Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


போரை திணிக்கிறது! தமிழ் மக்கள் மீது இராணுவம்!!

Posted: 11 Apr 2014 11:15 PM PDT

Rajabakshe

Rajabaksheவடக்கின் இராணுவ மயத்தை நியாயப்படுத்தவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, போர் ஒன்று உருவாகாமல் தடுக்கவே பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் போரை மக்கள் எப்போதும் தொடங்குவதில்லை என்பதும் இராணுவத்தினரின் ஆயுத ஒடுக்குமுறை மக்கள் மீது திணிக்கப்படும் போது மக்கள் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளே போராக வெடிக்கின்றன என்பதே உலகம் முழுவதிலும் உள்ள வரலாறு. உண்மையில் போர் விரிவதைத் தடுக்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட்டு இங்கு ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே ஒரே வழி என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவக் கெடுபிடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவுப் பகுதியில் படையினரால் கட்டி அமைக்கப்பட்ட வீடுகளை பொது மக்களுக்கு வழங்கும் வைபவத்தின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனத்துக்கு எடுக்காமல் விடமுடியாது. அவர் மட்டுமன்றி பல்வேறு அரச தரப்பினருமே வடக்குக் கிழக்கில் பெருந்தொகையான படையினர் நிலைகொண்டு இருப்பதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இவற்றில் பல ஒன்றையொன்று சார்ந்தனவாகவும் இன்னும் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாகவும் அமைந்திருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்த காரணம் ஏற்கெனவே வெளிவந்தவைகளை விட தாக்கமானதாகவும் வடபகுதி மக்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை பூடகமாக உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் இராணுவச் சுற்றி வளைப்புகள், சோதனை நடவடிக்கைகள், கைதுகள் என்பவற்றை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளமையை நாம் அவதானிக்க முடியும். அதாவது மீண்டும் ஒரு போர் வராமல் தடுப்பதற்காகவே வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் மேலும் கெடுபிடிகள் தமிழ் மக்கள் மீது அதிகரிப்பதற்கான முன் அறிவித்தலாகவே தென்படுகின்றது. மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க அணிதிரண்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டே இராணுவச் சுற்றிவளைப்புகளும் வீதிச் சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 50 ற்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலரின் கருத்துப்படி இந்தக் கைதுகளும் போர் வராமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே. எனவே அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்படுவது மீண்டும் சுற்றி வளைப்புகளும், கைதுகளும் நிறைந்த ஒரு அச்சமூட்டும் நிம்மதியற்ற ஒரு வாழ்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கே என்பதை மிகவும் தெளிவாகப் புரியும்படி பாதுகாப்புச் செயலாளர் கருத்துக்கள் மூலம் வெளியிட்டுள்ளார். ஆனால் இப்படியான நடவடிக்கைகள் மூலம் போர் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்பதும் இல்லாத போர்களையே உருவாக்கிவிடும் என்பதையும் உலக வரலாறு மீண்டும் மீண்டும் கற்பித்து வந்துள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரமும் அதிகாரப் பலமும் கொண்டவர்கள் எப்பொழுதுமே ஆயுத பலத்தால் போர் உருவாவதைத் தடுத்து விட முடியும் என நம்புகின்றனர். ஆனால் இந்த வழிமுறை மூலம் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியுமே ஒழிய போரை நிறுத்திவிட முடியாது. போர் உருவாவதற்கான மூல காரணம் களையப்படுவதன் மூலமே போரை நிரந்தரமாக இல்லாமற் செய்யமுடியும். அதை உதாசீனம் செய்து ஆயுத பலத்தால் போரை இல்லாமல் செய்யும் முயற்சிகள் காலம் காலமாக தோல்விகளைச் சந்தித்து வந்துள்ளன. 1983 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் வட பகுதியில் இராணுவம், பொலிஸ் என்பவற்றின் சுற்றி வளைப்புகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் என ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டது. எந்தவொரு