Tamil Star |
- அஜீத் படத்திற்கு தமிழ் கற்கும் அனுஷ்கா
- கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படத்தில் பாடிய சிம்ரன்
- பயங்கர மணல் புயல்! அதிர்ஷ்டவசமாக தப்பிய அனுஷ்கா சர்மா!!
- புதுமுக இயக்குனர்கள் 2.30 மணி நேரத்திற்குள் படத்தை இயக்க வேண்டும் : விஜய்
- கிளிநொச்சியில் 64 வயதுடைய பத்மாவதியைக் கைது செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்!
- 2015ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்?
- ஜனாதிபதி கேட்டுக்கொண்டால் தாம் பதவி விலகத்தயார் : ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர்
- நாள் தோறும் இருதய நோய்களினால் 125 முதல் 150 பேர் மரணம்
- அமெரிக்காவினது அனுமதியின்மையால் வருடங்களாகத் தாமதம் ஏற்படும் Keystone XL pipeline என அழைக்கப்படுகின்ற குழாய்த்திட்டம்
- எயர் கனடா பொதிகள் கையாள்பவர்கள் பொதிகளை ஜெட்வே படிகளில் எறிகின்றனர்
- மெச்சிக்கோ நாட்டில் 7.2 மக்னிரியுட் அளவில் நிலநடுக்கம்
- இரண்டு நாய்கள் கொடூரமாக கடித்து 10-வயது சிறுமி மரணம்
- எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்! எம்ஜிஆர் வேடத்தில் விஜய்!!
- தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறல்: படப்பிடிப்பு ரத்து!
- எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப் புயல்… மலையேற்ற பாதை அமைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 6 பேர் பலி!
- யோகா டேப்லெட் 10 எச்டி + டேப்லெட் இந்த மாதம் வெளியீடு!
- கொழுப்பைக் குறைக்க கேரட் !
- திராட்சையின் மருத்துவ குணம்!!
- பாலு மகேந்திராவுக்கு நன்றி! இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியீடு!!
- தமிழகத்தில் இன்று 350 அரங்குகளில் தெனாலிராமன் ரிலீஸ்!
| அஜீத் படத்திற்கு தமிழ் கற்கும் அனுஷ்கா Posted: 18 Apr 2014 11:44 PM PDT
வீரம் படத்தை தொடர்ந்து அஜீத், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அஜீத், அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை கவுதம் மேனன் படமாக்கி வருகிறார். அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பது இதுவே முதல் முறை. அதேபோல் முதன் முறையாக இப்படத்தில் சொந்தக்குரலில் பேசுகிறார். இதுவரை அனுஷ்காவுக்கு டப்பிங் கலைஞர்களே தமிழில் குரல் கொடுத்து வந்தனர். முதல் தடவையாக இம்முயற்சியை அவர் மேற்கொள்கிறார். இதற்காக தமிழ் கற்க துவங்கியுள்ளார் அனுஷ்கா. இப்படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படத்தில் பாடிய சிம்ரன் Posted: 18 Apr 2014 11:42 PM PDT
தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது சினிமாவில் பின்னணி பாடகியாக மாறி இருக்கிறார். பார்த்திபன் இயக்கும் 'கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்' என்ற படத்தில் சிம்ரன் ஒரு பாடலை பாடுகிறார். இதுகுறித்து பார்த்திபன் கூறும் போது, சிம்ரன் நடிக்க வந்த போது பாடுவதில் தான் எனக்கு விருப்பம் உள்ளது என்று கூறினார். எனவே தான் அவரை இந்த படத்தில் பாட வைத்துள்னேன் என்றார். இந்த படத்தில் ஆர்யா, அமலாபால் ஆகியோர் கவரவ தோற்றத்தில் தோன்றுகின்றனர். விஜய்சேதுபதியும் இதில் நடிக்கிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கர மணல் புயல்! அதிர்ஷ்டவசமாக தப்பிய அனுஷ்கா சர்மா!! Posted: 18 Apr 2014 11:41 PM PDT
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் முதல் படம் என்எச்10. நவ்தீப் சிங் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். செப்டம்பர் 12-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சன் கலந்த திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு தற்போது வடஇந்திய சமவெளிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நேற்று ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவதற்காக செட்டுகள் அமைத்து படக்குழுவினர் தங்கியிருந்தனர். அப்போது திடீரென வீசிய