருள்களும், ரூ 7.5 லட்சம் மதிப்பிலான கள்ளச் சாரயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி இன்று கூறினார். பஞ்சாப் மாநில தேர்தல் அதிகாரி விகே சிங் இதுகுறித்து கூறுகையில், "இதுவரை ரூ. 731 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

சர்ச்சைக்குரிய பேச்சு: கிரிராஜ் நாளை கோர்ட்டில் ஆஜர்

Posted: 23 Apr 2014 07:26 AM PDT

பா.ஜனதா கடசித் தலைவர் கிரிராஜ் சிங், நரேந்திர மோடி பிரதமராக எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஒட வேண்டியதுதான் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. மேலும் தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் மீது தியோகார்க் மற்றும் போகாரோ ஆகிய இரண்டு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மோடி பிரதமரானால் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முடியாது: அமித் ஷா

Posted: 23 Apr 2014 06:54 AM PDT

தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்திய எல்லைகளில் பாதுகாப்பு இல்லை. நரேந்திர மோடி பிரதமராக வந்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியாவுக்குள் ஊடுருவ தைரியம் வராது என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கூறினார்.

மம்தா ஆதரவு அளிக்காததால் ராகுலும், மோடியும் அவரை விமர்சிக்கின்றனர்: திரிணாமுல் காங்கிரஸ்

Posted: 23 Apr 2014 06:16 AM PDT

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான 'மம்தா பானர்ஜி ஆதரவு அளிக்காததால் தான் ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்' என திரிணாமுல் காங்கிரஸ் இன்று தெரிவித்துள்ளது.

பத்மநாபசுவாமி கோவில் பற்றிய தகவல்கள் வருத்தமடையவைக்கிறது: உச்சநீதிமன்றம்

Posted: 23 Apr 2014 05:14 AM PDT

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷங்கள் கொள்ளை போவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்திருந்தினர். இதனடையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின் பொதுச்சொத்தான கொவிலுக்கு சொந்தமான பொக்கிஷங்களை மதிப்பிடுமாறு 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பொக்கிஷங்களை மதிப்பிட்டதில் 1 லட்சம் கோடி மிதிப்புள்ள பொக்கிஷங்கள் கோவிலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோவிலுள்ள தணிக்கையாளர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்யவில்லை என்றும் மன்னர் குடும்பத்திற்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு வரும் செய்திகள் வருத்தமடைய செய்வதாக உள்ளதாக நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™