Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கிராமத்திற்குள் நுழைந்த புலி: உயிரைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடும் மக்கள்!

Posted: 23 Apr 2014 10:25 AM PDT

Tiger

Tiger

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆப்பிள் பழங்களை எப்படி பொதி செய்கிறார்கள் என்று தெரியுமா?…..

Posted: 23 Apr 2014 10:20 AM PDT

Apples

Apples

This posting includes an audio/video/photo media file: Download Now

குளம் எங்கே இருக்குதுனு தெரிந்தால் நாமும் அதிர்ஷ்டசாலி தான்!….

Posted: 23 Apr 2014 10:15 AM PDT

Fish

Fish

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகா கண்ணாடி போட்டு அப்படி யாரை சைட் அடிக்கிறாங்க…… தெரிந்தால் கொஞ்சம் சொல்றீங்களா?..

Posted: 23 Apr 2014 10:09 AM PDT

images

images

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பைக் குறைக்க கேரட்!

Posted: 23 Apr 2014 10:00 AM PDT

kerate

kerateகேரட் இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம்!

Posted: 23 Apr 2014 09:55 AM PDT

mango

mangoஎல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது. மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

லுங்கி கட்ட வேண்டும் என்ற என் ஆசை ரேஸ் குர்ரம் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது: ஸ்ருதி ஹாஸன் பேட்டி!!

Posted: 23 Apr 2014 09:35 AM PDT

racekurram

racekurramநான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ரேஸ் குர்ரம் தெலுங்கு படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது. படம் ஆந்திரா, பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது.படம் நன்றாக ஓடுவதால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார். ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த டான்ஸுக்கு ஆந்திராவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருந்திருப்பேன். ஆனால் பெண்ணாக பிறந்ததால் லுங்கி கட்ட முடியவில்லை. எனக்கு லுங்கி தான் மிகவும் பிடித்த உடை. லுங்கி கட்ட வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றார் ஸ்ருதி. ரேஸ் குர்ரம் போஸ்டர்கள் படு கவர்ச்சியாக உள்ளதாகக் கூறி ஆந்திராவில் பல இடங்களில் அவற்றை கிழித்து எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஓவர் கவர்ச்சியாக நடித்துள்ளார், குத்தாட்ட நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார் கவர்ச்சியில் என்று விமர்சனம் எழுந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தான் இந்த லுங்கி டான்ஸை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து ஆளாளுக்கு லுங்கி டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் சிறப்புக்காட்சி ஏற்பாடா! அகமதாபாத்தில் மோடிக்கு ரகசிய தகவல்!!

Posted: 23 Apr 2014 08:20 AM PDT

Thala-55

rajini-modiசூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள 'கோச்சடையான்' படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மட்டும் ஸ்பெஷலாக போட்டுக் காட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை எனச் சொல்லப் பட்டாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கோவையில், மோடியைச் சந்தித்தார் நடிகர் விஜய். அதுவும் வழக்கம் போல் அரசியல் ரீதியான சந்திப்பில்லை என்றே சொல்லப் பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினியின் கோச்சடையான் படத்தை மோடிக்கு தனியாக போட்டுக் காண்பிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் ரஜினியைச் சந்தித்த மோடி அவரது கோச்சடையான் அனிமேஷன் படத்தைப் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம். அதையடுத்து, அகமதாபாத்தில் மோடிக்கு படத்தைப் போட்டுக் காண்பிக்க அப்படத்தின் இயக்குநரும், ரஜினியின் இளைய மகளுமான சவுந்தர்யா, சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளாராம். மோடியுடன் அமர்ந்து படத்தை சவுந்தர்யா பார்க்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இத்தகவல் உண்மையானதல்ல என அப்படத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

விழாவுக்கு வராத நயன்தாரா! வெறுப்பில் அனாமிகா படக் குழு!!

Posted: 23 Apr 2014 08:04 AM PDT

Nayanthara

Nayantharaஅனாமிகா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அனாமிகா படக் குழு இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய 'கஹானி' படம்தான் தெலுங்கில் அனாமிகாவாகத் தயாராகி வருகிறது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வருகிறது. வித்யாபாலன் நடித்த பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலா படத்தை இயக்கியுள்ளார். 'அனாமிகா' தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூறியிருந்தனர். காரணம், அதற்கு முன்பு சென்னையில் நடந்த நீ எங்கே என் அன்பே ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் நயன்தாரா புறக்கணித்துவிட்டார். நிச்சயம் வந்துவிடுவார் என்று இயக்குநர் காத்திருக்க, கடைசி வரை அனாமிகா விழாவுக்கும் நயன்தாரா வரவே இல்லை. இந்த முறை விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை அனாமிகா இயக்குநரும் தயாரிப்பாளரும். நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை நாடியுள்ளார்களாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூட்லி 3 பேப்லட் ரூ.8,500 விலையில் அறிமுகம்!

Posted: 23 Apr 2014 07:23 AM PDT

Micromax-Canvas-Duet-2

Micromax-Canvas-Duet-2மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் கேன்வாஸ் டூட்லி பேப்லட் வரிசையை விரிவுபடுத்தி கேன்வாஸ் டூட்லி 3, ரூ.8,500 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளர், கேன்வாஸ் டூட்லி 3 வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது. கேன்வாஸ் டூட்லி 3 உடன் BigFlix subscription ஏற்றப்பட்டு வரும் என்றும், அது வரம்பற்ற திரைப்படங்களை 6 மாதங்களுக்கு வழங்குகிறது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. கேன்வாஸ் டூட்லி 3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட FWVGA (480x854 பிக்சல்கள்) தீர்மானம் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. கேன்வாஸ் டூட்லி 3 பேப்லட்டில் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் (MT6572) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. கேன்வாஸ் டூட்லி 3 பேப்லட்டில் MicroSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு உள்ளது. கேன்வாஸ் டூட்லி 3, இணைப்பு விருப்பங்கள் 3ஜி, Wi-Fi, ப்ளூடூத், எட்ஜ்/ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ்/ எஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-USB ஆதரவு வழங்குகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூட்லி 3 ஒரு 2500mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. கேன்வாஸ் டூட்லி 3 இருக்கும் மற்ற ஏற்றப்பட்ட அப்ளிக்கேஷன்கள், எம் லைவ்!, எம்! டூட்லி, BigFlix, Get It, விளையாட்டுக்கள் (மார்பிள்ஸ், ரோப் கட், ஜெல்லி ஜம்பர்), கிங்சாஃட் ஆஃபிஸ் மற்றும் ஓபரா மினி போன்றவை அடங்கும். மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூட்லி 3 பேப்லட் விவரக்குறிப்புகள்: 3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட FWVGA (480x854 பிக்சல்கள்) தீர்மானம், இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ரேம் 512MB, 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் (MT6572) ப்ராசசர், 5 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, MicroSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு, 3ஜி, Wi-Fi, ப்ளூடூத், எட்ஜ்/ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ்/ எஜிபிஎஸ், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன், 2500mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

கெவின் பீட்டர்சன் தயார்: டெல்லி டேர்டெவில்ஸ் அணி உற்சாகம்!

Posted: 23 Apr 2014 06:55 AM PDT

Kevin-Pietersen

Kevin-Pietersenடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன், கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 லீக் ஆட்டங்களில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தலைமையில் விளையாடிய டெல்லி அணி இதுவரை 2 தோல்வி, ஒரு வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில், அந்த அணி அடுத்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் 25ம் தேதி மோதவுள்ளது. துபாயில் நடைபெற உள்ள அந்த போட்டியில் தன்னால் களமிறங்க முடியும் என்று பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறுகையில், 'ஐபிஎல் தொடருக்காக தீவிரமாகப் பயிற்சி செய்து வந்தேன். துரதிர்ஷ்டவசமாக கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் மூன்று லீக் ஆட்டங்களில் விளையாட முடியவில்லை. தற்போது முழு உடல் தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளேன். ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்குவேன்' என்றார். இதனால் டேர்டெவில்ஸ் அணி உற்சாகமடைந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவின் சானியா மிர்சா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Posted: 23 Apr 2014 06:48 AM PDT

sania-mirza

sania-mirzaஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தகுதி பெற்றது.

முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் - ஆண்ட்ரியா பெட்கோவிக் ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது.

இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சானியா - பிளாக் 6-2 என வென்று சமநிலை ஏற்படுத்தினர். கடைசி செட்டில் ஜெர்மனி இணை கடும் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டத்தில் அனல் பறந்தது.

பரபரப்பாக அமைந்த இப்போட்டியில், சானியா ஜோடி 4-6, 6-2, 10-7 என்ற செட் கணக்கில் ஒரு மணி, 23 நிமிடம் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்து பெண் வெளியேற்றம்: உடலில் புத்தர் உருவ டாட்டூ!!

Posted: 23 Apr 2014 06:37 AM PDT

Tatoo

Tatooஇங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தனது உடலில் புத்தர் உருவத்தை டாட்டூவாக வரைந்திருந்ததால் அவரை இலங்கை அரசு கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அங்குள்ள புத்த விகாரங்கள், மடங்கள் உள்ளிட்டவற்றையும், சுற்றுலா தளங்களை பார்ப்பதற்கும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சிங்கள மக்களின் பிரதான மதமாக புத்த மதம் உள்ளது. எனவே இலங்கை அரசு புத்த மதத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இலங்கை காவல்துறையினர் கூறுகையில், இங்கிலாந்தை சேர்ந்த நவோமி கோல்மேன் என்பவர் தனது கையில் புத்தர் உருவத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். தாமரைப்பூவில் புத்தர் அமர்ந்திருப்பது போல் அந்த படம் வரையப்பட்டுள்ளது. சிங்களர்களின் கடவுளை அவர் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழும்பின. இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம். விசாரணை நடத்திய நீதிபதி இலங்கை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நவோமி கோல்மேனை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் என்று தெரிவித்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் இலங்கையை விட்டு வெளியேறுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்தை சேர்ந்த அந்தோணி ரெட்கிளிப் என்பவர் உடலில் புத்தர் டாட்டூ வரைந்திருந்ததற்காக இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

290 கி.மீ. பறந்து சென்று இலக்கை தகர்க்க பாகிஸ்தான் ஏவுகணை சோதனை!

Posted: 23 Apr 2014 06:28 AM PDT

rocket_launch

rocket_launchஇஸ்லாமாபாத்: 290 கி.மீ. பறந்து சென்று இலக்கை தகர்க்கும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக முடித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்காக, உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் 'ஹட்ஃப் 3' (கஸ்னவி) ஏவுகணை தயாரிக்கப்பட்டது. அணு ஆயுதங்களையும், போர் தளவாடங்களையும் சுமந்தபடி 290 கி.மீ. பறந்து சென்று இலக்கை தகர்க்கக் கூடிய இந்த ஏவுகணை சோதனை நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான போர் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹூசேன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை எந்த இடத்தில் நடத்தப்பட் டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 290 கி.மீ. தொலைவுக்குள் இந்திய பகுதிகள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென் மீன் இலங்கைக்கு விஜயம்!!

Posted: 23 Apr 2014 06:15 AM PDT

Le-u-sen-meen

Le-u-sen-meenசீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென் மீன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்ட சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இன்றைய தினம் இலங்கையை சென்றடைவார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, சீன பிரதி அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை. சீன உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்பார்வை செய்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வாதிகார அரசாங்கத்தை விரட்டவே ஜே.வி.பி போராட்டம்: மேல் மாகாண சபையின் குழுத் தலைவர் கே.டி. லால்காந்த கருத்து!!

Posted: 23 Apr 2014 06:06 AM PDT

lal-kantha

lal-kanthaநாட்டின் இன்றைய சர்வாதிகார அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு மக்களின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவே ஜே.வி.பி போராடி வருவதாக அந்த கட்சியின் மேல் மாகாண சபையின் குழுத் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றம் இம்முறை மாகாண சபைத் தேர்தல் தாக்கம் செலுத்தியது. அரசாங்கத்திற்கும் கிடைக்கும் வாக்குகளை குறைக்க முடிந்ததுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிந்தது. ஜே.வி.பியின் வாக்குகள் அதிகரித்துள்ளன. ஜே.வி.பியின் இலக்கை வாக்காளர்கள் முழுமைப்படுத்தி கொடுத்தனர். நாட்டின் இன்றைய சர்வாதிகார ஆட்சியாளர்களை விரட்டிவிட்டு, மக்களுக்கு சார்பான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே ஜே.வி.பி போராடி வருகிறது. வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சக்திகளுடன் எமக்கு போட்டியில்லை. வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலின் பின்னர், சரத் பொன்சேகாவை மூன்றாவது சக்தியாக சிலர் வர்ணித்தனர். ஆனால் ஜே.வி.பியே நாட்டில் இருக்கும் மாற்று அரசியல் கட்சியாகும் எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கை: உலகிலேயே பணக்கார மத்தியதர வர்க்கத்தினர் கனடியர்கள்!!