மணல் புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் இருந்த செட் மீது மணல் வாரி இறைக்கப்பட்டதால் படக்குழுவினர் சிக்கிக்கொண்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து இல்லை. இத்தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்த அனுஷ்கா சர்மா, இதனை மிகவும் பயங்கரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உடல் முழுவதும் அழுக்கு மற்றும் மணல் படிந்ததாகவும் அனுஷ்கா கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதுமுக இயக்குனர்கள் 2.30 மணி நேரத்திற்குள் படத்தை இயக்க வேண்டும் : விஜய் Posted: 18 Apr 2014 11:40 PM PDT
விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜில்லா'. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். 'ஜில்லா' படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் விஜய் பேசும்போது, 'ஜில்லா' படம் 100 நாள் ஓடி வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சி, ரசிகர்களால்தான் இப்படம் பெரிய வெற்றிப்பெற்றது. ரசிகர்களுக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது இயக்கும் புதுமுக இயக்குனர்கள், 3.00 மணி நேரத்திற்கு மேலாக படத்தை இயக்குகிறார்கள். அது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும், ஆதலால் திரைப்படத்தை 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே படங்களை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு விஜய் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிளிநொச்சியில் 64 வயதுடைய பத்மாவதியைக் கைது செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்! Posted: 18 Apr 2014 11:02 PM PDT
கிளிநொச்சியில் இன்று காலை பத்மாவதி 64 வயதுடைய தாயொருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண்ணெ தற்போது வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பெண் கைது செய்யப்பட்டமைக்கான தகவல்கள் வெளிவர வில்லை. அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் மீளிணைய முயற்சி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் அப்பாவிப் பொது மக்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2015ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்? Posted: 18 Apr 2014 10:57 PM PDT
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் திகதிக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச கூறியுள்ளார். எனினும், 2016ம் ஆண்டு வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார். அதேவேளை, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி கேட்டுக்கொண்டால் தாம் பதவி விலகத்தயார் : ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் Posted: 18 Apr 2014 10:52 PM PDT ஹம்பாந்தோடை துறைமுகத்தில் வைத்து நடந்துக்கொண்ட விதம் அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்குமானால், தமது பதவியில் இருந்து விலககத்தயார் என்று ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் இராஜ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தாம் உண்மையில் குறித்த இடத்துக்கு சென்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஆத்திரம் கொண்ட குழுவிடம் இருந்து காப்பாற்றியதாக இராஜ் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டு கண்காணிப்புக்காக மத்தள விமான நிலையத்துக்கும், துறைமுகத்கும் ஐக்கிய தேசியக்கட்சியினர் விஜயம் செய்தனர். இதன்போது அவர்கள் மீது துறைமுகத்தில் வைத்து […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாள் தோறும் இருதய நோய்களினால் 125 முதல் 150 பேர் மரணம் Posted: 18 Apr 2014 10:45 PM PDT
இலங்கையில் இருதய நோய்களினால் நாள் தோறும் 150 பேர் உயிரிழக்கின்றனர். நாள் தோறும் இருதய நோய்களினால் 125 முதல் 150 பேர் வரையில் உயிரிழப்பதாக இருதய நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணங்களை தடுப்பதற்கு விசேட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவ மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Apr 2014 10:39 PM PDT
