மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானாவில் மோடி 24–ந்தேதி பிரசாரம்
- வாரணாசியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து போஸ்டர்
- திருவனந்தபுரத்தில் தொடர் மழை: மின்னல் தாக்கி 5 பேர் சாவு
- கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆதரித்து பவன் கல்யாண் பிரசாரம்
- சபரிமலை செல்லும் வயதானவர்கள்–மாற்று திறனாளிகளுக்கு தனிப்பாதை
- கல்விக்கடன் வட்டி தள்ளுபடிக்கு தேர்தல் கமிஷன் தடை
- தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 தொகுதிகளை கைப்பற்றும்: புதிய கருத்துக் கணிப்பு
- முஸ்லிம் மதகுருக்களிடம் ஆதரவு கேட்டு ராஜ்நாத் சிங் சந்திப்பு
- மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ய 700 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வருகை
- மும்பையில் சர்வதேச கடிகார கண்காட்சி: மே 1ம் தேதி துவக்கம்
- தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி சபதம்
- துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
- சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
- மோடியை எதிர்த்து போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை: பிரியங்கா காந்தி
- ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள்: காங்கிரசுக்கு சிவசேனா பதிலடி
- இந்திராகாந்தி ஸ்டைலில் உடை அணியும் விஜயசாந்தி
- பீகாரில் வன்முறை: ஆம் ஆத்மி வேட்பாளர் கார் மீது துப்பாக்கி சூடு
- வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா விருப்பம்
| தெலுங்கானாவில் மோடி 24–ந்தேதி பிரசாரம் Posted: 14 Apr 2014 10:50 PM PDT தெலுங்கானாவில் வருகிற 30–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பா.ஜனதா தெலுங்கு தேச கூட்டணி அமைந்து போட்டியிடுகிறது. தொகுதி உடன்பாட்டில் இரு கட்சிகள் இடையே அதிருப்தி நிலவியதால் பிரசாரம் மந்த கதியில் நடந்தது. இந்த நிலையில் தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக நரேந்திர மோடி வருகிற 24–ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார். |
| வாரணாசியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து போஸ்டர் Posted: 14 Apr 2014 10:41 PM PDT பா.ஜ.க. பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போடியிடும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள காண்ட் ரெயில் நிலையதிற்கு இன்று வந்த கெஜ்ரிவாலை வரவேற்க பூச்செண்டுகளுடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். அதே நேரத்தில் டெல்லி முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை |
| திருவனந்தபுரத்தில் தொடர் மழை: மின்னல் தாக்கி 5 பேர் சாவு Posted: 14 Apr 2014 10:09 PM PDT கேரளாவில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், தம்பானூர், கரமனை, கோவளம் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் ஓடியது. திருவனந்தபுரம் நகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. |
| கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆதரித்து பவன் கல்யாண் பிரசாரம் Posted: 14 Apr 2014 10:10 PM PDT மத்திய மந்திரி சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ''ஜனசேனா'' என்ற கட்சியை தொடங்கினார். ''தேர்தலில் போட்டியிட்டு காங்கிரசை அடியோடு அழிப்பேன்'' என்று கூறினார். இந்த நிலையில் திடீரென அவர் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் கூறினார். |
| சபரிமலை செல்லும் வயதானவர்கள்–மாற்று திறனாளிகளுக்கு தனிப்பாதை Posted: 14 Apr 2014 09:46 PM PDT பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களிலும் மாத பூஜை காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு சித்திரை விஷுவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று 14–ந் தேதி நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இன்று (15–ந் தேதி) கேரள புத்தாண்டான சித்திரை விஷுவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 7 |
| கல்விக்கடன் வட்டி தள்ளுபடிக்கு தேர்தல் கமிஷன் தடை Posted: 14 Apr 2014 08:49 PM PDT மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், "எனக்கு முன்னால் நிதி மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி 2009-10 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், 2009 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்னர் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி மானியம் வழங்கும் மத்திய திட்டத்தை அறிவித்தார். அதில் |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 தொகுதிகளை கைப்பற்றும்: புதிய கருத்துக் கணிப்பு Posted: 14 Apr 2014 03:00 PM PDT பாராளுமன்ற தேர்தல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, மொத்தம் 543 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தின் 275 தொகுதிகளை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்பது தெரியவந்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க. 34.5 சதவீதம் வாக்குகளையும், காங்கிரஸ் 25.6 சதவீதம் வாக்குகளையும் பெறும். தற்போது 226 எம்.பி.க்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி 111 இடங்களிலும், இதர கட்சிகள் இணைந்து 157 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் கடந்த 2009-ல் |
| முஸ்லிம் மதகுருக்களிடம் ஆதரவு கேட்டு ராஜ்நாத் சிங் சந்திப்பு Posted: 14 Apr 2014 01:41 PM PDT முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், நேற்று அம்மாநிலத்தில் உள்ள முக்கியமான முஸ்லிம் மதகுருக்களில் சிலரை சந்தித்து ஆதரவு திரட்டினார். இது தொடர்பாக, தனது 'டுவிட்டர்' பக்கத்தில், 'பிரபல முஸ்லிம் மதகுருக்களான மவுலானா கல்பே சாதிக், மவுலானா காலித் ரஷீத், |