இளைஞனும் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையிடப்படலாம் என்ற நிலை நிலவியது. இதன் காரணமாகத்தான் ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் தப்பமுடியும் என்ற நிலை தமிழ் இளைஞர்களிடம் உருவானது. எனவே, ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்கு முறை தமிழ் மக்கள் மத்தியில் பல ஆயுதப் போராட்ட முறைகளை உருவாக்கின. ஆயுதப் போராட்டம் முனைப்புடன் வீறுகொண்டெழுந்தது. காலப் போக்கில் ஏனைய அமைப்புக்கள் செயலிழந்து போக விடுதலைப் புலிகள் தனிப் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். அவர்கள் பல பிரதேசங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அளவுக்கும் தனியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பலம் பெற்றனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இராணுவ ஒடுக்குமுறை வழி முறை இலங்கைத்தீவே பெரும் பேரழிவுகளைச் சந்தித்த ஒரு பெரிய போரையே உருவாக்கியது. ஏற்கெனவே இலங்கை பெற்ற இந்தக் கொடிய கசப்பான அனுபவத்தை இன்றைய ஆட்சியாளர்கள் நன்றே புரிந்து வைத்துள்ளனர். எனினும் இவர்களும் கூடப் போரின் மூல காரணத்தை களைந்து ஒரு நிரந்தர சமாதானத்தை உருவாக்கத் தயாரில்லை. மாறாக போர் உருவாகுவதற்கு முன்பே ஒடுக்கு முறைகளை மேலும் மேலும் அதிகரிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களைச் செயலற்ற நிலைக்குத் தள்ளி அடிமைகளாக்கி அமைதியை நிலைநாட்ட விரும்புகின்றனர். இனத் தனித்துவத்தை அடக்கி பெரும்பான்மை இனத்துக்குள் கரைத்து விடும் ஒரு நீண்டகால நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இதை ஆயுத முனையில் நிறைவேற்றிவிட முடியும் என நம்பும் நபர்களில் பாதுகாப்புச் செயலரும் ஒருவர். எனவே தான் அவர் போர் உருவாகாமல் இருக்க இராணுவ ஒடுக்குமுறைகளை வலுப்படுத்துவது என்ற வழி முறையைத் தெரிவுசெய்துள்ளார். அதேவேளையில், சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அரச தரப்பினர் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் தொகையைக் குறைத்து காட்டி வருகின்றனர். எனினும் ஒவ்வொருவரும் வெளியிடும் கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்று முரண்படுவதில் இருந்தே அவற்றின் உண்மைக்குப் புறம்பான தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். 17.06.2012 ல் கோத்தபாய ராஜபக்ச­, வடக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டு விட்டதாகவும், தற்சமயம் 15, 600 படையினரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் 9.7.2012ல் யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் இணையத்தளம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ ஆற்றிய உரை ஒன்றின் போதே 2009 ல் வடக்கில் 70 ஆயிரம் படையினர் இருந்ததாகவும் தற்சமயம் 12 ஆயிரம் பேரே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எப்படி இருப்பினும் வடக்கில் வாழும் பொதுமக்கள் 5 பேருக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா மாநாட்டை அண்மித்த காலப் பகுதியில் சில சிறு படை முகாம்கள் மூடப்பட்டது உண்மை. ஆனால், அதிலிருந்த படையினர் பெரிய முகாம்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரேயொழிய வடக்கை விட்டு வெளியேற்றப்படவில்லை. அதேவேளையில் சிவில் நிர்வாகமும் இராணுவத் தலையீடும் நிறுத்தப்படவில்லை. மேலும் மிருசுவில், இயக்கச்சி ஆகிய பகுதிகளில் முகாம்களை விஸ்தரிக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி இராணுவம் வடக்கில் குறைக்கப்பட்டு விட்டது எனக் கூறப்படும் ஏமாற்று வார்த்தைகள் பலவிதத்திலும் அம்பலப்படுத்தப்பட்டு, வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்திப் புதிய போர்ப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. அந்த நோக்கத்துக்காகவே புலி வேட்டை என்ற பெயரில் சுற்றி வளைப்புகளும் சோதனை நடவடிககைகளும் கைதுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்ட நடவடிக்கையில் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT): சிறிலங்காவின் இனவாத சிங்கள அரசு தடை!