குறிப்பிட்ட குழாய் அமைக்கும் திட்டமானது அமெரிக்காவூடாக அமைக்கப்படுவதற்கு அமெரிக்காவின் அனுமதியைக் பெறுவதற்கு அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கனடா செய்த பிராயத்தனங்கள் அதிகம், ஆனால் அந்தத் திட்டமானது மீண்டும் நடைமுறைக்கு வராமல் காலதாமதம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திட்டமானது தற்போது காலவரையின்றி முடங்கிவிட்டதென அமெரிக்க நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறியத்தந்திருக்கின்றது. குறிப்பாக அந்தக் குழாய் சம்பந்தமான பதில் இந்த வருடக் கோடைகாலத்தில் கிடைக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆமெரிக்க ராஜாங்கத் திணைக்களமானது தமக்கு குறிப்பிட்ட திட்டம் சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தரும்படி கோரியிருப்பதாகவும் தெரியவருகிறது. அரச அதிகாரிகளின் கருத்தின்படி குறிப்பிட்ட திட்டத்திற்கு உந்துதலாகக் காணப்படுவது அரசியல் எனத் தெரியவருகிறது. ஆனால் குறிப்பிட்ட குழாய் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகிய அல்பேட்டாவிலிருந்து ரிக்ஸ்சஸ் வரையான பகுதி ஏற்கனவே அமைக்கப்பட்டு முடிந்து விட்டது. ஆனால் கனடாவிலிருந்து அமெரிக்காவூடாகச் செல்லும்பகுதியே இவ்வாறான இழுபறி நிலையில் இருக்கின்றது. இந்தப் பகுதிக்கு அமெரிக்காவினது அனுமதியின்மையால் வருடங்களாகத் தாமதம் ஏற்படுகின்றது. குறிப்பிட்ட திட்டத்திற்கான அனுமதிக்காக சில மாதங்களுக்கு முன்பாகக் கனடிய வெளிவிவகார அமைச்சர் பல நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து முயற்சி செய்திருக்கின்றார். ஆனாலும் பயனளிக்கவில்லை. குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இரு நாட்டினதும் தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. ஹாப்பர் குறிப்பிட்ட திட்டம் பற்றி ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும் அல்பேட்டா பிரிமியரும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எயர் கனடா பொதிகள் கையாள்பவர்கள் பொதிகளை ஜெட்வே படிகளில் எறிகின்றனர் Posted: 18 Apr 2014 10:34 PM PDT
வன்கூவர்- அபொற்ஸ்வோட் பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த டுவெயின் ஸ்ருவட் என்பவர் எயர் கனடா பொதிகள் கையாளுபவர்கள் பொதிகளை ஓடுதளத்திற்கு எடுத்துச்செல்லாமல் படிகளில் எறிவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். ஸ்ருவட்டும் அவரது நண்பரும் எயர் கனடா விமானத்தில் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வன்கூவர் செல்லும் போது இந்த சம்பவத்தை கண்டதாக கூறப்பட்டுள்ளது. தலைக்கு மேலுள்ள பெட்டிகளில் பொதிகள் நிறைந்து காணப்பட்டதால் பயணிகள் அவர்களது கரி-ஓன் பொதிகளை சரிபார்த்துக் கொள்ளும் படி கேட்கப்பட்டதாகவும் அச்சமயத்தில் என்ன நடந்ததென்பதை தான் பதிவு செய்ய ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொதிகள் மேற்படியில் இருந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள பெட்டிக்கு எறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. "ஒகே. பையை கவனி. படிகளில் இறங்க வேண்டியதில்லை" என கூறியபடி எறியப்பட்டதாக பதியப்பட்டுள்ளது. முதலாவதாக எறியப்பட்டது ஒரு மென்மையான உடற்பயிற்சி பை. தொடர்ந்து பைகள் அதற்கு மேல் எறியப்பட்டது. கடைசி பை மிகவும் பாரமானது. ஒருவர் வந்து தரையிறங்கும் திண்டு ஒன்று தயார் செய்து கடைசியாக இறக்கினர் என ஸ்ருவட் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் பைகளுக்கு மேல் பைகளை எறிந்தனரெனவும் ஸ்ருவட் கூறியுள்ளார். தானும் தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்தவரும் மட்டுமே என்ன நடந்ததென்பதை பார்த்ததாகவும் ஆனால் இதனை ஆன்லைனில் வெளியிடப்பட்ட போது பெரிய பிரதிபலிப்பை உருவாக்கியதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இது நிலையான பொதிகள் கையாளும் முறைகளிற்கு எதிரானதெனவும் தாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏன்ன நடந்ததென பார்ப்பதாக எயர் கனடா தெரிவித்துள்ளது எனவும் அறியப்படுகின்றது. பைகள் சரிவுப்பாதையில் தான் கொண்டு செல்லப்பட வேண்டும் என செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புலன்விசாரனை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெச்சிக்கோ நாட்டில் 7.2 மக்னிரியுட் அளவில் நிலநடுக்கம் Posted: 18 Apr 2014 10:25 PM PDT
வெள்ளிக்கிழமை காலையில் 7.2 மக்னிரியுட் அளவிலான நிலநடுக்கம் மெச்சிக்கோ நாட்டினை உலுக்கியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்பட்ட நிலநடுக்கமானது நாடுபூராவும் ஏதொவொருவகையில் உணரப்பட்டிருக்கின்றது எனத் தெரிகிறது. குறிப்பாக பல கட்டிடங்கள் ஆடியிருக்கின்றன எனத் தெரியவருகிறது. ஆனால் அரச தரப்பு அதிகாரிகள் தமக்கு உடனடிச் சேதம் எதுவும் அறியவரவில்லையெனத் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட நில நடுக்கமானது வெள்ளிகாலை உள்ளுர் நேரப்படி 10:28ற்கு நடந்திருக்கின்றது எனவும் அமெரிக்க நிலப்பொதியியல் கணப்பீட்டின்படி ஏற்பட்ட நிலநடுக்கமானது 7.5 மக்னிரியுட் எனத் தெரியவருகிறது. ஏற்பட்டது பாரிய நில நடுக்கம் எனவும், இதனால் மத்திய, மற்றும் தென்பகுதி மெச்சிக்கோவிலுள்ள பல கட்டிடங்கள் ஆடியிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நிலநடுக்கத்தையுணர்ந்த மக்கள் வீதிகளில் கூடியிருந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமை ஈஸ்ரர் விடுமுறைகாரணமாக பல தொழில் நிறவனங்கள் மூடப்பட்டிருந்தன எனத் தெரிகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் மட்டுமே திறந்திருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய காலங்களிலும் இதேயளவிற்கு மெச்சிக்கோப்பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த நில நடுக்கத்தில் கிட்டத்தட்ட 300, 000 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரண்டு நாய்கள் கொடூரமாக கடித்து 10-வயது சிறுமி மரணம் Posted: 18 Apr 2014 10:15 PM PDT
10-வயது சிறுமி ஒருத்தி இரண்டு நாய்களால் கொடூரமாக கடித்து கொல்லப்பட்டுள்ளதாக மனிரோபா ஆர்சிஎம்பியினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மனிரோபாவின் வடபகுதியில் உள்ள ஒரு பின்தங்கிய சமூகத்தில் நடந்துள்ளது. சிறுமி அருகாமையில் உள்ள நேசிங் ஹோமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் வழியிலேயே மரணமடைந்து விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்கள் சிறுமி Racquelle Tssessaze என உறுதிப் படுத்தியுள்ளனர். இச்சிறுமி ஆறு விரல்களுடன் பிறந்ததால் அவள் பிறந்ததிலிருந்து அவளை தாங்கள் "Little Six" என அழைப்பதாக தாயார் தெரிவித்துள்ளார். பாடசாலை முடிந்ததும்Taekwondo வகுப்பிற்கு வேறு இரு சிறுமிகளுடன் செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்! எம்ஜிஆர் வேடத்தில் விஜய்!! Posted: 18 Apr 2014 03:43 AM PDT
எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளாராம். விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. சீமான் கட்சியில் பிஸியாக இருந்த அவர், மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளார். ஆனால் விஜய்யை வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாராம் செல்வபாரதி. இவர் ஏற்கெனவே வசீகராவில் விஜய்யை எம்ஜிஆர் ரசிகராகத்தான் காட்டியிருப்பார். இப்போது எம்ஜிஆர் வேடத்திலேயே விஜய்யை நடிக்க வைக்கப் போகிறார். இந்த விஷயத்தை விஜய்க்கு அவர் சொன்னதும், மிக மகிழ்ந்த விஜய், கொஞ்சம் பொறுத்திருங்க என்று கூறியிருக்கிறாராம். அஜீத்தை வைத்து வீரம் பண்ண விஜயா கம்பைன்ஸ், இந்தப் படத்தை விஜய்யை வைத்துத் தயாரிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எம்ஜிஆர் பக்தர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..!This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறல்: படப்பிடிப்பு ரத்து! Posted: 18 Apr 2014 03:35 AM PDT
