Tamil Star |
- லாவா நிறுவனம் ஐரிஸ் 406Q ரூ.7,499 விலையில் அறிமுகம்!
- இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளுமா? உள்நாட்டு விசாரணை என்ற சவாலை!
- பூனகரியில் சீனப் பிரஜைகள் கைது!
- நிதி உதவியை இடைநிறுத்தியது கனடா: இலங்கை மனித உரிமை மீறல் பிண்ணனி!
- மெய் சிலிர்க்க வைக்கும் கின்னஸ் சாதனைகள்!
- இறுதிப்போட்டியில் தீபிகா ஏமாற்றம்: டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!
- மலேசிய விமானத்தை தேட ரோபோ நீர்மூழ்கி களமிறக்கம்!
- ஈழத் தமிழ் இளைஞரின் வித்தியாசமான போராட்டம்: லண்டன் மராத்தான் ஓட்டப் போட்டி!!
- நைஜீரியாவிற்கு அத்தியாவசியமற்ற பயண எச்சரிக்கை விடுப்பு! கனடா அரசாங்கம் அறிவிப்பு!!
- தித்திக்கும் திராட்சை சிறந்த மருந்து!
- உடலுக்குக் குளிர்ச்சியை தரும் தர்பூசணி!
- MH370 விமானம் தேடல் பகுதியில் எண்ணை படலம் மிதப்பது கண்டுபிடிப்பு!
- 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ மீண்டும் பாலசந்தர்…
- வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் கலவரம் தோன்றும்! – பாரதிராஜா அதிரடி
- என்னாமா வித்தை காட்டுறாரு! பார்த்தா மயங்கிடுவீங்க!
- பேராசைக்கு இதுதான் கதி!
- பைனலில் அல்மாக்ரோ: கிளே கோர்ட் சாம்பியன்ஷிப்!!
- பைனலுக்கு முன்னேறினார் தீபிகா: டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்!
- 2015 முதல் இலங்கை கல்வி முறை புதிய மாற்றம்!
- சர்வதேச போலிஸ்காரனாக அமெரிக்கா செயல்படுகிறது! இலங்கை எதிர்ப்பு!!
| லாவா நிறுவனம் ஐரிஸ் 406Q ரூ.7,499 விலையில் அறிமுகம்! Posted: 14 Apr 2014 11:28 PM PDT
லாவா நிறுவனம அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 406Q ரூ.7,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா ஐரிஸ் 406Q, Flipkart இணையதளம் வழியாக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் ரூ.6,999 விலையில் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது மேலும், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அப்டேட் செய்ய முடியும். ஐரிஸ் 406Q மாடலில் இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட 3ஜி (ஜிஎஸ்எம்+ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும். அது ரேம் 1GB மற்றும் Adreno 302 @ 400MHz ஜி.பீ.யூ உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் CPU (குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. ஐரிஸ் 406Q ஃபோனில் WVGA (480x800) பிக்சலகள் தீர்மானம் கொண்ட 4.4 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. எல்இடி ஃபிளாஸ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஐரிஸ் 406Q, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இது ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் / EDGE மற்றும் 3 ஜி இணைப்பு விருப்பங்கள் ஆதரிக்கிறது. ஐரிஸ் 406Q, 1700mAh பேட்டரி மற்றும் நடவடிக்கைகள் 124x64x10.3mm ஆதரவு உள்ளது. கூடுதலாக நிறுவனம் பின் கவரில் கீறல் தடைக்கு பயன்படுத்தப்படும் IML (in-mould labelling) உள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகிறது. லாவா ஐரிஸ் 406Q அம்சங்கள்: WVGA (480x800) பிக்சலகள் தீர்மானம் கொண்ட 4.4 இன்ச் டிஸ்ப்ளே, 1.2GHz குவாட் கோர் CPU (குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 சிப்செட்), ரேம் 1GB, Adreno 302 @ 400MHz ஜி.பீ.யூ, 3ஜி (ஜிஎஸ்எம்+ஜிஎஸ்எம்), எல்இடி ஃபிளாஸ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் / EDGE, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன், 1700mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளுமா? உள்நாட்டு விசாரணை என்ற சவாலை! Posted: 14 Apr 2014 11:18 PM PDT
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை யோசனையை இலங்கை நிராகரித்துள்ளது. எனினும் அந்த நிராகரிப்பை நியாயப்படுத்தக்கூடிய வகையில் இலங்கை சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமா? என்ற இலங்கையின் செய்தித்தாள் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கான யோசனை நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு இந்தியா தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இலங்கையின் இறைமைக்கு எதிரான நடவடிக்கை என்பதால் அதனை தாம் ஏற்கமுடியாது என்று இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையும் சர்வதேச விசாரணையை நிராகரித்தது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு உள்ளக விசாரணையை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையால் இந்த செயற்பாட்டை சிறப்பாக செயற்படுத்த முடியுமா? என்று ஆங்கில