Daily Thanthi |
- ராஜஸ்தானுக்கு எதிராக இருமுறை ‘டை’ ஆன ஆட்டத்தில் தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது கொல்கத்தா கேப்டன் கம்பீர் கருத்து
- ஆயுட்கால தடை மிரட்டல் வேதனையில் இருந்து இன்னும் விடுபடவில்லை ஜூவாலா கட்டா ஆதங்கம்
- மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு 32 நாட்கள் கோடை விடுமுறை விடுமுறை கால கோர்ட்டு 8 நாள் இயங்குகிறது
- தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன்மழை: தேவாரத்தில் மின்னல் தாக்கி 2500 கோழிக்குஞ்சுகள் பலி
- வாக்குச்சாவடி அருகே தாமரை சின்னத்தை காண்பித்ததாக புகார் நரேந்திரமோடி மீது வழக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
- திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி வருண ஹோம பூஜை
- சட்டசபை தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக சந்திக்கும் பிரிதிவிராஜ் சவான் பேட்டி
- சுகாதாரத்திற்க்கான உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை
- காஞ்சீபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து: மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சாட்சியம்
- திருப்போரூர் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம்
| Posted: 30 Apr 2014 01:20 PM PDT அபுதாபி, ராஜஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை டை ஆன ஆட்டத்தில் கடைசியில் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிப்பதாக கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறியுள்ளார். இரண்டு முறை 'டை' ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டம் இரண்டு முறை டை (சமன்) ஆன அதிசயம் நிகழ்ந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை' ஆனது. இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 11 ரன்கள் வீதம் எடுத்ததால் சூப்பர் ஓவரும் சமன் ஆனது. சூப்பர் ஓவர் சமன் ஆனால், போட்டியில் யார் அதிக பவுண்டரிகள் அடித்திருக்கிறார்களோ? அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும். ராஜஸ்தான் அணி 18 பவுண்டரியும், ஒரு சிக்சரும், கொல்கத்தா அணி 12 பவுண்டரியும், 3 சிக்சரும் எடுத்திருந்தது. அதிக பவுண்டரி விளாசியதன் அடிப்படையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஏமாற்றம் அளிக்கிறது ஐ.பி.எல். போட்டியில் ஓர் ஆட்டம் டை ஆவது இது 5–வது முறையாகும். ஆனால் ஒரே ஆட்டம் இரு முறை 'டை' ஆனது இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு பிறகு இரு அணிகளை சேர்ந்த வீரர்களின் பேட்டி வருமாறு:– 45 ரன்கள் எடுத்த கவுதம் கம்பீர் (கொல்கத்தா கேப்டன்): கிரிக்கெட்டில் இது மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது. ரசிகர்கள் போட்டியை உற்சாகமாக கண்டு ரசித்தனர். ஆனால் இறுதியில் தோல்விக்குரிய அணியாக இருந்தது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நாங்கள் இதுவரை 3 ஆட்டங்களில் தோற்று இருக்கிறோம். இந்த மூன்று ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்து தோல்வியை தழுவியிருக்கிறோம். நான் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது முக்கியமானது. இந்த ஆட்டத்தில் இருந்து மேலும் ஆக்ரோஷமாக விளையாட முடியும் என்று நம்புகிறேன். சொந்த மண்ணில் எல்லாம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 3 விக்கெட் வீழ்த்தி பிறந்த நாள் பரிசாக ஆட்டநாயகனாக தேர்வான ஜேம்ஸ் பவுல்க்னெர் (ராஜஸ்தான் பவுலர்): 20 ஓவர் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சில சூப்பர் ஓவர் ஆட்டங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் நான் விளையாடிய முதல் சூப்பர் ஓவர் இது தான். ஒரு வழியாக வெற்றிபெற்று விட்டதால், இன்றிரவு மகிழ்ச்சியுடன் தூங்குவேன். அணியின் மற்றவர்களும் இரவை சந்தோஷமாக கழிப்பார்கள் என்று நம்புகிறேன். திருப்பம் தந்த ஓவர் ஷேன் வாட்சன் (ராஜஸ்தான் கேப்டன்):– ம்ப முடியாத ஆட்டம். இது போன்ற ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு மேலே வருவது உண்மையிலேயே இனிமையான விஷயம். அது மட்டுமின்றி இந்த ஆட்டத்தின் வெற்றி எங்களுக்கு முக்கியமானதாக அமைந்தது. ஏனெனில் இந்த ஆட்டம் தான் நாங்கள் புள்ளி பட்டியலில் டாப்–4 இடத்திற்குள் முன்னேறுவதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதாக