Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு

Posted: 27 Apr 2014 01:47 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்துப் பேசினார்.

"கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள இடம் பாஜகவுக்கு தெரியும்'

Posted: 27 Apr 2014 01:46 PM PDT

""கருப்புப் பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? அந்தப் பணம் எப்படிச் செலவிடப்படுகிறது என்பது பாஜக தலைவர்களுக்கு தெரியும்'' என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

குடிநீர் பஞ்சத்தைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 27 Apr 2014 01:46 PM PDT

குடிநீர் பஞ்சத்தைப் போக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் பண விநியோகம் செய்வதைத் தடுக்கச் சட்டத்திருத்தம்: ராமதாஸ் கோரிக்கை

Posted: 27 Apr 2014 01:46 PM PDT

தேர்தலில் பண விநியோகத்தைத் தடுக்க சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஹாங்காங் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

Posted: 27 Apr 2014 01:45 PM PDT

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனதுகுடும்பத்துடன் ஓய்வுக்காக சனிக்கிழமை ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார்.

வழிகாட்டுகிறார் உம்மன் சாண்டி!

Posted: 27 Apr 2014 01:45 PM PDT

பூனைக்கு மணி கட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட, துணிந்து அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்க முற்பட்டிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி என்றுதான் கூறவேண்டும்.

வியக்க வைக்கும் இயற்கை!

Posted: 27 Apr 2014 01:44 PM PDT

உலகில் முதல் உயிரினம் சுமார் 200 கோடியாண்டுகளுக்கு முன் தோன்றியதிலிருந்து பருவ நிலைகளிலும் சுற்றுச் சூழல்களிலும் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

பண்டைய இந்திய மருத்துவம்

Posted: 27 Apr 2014 01:44 PM PDT

இந்தியாவில் பழங்காலம் தொட்டே ஒரு மருத்துவ முறை இருந்து வருகிறது. இது ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுகிறது.

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

Posted: 27 Apr 2014 01:30 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம்

Posted: 27 Apr 2014 01:29 PM PDT

அரசு வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வரை நீதித் துறையில் 18 ஆண்டுகள் ஆற்றிய பணி முழு மனநிறைவைத் தந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.

முகுந்தின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 27 Apr 2014 01:27 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்கள் வீரமிக்க மகனை இழந்துவிட்டனர்

Posted: 27 Apr 2014 01:26 PM PDT

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்ததன் மூலம் தமிழக மக்கள் தங்களது வீரமிக்க மகனை இழந்துவிட்டனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சீமாந்திரத்துக்குத் தனி தலைநகர்! ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா தேர்தல் முடிவுகள்?

Posted: 27 Apr 2014 01:22 PM PDT

ஆந்திரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சீமாந்திரம் பிராந்தியத்துக்கு நிரந்தரமான தனி தலைநகரைத் தேர்வு செய்யவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, அரசியல் கட்சிகளிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

என்னை பிரதமராக்குங்கள்: மாயாவதி

Posted: 27 Apr 2014 01:21 PM PDT

சிறந்த "நகைச்சுவையாளர்' ராகுல்: மோடி கிண்டல்

Posted: 27 Apr 2014 01:20 PM PDT

""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிரிப்பு நடிகர் கபில் சர்மாவை விட சிறப்பாக நகைச்சுவை செய்கிறார். இதனால், கபில் சர்மாவுக்கு வாய்ப்பு குறைந்து விடக்கூடும்'' என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக விமர்சித்துள்ளார்.

நாட்டை ஆள பரந்த மனமே தேவை: மோடிக்கு பிரியங்கா பதிலடி

Posted: 27 Apr 2014 01:19 PM PDT

""நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப்பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.

"ராணி சாகிபா'வை வெல்வாரா வருண்?

Posted: 27 Apr 2014 01:17 PM PDT

பாஜக வேட்பாளராக வருண் காந்தி போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில் அவருக்கு எதிராக மொத்தம் 14 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பெண்களின் வாக்கு எந்தக் கட்சிக்கு: ஒடிஸாவில் தேர்தல் முடிவுக்காக பரபரப்புடன் காத்திருக்கும் கட்சிகள்

Posted: 27 Apr 2014 01:11 PM PDT

ஒடிஸாவில் இரு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருப்பது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

ம.பி., ராஜஸ்தானில் இன்று மறுவாக்குப்பதிவு

Posted: 27 Apr 2014 01:10 PM PDT

ராஜஸ்தானின் கண்ட்வா மக்களவைத் தொகுதியிலும், மத்தியப்பிரதேசத்தின் டோங்-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியிலும் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஃபரூக் அப்துல்லாவின் பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு?

Posted: 27 Apr 2014 01:05 PM PDT

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

"வாஜ்பாய் உறவினர் காங்கிரஸில் இணைந்ததை யாரும் பேசாதது ஏன்?'

Posted: 27 Apr 2014 01:02 PM PDT

பிரதமரின் சகோதரர் தல்ஜீத் சிங் பாஜகவில் இணைந்ததை அடுத்து காங்கிரûஸ கேலி பேசி வரும் அக்கட்சியினர், காங்கிரஸில் வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா இணைந்தது குறித்து ஏன் பேசுவதில்லை? என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீ

Posted: 27 Apr 2014 01:01 PM PDT

உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடுவோரை பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது: தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 27 Apr 2014 12:59 PM PDT

யோகா குரு ராம்தேவின் கருத்தை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவோரை, தேர்தல் பிரசாரத்தில் பங்குபெற மாநில தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

3ஆவது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தருவதில் உடன்பாடில்லை: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 27 Apr 2014 12:58 PM PDT

""3ஆவது அணி ஆட்சியமைக்க வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது'' என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அச்சப்பட மாட்டேன்: பிரியங்கா

Posted: 27 Apr 2014 12:57 PM PDT

"எதைக் கண்டும் அச்சப்பட மாட்டேன்' என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேராவை குற்றம்சாட்டி பாஜக வெளியிட்டுள்ள விடியோ மற்றும் பிரசுரம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வதேராவின் நிலபேர விடியோவை வெளியிட்டது பாஜக

Posted: 27 Apr 2014 12:55 PM PDT

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவின் சர்ச்சைக்குரிய நிலபேரங்கள் தொடர்பாக குற்றம்சாட்டி விடியோ மற்றும் 6 பக்கங்கள் கொண்ட பிரசுரத்தை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் பிடிவி ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை

Posted: 27 Apr 2014 12:53 PM PDT

வளிமண்டலத்துக்கு அப்பால், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் பிருத்வி பாதுகாப்பு ஏவுகணையை (பிருத்வி டிஃபன்ஸ் வெஹிக்கல் - பிடிவி) முதல்முறையாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

மனித உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்

Posted: 27 Apr 2014 12:51 PM PDT

பொன்னமராவதியில் மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மூன்றே மாதங்களில் சேதமடையத் தொடங்கிய தார்ச்சாலை

Posted: 27 Apr 2014 12:51 PM PDT

புதுக்கோட்டை நகரின் உள்ள செல்லும் முக்கிய புறவழிச்சாலையான ரயில் நிலைய ரவுண்டானா முதல் மாலையீடு வரையில் புதுப்பிக்கப்பட்ட சாலை மூன்றே மாதங்களில் சேதமடையத் தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலேசியாவில் பயிற்சி முகாம் : ரோட்டரி நிர்வாகிகள் பயணம்

Posted: 27 Apr 2014 12:51 PM PDT

மலேசியாவில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரோட்டரி நிர்வாகிகள் திருச்சி விமான நிலையம் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 27 Apr 2014 12:50 PM PDT

 புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அரசு வழக்குரைஞர் அ. முருகேசன் உள்பட மொத்தம் 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 27 Apr 2014 12:50 PM PDT

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குடிநீர் கேட்டு இரு இடங்களில் மறியல்

Posted: 27 Apr 2014 12:50 PM PDT

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெஜெ. கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 27 Apr 2014 12:50 PM PDT

: புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெஜெ. கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

7தஞ்சை காலபைரவர் கோயிலில் குடமுழுக்கு விழா

Posted: 27 Apr 2014 12:49 PM PDT

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலக்காட்டு காளியம்மன் கோயிலில் பால்குடம்

Posted: 27 Apr 2014 12:49 PM PDT

கும்பகோணத்தில் பாலக்காட்டு காளியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனைச் செலுத்தினர்.

மலேரியா விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 27 Apr 2014 12:48 PM PDT

சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் மலேரியா காய்ச்சல் தடுப்பு தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

"காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டவர் தி.க.சி'

Posted: 27 Apr 2014 12:48 PM PDT

வயதான போதும் காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டவர். தி.க.சி என்றார் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் பெ. மணியரசன்.

மே 1-ல் பூண்டி மாதா கோயில் வழிகாட்டி கோபுரம் திறப்பு

Posted: 27 Apr 2014 12:48 PM PDT

ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூண்டி மாதா கோயில் வழிகாட்டி கோபுரத்தின் திறப்பு விழா மே 1-ம் தேதி நடைபெறுகிறது.

காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம்

Posted: 27 Apr 2014 12:48 PM PDT

கும்பகோணத்தில் காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்சி ராயல் பேரல் மருத்துமனை இணைந்து காது,

மே 1-ல் சத்குரு தியாக பிரும்ம இசை விழா தொடக்கம்

Posted: 27 Apr 2014 12:47 PM PDT

கும்பகோணத்தில் சத்குரு தியாக பிரும்ம 29-ம் ஆண்டு இசை விழா வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது. மக்களிடையே கர்நாடக மற்றும் தெய்வீக இசையை பரப்ப வேண்டும் என்ற எண்

திருவாரூரில் குடிசை வீடு தீக்கிரை

Posted: 27 Apr 2014 12:47 PM PDT

திருவாரூரில் சனிக்கிழமை இரவு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது. திருவாரூர் நெய்விளக்குத்தோப்பு அண்ணா காலனியைச் சேர்ந்தவர் மோகன் (38). கூலித்

பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக மூட அறிவுறுத்தல்

Posted: 27 Apr 2014 12:47 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பயன்பாடற்று திறந்தநிலையில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளை மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை

இரு சக்கர வாகனம்மோதி 1 வயது குழந்தை சாவு

Posted: 27 Apr 2014 12:46 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் 1 வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

தேர்தல் தகராறு: 10 பேர் மீது வழக்கு

Posted: 27 Apr 2014 12:46 PM PDT

குத்தாலம் அருகே தேர்தல் தகராறு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குத்தாலம் காவல் சரகம் மறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த

நவ. 6-ல் கோவையில் தோட்டக் கலை மாநாடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 27 Apr 2014 12:46 PM PDT

கோவையில் நடைபெறவுள்ள இந்திய தோட்டக்கலை மாநாட்டில், புதுமை புகுத்திய தோட்டக்கலை விவசாயிகள் பங்கேற்கலாம் என சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கு. சசிகலா

"இலக்கை நோக்கியே மாணவர்கள் செயல்பட வேண்டும்'

Posted: 27 Apr 2014 12:45 PM PDT

: மாணவர்கள் தனக்கென்று ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதை நோக்கியே முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன்.

தேர்தல் பணி ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரிக்கை

Posted: 27 Apr 2014 12:45 PM PDT

: மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்குத் தேர்தல் பணி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதாரமான முறையில் உலர்மீன்கள் தயாரிக்கும் முறை

Posted: 27 Apr 2014 12:45 PM PDT

சுகாதாரமான முறையில் உலர்மீன்கள் தயாரிக்கும் முறையை நாகை மீன்வளத் தொழில்நுட்ப நிலையப் பேராசிரியர் மு. நாகூர் மீரான் மற்றும் உதவிப் பேராசிரியர் பா. கணேசன் ஆகியோர் விளக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒழுகைமங்கலத்தில் மஞ்சள்நீர் உற்சவம்

Posted: 27 Apr 2014 12:45 PM PDT

நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள்நீர் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் பங்குனித் திரு

புதுக்கோட்டை

Posted: 27 Apr 2014 12:44 PM PDT

தஞ்சாவூர்

Posted: 27 Apr 2014 12:44 PM PDT

ராம்தேவின் நிகழ்ச்சிகளுக்கு மே 16 வரை தடை: கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 27 Apr 2014 12:44 PM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான யோகா குரு ராம்தேவின் கருத்தால், லக்னெள மாவட்டத்தில் அவர் பொதுக்கூட்டம், செய்தியாளர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை மே 16ஆம் தேதி வரை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

100 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 27 Apr 2014 12:29 PM PDT

பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

நூல் வெளியீட்டு விழா

Posted: 27 Apr 2014 12:28 PM PDT

அகநி வெளியீட்டகம் சார்பில், கவிஞர் வசீகரன் எழுதிய பற பற என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெட்டிக் கடையில் அரசியல் பேச்சு;தகராறில் ஒருவர் கைது

Posted: 27 Apr 2014 12:28 PM PDT

புதுப்பாளையம் அருகேயுள்ள ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சேட்டு (59). இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்திவருகிறார்.

மாரியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

Posted: 27 Apr 2014 12:28 PM PDT

ஆரணி அருகேயுள்ள மெய்யூர் மாரியம்மன் கோவிலில் பரசுராமன் சுவாமி ஐம்பொன் சிலை திருடு போனது.