செய்தித்தாள் சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வடகொரியா, ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில் உள்ளக விசாரணையை நடத்தியது. எனினும் அதில் ஒரு பக்கச்சார்ப்பு விசாரணை என்று குற்றம் சுமத்தப்பட்டது. என்றாலும், வடகொரியாவை பொறுத்தவரையில், ஏற்கனவே வெளிப்படுத்தப்படாத விடயங்களையும் வெளிப்படவைக்க வேண்டியிருந்தது. இதைபோன்றே இலங்கையும் உள்ளக விசாரணையை கோரி நிற்கிறது. இந்தநிலையில் அவ்வாறான உள்ளக விசாரணையை இலங்கை நடத்தும் போது அது நம்பக்கத்தன்மையாக அமைய வேண்டும். அது தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை போன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாகும். எனவே அவ்வாறான ஒரு விசாரணையை இலங்கை மேற்கொள்ளுமா? என்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை சவாலாகவே அமையும் என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூனகரியில் சீனப் பிரஜைகள் கைது! Posted: 14 Apr 2014 11:08 PM PDT
பூனகரி பிரதேசத்தில் சீனப் பிரஜை இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீனப் பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலி நகைகளை குறித்த நபர்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது போலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிதி உதவியை இடைநிறுத்தியது கனடா: இலங்கை மனித உரிமை மீறல் பிண்ணனி! Posted: 14 Apr 2014 11:02 PM PDT
இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவியை கனடா இடைநிறுத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக கனடா ஆண்டு தோறும் 10 மில்லியன் டாலர்களை வழங்கி வருகின்றது. எனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இந்த நிதி உதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலான பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து கனடா கரிசனை கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜொன் பயார்ட் தெரிவித்துள்ளார். சிறு பராய திருமணங்களை நிறுத்தவும் அது தொடர்பில் தெளிவுபடுத்தவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெய் சிலிர்க்க வைக்கும் கின்னஸ் சாதனைகள்! Posted: 14 Apr 2014 09:45 PM PDT |
| இறுதிப்போட்டியில் தீபிகா ஏமாற்றம்: டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! Posted: 14 Apr 2014 09:39 PM PDT
டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா பாலிகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. 12ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் தீபிகா பாலிகல், எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை எதிர்த்து விளையாடினார். அரை இறுதியில் 8ம் நிலை வீராங்கனையை தீபிகா வென்றதால், இறுதிப் போட்டியில் 13ம் நிலை வீராங்கனையான ஷெர்பினியை எளிதில் வென்று கோப்பையை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஷெர்பினி அபாரமாக ஆடி 11-7 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டில் தீபிகா 11-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பரபரப்பாக நடந்த 3வது செட்டில் தீபிகா 7-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தார். பதினெட்டே வயதாகும் ஷெர்பினி ஏற்கனவே உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது, டெக்சாஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றதன் மூலம் இளம் வயதில் இக்கோப்பை வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசிய விமானத்தை தேட ரோபோ நீர்மூழ்கி களமிறக்கம்! Posted: 14 Apr 2014 09:32 PM PDT
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8ம் தேதி, போயிங் விமானம் ஒன்று, சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்டு சென்றது. ஆனால், கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே, அந்த விமானம் மாயமாய் மறைந்துவிட்டது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், தங்களது அதிநவீன போர்க் கப்பல்களையும், விமானங்களையும் அனுப்பி சோதனையில் ஈடுபட்டது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் 6 முறை, விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளிவரும் சிக்னல்களை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர் கண்டறிந்தனர். ஆனால், விமானத்தின் கறுப்பு பெட்டிக்கு சக்தி தரும் பேட்டரியின் திறன் ஏப்ரல் 7ம் தேதி வரையில் மட்டுமே இருக்கும் என்று போயிங் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அது கூறியதுபோலவே, விமானத்தில் இருந்து வரும் சிக்னல்கள், கடந்த 6 நாட்களாக வெளிப்படவே இல்லை. சிக்னலை வைத்தே தேடுதல் பணி மும்முரமாக நடந்து வந்தது. ஆனால், அது திடீரென நின்று போனதால், ஆழ்கடலில் தேடுவதே சிறந்த வழியாக இருக்கும் என்று விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைந்த மையம் (ஜேஏசிசி) முடிவு செய்தது. ஏனெனில், இந்திய பெருங்கடலில் கறுப்பு பெட்டி சிக்னல் கிடைத்த இடத்தில், 4,500 மீட்டர் ஆழம் உள்ளது.இதுகுறித்து ஆஸ்திரேலிய தேடுதல் படையின் ஒருங்கிணைப்பாளர் ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகை யில், ''கடந்த 6 நாட்களாக கறுப்பு பெட்டி சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆழ்கடலில் தேடுவதற்காக தானியங்கி நீர்மூழ்கி ரோபோ, முதல் முறையாக கடலில் இறக்கப்பட்டுள்ளது'' என்றார்.இதற்கிடையே, சிக்னல் கிடைத்த இடத்தில் மிதந்த 2 லிட்டர் அளவிலான எரிபொருள் எண்ணெய்யை தேடுதல் குழுவினர் சேகரித்துள்ளனர். இது விமானத்தின் எரிபொருளா என்பதை உறுதி செய்ய, அதை சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈழத் தமிழ் இளைஞரின் வித்தியாசமான போராட்டம்: லண்டன் மராத்தான் ஓட்டப் போட்டி!! Posted: 14 Apr 2014 09:27 PM PDT
லண்டனில் மராத்தான் ஓட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேளையில், பிரித்தானியாவைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞரான ரமணகரன் வேணுகோபால் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்திருந்தது. இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார். ரமணகரன் மராத்தான் ஓட்ட தூரத்தை 06:53:58 நொடிகளில் ஓடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நைஜீரியாவிற்கு அத்தியாவசியமற்ற பயண எச்சரிக்கை விடுப்பு! கனடா அரசாங்கம் அறிவிப்பு!! Posted: 14 Apr 2014 09:18 PM PDT
திங்கள்கிழமை நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை தலைநகரம் வரை பரவியதால் அத்தியாவசியமற்ற நைஜீரிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென மத்திய அரசாங்கம் கனடிய மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுஜா எனும் இடத்தில் காலை அவசரத்தின்போது பேரூந்து நிலையம் ஒன்று குண்டு வெடிப்பினால் தகர்த்தெறியப் பட்டு குறைந்தது 71-பேர்கள் வரை கொல்லப்பட்டதோடு 120-ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்னர். இதுவரை நைஜீரியாவின் தலைநகரத்தில் இது போன்ற மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்தே மத்திய அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த காலை அவசர நேரத்தில் இடம்பெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் குறித்து கனடா வலுவான சாத்தியமிக்க உறுதியான வார்த்தைகளில் தனது கண்டனத்தை தெரிவிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜோன் பெய்ர்ட் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தித்திக்கும் திராட்சை சிறந்த மருந்து! Posted: 14 Apr 2014 10:41 AM PDT
திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது. திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் . திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும்.சில வகைகளில் விதைகள் இருக்காது. அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலுக்குக் குளிர்ச்சியை தரும் தர்பூசணி! Posted: 14 Apr 2014 10:09 AM PDT
*தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். *மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. வெள்ளை பகுதியில்தான்... *இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம். *இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம். தர்பூசணியின் பயன்கள்: *கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு. *பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம். *மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். *விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| MH370 விமானம் தேடல் பகுதியில் எண்ணை படலம் மிதப்பது கண்டுபிடிப்பு! Posted: 14 Apr 2014 07:44 AM PDT
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசி விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. செயற்கைகோள் தகவலின்படி இந்தியப் பெருங்கடலில் குறிப்பிட்ட இடத்தில் கப்பல், விமானம் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் இப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செயற்கைகோள் சுட்டிக்காட்டிய இடத்தில் எண்ணை படலம் மிதந்து கொண்டிருக்கிறது. 5,500 மீட்டர் பகுதியில் இந்தஎண்ணெய் மிதப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் அந்தபகுதியில் விமானத்தை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ மீண்டும் பாலசந்தர்… Posted: 14 Apr 2014 06:55 AM PDT
புதிதாக தயாராகி வரும் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' படத்தில் 21 காமெடி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்களாம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தர் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். படத்திற்கு 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகனாக பரத் நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு பெற்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கும் படம்தான் கதைக்களமாம். மேலும், இப்படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்களாம். இது தொடர்பாக அப்படத்தின் டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் கூறுகையில்... 'காதலிக்க நேரமில்லை,' 'உள்ளத்தை அள்ளித்தா' பாணியில் இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். அதனால்தான் 21 நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக பரத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இங்கே வடிவேலுவைப்போல் கன்னட பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறோம். ஒரு நீக்ரோ பாடகருடன் சேர்ந்து கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். '555' படத்துக்கு இசையமைத்த சைமன், இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் கலவரம் தோன்றும்! – பாரதிராஜா அதிரடி Posted: 14 Apr 2014 06:07 AM PDT
வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை தெலுங்கு அமைப்பினர் எதிர்த்தால், தமிழகத்திலும் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது, என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார். வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப் பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி தெனாலிராமன் வரை பல தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும்கூட ஏதோ ஒரு காரணத்தை கூறி எதிர்ப்பை கிளப்பி தமிழ் கலையையும், கலைஞர்களையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். உலக அரசியலில் பெரும் தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து கார்ட்டூன் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரையே கிண்டல் செய்து படம் எடுத்தவர்தான் மகா கலைஞரான சார்லி சாப்லின். அந்த சர்வாதிகாரி ஹிட்லரேகூட அதை அறிந்து சார்லி சாப்லினை குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கவில்லை. தெனாலிராமன், கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக நையாண்டி செய்து, கேலி கிண்டல்கள் மூலமாக அறிவுபூர்வமான கருத்துக்களை கூறியவர். தெனாலிராமனின் செயல்பாடுகள் கோமாளித்தனமாகத்தான் தெரியும். அப்படியொரு தெனாலிராமனை, தெனாலிராமன் என காட்டாமல் அயோத்திராமன் என்றா காட்ட முடியும். தெலுங்கு பேசிய தெனாலிராமனைப் பற்றி சொல்லும்போது ஆங்காங்கே தெலுங்கு வசனங்கள் வரத்தான் செய்யும். அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஒரு சாரார் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதை எங்களுக்கு திரையிட்டு காட்டுங்கள் அல்லது நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று சொல்வது நியாயமா? திரைப்படத்தில் பிறமொழி கதாப்பாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, அந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட மொழி பேசும் மக்களுக்கு அதை திரையிட்டுக்காட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றால் எப்படி? அதேபோல் மருத்துவர்கள், பொறியாளர், வழக்குரைஞர்கள் போன்ற கதாபாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, இவர்களும் எங்களுக்கு திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பாக காட்ட வேண்டும் என்று சொன்னால் திரைப்பட தணிக்கை குழு என்று எதற்கு இருக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் உங்கள் கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அதை நீங்கள் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும். ஒரு திரைப்படம் மக்கள் பார்க்க தகுதியானது என்று மத்திய அரசின் பிரதிநிதி, சான்றிதழ் வழங்கிய பிறகு உங்களிடமும் திரைப்படத்தை காட்டி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன மற்றொரு மத்திய அரசாங்கமா? அல்லது அதிகார மையமா? ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஒரு தமிழன் அரசியல் பண்ண முடியுமா? அல்லது மந்திரியாகத்தான் வர முடியுமா? ஆனால் எங்கள் மண்ணில் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். பதவிக்கு வரலாம். அந்த பெருந்தன்மை எங்களுக்கு உண்டு. அந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டு விடாதீர்கள். தமிழகத்தை இன்னுமொரு மகாராஷ்டிராவாக மாற்றி விடாதீர்கள். பிறகு தமிழ்நாட்டில் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தோன்ற ஆரம்பித்து விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். என் இனிய தமிழ் மக்களே! புத்தாண்டு விடுமுறை உண்டா? ஆனால் தமிழ்நாட்டில் தெலுகு வருடப்பிறப்பான யுகாதிக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழா! நீயும் நானும் சம்பாதித்தால் போதும் என்று ஜட மனிதனாகவே ஆகிவிட்டோமே நாம். இந்த நிலை நீடித்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் ஒருநாளில் காணாமல் போய்விடக்கூடும். - இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| என்னாமா வித்தை காட்டுறாரு! பார்த்தா மயங்கிடுவீங்க! Posted: 14 Apr 2014 04:55 AM PDT |
| Posted: 14 Apr 2014 04:43 AM PDT |
| பைனலில் அல்மாக்ரோ: கிளே கோர்ட் சாம்பியன்ஷிப்!! Posted: 14 Apr 2014 01:55 AM PDT
அமெரிக்காவில் நடக்கும் கிளே கோர்ட் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஸ்பெயின் வீரர்கள் நிகோலஸ் அல்மாக்ரோ - பெர்னாண்டோ வெர்டாஸ்கோ மோதுகின்றனர். அரை இறுதியில் அல்மாக்ரோவுடன் நேற்று மோதவிருந்த அமெரிக்க வீரர் சாம் குவெரி காயம் காரணமாக விலகியதை அடுத்து, அல்மாக்ரோ பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவுடன் மோதிய வெர்டாஸ்கோ 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இறுதிப் போட்டியில் இன்று அல்மாக்ரோ - வெர்டாஸ்கோ மோத உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் மர்ரெரோ - பெர்னாண்டோ வெர்டாஸ்கோ ஜோடியுடன் மோதிய அமெரிக்க இரட்டை சகோதரர்கள் பாப் பிரையன் - மைக் பிரையன் ஜோடி 4-6, 6-4, 11-9 என்ற செட் கணக் கில் போராடி வென்று கோப்பையை கைப்பற்றியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பைனலுக்கு முன்னேறினார் தீபிகா: டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்! Posted: 14 Apr 2014 01:04 AM PDT
டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை தீபிகா பாலிகல் தகுதி பெற்றார். அரை இறுதியில் அயர்லாந்து வீராங்கனை மேடலின் பெர்ரியுடன் நேற்று மோதிய தீபிகா 11-7 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். கடும் போராட்டமாக அமைந்த 2வது செட்டில் பெர்ரி 13-11 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். அடுத்த செட்டில் தீபிகாவும் (13-11), 4வது செட்டில் பெர்ரியும் (12-10) வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய தீபிகா 11-7, 11-13, 13-11, 10-12, 11-4 என்ற கணக்கில் 75 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை நூர் எல் ஷெர்பினியை அவர் எதிர்கொள்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2015 முதல் இலங்கை கல்வி முறை புதிய மாற்றம்! Posted: 14 Apr 2014 12:44 AM PDT
அடுத்த வருடம் முதல் இலங்கையில் கல்வி முறையில் முற்றாக மாற்றம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன மாற்றி அமைக்கப்படவுள்ளன. அத்துடன் பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையை அமுலாக்கியதுடன், அது சார்ந்த கல்வி முறையையும் அமுலாக்கி இருந்தது. லண்டன் கல்வி முறையில் அடிப்படையில் இலங்கையின் கல்வி முறையும் காணப்பட்டதால், இலங்கையில் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற முடியவில்லை. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி போரிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த கல்வி முறைமையை முற்றாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச போலிஸ்காரனாக அமெரிக்கா செயல்படுகிறது! இலங்கை எதிர்ப்பு!! Posted: 14 Apr 2014 12:37 AM PDT
சர்வதேச போலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது. எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம் இலங்கையின் இறைமைக்கு எதிரான ஒன்று. அத்துடன் இலங்கையின் கொள்கைக்கு அது முரணானது. எனவே எந்த ஒரு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கும் இலங்கை அனுமதிதராது. அத்துடன் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவதானமாக செயற்படும். இந்த விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியங்கள் கூறுவது இலங்கையை பொறுத்தவரையில் குற்றமாகும். எனவே குறித்த குழுவிடம் சாட்சியமளிக்கும் இலங்கையர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் நாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்துமானால் அதனை நீதியின் முன் வெற்றி கொள்ள இலங்கை தயாராக உள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