Posted: 11 Apr 2014 09:52 PM PDT

NCCT

NCCTபுலம் பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களினால் கட்டமைக்கப்பட்டு அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு இயங்கும் தமிழர் அமைப்புக்களை சிறீலங்காவின் இனவாத சிங்கள அரசு தடைசெய்துள்ளது. தாயகத்தில் தங்கள் சொந்த மண்ணில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தமக்கு அடக்கலம் கொடுத்த நாடுகளில் அந்த நாடுகளின் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக தமிழர் அமைப்புக்களை நிறுவி தமிழர் நலன்சார்ந்தும் தாயாக உறவுகளின் நலன்சார்ந்தும் பல செயல்திட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக பல சமூக செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாது தமிழர் தாம் வாழும் நாடுகளுக்கு பெருமைசேர்க்கு முகமாகவும் பல பணிகளையும் செய்துவருகின்றனர். இவ்வாறான தமிழர் அமைப்புக்களை தடைசெய்வதன் ஊடாக தமிழர் செயல்பாடுகளை சர்வதேச நாடுகளில் முடக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் இலங்கையின் இனவாத அரசின் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி தவிக்கும் உறவுகளுக்கு உதவும் புலத்து உறவுகளின் தொடர்புகளையும் உதவிகளையும் முழுமையாக சிதைக்கும் முனைப்பாகவே இந்த தடை நடவடிக்கையை பார்க்கமுடிகின்றது. எமது நிலத்தையும் புலம்பெயர்ந்து தொலைதூரத்தில் வாழும் புலத்தின் உறவுகளையும் பிரித்து எம்மை இல்லாதொழிக்கும் இனவாத அரசின் இந்த திட்டமிட்ட நடவடிக்கையானது மனிதநேய நாடுகளால் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. இங்கு முக்கியமாக ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. கடந்த 2008 மற்றும் 2009 ஆண்டுகளின் இனஅழிப்பின் உச்ச காலப்பகுதிகளில் சிறீலங்காவின் இனவாத அரசு திட்டமிட்டு ஐ.நா உட்பட அனைத்து மனிதநேய அமைப்புக்களையும் அதன் செயல்பாட்டாளர்களயும் தமிழர் நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றி தமிழர்களை தனிமைப்படுத்தி மாபெரும் இனப்படுகொலையை செய்தது. அதேபோல் இப்பொழுதும் எம் தாய்தேசத்து உறவுகளை எம்மிடம் இருந்து தனிமைப்படுத்துவது மீண்டும் ஒரு பேரவலத்திற்கான முனைப்பாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. இது அனைத்து தமிழர் நெஞ்சங்களிலும் பெரும் அச்சத்தையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது. தாயாக மக்களின் தாகம் சுமந்து கனடாவில் இருக்கும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களின் முதன்மை கட்டமைப்பான கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) கனடிய சட்ட விழுமியங்களுக்கு அமைவான ஒரு ஜனநாயக மக்கள் கட்டமைப்பு. மக்களின் ஆணையோடு இயங்கும் கனடிய தமிழர் தேசிய அவையினையும் (NCCT) இனவாத சிங்கள அரசு தடைசெய்துள்ளது. இந்த தடை நடவடிக்கைக்கு எதிராக கனடிய தமிழர் தேசிய அவையினராகிய நாம் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதற்கான முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம் என்பதனையும் மக்களுக்கு இங்கே அறிய தருகின்றோம். சிறீலங்கா அரசின் இவ்வாறான திட்டமிட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் மக்கள் மீதான தடை நடவடிக்கைள் குறித்து கனடா என்ன நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என கனடிய நாடளமன்றதில் நாடாளமன்ற உறுப்பினர் போல் டிவர் (MP Paul Dewar) அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈவ் அடம்ஸ் (MP Eve Adams), மார்க் கார்ணு (MP Marc Garneu) அவர்கள் அறிக்கைகள் மூலமாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார்கள். எமக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சி நாடாளமன்ற உறுப்பினர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு கனடிய அரசாங்கத்திற்கும் மற்றும் அனைத்துக்கட்சி நாடாளமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் இந்த செய்திகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவர்களும் எமக்கான உரிமைகளுக்கு குரல்கொடுப்பதோடு சறீலங்கா இனவாத அரசின் இவ்வாறான தமிழின அழிப்புக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) தனது வேலைத்திட்டங்களை முன் நகர்த்தி வருகின்றது. எமது மக்களின் உரிமைக்காக மண்ணின் விடியலுக்காக நாம் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் சிறீலங்கா இனவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என்பதனை கனடியத் தமிழர் தேசிய அவையினராகிய நாம் இங்கே உறுதியோடு தெரிவிக்கின்றோம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிபந்தனை விடுதலை: கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட செனரரர் Patrick Brazeau

