Daily Thanthi |
- பிலிப்பைன்ஸ்சில் இத்தாலி தூதர் கைது
- அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில்: பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் உறுதி; ஊழலை ஒழிக்க, விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை
- 20 ஓவர் உலக கோப்பையில் தோல்வி: ரசிகர்களை விட யுவராஜ்சிங் தான் மிகுந்த வேதனையில் இருக்கிறார் இந்திய கேப்டன் டோனி சொல்கிறார்
- 20 ஓவர் உலக கோப்பையில் மோசமான பேட்டிங்: யுவராஜ்சிங் வீடு மீது கல்வீச்சு ரசிகர்கள் ஆத்திரம்
- யுவராஜ்சிங்குக்கு, தெண்டுல்கர் ஆறுதல்
- ஐ.சி.சி. 20 ஓவர் கனவு அணிக்கு டோனி கேப்டன் 4 இந்தியர்களுக்கு இடம்
- இங்கிலாந்து வீராங்கனை காதல் தூது: விராட் கோலியின் தாயார் கோபம்
- 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, அஸ்வின் முன்னேற்றம்
- சென்னை மேயர் சைதை துரைசாமி
- ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வெற்றி
| பிலிப்பைன்ஸ்சில் இத்தாலி தூதர் கைது Posted: 07 Apr 2014 01:45 PM PDT ரோம், மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் இத்தாலி தூதராக இருப்பவர் டேனியல் போஸ்கோ. இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சிறுவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டேனியல் போஸ்கோவை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்தனர். இதனை இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவர், சிறுவர்களுக்கான பாதுகாப்பை மீறி என்ன குற்றம் செய்தார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இத்தாலி தூதர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 07 Apr 2014 01:27 PM PDT புதுடெல்லி, பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 52 பக்க தேர்தல் அறிக்கை பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் இதனை அறிக்கையை வெளியிட்டனர். 52 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் பற்றிய விவரம் வருமாறு:– ராமர் கோவில் கட்டப்படும் *டெல்லியில் உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். *அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். *காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும். *அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை. *வரி என்னும் பயங்கரவாதம் நீக்கப்படும். *நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான விற்பனை வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். *அனைத்து மாநிலங்களிலும் சீரான சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகப்படுத்தப்படும். *பணவீக்கம், விலை உயர்வை கட்டுப்படுத்துவது முதல் கட்ட பணியாக இருக்கும். கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை *கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பணி குழுக்கள் உருவாக்கப்படும். கறுப்பு பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைக்கப்படும். *வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். *நேரடி அன்னிய முதலீடு அனுமதியில் சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படும். *வேலைவாய்ப்பு கட்டமைப்புக்கு முக்கியத்துவம். *பெண்களுக்கு அதிகாரம். *நகர்ப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை. *இ–முறையில் கல்வித்திட்டம் அமல்படுத்த நடவடிக்கை *விலை ஸ்திரத்தன்மை நிதியம் அமைக்கப்பட்டு, இந்திய உணவுக்கழகத்தின் கொள்முதல், சேமிப்பு மற்றும் வினியோகத்தை கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பொருள் உற்பத்தியை பெருக்க... *ஒற்றை தேசிய வேளாண் சந்தையை உருவாக்கி, வெவ்வேறு பகுதி மக்களின் உணவு பழக்க வழக்கத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப அந்தந்த பகுதிகளில் பயிர்கள், காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். *உணவு பாதுகாப்பு திட்டத்தை திறமையாக நிர்வகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேரடி அன்னிய முதலீடு *சில்லறை வர்த்தகம் தவிர்த்து அனைத்து துறைகளிலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழி செய்யப்படும். *நேரடி அன்னிய முதலீடு மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டம் வகுக்கப்படும். *நேரடி அன்னிய முதலீட்டை தனியார் துறை பங்களிப்புடன் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். *முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக வரிவிதிப்பு முறைகள் எளிமையானதாக மாற்றியமைக்கப்படும். *நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து துறைகளையும் மேம்படுத்த நடவடிக்கை. *உள்கட்டமைப்பு மற்றும் அதனை மேம்படுத்த திட்டங்கள் தீட்டப்படும். *நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு 8 விதமான வழிகள் வகுக்கப்பட்டுள்ளன. *சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். *சிறுபான்மையினருக்கு கல்வி, தொழிற்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படும். *கணிதம், மற்றும் விஞ்ஞான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மதரசாக்களை நவீனப்படுத்த திட்டம். ஊழலை ஒழிக்க... *நிர்வாகம், நீதித்துறைகளில் மறுசீரமைப்பு கொள்கை. *ஊழல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிய கொள்கை வகுக்கப்படும். *தேசிய அபிவிருத்தி கவுன்சில் மற்றும் மாநில அபிவிருத்தி கவுன்சிலை ஒருங்கிணைந்த அமைப்பாக மாற்ற நடவடிக்கை. *பிரதமருக்கு இணையாக அனைத்து மாநில முதல்–அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டு முயற்சி எடுக்கப்படும். *இளைஞர் நலன், சுய வேலைவாய்ப்பு ஊக்குவித்தல் போன்றவற்றை வேலைவாய்ப்பு மையங்களை வாழ்க்கை தர மையங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை. *மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் பேணி பாதுகாக்கப்படும். விவசாய ரெயில் சேவை *விளை பொருட்களை நாடெங்கும் கொண்டு செல்வதற்காக விவசாய ரெயில் விடப்படும். *வைர நாற்கர திட்டம் என்னும் பெயரில் அதி விரைவு ரெயில் சேவை தொடங்கப்படும். *அழுகக்கூடிய காய்கறிகளை சேமிக்க விவசாய பொருட்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தப்படும். *நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையம் சீர்த்திருத்தம் செய்யப்படும். *சுகாதாரம் காத்திட முன்னுரிமை அளிக்கப்படும். *ஆண்–பெண் சம உரிமையில் சம நிலை பின்பற்ற நடவடிக்கை. *கிராம அளவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். வீட்டுக்கு குடிநீர், வயலுக்கு தண்ணீர் *வீட்டுக்கு குடிநீர், வயலுக்கு தண்ணீர் வழங்கும் புதிய திட்டம் தீட்டப்படும். *பல்கலைக்கழக மானியக்குழு மறுசீரமைக்கப்படும். *வெளியுறவு கொள்கைகளை சீர்படுத்தி சகோதர நாடுகளிடையே நட்புகரத்தை மேம்படுத்தி பரஸ்பர நன்மை ஏற்பட வழி வகுக்கப்படும். *இந்தியா, வங்காளதேசம், மியான்மர் எல்லைப்பகுதிகளை பலப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாயமான விசாரணை *காங்கிரஸ் கட்சியின் வலுவில்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு கலைக்கப்படும். இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வழிவகுக்கப்படும். *பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்ய தேசிய அளவில் பிரசாரம். *நாடு முழுவதும் 50 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும். *சுய ஆட்சியை பலப்படுத்த, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். *வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். *நாட்டில் உள்ள எல்லா ஆறுகளையும் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கப்படும். *மேல்நிலைக்கல்வி தரம் உயர்த்தப்படும். நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். *காஷ்மீரின் முன்னோர்களாகிய பண்டிதர்களை கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் அவர்களது இடத்தில் வாழ வழி வகை செய்யப்படும். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய 3 பகுதிகளிலும் சம அளவில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிராமங்களில் வை–பை *கடலோர வளர்ச்சிக்கு சாகர் மாலா திட்டம் அமல்படுத்தப்படும். *கம்பியில்லா இணைய தள சேவையான வை–பை கிராமங்களில் அறிமுகம் செய்யப்படும். *பசுக்களை காத்திட சிறப்பு திட்டம். *இயற்கை வளங்களை ஏலத்தில் இ–ஆக்சன் முறை பின்பற்றப்படும். இயற்கை வளங்கள் பாதுகாப்பில் தேசிய கொள்கை பின்பற்றப்படும். *வாய்ப்பு உள்ள இடங்களில் நதிநீர் இணைப்பு. *போர் நினைவு சின்னங்கள் எழுப்புதல் *பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை மேம்படுத்தப்படும். *பாதுகாப்பு துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். *பாதுகாப்பு மற்றும் அறிவியல் துறை மேம்படுத்தப்படும். அரசியல் குறுக்கீடு இல்லாமல்... *புலனாய்வுத்துறைகளில் அரசியல் குறுக்கீடு இல்லாமல் செயல்பட நடவடிக்கை. *மத்திய ராணுவ ஆராய்ச்சி மையம் பலப்படுத்தப்படும். இதில் தனியார் துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தொழில்களில் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும். *இந்திய அளவில் உள்ள மொழிகள் மேம்படுத்தப்படும். மொழி மேம்பாடு மூலம் அறிவுத்திறமையை வளர்க்க வழிவகை செய்யப்படும். *வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளின் மதிப்பை காத்திட வழிவகை செய்யப்படும். *சார்க், மற்றும் ஏசியான் நாடுகள் இடையேயான உறவு பலப்படுத்தப்படும். *100 புதிய நகரங்கள், துணை நகரங்கள் மற்றும் இரட்டை நகரங்கள் உருவாக்கப்படும். *பெட்ரோல் இறக்குமதி வரியை குறைக்கும் வகையில் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் அசாம், திரிபுரா மாநிலங்களில் நேற்று தொடங்கிய நிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Hot Topic Icon : News Group Category: |
| Posted: 07 Apr 2014 01:20 PM PDT மிர்புர் உலக கோப்பையில் மோசமாக ஆடியதை நினைத்து ரசிகர்களை விட யுவராஜ்சிங் தான் மிகுந்த வேதனையில் இருப்பதாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். டோனி பேட்டி வங்காளதேசத்தில் நடந்த 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்று கோப்பையை கோட்டை விட்டது. யுவராஜ்சிங்கின் (21 பந்தில் 11 ரன்) மோசமான ஆட்டமே அணியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் டோனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– யுவராஜ்சிங் களத்தில் தடுமாறிக் கொண்டிருந்த போது ஏதாவது தகவல் அனுப்பினீர்களா? பதில்:– இல்லை. அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அதிகபட்சமாக அதைத் தான் அவரால் செய்ய முடியும். கேள்வி:– அந்த சமயத்தில் அணிக்கு தேவையான உந்து சக்தியை யுவராஜ்சிங்கின் ஆட்டம் கொடுக்கவில்லையா? பதில்:–இது அணி சம்பந்தப்பட்ட விஷயம். தனி நபர்கள் குறித்து பேச வேண்டாம். இதுவெல்லாம் சகஜம் கேள்வி:– அனுபவம் வாய்ந்த, திறமையான யுவராஜ்சிங் போன்ற வீரர் ஆடிய விதத்தை கண்டு ரசிகர்கள் எந்த அளவுக்கு விரக்தி அடைந்திருப்பார்கள்? பதில்:– ரசிகர்கள் கோபத்திற்குள்ளாகலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே ரசிகர்களை விட சோபிக்க தவறும் சம்பந்தப்பட்ட வீரர்கள் தான் மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். அந்த வகையில் யுவராஜ்சிங்கை விட வேறு யாரும் இன்றிரவு (நேற்று முன்தினம் இரவு) வருத்தம் அடைந்திருக்க முடியாது. ஒரு வீரராக, 40 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் யாரும் மோசமாக விளையாட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். கேட்ச்சை நழுவ விடக்கூடாது. பீல்டிங்கை தவற விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். ஆனால் எதுவும் எங்களுக்குரியதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுவெல்லாம் சகஜம். இது போன்ற நிலைமை மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறோம். யுவராஜ்சிங் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தார். ஆனால் இது அவருக்குரிய தினமாக இல்லை. அதே சமயம் ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடுவது கடினம். கேள்வி:– யுவராஜ்சிங்குக்கு முன்பாக சுரேஷ் ரெய்னாவை ஆட வைத்திருக்கலாமே? யுவராஜின் எதிர்காலம் பதில்:– சுரேஷ் ரெய்னா, களம் இறங்கிய முதல் பந்தில் இருந்தே விரட்டியடிக்க தொடங்கி விடுவார். மற்றபடி அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிது நேரம் நிலைநிறுத்தி கொண்ட பிறகு அதிரடி காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த காரணத்திற்காகத் தான் யுவராஜ்சிங்கை 4–வது வரிசையில் களம் இறக்க விரும்பினோம். அது மட்டுமின்றி அந்த சமயத்தில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் (ரோகித் ஷர்மா, விராட் கோலி) விளையாடிக் கொண்டிருந்தனர். வலக்கை–இடக்கை பேட்ஸ்மேன்கள் இணைந்து விளையாடும் போது அது எதிரணி பவுலர்களுக்கு வியூகம் அமைப்பதில் சிரமத்தை அளிக்கும். இதுவும் யுவராஜ்சிங்கை முன்வரிசையில் அனுப்பி வைத்ததற்கு ஒரு காரணம். கேள்வி:– அணியில் யுவராஜ்சிங்கின் எதிர்காலம் குறித்து...? பதில்:– இந்த சீசனுக்கான இந்திய கிரிக்கெட் போட்டிகள் முடிந்து விட்டன. இனி நாங்கள் ஐ.