மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு
- 12 தங்க பிஸ்கட்களை விழுங்கிவிட்டு 10 நாட்களாக தவித்த டெல்லிவாசிக்கு ஆபரேஷன்
- வாரணாசியில் மோடி–கெஜ்ரிவால் அடுத்தவாரம் மனுதாக்கல்
- காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவரை போராளிகள் சுட்டுக் கொன்றனர்
- மத்தியில் மாற்று அரசு ஏற்பட்டால் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: முலாயம்சிங்
- ஜெகன்மோகனுக்கு ரூ.343 கோடிக்கு சொத்து: வேட்புமனுவில் தகவல்
- சீமாந்திராவில் தெலுங்கு தேசம்-பா.ஜனதா கூட்டணி முறிந்தது
- 5 லட்சம் பேரில் 513 பேருக்கே வாக்குரிமை: திருநங்கைகள் வேதனை
- ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை 2 நாளில் ரூ.1 கோடியை தாண்டியது
- மோடியின் பிரசாரத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்: காங். குற்றச்சாட்டு
- ஓட்டல் அறையில் தீ விபத்து: மம்தா பானர்ஜி உயிர் தப்பினார்
- இந்திய கடற்படை புதிய தலைமை தளபதியாக தொவான் பதவி ஏற்றார்
- டி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: சந்திரசேகர் ராவ்
- காங்கிரஸ் வீடியோ சி.டி. வெளியீடு: நடவடிக்கை எடுக்க உமாபாரதி வலியுறுத்தல்
- அமித் ஷா மீதான தடையை நீக்கியது தேர்தல் ஆணையம்
- சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்: மோடி தாக்கு
- கந்தமால் கலவர வழக்கில் 11 பேர் விடுதலை
- அருண் ஜெட்லியை ஆதரித்து விவேக் ஓபராய் பிரச்சாரம்
- மோடியை கடுமையாக சாடிய உமாபாரதி: வீடியோ சி.டி.யை வெளியிட்டது காங்கிரஸ்
- பிலிபிட் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதரவாளர்களுடன் கைது
| வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு Posted: 18 Apr 2014 12:08 AM PDT உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவர் தற்போது வாரணாசி தொகுதியில் தங்கி இருந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வாரணாசி தொகுதியில் உள்ள முஸ்லிம் தலைவர்களை முதலில் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் தெரு, தெருவாக |
| 12 தங்க பிஸ்கட்களை விழுங்கிவிட்டு 10 நாட்களாக தவித்த டெல்லிவாசிக்கு ஆபரேஷன் Posted: 17 Apr 2014 11:43 PM PDT டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் இம்மாதத்தின் முதல் வாரத்தில் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். 'பொன்னாசை' அவரை பேயாய் பிடித்து ஆட்டியதால், இந்திய சுங்கத்துறையினருக்கு தெரியாமல் சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதில் கைதேர்ந்த சிலர் கடைபிடிக்கும் 'பழைய ஃபார்முலா'வை அவரும் கடைபிடித்தார். 33 கிராம் எடை கொண்ட 12 தங்க பிஸ்கட்களை 'மில்க் பிஸ்கட்' பாணியில் விழுங்கி விட்டு, டெல்லிக்கு விமானம் ஏறிய அவர், |
| வாரணாசியில் மோடி–கெஜ்ரிவால் அடுத்தவாரம் மனுதாக்கல் Posted: 17 Apr 2014 10:59 PM PDT பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். அதன் பிறகு நாடு முழுவதும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். |
| காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவரை போராளிகள் சுட்டுக் கொன்றனர் Posted: 17 Apr 2014 10:39 PM PDT காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பஞ்சாயத்து தலைவராக பதவி வகிப்பவர் மொஹம்மத் அனின் பண்டித். மாநிலத்தின் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், நேற்றிரவு வீட்டு வாசலில் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆயுதமேந்தி வந்த ஒரு கும்பல், அவரை குருவியை சுடுவதைப் போல் சுட்டது. குண்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் |
| மத்தியில் மாற்று அரசு ஏற்பட்டால் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: முலாயம்சிங் Posted: 17 Apr 2014 10:35 PM PDT சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலம் மயின்புரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத மாற்று அரசு தான் அமையும். சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கும் வகையில் மாற்று அரசு உருவானால் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். அதே சமயம் அனைத்து கூட்டணி |
| ஜெகன்மோகனுக்கு ரூ.343 கோடிக்கு சொத்து: வேட்புமனுவில் தகவல் Posted: 17 Apr 2014 10:28 PM PDT ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி அந்த மனுவில், தன் மீது சி.பி.ஐ. 10 குற்றப்பத் திரிகைகளை தாக்கல் செய்து இருப்பதாகவும், அந்த 10 வழக்கு |
| சீமாந்திராவில் தெலுங்கு தேசம்-பா.ஜனதா கூட்டணி முறிந்தது Posted: 17 Apr 2014 10:19 PM PDT ஆந்திராவில் தெலுங்கு தேசம் – பாரதீய ஜனதா இடையே கூட்டணி உருவானது. தெலுங்கானாவில் இரு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்தது. ஆனால், சீமாந்திராவில் நீண்ட இழுபறிக்கு பின்னர் கூட்டணி இறுதியானது. இதன்படி பாரதீய ஜனதாவுக்கு 15 சட்டசபை தொகுதியும், 5 எம்.பி. தொகுதியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதியில் |
| 5 லட்சம் பேரில் 513 பேருக்கே வாக்குரிமை: திருநங்கைகள் வேதனை Posted: 17 Apr 2014 10:17 PM PDT 6.2 கோடி வாக்காளர்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்.17, 24, 30, மே 7 மற்றும் 12 தேதிகளில் 5 கட்டங்களாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக கருதி அவர்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை சமீபத்தில் தேர்தல் கமிஷன் வழங்கியது. இதனையடுத்து, இந்த தேர்தலில் தான், மூன்றாம் பாலினம் என்ற |
| ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை 2 நாளில் ரூ.1 கோடியை தாண்டியது Posted: 17 Apr 2014 09:03 PM PDT வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியையும், ராகுலையும் எதிர்த்து போட்டியிடும் தங்களுக்கு நிதியுதவி செய்யும்படி 2 நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த 2 நாளில் அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.80 லட்சமும், நேற்று ரூ.35 லட்சமும் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிதி இந்தியாவில் இருந்தும், சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஓமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற |
| மோடியின் பிரசாரத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்: காங். குற்றச்சாட்டு Posted: 17 Apr 2014 08:33 PM PDT பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜ.க. பத்தாயிரம் கோடி ரூபாயை செலவிட முடிவு செய்திருப்பதாகவும், அந்த தொகையில் பெரும்பகுதி மோடியின் 'குஜராத் முன்மாதிரி' என்ற போலி முன்னேற்றத்தை விளம்பரப்படுத்துவதற்காக செலவிடப்படுவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த மோடி, இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே..? என்று சவால் |
| ஓட்டல் அறையில் தீ விபத்து: மம்தா பானர்ஜி உயிர் தப்பினார் Posted: 17 Apr 2014 07:58 PM PDT மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மால்டா மாவட்டத்தில் பிரசாரத்துக்கு சென்ற அவர், மால்டாவில் உள்ள ஓர் ஓட்டலில் தங்கினார். முதல் மாடியில் உள்ள ஓர் அறையில் அவர் தங்கி இருந்தார். அவருடன் பிரசாரத்துக்கு சென்ற மாநில போக்குவரத்து மந்திரி |
| இந்திய கடற்படை புதிய தலைமை தளபதியாக தொவான் பதவி ஏற்றார் Posted: 17 Apr 2014 05:08 PM PDT இந்திய கடற்படை தலைமை தளபதியாக டி.கே.ஜோஷி பணி காலத்தில் கடந்த 10 மாதங்களில் 2 பெரிய விபத்துக்கள் உள்பட 14 விபத்துக்கள் நடந்தன. கடற்படையில் தொடர்ந்து நடந்து வந்த விபத்துக்களினால் அதிருப்தி அடைந்த டி.கே.ஜோஷி கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி தனது பதவியை |
| டி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: சந்திரசேகர் ராவ் Posted: 17 Apr 2014 02:51 PM PDT தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக்கு வந்தால் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆந்திராவின் ஹூஸ்னாபாத் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- |
| காங்கிரஸ் வீடியோ சி.டி. வெளியீடு: நடவடிக்கை எடுக்க உமாபாரதி வலியுறுத்தல் Posted: 17 Apr 2014 01:50 PM PDT மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைக்கும் வகையில் மோடியை விமர்சித்து பேசியிருக்கும் உமாபாரதியின் வீடியோவை காங்கிரஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் உமாபாரதி, ஜோடிக்கப்பட்ட கற்பனையான வீடியோவை இணையதளத்தில் |
| அமித் ஷா மீதான தடையை நீக்கியது தேர்தல் ஆணையம் Posted: 17 Apr 2014 12:48 PM PDT உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில் கடுமையான விமர்சனங்கள், கருத்துக்கள் அடங்கிய பேச்சுக்களுக்காக பா.ஜ.க. தலைவரும், மோடியின் நெருங்கிய நண்பருமான அமித் ஷாவுக்கு கடந்த 11 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. |
| சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்: மோடி தாக்கு Posted: 17 Apr 2014 12:10 PM PDT மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்திற்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கருத்து யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 'சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்' என மோடி விமர்சித்துள்ளார். |
| கந்தமால் கலவர வழக்கில் 11 பேர் விடுதலை Posted: 17 Apr 2014 08:41 AM PDT கந்தமால் கலவர வழக்கில் 11 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாதால் அவர்களை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தின்போது பல வீடுகள் எரிக்கப்பட்டன. கந்தகடா கிராமத்தில் கோபன் நாயக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ராய்கியா காவல் |
| அருண் ஜெட்லியை ஆதரித்து விவேக் ஓபராய் பிரச்சாரம் Posted: 17 Apr 2014 08:25 AM PDT அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் அருண் ஜெட்லியை ஆதரித்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இன்று பிரச்சாரம் செய்தார். பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சாலைப் பிரச்சாரத்தில் பங்கேற்ற விவேக் ஓபராய், வாக்காளர்கள் அருண் ஜெட்லியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். |
| மோடியை கடுமையாக சாடிய உமாபாரதி: வீடியோ சி.டி.யை வெளியிட்டது காங்கிரஸ் Posted: 17 Apr 2014 08:09 AM PDT மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி வியூகங்கள் மற்றும் செல்வாக்கை குறைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறது. மோடியை விமர்சிப்பதற்காக வாஜ்பாய் படத்தை காங்கிரஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே பாணியில் இப்போது மோடியைப் பற்றி உமாபாரதி கடுமையாக விமர்சனம் செய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வீடியோவில், மோடியை அழிவின் |
| பிலிபிட் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதரவாளர்களுடன் கைது Posted: 17 Apr 2014 07:22 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் வாக்காளர் பட்டியலிருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜிவ் அகர்வால், தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களுக்காக 400 வாக்காளர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்கியது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியது. அவர்கள் வாக்களிக்க |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |