Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் தொகுதியை விட்டு கொடுத்து கூட்டணியை புதுப்பித்த பா.ஜ.க.

Posted: 18 Apr 2014 11:04 PM PDT

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்து உள்ளது. கடுமையான இழுபறிக்கு பிறகு இந்த கூட்டணி உருவானது. தெலுங்கானாவில் பாரதீய ஜனதா கேட்ட தொகுதியை தெலுங்கு தேசம் விட்டு கொடுத்தது. ஆனால் சீமாந்திராவில் 14 சட்ட சபை தொகுதியும், 4 பாராளுமன்ற தொகுதியையும் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கியது.

திருட்டு நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மோதி திருமண வீட்டார் 8 பேர் பலி

Posted: 18 Apr 2014 10:34 PM PDT

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்த திருமண கோஷ்டியை சேர்ந்த மணமகன் வீட்டார் தன்பாத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெடுஞ்சாலை வழியாக மக்மா என்ற இடத்தில் உள்ள மணமகள் வீட்டுக்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரி, அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன் பிறகும் வேகம் குறையாத லாரி, திருமண கோஷ்டியினர் சென்ற கூட்டத்துக்குள்

திருப்பதி சென்று திரும்பிய போது கார்–பஸ் மோதல்: 3 பக்தர்கள் பலி

Posted: 18 Apr 2014 10:30 PM PDT

தர்மபுரியை சேர்ந்த 9 பேர் ஒரு காரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று வந்தனர். தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு காரில் வீட்டிற்கு புறப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சித்தூர்–பெங்களூர் மெயின் சாலையில் பலமனேர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியது.

பத்மநாபசாமி கோவில் தங்கபுதையல் கொள்ளை: மன்னர் குடும்பம் மீது குற்றச்சாட்டு

Posted: 18 Apr 2014 10:24 PM PDT

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கபுதையல் இருப்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள 'ஏ' முதல் 'எப்' வரையிலான 6 ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க புதையலை மதிப்பிடும் பணி நடைபெற்றது. இதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தது.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது

Posted: 18 Apr 2014 10:12 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று புனித வெள்ளி என்பதாலும் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு நேற்று 24 மணி நேரம் ஆனது. கோவிலுக்கு

மோடி வாழ்க்கை சினிமா: தடை கேட்கும் காங்., ஆம் ஆத்மி

Posted: 18 Apr 2014 09:55 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்களை மையமாக வைத்து 'நமோ சவ்னே கமோ' (நமோவை அனைவரும் நேசிக்கின்றனர்) என்ற பெயரில் குஜராத்தி மொழி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, குஜராத் மாநிலம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த ஷரத் ஷர்மா, அச்சு அசலாக மோடியின் சாயலில் இருப்பது போன்ற வண்ண, வண்ண போஸ்டர்கள்

குதிரை சவாரியைத் தடை செய்துள்ள முசோரி நகர நிர்வாகம்

Posted: 18 Apr 2014 09:37 PM PDT

முசோரியின் மால் சாலையில் நடைபெற்றுவந்த 70 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட பொழுதுபோக்கு குதிரை சவாரியினைத் தடை செய்துள்ளதாக அந்நகர நிர்வாகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுவந்த 25க்கும் மேற்பட்ட குதிரை உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு தொகுப்பின் கீழ் கேமல் சாலையில் ரூ. 15,000 மானிய அடிப்படைத்தொகைக்கு கடைகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன. இவற்றுக்கு வாடகையும் மாதம் 150 ரூ தந்தால் போதும் என்று நிர்வா

டெல்லியில் போலீசார் கண்ணில் மிளகாய்த் தூளை தூவி பிக்பாக்கெட்: இருவர் கைது

Posted: 18 Apr 2014 09:09 PM PDT

டெல்லியில் உள்ள அரியானா மாநில அரசு இல்லத்தில் காவல் பணியில் இருந்த போலீசார் தர்மேந்திரா சிங், ஜச்பிர் சிங் ஆகியோர் கடந்த 4-ம் தேதி இரவு மத்திய டெல்லியில் உள்ள டெல்லி போலீஸ் தலைமையகம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நெருங்கிய இரு வாலிபர்கள், சற்றும் எதிர்பாராத வகையில் போலீசாரின் கண்களில் மிளகாய்த் தூளை தூவினர். நிலை குலைந்த அவர்களின் பர்ஸ்களை உருவிக் கொண்ட இருவரும் மின்னல்

சீமாந்திராவில் இலவச டிவி, லேப்-டாப்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Posted: 18 Apr 2014 08:56 PM PDT