கோவாவில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கினர். அதில் ஹன்சிகா, சித்தார்த் இணைந்து டூயட் பாடுவது போல மாலை 4 மணிக்கு கடற்கரையில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. ரசிகர்கள் ஹன்சிகாவின் பெயரை சத்தமாகக் கூவி அழைத்தபடியும், விசிலடித்தபடியும் இருந்தனர். திடீரென்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர். ஹன்சிகாவைச் சூழந்தபடி ஆட்டோகிராப் கேட்டனர். ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்து அலறிய ஹன்சிகாவை பாதுகாவலர்கள் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், "பெரும்பாலும் நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் கோவா ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்திருந்ததாலோ என்னமோ... அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர். ஆர்வம் மிகுதியால் அப்படிச் செய்துவிட்டார்கள்," என்றார். ரசிகர்கள் கூட்டம் அத்துமீறலால் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வேறு இடத்திற்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Apr 2014 03:25 AM PDT
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். உலகிலேயே உயரமான எவரெஸ்ட் மலையில் மலையேறுவதற்கான சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக சரியான பாதை அமைக்கும் பணியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிட்டத்தட்ட 5800 அடி உயரத்தில் பாப்கார்ன் பீல்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை 6.45 மணியளவில், அதாவது இந்திய நேரப்படி 11மணியளவில் பனிச்சரிவும், பனிப் புயலும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பணியில் இருந்த வீரர்கள் ஆறு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்தபோது மொத்தம் 14 நேபாள வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆஸ்திரேலியர்கள் யாரும் இதில் இல்லையாம். அனைவருமே நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா வீரர்கள் ஆவர். தற்போது அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான கைடுகள், சுற்றுலாப் பயணிகள், மலையேற வந்துள்ளோர் என பெருமளவில் முகாமிட்டுள்ளனர். அடுத்த மாதத் தொடக்கத்தில் இவர்கள் சிகரம் ஏறத் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| யோகா டேப்லெட் 10 எச்டி + டேப்லெட் இந்த மாதம் வெளியீடு! Posted: 18 Apr 2014 03:11 AM PDT
லெனோவா நிறுவனம் பார்சிலோனாவில் 2014ம் ஆண்டில் யோகா டேப்லெட் 10 எச்டி + வெளியிட்டுள்ளது. சீன உற்பத்தியாளர், டேப்லெட்டை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இருக்கும் என்றும் மற்றும் $349 ஆரம்ப விலை, தோராயமாக மொழிபெயர்த்தால் ரூ.21,700 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். லெனோவா யோகா டேப்லெட் 10 எச்டி +, கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட யோகா டேப்லெட் 10ல் இருந்து கூடுதலாக அப்டேட் செய்யப்பட்டதாக உள்ளது. லெனோவா புதிய டேப்லெட்டில் 920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் டிஸ்ப்ளே அம்சங்களையும் மற்றும் ஒரு 178 டிகிரி பரந்த கோணத்தையும் கொண்டுள்ளது. குறிப்பாக, யோகா டேப்லெட் 10 எச்டி + இரண்டு வகைகளில் கிடைக்கிறது: Wi-Fi மற்றும் 3ஜி. 