Posted: 11 Apr 2014 09:41 PM PDT

Patrick-Brazeau

Patrick-Brazeauவியாழக்கிழமை காலையில் குவிபெக் நகரிலுள்ள தனது வீட்டில் Patrick Brazeau என அழைக்கப்படுகின்ற இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த செனர்ரர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிகிறது. இவர் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பதவியில் இடைநிறுத்தம் செய்ப்பட்டிருந்தார். தற்போது அவர்மேல் பயமுறுத்தல், தாக்குதல், மற்றும் போதைப் பொருட்கள் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. Patrick Brazeau வெள்ளிக்கிழமை மாலையில் 5,000 டொலர்கள் செலுத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. அத்துடன் அவர் சில நிபந்தனைகளுடனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இவர் போதைப் பழக்கம், மற்றும் மதுபானம் பாவித்தல், போன்றவைகளுக்கு சிகிட்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையில் விடுதலையளிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. குவிபெக் நீதிமன்றமானது இவருக்கு அவ்வாறானதொரு சிகிட்சை நிலையத்தினைக் கண்டறிவதற்கு 3 நாட்கள் தவணை கொடுத்திருக்கின்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறிப்பிட்ட செனர்ரர் அவரின் தந்தையார் வீ.ட்டிலோ அல்லது நண்பரது வீட்டிலோதான் தங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது. தவிர இவர் இரவு 11:00 தொடக்கம் காலையில் 6:00மணிவரையில் வெளியியே செல்லக்கூடாதெனவும், அத்துடன் மது, போதைப்பொருள் பாவனையை முற்றாக நிறுத்த வேண்டும் எனவும், மற்றவர்கள் இவ்வாறான பாவனையில் இருக்கும்போது இவர் அங்கு சமுகமளிக்கக் கூடாதெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்னாள் கனடிய நிதியமைச்சர் திரு. யிம் பிளேட்டி அவர்களின் மறைவுக்குக் கனடியத் தமிழர் இரங்கல்

Posted: 11 Apr 2014 04:57 PM PDT

Jim Flaherty

[caption id="attachment_62686" align="alignleft" width="150"]Jim Flaherty Jim Flaherty[/caption]

முன்னாள் கனடிய நிதியமைச்சரும் ஓசாவாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய திரு. யிம் பிளேட்டி அவர்களின் திடீர் மறைவால் கனடியத் தமிழர் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். தன் வாழ்வை நாட்டு நலனுக்காக அர்ப்பணித்தவரும் கனடாவில் நீண்ட காலமாக நிதியமைச்சராகப் பணியாற்றியவருமான திரு. யிம் பிளேட்டி அவர்களின் மறைவு கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். உலக வரலாற்றிலேயே மிகவும் கடினமான பண வீக்கமான காலப்பகுதியில் கனடியப் பொருளாதாரத்தை உயர்த்த அர்ப்பணிப்போடு உழைத்தார். அதன் பலனாய் கனடியப் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை அவர்கள்.

மதிப்புக்குரிய திரு. யிம் பிளேட்டி அவர்களின் துணைவியார் திருமதி கிறிச்டின் எலியட் அம்மையாருக்கும் அவரது பிள்ளைகளான திரு யோன், திரு கிளன் மற்றும் திரு குயின் ஆகியோருக்கு அவர்களது தாழ முடியா இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைக் கனடியத் தமிழர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Tamil Canadians mourn the death of Mr. Jim Flaherty

Tamil Canadians are shocked and saddened by the sudden death of former Finance Minister Hon Jim Flaherty. "It is a sad day for all Canadians as we have lost one of Canada's longest-serving finance ministers, who dedicated his life to serving our country. His leadership during one of the worst global financial crisis in history and his unwavering commitment to strengthening the Canadian economy is of immense value" said CTC's national spokesperson Mr. David Poopalapillai. We send our heartfelt condolences to Hon Flaherty's wife Christine Elliott and their children John, Galen and Quinn for the great loss that happened to them.

This posting includes an audio/video/photo media file: Download Now

குனிந்து தப்பிய சுவாரசியம்.. பொது மேடையில் ஹிலாரி மீது “ஷு” வீச்சு!