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இங்குள்ள சீமாந்திரா பகுதியில் குறிப்பிடத்தக்க வகையிலான வெற்றியை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இதை உணர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதில்,

மோடி பேசிய மேடை மீது தாவி ஏற முயன்ற பெண்: உ.பி.யில் பரபரப்பு

Posted: 18 Apr 2014 08:44 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலம், அக்பர்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை நடந்த வாக்குப்பதிவு நிலவரத்தை வைத்து பார்க்கும் போது, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையப் போவது தெளிவாகி விட்டது. நீங்கள் அனைவரும் பெருவாரியாக

முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு

Posted: 18 Apr 2014 05:09 PM PDT

சமாஜ்வாடி கட்சி சின்னத்துக்கு ஆசிரியைகளை ஓட்டுப்போட சொல்லி மிரட்டியதாக வந்த புகாரின்பேரில், அந்த கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. உத்தரபிரதேச மாநில அரசு ஒப்பந்த அடிப்படையில் 'சிக்ஷா மித்ரா' (ஆரம்ப பள்ளி) ஆசிரியைகளை பணிநியமனம் செய்தது.

சபல்பூர் கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 18 Apr 2014 04:40 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவுப்படி 13 பேர் கொண்ட கும்பலால் பழங்குடியின பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜனவரி 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து

என் மீதான தாக்குதல்களுக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது: கெஜ்ரிவால்

Posted: 18 Apr 2014 03:45 PM PDT

மக்களவை தேர்தலில் வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத்பவார் விவசாயிகளின் நிலங்களை பிடுங்கிக் கொண்டார்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Posted: 18 Apr 2014 03:04 PM PDT

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய விவசாயத்துறை மந்திரியுமான சரத்பவார் 'விவசாயிகளின் நிலங்களை பிடுங்கிக் கொண்டார்' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உத்தவ் தாக்கரே தனது கட்சியின்

காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க எந்த தூதுவரையும் அனுப்பவில்லை: பா.ஜ.க.

Posted: 18 Apr 2014 01:41 PM PDT

காஷ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டும் என்பதை முன்னிறுத்தி இயக்கம் நடத்தி வருபவர் சையது அலி ஷா கிலானி. அண்மையில், காஷ்மீர் விவகாரம் பற்றி முடிவு செய்ய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தூதுவரை அனுப்பியதாக இவர் கூறியது சர்ச்சையை கிளப்பியது.

மத்திய பிரதேசம்: திருமண நிகழ்ச்சிக்காக சென்ற பேருந்தில் தீ விபத்து-5 பேர் பலி

Posted: 18 Apr 2014 11:17 AM PDT

மத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் அருகே இன்று இரவு பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல்கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்டம் பரோவா கிராமத்தில் இருந்து இன்று இரவு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 50

சிறுத்தைக்காக வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய சிங்கம்

Posted: 18 Apr 2014 10:52 AM PDT

குஜராத்திலுள்ள சுத்ரபாதாவிற்கு அருகிலுள்ள விரோதார் கிராமத்தில் சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தின்றுவருகிறது. அதுமட்டுமில்லாது கிராமப்புற பகுதிகளில் இரவுநேரங்களில் உறுமிக்கொண்டு திரிந்து வந்தது. இதனையடுத்து அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து முயற்சி செய்துவந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்த போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்

Posted: 18 Apr 2014 10:43 AM PDT

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி 'சஸ்பென்ட்' செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கட்டாரம் காவல் நிலையத்தில்

குஜராத் மாடலை விட உ.பி. மாடல் சிறந்தது: அகிலேஷ் பேச்சு

Posted: 18 Apr 2014 10:29 AM PDT

மோடியின் குஜராத் முன்மாதிரியை விமர்சித்துள்ள உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், குஜராத் மாடலை விட உத்தர பிரதேச மாடல் சிறந்தது என கூறினார். உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் லால் சிங் தோமரை ஆதரித்து செய்த பிரசாரத்தில் இதுகுறித்து அகிலேஷ் பேசியதாவது:-

கட்டாக்: வாக்களிப்பதில் ஆர்வம் காட்டும் மாற்றுத்திறனாளிகள்

Posted: 18 Apr 2014 10:25 AM PDT

ஒடிசா மாநிம் கட்டாக்கி்ல் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் மற்ற வாக்காளர்களை விட மாற்றுத்திறனாளிகள் அதிகம்பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் பதிவான 70 சதவீத வாக்குப்பதிவில் மாற்றுத்திறனாளிகள் 94.18 சதவீதம் வாக்களித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலின்போது இங்கு 64 சதவீத அளவே வாக்குப்பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™