Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அசாம், சிக்கிம் உள்பட 7 தொகுதிகளில் இன்று அமைதியான வாக்குப்பதிவு

Posted: 11 Apr 2014 11:30 PM PDT

கோவா, அசாம், திரிபுரா, சிக்கிம் மாநிலங்களில் 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. சிக்கிம் சட்ட சபைக்கும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. 16–வது பாராளுமன்றத் தேர்தல் 9 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 3 கட்டமாக 104 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விட்டது. 4–வது கட்டமாக கோவா, அசாம், திரிபுரா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில்

கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு மனு

Posted: 11 Apr 2014 09:00 PM PDT

காவிரிப்படுகையில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு 4 கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டத்தை உடனடியாக தடை செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வக்கீல் ஜி.உமாபதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி

Posted: 11 Apr 2014 08:51 PM PDT

உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது, மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்" என

சர்ச்சைக்குரிய பேச்சு: முலாயம் சிங்குக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு

Posted: 11 Apr 2014 08:39 PM PDT

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது என்று பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்குக்கு, விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. தேர்தல் பிரசார கூட்டத்தில் கற்பழிப்பு பற்றி முலாயம் சிங் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு நோட்டீசு அனுப்பி இருப்பதாகவும் தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா நியமனம்

Posted: 11 Apr 2014 08:29 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் ஓய்வு பெற இருப்பதால், புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இந்த நியமனம் அமலுக்கு வருகிறது. எனவே, அன்றைய தினம், ஆர்.எம்.லோதா பதவி ஏற்கிறார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமன விதிமுறைகளின்படி, புதிய தலைமை நீதிபதி பதவிக்கு,

கேதர்நாத்தில் ஆதி சங்கரரின் சமாதியை புதுப்பிக்கும் பணி ஜுன் மாதம் துவக்கம்

Posted: 11 Apr 2014 05:06 PM PDT

உத்தரகாண்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த இடியுடன் கூடிய பேய் மழையின் விளைவால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்துக்களின் புகழ்பெற்ற புனிதத் தலமான கேதர்நாத் கோவில் சேதமடைந்தது. மேலும், கேதர்நாத் நகரின் பெரும்பாலான பகுதிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சுமார் 200 கிராமங்கள் அடியோடு அழிந்தன. ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெள்ளத்தில் ஆதி சங்கரரின் சமாதியும் கடுமையான சேதத்துக்குள்ளானது. இந்த சமாதியை புதுப்பிக்க டெல்லியில் உள்ள ஒரு

வறுமை என்பது ராகுலுக்கு சுற்றுலா போன்றது: மோடி கடும் தாக்கு

Posted: 11 Apr 2014 03:19 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, 'வறுமை என்பது ராகுலுக்கு சுற்றுலா போன்றது' என்று குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:- திருமதி சோனியா காந்தியும், இளவரசரும் (ராகுல்) நாடு முழுவதும் போய், அவர்கள் செய்த பணிகள் என்ன? என்று சொலவதற்கு பதிலாக, நான் செய்த பணிகள் என்ன? என்று மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2009-ல் அளித்த வாக்குறுதியை மீறி விலைவாசியை கட்டுப்படுத்த தவறியது ஏன்? என்று அவர்கள் பதில் அளிக்க மறுக்கிறார்கள். நூறே நாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று கூறி

தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும்: காங்கிரசுக்கு பா.ஜ.க.எச்சரிக்கை

Posted: 11 Apr 2014 02:37 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தன்னைப் பற்றிய சுயவிபரத்தில் திருமணம் ஆனவர் என்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந்தார். தனது திருமணம் குறித்து முதன்முதலாக நரேந்திரமோடி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம்

சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங் சரணாகதி: முன்னாள் உதவியாளர் பரபரப்பு தகவல்

Posted: 11 Apr 2014 02:28 PM PDT

சோனியா காந்தியிடம் பிரதமர் மன்மோகன் சிங் சரணாகதி அடைந்து விட்டதாக முன்னாள் உதவியாளர் எழுதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 'பிரதமர் மன்மோகன் சிங், இதுவரை சுதந்திர இந்தியா கண்ட பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர்' என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இன்றளவும் விமர்சித்து வருகிறது. அதை உறுதிப்படுத்துகிற வகையில், மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜய பாரு எழுதிய புத்தகம் படம் பிடித்துக் காட்டுகிறது. சஞ்ஜய பாரு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி 'விபத்தாக வந்த பிரதம மந்திரி- மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 301 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம், பெங்குயின் பதிப்பகத்தின் தயாரிப்பு.