இருந்தது. சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்ட போது, 2 ரன்களே வெற்றிக்கு போதுமானது என்பது தெரியும். நான் முடிந்தவரை வேகமாக ஓடி 2 ரன்னை எடுத்தேன். நெருக்கடியிலும் ஸ்டீவன் சுமித் பதற்றமின்றி செயல்பட்டார். அவர் மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரர். ஸ்டீவன் சுமித் (ராஜஸ்தான் வீரர்):– ( கொல்கத்தாவின் வெற்றிக்கு 12 பந்தில் 16 ரன் தேவையாக இருந்த நிலையில்) 19–வது ஓவரை வீசிய ஜேம்ஸ் பவுல்க்னெர் தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றினார். அந்த ஓவரில் அவர் 3 விக்கெட்களே வீழ்த்தியதே திருப்புமுனை. அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. இது போன்று அடுத்து வரும் போட்டிகளிலும் அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சொந்த ஊரில் எழுச்சி பெறுவோம்–யுவராஜ்சிங் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்று நெருக்கடியில் தவிக்கிறது. அந்த அணியில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ்சிங் 5 ஆட்டத்தில் விளையாடி 121 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது வலைபக்கத்தில் எழுதியிருப்பதாவது:– ஐக்கிய அரபு எமிரேட்சில் 15 நாட்கள் விளையாடினோம். இப்போது இந்தியாவுக்கு திரும்பி, சரிவில் இருந்து மீள்வதற்கான நேரம் இது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்று போனது எங்களுக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இதில் இருந்து நாங்கள் சீக்கிரம் எழுச்சி பெறுவது அவசியம். ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் படுமோசமாக ஆடினோம். மற்ற இரு ஆட்டங்களில் முக்கியமான நேரத்தில் சரியாக ஆட தவறியதால் தோல்வி ஏற்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போன்று 20 ஓவர் போட்டி கிடையாது. இந்த வடிவிலான கிரிக்கெட்டில் வெற்றியோ தோல்வியே குறுகிய நேரத்தில் மாறிவிடும். சொந்த ஊரில் (பெங்களூர்) போட்டிக்கு முன்பாக இரண்டு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. அதற்குள் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று, சக்தியை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். சரிவில் இருந்து மீள்வது சொந்த ஊரில் கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார். வாட்சனுக்கு, ரஹானே புகழாரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க அட்டக்காரர் ரஹானே, புதிய கேப்டன் ஷேன் வாட்சனை வெகுவாக பாராட்டியுள்ளார். ஐ.பி.எல். இணையதளத்திற்கு ரஹானே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ஷேன் வாட்சன் அற்புதமான கேப்டன். பல விதங்களில் அவர் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தது போன்றே செயல்படுகிறார். வாட்சன், களத்தில் ரொம்ப அமைதியானவர். அதே போன்று முடிவுகளையும் பதற்றமின்றி சீக்கிரம் எடுக்கிறார். நெருக்கடியான சூழலிலும் சட்டென்று சரியான முடிவுகளை மேற்கொள்ளும் திறமை இருவரிடமும் உண்டு. ராகுல் டிராவிட் ஓய்வு பெற்று விட்டதால் தொடக்க வரிசையில் இறங்கும் எனக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். கூடுதல் பொறுப்பை நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் அது தான் என்னை கடினமான உழைக்க வைப்பதுடன், ஒரு கிரிக்கெட் வீரராக முன்னேற உதவிகரமாக இருக்கிறது. இவ்வாறு ரஹானே கூறியுள்ளார். image: category: |
| ஆயுட்கால தடை மிரட்டல் வேதனையில் இருந்து இன்னும் விடுபடவில்லை ஜூவாலா கட்டா ஆதங்கம் Posted: 30 Apr 2014 01:17 PM PDT புதுடெல்லி, இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் ஆயுட்கால தடை மிரட்டல் வேதனையில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை என்று முன்னணி வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார். ஆயுட்கால தடை மிரட்டல் கடந்த ஆண்டு நடந்த இந்திய பேட்மிண்டன் லீக் போட்டியில் டெல்லி ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளையாடிய இந்தியாவின் முன்னணி இரட்டையர் வீராங்கனையான ஜூவாலா கட்டா, பெங்களூர் பீட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மாற்று வீரர் பிரச்சினை தொடர்பான விஷயத்தில் தனது அணியினரை களம் இறங்க விடாமல் தடுத்தாக எழுந்த புகாரில் சிக்கினார். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய இந்திய பேட்மிண்டன் சங்க ஒழுங்கு நடவடிக்கை குழு ஜூவாலா கட்டாவுக்கு ஆயுட்கால தடை விதிக்க முடிவு செய்தது. ஆயுட்கால தடை முடிவை எதிர்த்து ஜூவாலா கட்டா சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஜூவாலா கட்டா தொடர்ந்து விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் சங்கமும் ஜூவாலா கட்டா மீதான தடையை அமல்படுத்தாமல் கைவிட்டது. வேதனை தீரவில்லை இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வினி பொன்னப்பாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 30 வயதான ஜூவாலா கட்டா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:– என்னை பொறுத்தமட்டில் இந்த பதக்கம் ஒரு பழிவாங்கும் படலம். நான் பகைமை வெறியுடன் தான் விளையாடுகிறேன். வேதனையும், வலியும் எனக்கு இன்னும் நிறைய இருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. மிகுந்த அமைதியுடன் இந்த பதக்க வெற்றியை அனுபவித்து வருகிறேன். எனக்கு எதிராக நடந்த எல்லா விஷயங்களும் தேவையற்றது. இதுபோன்ற பிரச்சினைகள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவசியமில்லாததாகும். எனது சாதனைக்காக நான் பணம் எதையும் கேட்கவில்லை. மரியாதையும், அங்கீகாரத்தையும் மட்டுமே கேட்கிறேன். இரட்டையர் ஆட்டக்காரர்களை ஏன்? வேறுபடுத்தி பார்க்கிறார்கள். நான் எனது திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து காட்ட வேண்டும் என்று நினைப்பது எனக்கு புரியவில்லை. போதுமான அளவு நான் சாதனை படைத்து விட்டேன். அடுத்த ஒலிம்பிக் இலக்கு காமல்வெல்த் விளையாட்டு மற்றும் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்று இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று இருக்கிறேன். ஆசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ளேன். இந்திய அணியில் எனக்கும், அஸ்வினிக்கும் மாற்று அளிக்கக்கூடிய வீராங்கனைகள் யாரும் இல்லை. எங்களுடைய சாதனைகள் அனைத்தும் யாருடைய ஆதரவும் இல்லாமல் படைக்கப்பட்டவையாகும். இப்போதும் நாங்கள் ஸ்பான்சர் இல்லாமல் தான் திண்டாடி வருகிறோம். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே எனது முக்கிய இலக்காகும். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நோக்கில் தான் மீண்டும் களம் திரும்பி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging: |
| மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு 32 நாட்கள் கோடை விடுமுறை விடுமுறை கால கோர்ட்டு 8 நாள் இயங்குகிறது Posted: 30 Apr 2014 01:04 PM PDT மதுரை, மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு இன்று(1–ந் தேதி) முதல் அடுத்த மாதம்(ஜூன்) 1–ந் தேதி வரை 32 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 8 நாட்கள் மட்டும் விடுமுறை கால கோர்ட்டு நடக்கிறது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணன், டி.ராஜா, கே.கல்யாணசுந்தரம், என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன், ஆர்.கருப்பையா, வி.எஸ்.ரவி ஆகியோர் விடுமுறை கால கோர்ட்டுகளில் வழக்குகளை விசாரிக்கின்றனர். மேற்கண்ட தகவல் ஐகோர்ட்டு கிளை பதிவாளர்(நிர்வாகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன்மழை: தேவாரத்தில் மின்னல் தாக்கி 2500 கோழிக்குஞ்சுகள் பலி Posted: 30 Apr 2014 01:00 PM PDT தேனி தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தேவாரத்தில் மின்னல் தாக்கியதில் 2 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது. உத்தமபாளையத்தில் தென்னை மரங்கள் முறிந்து மின்சார கம்பியில் விழுந்ததால், மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. 104 டிகிரிக்கும் அதிகமான வெயில் அடித்ததால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மக்கள் தயக்கம் அடைந்து வந்தனர். நேற்றும் பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. தேனி நகர் பகுதியில் மாலை 4 மணியளவில் வெயில் தணிந்து, பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்தது. பிரதான சாலைகளின் ஓரம் மணல் குவிந்து கிடந்தது. காற்று பலமாக வீசிய போது புழுதி பறந்ததால் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியை அனுபவித்தனர். சிறிது நேரத்தில் கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதேபோன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மரங்கள் முறிந்தன உத்தமபாளையம், கோகிலாபுரம், ராமசாமி நாயக்கன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், ரெங்கநாதபுரம் போன்ற பகுதிகளிலும் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. உத்தமபாளையத்தில் பலத்த காற்று வீசியதால் புறவழிச் சாலையில் தென்னை மரங்கள் சாய்ந்து மின்சார கம்பிகளின் மீது விழுந்தது. இதனால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. ராயப்பன்பட்டி பகுதியில் பலத்த காற்று காரணமாக 100–க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதேபோல ஆண்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையின் போது சூறாவளி காற்று வீசியது. இதில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பம்மாள், சீனி, காளிமுத்து ஆகியோருக்கு சொந்தமான தகர வீடுகள் இடிந்து விழுந்தன. மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்து கீழே விழுந்தன. அந்த பகுதியில் மின் இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டது. வீடுகள் இடிந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மழை காரணமாக நேற்று மாலையில் இருந்து இரவு வரை ஆண்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகள் குளிர்ச்சியாக காணப்பட்டது. 2,500 கோழிக்குஞ்சுகள் பலி தேவாரம் மூனாண்டிபட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது ஜோசப் என்பவரின் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் பண்ணை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதில் பண்ணையில் இருந்த 18 நாட்களே ஆன 2 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என தெரிவித்தனர். image: category:Tagging:News Group Category: |
| Posted: 30 Apr 2014 12:55 PM PDT புதுடெல்லி, பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்தான் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஓட்டு உள்ளது. தாமரை சின்னம் நேற்று இந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்தபோது மோடி, ரனீப் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் தாமரை சின்னத்தை காண்பித்து, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின. காங்கிரஸ் புகார் இதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் கே.சி.மிட்டல், உடனடியாக தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார். அதில் "வாக்குச்சாவடி அருகே பா.ஜனதாவுக்காக மோடி பிரசாரம் செய்துள்ளார். மேலும் பொதுமக்களிடையே கட்சியின் சின்னத்தையும் காண்பித்து இருக்கிறார். இதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி விதிமுறை மீறல் ஆகும். இதற்காக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்" என்று கூறியிருந்தார். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாவும் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளார். அதில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மோடியை கைது செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். இதேபோல் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் சுக்தேவ் பட்டேலும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளார். வீடியோ காட்சிகள் ஆய்வு இதனையடுத்து காந்திநகர் வாக்குச்சாவடியில் மோடி ஓட்டுப்பதிவு செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ காட்சிகளை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உடனடியாக டெல்லிக்கு வரவழைத்து அதனை ஆய்வு செய்தனர். பின்னர் குஜராத் மாநில அரசு நிர்வாகத்துக்கு அதிரடியாக சில உத்தரவுகளையும் தேர்தல் அதிகாரிகள் பிறப்பித்தனர். அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மோடி மீது வழக்கு குஜராத் மாநிலம் முழுவதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த நேரத்தில் நரேந்திரமோடி கூட்டம் நடத்தியதும், அதில் அவர் பேசியதும் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ) மற்றும் 126(1) (பி) ஆகிய பிரிவுகளை மீறும் செயல்களாகவே அமைந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது. இந்த கூட்டத்தில் தாமரை சின்னத்தை காண்பித்து மோடி பேசும் விதம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்து உள்ளது. இது காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தலை மட்டுமின்றி, இதே நேரத்தில் நாட்டில் தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது. எனவே நரேந்திரமோடி மீதும், இந்த