Posted: 11 Apr 2014 07:25 AM PDT

Hilari-clindon

Hilari-clindonஅமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் 'ஷு'வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார். எனவே, அந்த 'ஷு' அவர் மீது விழவில்லை. கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் இது இருந்தது. 'ஷு'வுடன் சேர்த்து சில பேப்பர்கள் பந்து போல் சுருட்டப்பட்டு வீசப்பட்டன. இதற்கிடையே, 'ஷு' வீசி விட்டு பின்பக்க வரிசையில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியேறினார். எனவே, அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் இலென் ரோசன் என தெரிய வந்தது. டென்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் எதற்காக ஹிலாரி மீது 'ஷு' வீசினார் என தெரியவில்லை. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே தன் மீது 'ஷு' வீசப்பட்டதை ஹிலாரி கிளிண்டன் சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டார். 'ஷு' வீசிய பிறகும் தொடர்ந்து பேசிய அவர். ''யாரோ என் மீது ஏதோ வீசினார்கள். கழிவுகள் எதையும் விசவில்லை. அது எனது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்மீது 'சாப்ட்பால்' போன்று எதையும் வீசி விளையாடவில்லை ஜோக் அடித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டறை: அமெரிக்க – இலங்கை விஞ்ஞானிகளால் யாழ்!

Posted: 11 Apr 2014 07:19 AM PDT

cameroon

cameroonயாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள "சூரியக் கலத் தொழில் நுட்பமும் இலங்கையில் அதனேடிணைந்த தொழில் முயற்சிகளும்" என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறையில் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கலந்து கருத்துரை வழங்கவுள்ளனர். யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த ஆய்வுப்பட்டறையில் சிக்காக்கோவில் அமைந்துள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பேராசிரியர். சிவலிங்கம் சிவானந்தன் தலைமையில், விஞ்ஞானிகளான றிம் கூட்ஸ், றிம் கெசற், ரமேஸ் தேரே, மௌபாஃக் அல் ஜசீம் ஆகியோரே வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். பேராதனை, களனி, ருகுண மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழககங்களுடனான கூட்டு ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனமான "சிவானந்தன் ஆய்வகம்" வருடாந்தம் பேராதனை, களனி, ருகுண மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொடர் ஆய்வுப்பட்டறைகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில், இந்தத் தொடர் ஆய்வுப்பட்டறைகள் 2012 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள அடிப்படைக் கல்வி நிறுவனத்திலும், 2013 ஆம் ஆண்டு ருகுணு பல்கலைக்கழகத்திலும் நடைபெற்று வந்தது. மூன்றாவது ஆய்வுப்பட்டறை எதிர்வரும் 16 ஆம்திகதி முதல் 18 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. "கற்மியம் ரெலுரைட்" சூரியக் கலத் தொழில் நுட்பத்தில் போதிய அறிவினை வளர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள துறைசார் ஆய்வு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக அமெரிக்க ஆய்வு நிறுவனமான "சிவானந்தன் ஆய்வகம்" இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் வளவாளர்களை அனுப்பி வைப்பதோடு, இலங்கையிலிருந்து துறைசார் ஆய்வு மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்துப் பயிற்சிகளையும் வழங்கிவருக்கின்றது. இந் நிறுவனத்தின் நிறுவுனரான பேராசிரியர். சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்தரங்கின் நிறைவு தினத்தன்று யாழ். பல்கலைக்கழக பௌதீகத் துறையினரால் சூரியக் கலத் தொழில் நுட்பம் தொடர்பான செயல்முறை விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இலங்கையில் "கற்மியம் ரெலுரைட்" சூரியக கலத் தொழில் நுட்பம் தொடர்பான செய்முறை ஆய்வு உபகரணங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தோனேசியாவில் கைது: உலகை வலம் வந்து சுவிஸ் விமானி !

Posted: 11 Apr 2014 07:11 AM PDT

Thief

Thiefஇலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிற்ஸர்லாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இலங்கை வழியாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் விமானத்தை சுற்றிவளைத்துள்ளனர். 65 வயதான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன் படத்துக்கு: தெலுங்கு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Posted: 11 Apr 2014 06:55 AM PDT

Tenaliraman

Tenaliramanவடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தெலுங்கு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: தெனாலிராமன் படத்துக்கு தடை கேட்டு வழக்கு! "ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம், நடிகர் வடிவேலு நடித்துள்ள 'தெனாலிராமன்' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில், மன்னர் கிருஷ்ண தேவராயரை ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதனால், தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினோம். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம், கிருஷ்ணதேவராயரை அவமரியாதை செய்யும் விதமாக எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை என்று கூறியுள்ளது. ஆனால், இதற்கு முரணான தகவலை இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்தை தெலுங்கு மக்களின் பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்ட வேண்டும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்". -இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, 'இந்தhd படம் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதால், படத்தின் கதை, வசனம் உள்ளிட்டவைகள் குறித்து என்னால் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்று உத்தர விட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உதயநிதிக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

Posted: 11 Apr 2014 06:43 AM PDT

Laxmimenan

Laxmimenanகோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்ட்டட் அதிர்ஷ்ட நாயகியான லட்சுமி மேனன், அடுத்து ஜோடி சேரப் போவது உதயநிதி ஸ்டாலினுடன். இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி. அதில் ஒரு படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் லட்சுமிமேனன். இந்த படத்தை இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்குகிறார். இந்த படத்துக்கு இசை உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் அல்ல. இந்தப் படத்தில் அனிருத்துக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்களாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தில் சந்தானம் இருக்கிறாராம். உதயநிதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தொடர்ந்து சொந்தப் படங்களில் மட்டும்தான் நடிப்பாரா உதயநிதி? "அப்படியில்லை. கதை, டெக்னீஷியன்கள் என அனைத்தும் எனக்கேற்பட அமைந்தால் வெளிப்படங்களிலும் நடிப்பேன்," என்கிறார் உதயநிதி.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுவைமிகுந்த கிஸ்மிஸ்பழம்!!

Posted: 11 Apr 2014 05:19 AM PDT

Kis-Mis

Kis-Misசெடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும். இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும். திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு.. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வைட்டமின் 'பி' மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்போது ரூ.19,500 விலையில் Gionee Elife E7 மினி ஆன்லைனில் கிடைக்கும்!

Posted: 11 Apr 2014 04:40 AM PDT

Gionee-Elife-E7

Gionee-Elife-E7Gionee Elife E7 மினி இந்தியாவில் இ-காமர்ஸ் இணையதளம் வழியாக ரூ.19,500 விலையில் இப்போது கிடைக்கிறது. முந்தைய வேரியன்ட் Gionee Elife E7 போல, Gionee Elife E7 மினி ஃபோனும் நிறுவனத்தின் கஸ்டம் Amigo 2.0 UI உடன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. Gionee Elife E7 ஒரு ஒற்றை சிம் சாதனம் ஆகும், ஆனால் Gionee Elife E7 மினி வேரியன்டில் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடு ஆதரிக்கிறது. இது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் ஐபிஎஸ் IGZO டிஸ்ப்ளே வருகிறது. Gionee Elife E7 மினி மாலி 450MP4 ஜி.பீ. யூ மற்றும் 1 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.7GHz ஆக்டா கோர் மீடியா டெக் MT6592 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Elife E7 மினி சிறப்பம்சமாக சுழலும் திறன் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. Gionee Elife E7 மினி இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும். விரிவாக்கக்கூடிய சேமிப்பு இல்லாமல் 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, ஆதரிக்கிறது. Elife E7 மினி இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், NFC, Wi-Fi, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். இது பரிமாணங்களை 139.8x66.2x8.6mm வருகிறது மற்றும் 142.9 கிராம் எடையுடையது. Elife E7 மினி 2200mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Gionee Elife E7 மினி சிறப்பம்சம்: 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் ஐபிஎஸ் IGZO டிஸ்ப்ளே, மாலி 450MP4 ஜி.பீ. யூ, 1 ஜிபி ரேம், 1.7GHz ஆக்டா கோர் மீடியா டெக் MT6592 ப்ராசசர், சுழலும் திறன் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா, 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ப்ளூடூத், NFC, Wi-Fi, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 2200mAh பேட்டரி, 142.9 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

Posted: 11 Apr 2014 03:22 AM PDT

poonam-pandey

poonam-pandeyகவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே பிரதமர் என்று அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து அதை ட்ரெண்டாகவிட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கு ஏற்கனவே பல முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதிதாக ஒருத்தரை வேறு அந்த நாற்காலியில் அமர வைக்க சிலருக்கு ஆசை பிறந்துள்ளது. அவ்வப்போது அரை நிர்வாணம், முழு நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு நான் இங்கு தான் இருக்கிறேன் என்று மக்களின் கவனத்தை ஈர்ப்பவர் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே. இந்நிலையில் அவரது ரசிகர்கள் சும்மா இல்லாமல் ட்விட்டரில் பூனம் பாண்டே பிரதமர் என்ற ஹேஷ்டேக்கை போட்டு அதை டிரெண்டாகவிட்டுள்ளனர். இதை பார்த்த பூனத்திற்கு உச்சி குளிர்ந்து போய் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஹா ஹா ஹா இது என்ன பூனம் பாண்டே பிரதமர் என்று அது டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதை நம்பவே முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கிறேன். உங்களுக்கு எப்படி இது போன்ற காமெடி ஐடியாக்கள் தோன்றுகிறது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் – சிம்பு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார்!'

Posted: 11 Apr 2014 01:49 AM PDT

simbu

simbuசிம்பு நடிக்கும் வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் ஹன்சிகா என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, 'வாலு' என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் கதாநாயகன், சிம்பு. கதாநாயகி, ஹன்சிகா. விஜய் சந்தர் டைரக்டு செய்து வருகிறார். படத்தின் பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. 'வாலு' படப்பிடிப்பின்போதுதான் சிம்பு - ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்தனர். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இந்தக் காதல் வளர்ந்த வேகத்திலேயே முறிந்தும் போனது. இருவரும் பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிக்கையும் கொடுத்துவிட்டனர்.
இந்த நிலையில், 'வாலு' படத்தை தயாரித்து வரும் 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
அதில், "வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ.15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன். ஹன்சிகா, 'வாலு' படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறுகிறார். அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இவங்க என்ன பண்ணுறாங்கனு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்…

Posted: 11 Apr 2014 01:34 AM PDT

Water-Man

Water-Man

This posting includes an audio/video/photo media file: Download Now

அருமையா செய்யுறாங்கப்பா….வாழ்த்துக்கள்

Posted: 11 Apr 2014 01:28 AM PDT

Militaray

Militaray

This posting includes an audio/video/photo media file: Download Now

நெஞ்சை பதறவைக்கும் காணொளி!!!

Posted: 11 Apr 2014 01:23 AM PDT

Bike

Bike

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்க அதிர்ஷ்டசாலி தான் பாஸ்….

Posted: 11 Apr 2014 01:18 AM PDT

Fish

Fish

This posting includes an audio/video/photo media file: Download Now

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

Posted: 11 Apr 2014 12:50 AM PDT

Koiya

Koiyaகொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது. கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுதி கட்டத்தை எட்டியது தேடும் பணி: இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானம்!

Posted: 11 Apr 2014 12:38 AM PDT

Ship

Shipமாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீண்டும் புதிய சிக்னல் கிடைத்துள்ளது. இதனால், விரைவிலேயே விமானம் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த மாதம் 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. கடும் தேடுதல் வேட்டைக்கு பிறகு, இந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய அரசு தகவல் தெரிவித்தது. விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், விமானத்தின் உடைந்த பாகங்களோ, உடல்களோ இதுவரையிலும் மீட்கப்படவில்லை. கடந்த 33 நாட்களாக விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து அவ்வப்போது சிக்னல்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் ஓஷன் ஷீல்டுக்கு நேற்று மீண்டும் புதிய சிக்னல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு போர் விமானங்களும், கப்பல்களும் விரைந்துள்ளன. இது குறித்து விமானத்தை தேடும் பணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆங்குஸ் ஹஸ்டன் கூறுகையில், 'கறுப்பு பெட்டியின் ஆயுட்காலம் காலாவதி ஆவதற்குள், ஓரிரு நாட்களில் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. விமானத்தை தேடும் பரப்பளவு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விமானத்தின் பாகங்களையும், கறுப்பு பெட்டியையும் நாங்கள் நெருங்கி விட்டோம்' என தெரிவித்துள்ளனர். மேற்கு பெர்த் நகரில் இருந்து 2,280 கி.மீ தொலைவில் தெற்கு இந்திய பெருங்கடலில் தேடுதல் பணி நடக்கிறது. புதிய சிக்னல் கிடைத்துள்ளதால், 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் நடந்து வந்த தேடும் பணி 57,000 ஆக குறைந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

எல்டிடிஇ ஆதரவாளர் 65 பேர் கைது!

Posted: 11 Apr 2014 12:28 AM PDT

Arrest

Arrestவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, 10 பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து இலங்கை போலீஸ் செய்தித் தொடர்பாளரும், காவல்துறை கண்காணிப்பாளருமான அஜித் ரோகனா கூறியதாவது: தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சித்ததாக கடந்த மாதம் வரை 65 பேரை கைது செய்தோம். அவர்களில் 5 பேர் உரிய ஆவணங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். இவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க, தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். இவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் எல்லா சலுகைகளும் வழங்கப்படும்' என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™