பி.எல். உள்பட உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளோம். அடுத்த சர்வதேச போட்டிக்கான அணித்தேர்வுக்கு நீண்ட காலம் உள்ளது. எனவே அது பற்றி பேசாதீர். கேள்வி:– ஆட்டம் எப்போது கை நழுவி போனதாக நினைக்கிறீர்கள்? பதில்: மிடில் ஓவர்களில். எங்களது பேட்ஸ்மேன்கள் முழு திறமையை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் எங்களது ஆட்டம் 'கிளிக்' ஆகாத நாட்களில் இதுவும் ஒன்று. விராட் கோலி மட்டுமே (77 ரன்) தொடர்ச்சியாக ரன் சேகரித்துக் கொண்டிருந்தார். கடைசி 4 ஓவர்களில் (வெறும் 19 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது) எங்களது பேட்டிங் சரியில்லை. நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலான 15 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். யார்க்கரில் மிரட்டினர் கேள்வி: இலங்கையின் பந்து வீச்சு எப்படி இருந்தது? பதில்:– இலங்கை பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டத்தை களத்தில் கன கச்சிதமாக செயல்படுத்தினர். எங்கள் அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு இறுதி கட்டத்தில் தான் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களால் 'ஸ்கூப்' அல்லது 'பட்டில் ஷாட்'டுகளை தேர்டுமேன் அல்லது பைன் லெக் பகுதிக்கு அடிக்க முடியவில்லை. இலங்கை பவுலர்கள் தங்களது 'யார்க்கர்' பந்து வீச்சை துல்லியமாக வீசினர். குறிப்பாக மலிங்கா, ஆப்–ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக வீசி எங்களை கட்டுப்படுத்தினார். இது போன்ற ஷாட்டுகளை அடிக்காவிட்டால் அதன் பிறகு யார்க்கர் தாக்குதலும் தொடுக்கப்படும் பட்சத்தில், பேட்ஸ்மேன்கள் திணறத்தான் செய்வார்கள். அது தான் கடைசி 4 ஓவர்களில் நிகழ்ந்தது. இவ்வாறு டோனி கூறினார். image: category: |
| 20 ஓவர் உலக கோப்பையில் மோசமான பேட்டிங்: யுவராஜ்சிங் வீடு மீது கல்வீச்சு ரசிகர்கள் ஆத்திரம் Posted: 07 Apr 2014 01:18 PM PDT சண்டிகார், 20 ஓவர் உலக கோப்பையில் பேட்டிங்கில் தகிடுதத்தம் போட்ட இந்திய வீரர் யுவராஜ்சிங்கின் வீடு மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹீரோ...ஜீரோ... 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மிர்புரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 2.1 ஓவர் மிச்சம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பை மகுடத்தை சூடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வரை குவிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், யுவராஜ்சிங்கின் மோசமான பேட்டிங்கால் ரன் வேகம் தடாலடியாக தடம்புரண்டது. அடித்து நொறுக்க வேண்டிய கட்டத்தில் பந்துகளை வீணாக்கிய யுவராஜ்சிங் 21 பந்துகளில் வெறும் 11 ரன் மட்டுமே எடுத்தார். அவரால் ஒரு பந்தை கூட எல்லைக்கோட்டை கடக்க வைக்க முடியவில்லை. 2007–ம் ஆண்டு உலக கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்த யுவராஜ்சிங்கா இப்படி ஆடுகிறார்? என்று ஒரு பக்கம் வியப்பு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அவரது சொதப்பலால் இந்திய அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்களே எடுக்க முடிந்தது. சிறிய இலக்கை இலங்கை அணி எளிதாக துரத்திப் பிடித்து விட்டது. வீடு மீது கல்வீச்சு யுவராஜ்சிங் ஆடிய விதத்தை கண்டு எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த சில ரசிகர்கள் இந்திய அணி தோல்வியை தழுவியதும் சண்டிகாரில் மனிமஜ்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே சென்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவர் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வும காயமும் ஏற்படவில்லை. இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்காக குரல் கொடுத்துள்ள யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், 'இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ்சிங் மட்டுமே காரணம் அல்ல, அவரை பலிகடா ஆக்கக்கூடாது. தோல்வி ஏற்படும் போது, நாலாபுறத்தில் இருந்தும் விமர்சனங்கள் வரும். ஏற்றமும், இறக்கமும் வாழ்க்கையில் மட்டுமல்ல, விளையாட்டிலும் சகஜம் தான்' என்றார். மேலும் அவர், '1983–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணி வீரர்களின் அறைக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததுடன், நீங்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர் என்று பாராட்டினார். அது தான் விளையாட்டிக்குரிய உண்மையான உத்வேகம். அது எப்போதும் முக்கியம்' என்றும் யோக்ராஜ்சிங் சுட்டி காட்டினார். ஹர்பஜன்சிங் ஆதரவு யுவராஜ்சிங்குக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளரும், அவரது நெருங்கிய நண்பருமான ஹர்பஜன்சிங் டுவிட்டர் இணையதளத்தில், ' எல்லோரும் யுவராஜ்சிங்கை குற்றம் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்தியா உருவாக்கிய, தனிநபராக வெற்றியை தேடித்தரும் திறன் படைத்த (மேட்ச் வின்னர்) அரிய வீரர்களில் இவரும் ஒருவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை முதல், நாட்வெஸ்ட் தொடர், 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2011–ம் ஆண்டு உலக கோப்பை என்று அனைத்திலும் முக்கியமான ஆட்டங்களில் அவர் அசத்தியுள்ளார். ஒரு மோசமான நாளுக்காக அவர் மீது கசப்புணர்வு கூடாது. அணியில் அவர் மட்டும அல்ல, மேலும் 10 வீரர்கள் இருப்பதை மறந்து விடக்கூடாது. சிறந்த அணி வெற்றி பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, ஏன் பலிகடாவை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? இது குழு விளையாட்டு' என்றார். image: category: |
| யுவராஜ்சிங்குக்கு, தெண்டுல்கர் ஆறுதல் Posted: 07 Apr 2014 01:16 PM PDT யுவராஜ்சிங்குக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் எழுதியிருப்பதாவது:– யுவி... ஒரு நாள் நீங்கள் சோபிக்காமல் போய் இருக்கலாம். அதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அணிக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்புகள், பல மறக்க முடியாத இனிமையான நினைவுகளை அழித்து விட முடியாது. இன்று உங்களது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த தொய்வு நிரந்தரமானது அல்ல. 2015–ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் மட்டுல்ல, உலகில் உள்ள இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நேற்று முன்தினம் மாலை உங்களுக்கு கடுமையான நாள். உங்களை எல்லோரும் விமர்சித்து இருக்கலாம். அதற்காக உங்களுடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. யுவராஜ்சிங்கின் முழுமையான உத்வேகத்தை கண்டு மெச்சுபவர்களில் நானும் ஒருவன். அவர் பல்வேறு சவால்களை களத்திலும், வெளியிலும் கடந்து வந்துள்ளார். அவரது மனஉறுதியும், போராட்ட குணமும் அவரை இன்னும் வலிமையான மனிதராக வெளிக்கொண்டு வரும். தன் மீதான விமர்சனங்கள் தவறு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவார். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார். image: category: |
| ஐ.சி.சி. 20 ஓவர் கனவு அணிக்கு டோனி கேப்டன் 4 இந்தியர்களுக்கு இடம் Posted: 07 Apr 2014 01:15 PM PDT துபாய் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் முடிவடைந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில் அந்த போட்டித் தொடரின் 11 பேர் கொண்ட ஐ.சி.சி. கனவு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டேவிட் பூன் தலைமையிலான குழுவினர் அணியை தேர்வு அறிவித்துள்ளது. இதில் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட போதிலும், கவுரவ அணிக்கு கேப்டன் என்ற பெருமை டோனிக்கு கிடைத்துள்ளது. 2014–ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பையின் கனவு அணி விவரம் வருமாறு:– ரோகித் ஷர்மா (இந்தியா, 200 ரன்), ஸ்டீபன் மைபர்க் (நெதர்லாந்து, 224 ரன்), விராட் கோலி (இந்தியா, 319 ரன்), டுமினி (தென்ஆப்பிரிக்கா, 187 ரன்), கிளைன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா, 147 ரன்), டோனி (இந்தியா, கேப்டன் – விக்கெட் கீப்பர், 50 ரன் மற்றும் 6 பேர் ஆட்டம் இழக்க செய்தது), டேரன் சேமி (வெஸ்ட் இணடீஸ், 101 ரன்), அஸ்வின் (இந்தியா, 11 விக்கெட்), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா, 9 விக்கெட்), சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ், 11 விக்கெட்), மலிங்கா (இலங்கை, 5 விக்கெட்), 12–வது வீரர்: கிரிஷ்மர் சான்டோகி (வெஸ்ட் இண்டீஸ், 8 விக்கெட்) இந்த தொடரில் அசத்திய வீரர்களில் இருந்து 11 பேரை மட்டும் தேர்வு செய்யும் பணி மிகவும் கடினமாக இருந்ததாக டேவிட் பூன் தெரிவித்தார். image: category: |