லாரி- பஸ் மோதல்: ஒருவர் காயம்

Posted: 27 Apr 2014 12:27 PM PDT

சென்னையைச் சேர்ந்த வேதபுரி மகன் கலைவாணன் (47). இவர் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கன்டெய்னர் லாரியை அண்மையில் ஓட்டி வந்தார்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 27 Apr 2014 12:27 PM PDT

திருவண்ணாமலை நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

சண்முகா தொழிற்சாலை கல்லூரியில் ஐம்பெரும் விழா நாளை தொடக்கம்

Posted: 27 Apr 2014 12:27 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐம்பெரும் விழா, செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

கிணற்றில் விழுந்த மான் குட்டி மீட்பு

Posted: 27 Apr 2014 12:27 PM PDT

திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த மான் குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையை அடுத்த வாய்விடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்.

மணல் கடத்தல்: இளைஞர் கைது

Posted: 27 Apr 2014 12:26 PM PDT

செய்யாறு அருகே மணல் கடத்தியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். தூசி காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் தாலிக்கால் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வாகனத்

மனைவியை காம்பஸ் கருவியால் குத்திய காவலர் மீது வழக்கு

Posted: 27 Apr 2014 12:21 PM PDT

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை காம்பஸ் கருவியால் குத்திய காவலர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 27 Apr 2014 12:21 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் மீது தாக்குதல்: இருவர் கைது

Posted: 27 Apr 2014 12:21 PM PDT

விளாத்திகுளம் அருகே மாணவரைத் தாக்கியதாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்

Posted: 27 Apr 2014 12:20 PM PDT

வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை திருவிழா திங்கள்கிழமை (ஏப்.28) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன.

நாகர்கோவில்- தென்காசி இரவுநேர பேருந்துகள் நிறுத்தம்

Posted: 27 Apr 2014 12:20 PM PDT

நாகர்கோவிலில் இருந்து தென்காசிக்கு களக்காடு வழித்தடத்தில் இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

காயல்பட்டினத்தில் காதர் மொய்தீனுக்கு வரவேற்பு

Posted: 27 Apr 2014 12:20 PM PDT

காயல்பட்டினம் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.        

தேரோட்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் ஆலோசனைக் கூட்டம்

Posted: 27 Apr 2014 12:19 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோயில் சித்திரை தேரோட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா

Posted: 27 Apr 2014 12:19 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழா நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற விழாவில், முதல் நாளன்று இரவு திருவிளக்குப் பூஜையும், 2-ஆம் நாளன்று சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கொடை விழாவன்று மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா மற்றும் முளைப்பாரி எடுத்தல் முதலியன நடைபெற்றன. 4-ஆம் நாளன்று காலை படைப்பு,

மனைவியை காம்பஸ் கருவியால் குத்திய காவலர் மீது வழக்கு

Posted: 27 Apr 2014 12:19 PM PDT

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை காம்பஸ் கருவியால் குத்திய காவலர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றக் கூட்டம்

Posted: 27 Apr 2014 12:19 PM PDT

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு

Posted: 27 Apr 2014 12:18 PM PDT

கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

முடங்கிப்போன பனைஓலைப் பெட்டி தயாரிப்பு தொழில்

Posted: 27 Apr 2014 12:18 PM PDT

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் பனைஓலைகளை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படும்

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

Posted: 27 Apr 2014 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புத்தாடை வழங்கும் விழா

Posted: 27 Apr 2014 12:17 PM PDT

ஆறுமுகனேரி மடத்துவிளையில் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. புனித வின்சென் தே பவுல் சபை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பங்குத்தந்தை ரூபர்ட் அ

ரெடீமர்ஸ் டிராபி கால்பந்து: இறுதிப் போட்டியில் பிரகாசபுரம், நாசரேத் அணிகள்

Posted: 27 Apr 2014 12:17 PM PDT

மூக்குப்பீறியில் நடைபெற்று வரும் ரெடீமர்ஸ் டிராபிக்கான கால்பந்து போட்டியில் நாசரேத்,பிரகாசபுரம் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.                

கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

Posted: 27 Apr 2014 12:17 PM PDT

கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் வேறு இடங்களுக்கு அடிக்கடி மாற்றப்படுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்டவர் கடத்தல்

Posted: 27 Apr 2014 12:16 PM PDT

கோவில்பட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

எடத்துவா திருத்தல பெருவிழா கொடியேற்றம்

Posted: 27 Apr 2014 12:16 PM PDT

எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழாவை திருத்தல அதிபர் பேரருள்தந்தை ஜார்ஜ் பழையபுரா ஞாயிற்றுகிழமை கொடியேற்றி தொடங்கிவைத்தார்.