Posted: 23 Apr 2014 05:47 AM PDT

Rich-person

Rich-personநியுயோர்க் டைம்சில் வெளியான ஒரு அறிக்கை தற்போது செல்வம் படைத்த நடுத்தர வர்க்கம் என்ற பெருமையை கனடியர்கள் பெறுகின்றனர் அமெரிக்கர் இல்லை என வெளியிட்டுள்ளது. 2000-ல் வரிக்கு பின்னர் ஆன நடுத்தர வர்க்கத்தினரின் வருமானங்கள் கணிசமான அளவு பின்தங்கி இருந்ததாகவும் தற்போது யுனைரெட் ஸ்ரேற்சைவிட அதிகமாக காணப்படுகின்றதெனவும் அறிக்கை தெரிவித்துள்ளது. 2000-ல் கனடா பிரிட்டனுடன் ஒத்தநிலையில் இருந்ததாகவும் தற்போது யு.எஸ்சையும் விட முன்னோக்கி உயர்ந்து உலகிலேயே செல்வம் கொழிக்கும் மத்தியவர்க்கமாக பெருமையை பெற்றுள்ளது. கனடிய மத்திய வர்க்கத்தினரின் வருமானம் 2000-ல் இருந்ததை விட கிட்டத்தட்ட 20-சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேநேரம் அமெரிக்கரின் வருமானம் 2000-ல் இருந்த மாதிரியே இருக்கின்றதெனவும் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின் பிரகாரம் 4-பேர்கள் அடங்கிய ஒரு மத்திய வர்க்கத்தின் வருமானம் வருடமொன்றிற்கு 75,000 டொலர்களிற்கும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இதே சமயம் யு.எஸ்சின் வருமானம் அதிகரிப்பின்றி 75,000 டொலர்களிலேயே இருக்கின்றதெனவும் தெரியவருகின்றது. நியுயோர்க் டைம்ஸ் கடந்த 35-வருடங்களாக வருமான தகவல்களை சேகரித்து வருகின்றது. 2010-ன் அறிக்கையில் கனடா யு.எஸ்சுடன் சமநிலையில் இருந்துள்ளது. தற்போது வரலாற்றிலேயே முதல் தரமாக கனடா உச்சியில் நிற்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஸ்ய நாட்டில் இருந்து கனடா தூதுவர் வெளியேற்றம்!

Posted: 23 Apr 2014 05:35 AM PDT

globalnews

globalnewsரஸ்யாவில் கனேடியத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் எனக் Global News எனும் செய்தித் தாபனம் தெரிவித்திருக்கின்றது. அரசும் இதனை உறுதி செய்திருக்கின்றது எனத் தெரியவருகிறது. இவ்வாறான வெளியேற்றங்களுக்கான காரணம் உக்கிரைன் விவகாரம் என்பது வெளிப்படையானது. கனடாவிற்கு உக்கிரைன் நாட்டிற்கு சார்பாக நிற்கவேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதெனக் கனடிய வெளிவிவகார அமைச்சரான பியேட் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் றுஸ்யா நாட்டினது தூதுவர் இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கனடாவிலிருந்து றுஸ்யாவிற்கு அனுப்புப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. றுஸ்யாவானது தூதுவரை அனுப்பியது மட்டுமால் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 13வருக்கான பயணத் தடையும் விதித்திருக்கின்றது எனத் தெரியவருகிறது. உக்கிரைன் நாட்டின்மீது றுஸ்யா தனது ஆதிக்கத்தைக் காட்ட முனைந்ததைத் தொடர்ந்து றுஸ்யாவிற்கும் கனடாவிற்கும் சுமுகமான நிலை காணப்படவில்லையென அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™