கூட்டத்தை நடத்தியவர்கள் மீதும் புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிடுகிறது. தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை மேலும் இந்த கூட்டம் தொடர்பாக காட்சிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1),(பி) பிரிவின் படி தனித்தனியாக புகார்களும் அல்லது வழக்குகளும் பதிவு செய்யப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காந்திநகர் குற்றப்பிரிவு போலீசார் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தலைமை செயலாளருக்கு உத்தரவு இந்த பிரச்சினை தொடர்பாக குஜராத் மாநில தலைமைச்செயலாளர் விரிவான அறிக்கையை உடனடியாக தங்களுக்கு அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காந்திநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரூப்வந்த் சிங், கட்சியின் தேர்தல் சின்னத்தை மோடி காண்பித்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். சட்டப்பிரிவு கூறுவது... மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1), (ஏ), மற்றும் (பி) ஆகிய பிரிவுகளின்படி ஓட்டுப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு அப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் கூட்டம் நடத்துவது அல்லது அதில் கலந்து கொள்வது, பொதுக்கூட்டத்தில் பேசுவது அல்லது அதில் இணைந்து கொள்வது, ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றை சினிமா காட்சிகளாகவோ, தொலைக்காட்சி படமாகவோ மற்றும் இதுபோன்ற இதர சாதனங்கள் மூலமாகவோ எவர் ஒருவரும் ஒளிபரப்பு செய்யக்கூடாது எனக்கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றவேண்டும் மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 130-வது பிரிவின்படி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் எந்தவொரு கட்சியினரும் தங்களது கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த தொப்பிகள், சால்வைகள், உடைகள் ஆகியவற்றை அணிந்து வரக் கூடாது. இதேபோல் தேர்தல் நடைபெறும் நாளில் யாரும் ஓட்டு கேட்டோ, சின்னங்களை காண்பித்தோ பிரசாரம் செய்யக்கூடாது. இதேபோல் துண்டு பிரசுரங்கள், சமிக்ஞைகள் செய்வதையும் அனுமதிக்கக்கூடாது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களிலும் இந்தி விதிமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி வருண ஹோம பூஜை Posted: 30 Apr 2014 12:43 PM PDT திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் மழை வேண்டி வருண ஹோம பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருண ஹோம பூஜை திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில், தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும். நீர்வளம் மற்றும் தானிய உற்பத்தி பெருகி அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என பிரார்த்தனை செய்து வருணஹோம வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழக அரசின் அறநிலைய துறையின் உத்தரவின்பேரில் நடந்த இந்த பூஜைக்கு திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இதையொட்டி கோவிலின் யாக சாலை அருகே ஹோம குண்டம் அமைக்கப்பட்டு புனித கலசம் ஏற்படுத்தி வருண பகவானை ஆவாகனம் செய்து கோவில் சிவாச்சாரியார் ரவி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் வருணகாயத்ரி ஹோம வழிபாடு பூஜைகள் செய்தனர். பின்னர் புனித கலச நீரால் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். கிருஷ்ணர் கோவில் இதேபோல திருத்தணி அருகில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் மண்டலாபிஷேக விழாவில் உலக நன்மை மற்றும் நல்ல மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண ஹோம பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு புனித கலசநீரை மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டுசென்று கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கோவில் தர்மகர்த்தா ஜெயசெஞ்சுலராஜூ, கே.ஜி.கண்டிகை பிரம்ம கைலாச ஆசிரம தலைவர் கேசவுலு சுவாமி உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். image: category: |