என்.ஐ. பல்கலை.யில் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு

Posted: 27 Apr 2014 12:16 PM PDT

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகம் சார்பில், பொறியியல் கல்விக்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புக்காக ஐந்து மையங்களில் நடைபெற்ற  நுழைவுத் தேர்வில் 3,453 மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளியாடி பகுதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரிக்கை

Posted: 27 Apr 2014 12:15 PM PDT

: பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

Posted: 27 Apr 2014 12:15 PM PDT

குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் கோடை விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில், இங்கு சினிமா படப்பிடிப்பு நடந்ததால் சுற்றுலாப் பய

வாசகர் வட்டக் கூட்டம்

Posted: 27 Apr 2014 12:15 PM PDT

நாகர்கோவிலில் உள்ள மைய நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

பேச்சிப்பாறை அணையில் படகில் பயணம் செய்யும் பழங்குடிகள்

Posted: 27 Apr 2014 12:15 PM PDT

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடிகளுக்கு பேச்சிப்பாறை அணை வழியான படகுப் பயணம் பாதுகாப்பானதாக மாற்றுவதற்

கடனைதிருப்பிக் கேட்டு சிறுமியைத் தாக்கிய சகோதரிகள் கைது

Posted: 27 Apr 2014 12:14 PM PDT

ஆலங்குளம் அருகே கடனைத் திருப்பிக் கேட்டு சிறுமியைத் தாக்கியதாக சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளையில் பரவலாக மழை

Posted: 27 Apr 2014 12:14 PM PDT

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இப்பகுதியில் கடந்த இரு நாள்களாக மாலையில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில்

சுசீந்திரம், குமரி கோயில்களில் மழை வேண்டி வருண யாகம்

Posted: 27 Apr 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களில் மழை வேண்டி, வருண யாகம் திங்கள்கிழமை (ஏப். 28)

தண்ணீர் தேடி வந்த மான்குட்டி சாவு

Posted: 27 Apr 2014 12:13 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீர் தேடி வந்த மான்குட்டி  தண்ணீர் கிடைக்காமல்  உயிரிழந்தது.

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள்: பொதுமக்கள் அச்சம்

Posted: 27 Apr 2014 12:13 PM PDT

: நத்தம் அருகே கோபால்பட்டியில் குடியிருப்பு  பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.    கோபால்பட்டி-நத்தம் சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதன்

பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம்

Posted: 27 Apr 2014 12:13 PM PDT

பழனி மலைக்கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இரு பிரிவினரிடையே மோதல்: 11 பேர் கைது

Posted: 27 Apr 2014 12:13 PM PDT

ரெட்டியார்சத்திரம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிணற்றில் தூர்வாரியபோது கயிறு அறுந்து தொழிலாளி சாவு

Posted: 27 Apr 2014 12:12 PM PDT

பழனி அருகே கிணற்றில் தூர்வாரியபோது இரும்பு கயிறு அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கொடைக்கானல் ஏரி

Posted: 27 Apr 2014 12:12 PM PDT

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர வடிவிலான ஏரியை காப்பாற்ற நகராட்சி நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென

மழைவேண்டி பழனியில் தீர்த்தக்காவடி குழுவினர் சிறப்பு யாக பூஜை

Posted: 27 Apr 2014 12:12 PM PDT

பழனியில் தீர்த்தக்காவடி குழுவினர் மழைவேண்டி சிறப்பு யாகசாலை பூஜை நடத்தினர்

செந்துறை பகுதியில் குடிநீரின்றி கால்நடைகள் தவிப்பு

Posted: 27 Apr 2014 12:11 PM PDT

கடும் வறட்சியால் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீரின்றி கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில சதுரங்கப் போட்டிக்கு நாளை தகுதித் தேர்வு

Posted: 27 Apr 2014 12:11 PM PDT

மாநில அளவிலான மகளிர் பிடே சதுரங்க போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க விரும்புவோருக்கு செவ்வாய்க்கிழமை(ஏப்.29) தகுதித் தேர்வு போட்டி நடைபெறும் என

மதுபாட்டில் விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு

Posted: 27 Apr 2014 12:11 PM PDT

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அழிந்து வரும் தென்னை விவசாயத்தை காக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 27 Apr 2014 12:10 PM PDT

தேனி மாவட்டத்தில் நீரின்றி தென்னை மரங்கள் கருகுவதால், தென்னை விவசாயத்தை பாதுகாக்க விவசாயத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

Posted: 27 Apr 2014 12:10 PM PDT

பெரியகுளம் பகுதி மா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையை இப் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என மா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™