சமூக சேவகி மேதா பட்கருக்கு ஆதரவு: அன்னா ஹசாரே அறிவிப்பு

Posted: 11 Apr 2014 02:05 PM PDT

பிரபல சமூக சேவகி மேதா பட்கர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மும்பை வடகிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு பிரபலமான மேதாபட்கர், குஜராத்தில் நர்மதா அணை திட்டத்தை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தினார். நர்மதா அணை கட்டியதால் ஏராளமான மலைவாழ் மக்கள் கிராமங்கள் அழிந்தன. இந்த திட்டத்தை எதிர்த்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். இதேபோல், நாடு முழுவதும் குடிசைப்பகுதி மக்களை பாதுகாக்கவும், மலைவாழ் மக்களுக்காகவும் போராட்டங்கள் நடத்தினார். வடகிழக்கு மும்பையில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சமீப காலம் வரை

மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில் 8 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

Posted: 11 Apr 2014 01:41 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுகிறார். ஆம்ஆத்மி கட்சி சார்பில் 41 வயது மெக்கானிக்கல் என்ஜினீயரான சுனில் திகாம்பர் குல்கர்னி என்பவர் போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 17 பேர் இந்த தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலையை மறைக்கவேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவு

Posted: 11 Apr 2014 12:38 PM PDT

அம்மா குடிநீர் பாட்டிலில் பதிக்கப்பட்டுள்ள இரட்டை இலை போன்ற உருவத்தை மறைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'அம்மா' குடிநீர் விற்பனை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் இந்த குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள்: மோடிக்கு அரியானா பஞ்சாயத்தார் கடிதம்

Posted: 11 Apr 2014 12:24 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தன்னைப் பற்றிய சுயவிபரத்தில் திருமணம் ஆனவர் என்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந்தார். தனது திருமணம் குறித்து முதன்முதலாக நரேந்திரமோடி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

வெற்றிகரமாக அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை

Posted: 11 Apr 2014 12:02 PM PDT

அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட 'அக்னி-1' ஏவுகணையை முதன்முதலாக இரவு நேரத்தில் பரிசோதித்த இந்தியா, இந்த முயற்சியில் அபார வெற்றியடைந்துள்ளது. 12 டன் எடையுடன் 15 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 ஏவுகணை ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட போராயுதங்களை சுமந்தபடி, சீறிப் பாய்ந்து சென்று 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையதாகும்.

காங்கிரசும், பா.ஜ.க.வும் அதிகாரப் பேராசை பிடித்த கட்சிகள்: கெஜ்ரிவால்

Posted: 11 Apr 2014 10:55 AM PDT

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கெஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேராசை பிடித்தவர்கள். ஆம் ஆத்மி மட்டுமே நாட்டில் உள்ள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. கொள்கையின் அடிப்படையில்தான் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். அவர்கள் என்னை ஓடிப்போனவன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தியாகத்தைப் பற்றி தெரியாது.

புதிதாகத் தொழில் துவங்குவோருக்கு உதவும் ஹாட்லைன்: பெங்களூருவில் துவக்கம்

Posted: 11 Apr 2014 10:33 AM PDT

புதிதாகத் தொழில் துவங்குவோருக்கு உதவும்விதமாக மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் ஒரு ஹாட்லைன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் முதல் முயற்சியாகக் கருதப்படும் ஜம்ப்ஸ்டார்ட் என்ற இந்தத் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நான்கு நிபுணர்கள் பணி புரிவார்கள். இவர்கள் கணக்கியல் மற்றும் வரி, சட்டம், புரிதல் கால தாள்கள், தொழில்நுட்பம் தொடர்பான வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். வாடிக்கையாளர்களின் கேள்விகள் இவர்கள் மூலம் தொழில்துறை நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் பதில்கள் 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். இதற்கான கட்டணமில்லா எண் -1(800)200-2114 ஆகும். இந்த எண்ணில்

மதுராவில் ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

Posted: 11 Apr 2014 09:51 AM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் அருகே இன்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மதுரா நகரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அல்வார்- மதுரா பயணிகள் ரெயில் மவ்ரா- கோவர்த்தன் நிலையங்களுக்கு இடையே சென்றுக் கொண்டிருந்த போது, கடைசி இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கீழே சரிந்தன.

கூடங்குளம் 3, 4-வது அணுஉலைக்கான ஒப்பந்தத்தில் இந்தியா, ரஷ்யா கையெழுத்து

Posted: 11 Apr 2014 09:24 AM PDT

கூடன்குளத்தில் உள்ள அணுஉலையில் 3வது மற்றும் 4வது அணுஉலைகளுக்கான அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.33000 கோடி ஆகும். இது குறித்து இந்திய அணுசக்திதுறை கழகத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்" கூடங்குளத்தில் புதிய

வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் சீனா-ரஷ்யாவுக்கு பயணம்

Posted: 11 Apr 2014 08:34 AM PDT

வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், ஞாயிற்றுக்கிழமை முதல் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத்தின்போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

உ.பி.யில் பிரச்சாரம் செய்ய ஆசம் கான்-அமித் ஷாவுக்கு தடை

Posted: 11 Apr 2014 08:28 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணிகளை அமித் ஷா கவனித்து வருகிறார். இவரும், அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவரான ஆசம் கானும் அங்குள்ள மக்களிடம் வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™