| சட்டசபை தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக சந்திக்கும் பிரிதிவிராஜ் சவான் பேட்டி Posted: 30 Apr 2014 12:30 PM PDT மும்பை, முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நேற்று சயாத்ரி விருந்தினர் மாளிகையில் மத்திய விவசாய மந்திரி சரத்பவாரை சந்தித்தார். அப்போது மராட்டியத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் உள்ளாட்சி வரி பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நிருபர்களிடம் கூறுகையில், ''மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சந்தித்தது. தீவிர பிரசாரம் செய்து சவாலை எதிர்கொண்டோம். இதேபோல வருகிற சட்டசபை தேர்தலையும், இரு கட்சிகளும் இணைந்து சந்திக்கும். மாநிலத்தில் ஐஸ்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ரூ.1,500 கோடியை நிவாரணமாக வழங்கி உள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது'' என்றார். image: category:Tagging:News Group Category: |
| சுகாதாரத்திற்க்கான உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை Posted: 30 Apr 2014 12:28 PM PDT போபால், போபாலில் உள்ள மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது; சுகாதாரத்திற்க்கான உரிமையை இந்திய அரசியல் அமைப்பில் உள்ள அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கின்றது. மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை. மாநில அரசாங்கம் ஏழைகள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை அதிகரிக்க வழிவகை செய்யபட்டுவருகிறது. அரசு செயல்படுத்திய திட்டங்களை ஏழைகள் தனியார் மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்றுகொள்ளலாம் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 30 Apr 2014 12:14 PM PDT காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பலியானவர்களின் குடும்பத்தினர் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி எம்.சம்பத்குமாரிடம் சாட்சியம் அளித்தனர். பட்டாசு ஆலை விபத்து காஞ்சீபுரம் அருகே வையாவூரில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் 4–ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான எம்.சம்பத்குமார் விசாரணை நடத்தினார். இந்த விபத்தில் உயிரிழந்த தணிகைமலையின் மனைவி சுமதி, அவரது தந்தை முனுசாமி, விபத்தில் இறந்த மனோன்மணியின் மகள் மகேஸ்வரி, கணவர் திருஞானம் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளிக்க வந்தனர். அவர்களை, மாவட்ட வருவாய் அதிகாரி எம்.சம்பத்குமார் தனித்தனியாக விசாரித்தார். அரசு வேலை இது குறித்து சாட்சியம் அளிக்க வந்த தணிகைமலையின் மனைவி சுமதி கூறும்போது, ''திருமணமான 8–வது மாதத்தில் நடந்த இந்த வெடி விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். இப்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். பிளஸ்–2 வரை படித்துள்ள எனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். image: category:Tagging: |
| Posted: 30 Apr 2014 12:03 PM PDT திருப்போரூர், திருப்போரூர் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் முருகன் கோவில் முருகப்பெருமானின் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருப்போரூர் ஆகும். இங்கு முருகப்பெருமான் கந்தசாமி என்னும் பெயரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. இதையொட்டி மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருப்போரூர் வந்து மலையடிவாரம், வேம்படி விநாயகர் ஆலயம், நல்லான் செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் குவிந்தனர். நீண்ட வரிசை நேற்று காலை மயில் காவடி, சேவல் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி போன்ற காவடிகள் தூக்கி பம்பை, உடுக்கை ஆட்டத்துடன் வந்து மொட்டை அடித்து வளையார் நீரோடை எனும் சரவணப்பொய்கையில் நீராடி தங்களது நேர்த்தி கடனை தீர்த்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து பயபக்தியுடன் மூலவரை தரிசனம் செய்தனர். ஆங்காங்கே மோர், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டன. விழாவையொட்டி பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருப்போரூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு திருப்போரூர் பேரூராட்சி தலைவர் சக்தீஸ்வரி சிவராமன் மேற்பார்வையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மற்றும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்காவல் படைவீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை திருப்போரூர் கோவில் செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |