Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தோல்வி நிச்சயம் என்ற கருத்தில் காங்., தலைவர்கள் ஓட்டம்: வேட்பாளர், மந்திரி என பா.ஜ., பக்கம் அணி திரள்கின்றனர்

Posted:

முந்தைய தேர்தல்கள் போல் இல்லாமல் இந்த லோக்சபா தேர்தல், மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளை, காங்கிரஸ் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளில், 'காங்கிரஸ் படுதோல்வி அடையும்' என தெரிவிக்கப்படுவதால், அக்கட்சியில் இருந்து வெளியேறும் முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட ஒருவரும், மத்திய அமைச்சர் ஒருவரும், காங்கிரசுக்கு நேற்று, 'டாட்டா' காண்பித்து வெளியேறி யுள்ளதால், அக்கட்சி மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.பதினாறாவது லோக்சபாவிற்கு, 543 எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இம்மாதம் ...

முதல்வர் ஜெ., ஹெலிகாப்டரை சோதனையிட வந்த தாசில்தார் பாதுகாப்பு அதிகாரிகளால் விரட்டியடிப்பு

Posted:

சேலத்தில், அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டரை, சேலம் தெற்கு தாசில்தார் கண்ணன் சோதனையிட வந்தபோது, அங்கிருந்து முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று வாருங்கள் என விரட்டினர்.தொகுதி வாரியாக: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தொகுதி வாரியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். நேற்று, நாமக்கல், சேலம் தொகுதியில், அவர் பிரசாரம் செய்தார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரசார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக, ...

தமிழ் புத்தாண்டில் தமிழகத்தில் மோடி: வேட்டி, சட்டையில் கலக்க போகிறார்

Posted:

'தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்' என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.தமிழகத்தில், பா.ஜ., அணியில் சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம், மோடி வருகையையும், அவரது பிரசாரத்தையும் பெரிதும் நம்பி உள்ளன. ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., தலைவர்களை பொறுத்தவரையில், மோடி தமிழகம் வர வேண்டும் என்றும், ஒரே மேடையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பேச வேண்டும் என, ...

'கொக்கி போட்டு மின்சாரத்தை திருடாதீங்க...': கட்சிகளிடம் மின் வாரிய அதிகாரிகள் கெஞ்சல்

Posted:

'மின் பற்றாக்குறை நிலவுவதால், அரசியல் கட்சிகள், கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை கைவிட்டு, தற்காலிக மின் இணைப்பு பெறலாம். அல்லது ஜெனரேட்டரை பயன்படுத்த வேண்டும்' என, மின் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மின் பற்றாக்குறை: தமிழகத்தில், மின் தே வை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சென்னை உட்பட பல இடங்களில், சுழற்சி முறையில், மின்தடை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வீடு, தொழிற்சாலை, வணிக பயன்பாடு, தற்காலிகம் என, ...

பெங்களூரு கோர்ட்டில் ஆஜராக ஜெ.,க்கு உத்தரவு: சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அதிரடி

Posted:

''சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கான காரணத்தை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விளக்க, நேரில் ஆஜராக வேண்டும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்ட, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், இம்மாதம் 5ல், ஜெயலலிதாவுக்கு மட்டும், ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார்.சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பல ...

ராகுலுக்கு அமேதியில் இருப்பிட சான்றிதழ் மறுப்பு: முகவரியே இல்லாததால் கோட்டாட்சியர் சவுக்கடி

Posted:

புதுடில்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், அமேதி நகரில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று கிடைக்காமல் தவிக்கிறார்.வேட்பு மனு தாக்கல்: சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., மாநிலத்தின், அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் ராகுல். அதற்காக, விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன், தேர்தல் செலவினங்களுக்காக வங்கிக் கணக்கு துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு துவக்க, எந்த பகுதியில் வங்கி ...

அரசுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகளா? தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்

Posted:

சென்னை: ''தேர்தல் கமிஷன் பழைய விதிகளையே செயல்படுத்துகிறது. புதிய கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.'தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும் கூட்டத்தில், வேட்பாளர் பங்கேற்றாலோ, வேட்பாளரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தாலோ, பிரசாரம் செய்வோர், வேட்பாளர் பெயரை உச்சரித்தாலோ, அந்த கூட்டத்திற்கான செலவு, வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் பெயரை உச்சரிக்காமல், கூட்டம் நடந்தால், அதன் செலவு, சம்பந்தப்பட்ட கட்சி கணக்கில் சேர்க்கப்படும்' என, தேர்தல் கமிஷன் ...

'செய்வீர்களா'; 'செய்வீர்களா' என கேட்கும் ஜெ., என்ன செய்து விட்டார்: ஸ்டாலின்

Posted:

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: ஜெ., பங்கேற்கும் கூட்டத்திற்கு, காலை 10 மணிக்கே ஆட்களை வரவழைத்து வெயிலில் உட்கார வைத்து விடுகின்றனர். 'செய்வீர்களா?' என கேட்கும் ஜெ., தமிழக மக்களுக்காக என்ன உருப்படியான திட்டங்களை செய்தார். மின்சாரத்தை தொட்டால் தான் 'ஷாக்' அடிக்கும், ஆனால் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மின்கட்டணத்தை கேட்டாலே 'ஷாக்' அடிக்கிறது. வறட்சிக்கு பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 55 கோடி ரூபாயில், 216 கிராமங்கள் பயன்பெறும் வகையில், நரிப்பையூரில் கடல்நீரை ...

முதல்வர் பிரசாரத்திற்கு திருப்பி விடப்படும் 'தனியார் பஸ்கள்': தேர்தல் கமிஷன் 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் அம்பலம்

Posted:

''முதல்வர் ஜெயலலிதாவின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பஸ்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்) கட்டாயப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மை என்பது, தேர்தல் கமிஷன் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விதிகளுக்கு புறம்பாக, வெளியூர்களுக்கு செல்லும், தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்டி, போக்குவரத்து கமிஷனருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™