3ஜி டேப்லெட் மாடலில் 1.6GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் (MSM8228) மூலம் இயக்கப்படுகிறது. Wi-Fi, மாடலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் APQ8028 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் படி, டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது மற்றும் over-the-air (OTA) வழியாக ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மேம்படுத்தப்படுகிறது. யோகா டேப்லெட் 10 எச்டி + ரேம் 2GB உள்ளடக்கியுள்ளது மற்றும் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகள் வருகிறது, மற்றும் கூடுதலாக மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை ஆதரிக்கிறது. டேப்லெட்டில் ஒரு 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.6 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. யோகா டேப்லெட் 10 எச்டி + ஒரு 9000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது மற்றும் 615 கிராம் எடையுடையது. யோகா டேப்லெட் 10 எச்டி + டேப்லெட் அம்சங்கள்: 920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் டிஸ்ப்ளே, 1.6GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் (MSM8228), இரண்டு வகைகள்: Wi-Fi மற்றும் 3ஜி, ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன், ரேம் 2GB, மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.6 மெகாபிக்சல் முன் கேமரா, 9000mAh பேட்டரி, 615 கிராம் எடை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Apr 2014 02:58 AM PDT
கேரட் இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Apr 2014 02:00 AM PDT
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாலு மகேந்திராவுக்கு நன்றி! இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியீடு!! Posted: 18 Apr 2014 01:01 AM PDT
தலைமுறைகள் படம் மூலம் தேசிய விருது வென்று பெருமை தேடித் தந்த அமரர் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு நன்றி, என்று இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். சசிகுமார் தயாரிப்பில் உருவான பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு நர்கீஸ் தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தவருமான சசிகுமார் வெளிநாட்டில் இருப்பதால், தனது நன்றியை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சசிகுமார் வெளியிட்டுள்ள கடிதத்தில், "பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த தலைமுறைகள் திரைப்படம் 2013-ஆம் ஆண்டின் தேசிய ஒருமைப்பாட்டு படத்திற்கான நர்கீஸ் தட் விருதை பெற்றிருக்கிறது. தேசிய விருது வழங்கிய மத்திய அரசுக்கும், படத்தை தயாரிக்கக் காரணமாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழகத்தில் இன்று 350 அரங்குகளில் தெனாலிராமன் ரிலீஸ்! Posted: 18 Apr 2014 12:47 AM PDT
வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 350 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்து நகைச்சுவை நடிகரான வடிவேலு, அரசியல் காரணங்களுக்காக மூன்றாண்டுகள் கட்டாய ஓய்விலிருந்தார். பின்னர் மூன்று படங்களில் நாயகனாக நடிக்க முடிவு செய்தார். அதில் ஒரு படம்தான் தெனாலிராமன். இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு திரையரங்குகள் தர தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் பின்னர் அனைத்து பிரச்சினைகளும் விலக, முதல் முறையாக வடிவேலுவின் படம் தமிழகத்தில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 30-க்கும் அதிகமான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புறநகர்களில் 40-க்கு மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. மல்டிப்ளெக்களில் இந்தப் படத்துக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியுள்ளனர். வெளியாகும் பெரும்பாலான அரங்குகளில் இந்தப் படத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் படத்துக்கு ஒரு வாரம் வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர் இங்கிலாந்து, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் தெனாலிராமன் படம் வெளியாகிறது. வடிவேலு படம் ஒன்று இத்தனை பிரமாண்டமாக, இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





