| இங்கிலாந்து வீராங்கனை காதல் தூது: விராட் கோலியின் தாயார் கோபம் Posted: 07 Apr 2014 01:13 PM PDT மும்பை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை 22 வயதான டேனியலி நிகோல் யாட் தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். தனது 'டுவிட்டர்' பக்கத்தில், 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று கெ(£)ஞ்சலாக தனது காதல் அம்பை ஏவி இருந்தார். இந்த நிலையில் டேனியலின் விருப்பத்தை கோலியின் குடும்பத்தினர் மறைமுகமாக நிராகரித்துவிட்டனர். விராட் கோலியின் தாயார் சரோஜ் கூறுகையில், 'விராட் கோலிக்கு இப்போது திருமணம் செய்துக்கொள்வதற்கு சரியான வயது கிடையாது. இன்னும் 4–5 ஆண்டுகளுக்கு அவரது திருமணத்தை பற்றி நினைக்கமாட்டோம். அவர் இப்போது தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். கிரிக்கெட் பயணத்தில் இன்னும் முன்னேற்றம் காண அவர் பேட்டிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்துவதே எங்களுக்கு முக்கியம்' என்றார். காலம் கனியும் வரை விராட் கோலிக்காக அந்த வெளிநாட்டு மங்கை காத்திருக்க தயாராக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்ட போது, 'உங்களது யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொள்ளுங்கள்' என்று கோபமாக பதில் அளித்தார். image: category: |
| 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, அஸ்வின் முன்னேற்றம் Posted: 07 Apr 2014 01:10 PM PDT துபாய் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் உயர்ந்து 2–வது இடத்தை (889 புள்ளி) பிடித்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசி விராட் கோலி இந்த தொடரில் மொத்தம் 319 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை பெற்றார். பேட்டிங்கில் மிரட்டியதால் தரவரிசையிலும் ஏற்றம் கண்டுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்சை (892) விட கோலி வெறும் 3 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. டாப்–10 வரிசைக்குள் உள்ள இன்னொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் 7–வது இடத்தில் இருந்து 10–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலக கோப்பையில் மொத்தம் 11 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், சிக்கனமாக பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி பாகிஸ்தானின் சயீத் அஜ்மலுடன் இணைந்து (தலா 711 புள்ளி) 3–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த அஸ்வினின் சிறந்த தரவரிசை இதுவாகும். பந்து வீச்சாளர்களில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியர் இவர் தான். முதல் இரு இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீசின் பத்ரீயும் (846 புள்ளி), சுனில் நரினும் (805 புள்ளி) உள்ளனர். அணிகளின் தரவரிசையில் உலக கோப்பையை வென்ற இலங்கை (133 புள்ளி) அணி இந்தியாவிடம் (130 புள்ளி) இருந்து 'நம்பர் ஒன்' இடத்தை தட்டிப்பறித்து விட்டது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| Posted: 07 Apr 2014 01:09 PM PDT |
| ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வெற்றி Posted: 07 Apr 2014 01:08 PM PDT சென்னை, பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரஞ்சலா 6–4, 6–2 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான அபினிகாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஈடீ மேக்தா 6–0, 6–0 என்ற நேர் செட்டில் ரேஷ்மாவை துவம்சம் செய்தார். இதே போல் அம்ரிதா (இந்தியா) தன்னை எதிர்த்த சக வீராங்கனை வானியாவை 3–6, 6–1, 6–4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