| மோடியை ஆதரித்து பிரசாரம் செய்ய 700 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வருகை Posted: 14 Apr 2014 01:24 PM PDT குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் போட்டியிடும் அம்மநில முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்வதற்காக அமெரிக்காவில் வாழும் சுமார் 700 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவை முன்னேற்ற மோடியைப் போன்றதொரு வலிமையான தலைவர் நாட்டை வழிநடத்த வேண்டும் என்று விரும்பும் இவர்களில் சிலர், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நாட்டில் உள்ள இதர பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். |
| மும்பையில் சர்வதேச கடிகார கண்காட்சி: மே 1ம் தேதி துவக்கம் Posted: 14 Apr 2014 12:33 PM PDT 'சமய பாரதி 2014' என்ற பெயரில் மகாராஷ்டிர தலைநகர் முமபியில் மே மாதம் முதல் தேதியில் இருந்து 4-ம் தேதி வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டு கைக்கடிகாரம் மற்றும் சுவர் கடிகார தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் மாபெரும் கடிகார கண்காட்சி நடைபெற உள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி மூலதனம் நடமாடும் இந்திய கடிகார தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் இந்தியாவில் முதன்முறையாக தற்போது காலடி பதிக்கவுள்ள வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களின் நவீன ரக கடிகாரங்களும் இடம்பெறும். மேலும், கடிகார தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியா, |
| தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி சபதம் Posted: 14 Apr 2014 12:02 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், அம்மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலம், காந்தி நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அவரது உரை '3-டி ஹோலோகிராஃபிக் டெக்னாலஜி' மூலமாக நாட்டிலுள்ள 15 மாநிலங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த கூடடத்தில் மோடி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியின் கைங்கர்யமாக கிரிமினல்களின் வசம் அரசியல் |
| துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Posted: 14 Apr 2014 10:57 AM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர். அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். |
| சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி Posted: 14 Apr 2014 10:47 AM PDT சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் ஓர்கி பகுதியில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. அப்பகுதிக்கு உட்பட்ட கரோட்டி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த சிலர், மழையில் நனையாமல் இருப்பதற்காக சூளையில் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் ஒதுங்கி நின்றனர். |
| மோடியை எதிர்த்து போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை: பிரியங்கா காந்தி Posted: 14 Apr 2014 01:58 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் இறங்கியுள்ளார். இதனால் வாரணாசி தொகுதி நாடெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் இறங்க பிரியங்கா விருப்பம் தெரிவித்ததாக இன்று காலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது. |
| ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள்: காங்கிரசுக்கு சிவசேனா பதிலடி Posted: 14 Apr 2014 12:17 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் போட்டியிட மனு செய்தபோது அதில் யசோதா பென் தன் மனைவி என்று குறிப்பிட்டிருந்தார். இதை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இவ்வளவு நாட்களாக மனைவியை மறைத்தது ஏன் என்று கூறி, தேர்தல் கமிஷனிலும் புகார் செய்தனர். காங்கிரசாரின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:– |
| இந்திராகாந்தி ஸ்டைலில் உடை அணியும் விஜயசாந்தி Posted: 14 Apr 2014 12:08 AM PDT ஆந்திர மாநில அரசியலில் நடிகை விஜயசாந்தி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் குதித்த விஜயசாந்தி முதலில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். பிறகு தெலுங்கானா போராட்டம் வலுத்ததும் பாஜக–வில் இருந்து விலகி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து தெலுங்கானா கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகியது. ஆனால் தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகர ராவுக்கும் விஜயசாந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. |
| பீகாரில் வன்முறை: ஆம் ஆத்மி வேட்பாளர் கார் மீது துப்பாக்கி சூடு Posted: 14 Apr 2014 12:02 AM PDT பீகார் மாநிலம் நாளந்தா பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர் காரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வேட்பாளர் பிரனவ் பிரகாஷ் காரில் உதர்பு என்ற இடத்தில் பிரசாரத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, 25 பேர் கொண்ட ஒரு கும்பல் திரண்டு இருந்தனர். அவர்கள் திடீர் என்று வேட்பாளர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே கார் நிறுத்தப்பட்டது. கார் கண்ணாடிகளை அடித்து நொறுங்கினார்கள். பின்னர் வேட்பாளர் பிரகாஷை காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு இரும்பு |
| வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா விருப்பம் Posted: 13 Apr 2014 11:35 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் இறங்கியுள்ளார். இதனால் வாரணாசி தொகுதி மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் இறங்க பிரியங்கா மிகவும் விரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் தன் விருப்பத்தை சோனியா, ராகுல் ஆகியோரிடம் தெரிவித்தார். அது மட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் தன் விருப்பத்தை பிரியங்கா கூறினார். காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |