Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்!

Posted: 17 Apr 2014 11:55 PM PDT

TNA

TNAஇலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். எனினும் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு நியமித்துள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின்போது தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தவருமாவார். இலங்கை அரசின் சிரேஷ்ட  அமைச்சரான டியூ குணசேகரவும் அதே கருத்தைப் பிரதிபலித்திருந்தார். இவ்விரு அமைச்சர்களின் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் ஊடகப் பேச்சாளரும் பேச்சுக் குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். சர்வதேச அனுசரணையுடன் அரசுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் ஒருபோதும் பங்கேற்கமாட்டோம். தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு என சூளுரைக்கும் அரசு அதை தென்னாபிரிக்க அரசிடம் திட்டவட்டமாகக் கூறியிருக்கலாமே? தென்னாபிரிக்கா அரசு தெரிவித்த கருத்துகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு இங்கு வந்து வீரவசனம் பேசுவது நாகரிகமற்ற செயல். தமிழர்களை ஏமாற்றுவது போன்று சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிப்பது நாட்டுக்கே பாதகம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மத்தள விமானத்தளம் மற்றும் மஹிந்த ராஜபக்ச துறைமுகம்: சரியாக இயங்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சி கருத்து!

Posted: 17 Apr 2014 11:47 PM PDT

Srilanka-Airport

Srilanka-Airportஅம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மத்தள விமானத்தளம் மற்றும் மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக நேற்று அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று விஜயம் செய்தது. இதன்போது அந்தக் குழுவின் மீது அரச ஆதரவாளர்களினால் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்தநிலையில் குழுவின் பரீட்சிப்பின்படி மத்தள விமானத்தளமும், துறைமுகமும் சீராக இயங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நட்டத்தில் இயங்குகின்றன என்றும் உறுதிப்படுத்தியுள்ளன. மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஏற்கனவே பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அங்கு நாள் ஒன்றுக்கு 1000 வாகனங்கள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு ஏனைய இடங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன. இதன்போது ஒரு வாகனத்துக்கு 15 டொலர்கள் மாத்திரமே வருமானமாக கிடைக்கின்றன. இந்தநிலையில் துறைமுகத்தை முழு அளவில் செப்பனிட வேண்டுமாயின் மேலும் 6500 கோடி ரூபா தேவைப்படுகிறது தற்போதைக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான இயந்திரங்கள் கூட இந்த துறைமுகத்தில் இல்லை. இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கே ராஜபக்ச துறைமுகத்தில் பணியாற்றும் உள்ளுர் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஐக்கிய தேசிய க்கட்சி தரப்புக்கள் தெரிவித்தன. அதேநேரம் அந்த துறைமுகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பேன்டா…நாங்க தான் பெஸ்ட் பிரண்ட்ஸ் தெரியுமா?

Posted: 17 Apr 2014 11:34 PM PDT

Kozhi

Kozhi

This posting includes an audio/video/photo media file: Download Now

நிச்சயம் உங்களை கவரும் காதல் கதை!

Posted: 17 Apr 2014 11:27 PM PDT

Man

Man

This posting includes an audio/video/photo media file: Download Now

போதை செய்யும் வேலையை பார்த்தீர்களா?

Posted: 17 Apr 2014 11:16 PM PDT

man-drinking-beer

man-drinking-beer

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரமிக்க வைக்கும் களிமண் வீடு!!

Posted: 17 Apr 2014 11:07 PM PDT

mud-house

mud-house

This posting includes an audio/video/photo media file: Download Now

மைக்கேல் ஜாக்சனை உங்களுக்கு பிடிக்குமா?

Posted: 17 Apr 2014 11:02 PM PDT

Michal Jackson

Michal Jackson

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லிக்கு எதிரான போட்டியில் யுவராஜ், கோஹ்லி விளாசல்!

Posted: 17 Apr 2014 08:42 PM PDT

Royal

Royalடெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், யுவராஜ், கோஹ்லி அதிரடியாக ரன் குவித்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூர் அணிகள் நேற்று மோதின. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீசியது. பெங்களூர் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி பேட்ஸ்மேன்கள் திணறினர். அகர்வால் 6, கேப்டன் தினேஷ் கார்த்திக் டக் அவுட், மனோஜ் திவாரி 1, விஜய் 18 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். டேர்டெவில்ஸ் அணி 7.1 ஓவரில் 35 ரன் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடி வீரர்கள் ஜீன் பால் டுமினி, ராஸ் டெய்லர் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 110 ரன் சேர்த்தது. டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. டுமினி 67 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), டெய்லர் 43 ரன் (39 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி மாட்டின்சன் (4) விக்கெட்டை விரைவில் இழந்தாலும், பட்டேல், கோஹ்லி ஜோடி பொறுப்புடன் ஆடியது. பட்டேல் 37 ரன் விளாசினார். உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் சொதப்பிய யுவராஜ், 3வது விக்கெட்டுக்கு களமிறங்கி விளாசினார். இவர் 5 சிக்சர் உட்பட 29 பந்தில் 52 ரன் குவிக்க பெங்களூர் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 146 ரன் இலக்கை எட்டியது. யுவராஜ் 52, கோஹ்லி 49 (38 பந்து) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கம்பீரின் 8வது முட்டை…

Posted: 17 Apr 2014 08:37 PM PDT

gambir

gambirஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் தொடக்க லீக் ஆட்டத்தில், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 41 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 122 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. தாரே 24, ராயுடு 48, கேப்டன் ரோகித் ஷர்மா 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா வீரர் ஜாக் காலிஸ் (72 ரன், 46 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் இருந்து சில சுவாரசியமான புள்ளிவிவரங்கள்: *கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர், ஐபிஎல் தொடரில் 8வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். அதே அணியை சேர்ந்த ஜாக் காலிஸ், மணிஷ் பாண்டேவும் 8 முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா 9 முறை டக் அவுட் ஆகி, இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். *மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இது. *மலிங்கா 4 விக்கெட் கைப்பற்றியது, கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை பவுலரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. *நான்கு ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய கொல்கத்தா சுழல் சுனில் நரைன், ஐபி எல் தொடரில் விரைவாக 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார் (32போட்டி). *மணிஷ் பாண்டே தனது 63வது போட்டியில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எங்களது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு தெளிவான முடிவு எடுக்கவில்லை! சண்டை நிறுத்தத்துக்கு தலிபான்கள் மறுப்பு!!

Posted: 17 Apr 2014 08:29 PM PDT

taliban

talibanபாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.இந்த இயக்கத்தினருடன் அரசு பிரதிநிதிகள் அமைதி பேச்சு நடத்தி வருகின்றனர். இதனால் சண்டை நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அந்த சண்டை நிறுத்தம் கடந்த வாரம் முடிந்தது. அதன்பின் 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தலிபான்கள் கூறினர். இந்நிலையில், தலிபான் இயக்கத்தின்கீழ் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களின் அரசியல் பிரிவினர் வடக்கு வசிரிஸ்தானில் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில், சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். எனினும், பாகிஸ்தானில் தலிபான்களுக்கு அங்கீகாரம், அடிப்படை உரிமைகள், தலிபான்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டு உள்ள கூட்டு ராணுவ படைகளை விலக்கி கொள்ளுதல், கைது செய்யப்பட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை விடுவிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளில் முடிவெடுக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு தத்தளித்து வருகிறது. 'எங்களது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க மாட்டோம்'என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கள் செய்தி: தென்கொரியாவில் இடம்பெற்ற படகு விபத்து!

Posted: 17 Apr 2014 08:21 PM PDT

ship_crash

ship_crashதென்கொரியாவில் இடம்பெற்ற படகு விபத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுதாப செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பத்தினால் தாம் ஆழ்ந்த துயரை அடைந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்தின் சோகத்தில் இருந்து தென் கொரிய மக்கள் விரைவில் ஆறுதல் அடைவார்கள் என்று நம்புவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் வெளியாகியுள்ள செய்திகளின் படி, இந்த படகு விபத்தில் சிக்கிய 475 பேரில் 287 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. காலநிலை ஒத்துழைக்காமையால் தேடுதல் பணிகளும் மந்த நிலையிலேயே இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய விமானப்படை: திருகோணமலை மக்கள் கவலை!

Posted: 17 Apr 2014 08:16 PM PDT

granite-trackway

granite-trackwayஇலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன. இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளாக இருந்தாலும் அந்த காணிப்பிரதேசம் உள்ளுர் மக்களால் கால்நடை வளர்ப்பு, கருங்கல் உடைப்பு மற்றும் பயிர்ச்செய்கை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. விமானப்படையின் இந்தக் காணி சுவீகரிப்பு காரணமாக அந்த பகுதி மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இழக்கப்படுவதோடு அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான சுதந்திரமும் இழக்கப்படுவதாக வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பு குற்றம் சாட்டுகின்றது. வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பானது யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட கடும் போக்குடைய சிங்கள அமைப்பாக பார்க்கப்படுகிறது. விமானப்படையினரால் குறித்த காணி சுவீகரிக்கப்படுவது தொட்பாக கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அனுர பண்டார, 3500 தொடக்கம் 4000 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணி விமானப் படையினரால் அடையாளமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பகுதியில் தற்போது விமானப்படைக்கு குழாய் நீர் விநியோக வேலைகளும் இடம்பெற்று வருவதால் நிரந்தர முகாமொன்று அமையலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார். வெள்ளைமணல் பகுதியை பொறுத்தவரை அநேகமாக முஸ்லிம்களே வாழந்து வரும் கிராமம் என்று கூறிய அனுர பண்டார, இந்த காணி சுவீகரிப்பு விடயத்தில் அவர்கள் பயம் காரணமாக வாய்திறக்க முடியாதவர்களாக காணப்படுவதாக கூறினார். போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் தேவைகளுக்கு காணி தேவைப்படுமானால், அதுகுறித்து மாகாண முதலமைச்சரின் ஆலோசனை பெறப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்திருந்தார். விமானப்படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குறித்த இந்த காணி விவகாரத்தில் முதலமைச்சரின் ஆலோசனை பெறப்பட்டதா? என்பது தொடர்பில் முதலமைச்சரின் பதிலை பெற பல தடவைகள் முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்கிரைனிற்கு அனுப்புமா? போர் விமானங்களை கனடா !

Posted: 17 Apr 2014 08:03 PM PDT

stephen-harper

stephen-harperகனடா போர் விமானங்களை உக்கிரைனில் நடைபெறும் நெருக்கடிக்கு பதிலளிககும் வகையில் அனுப்பி வைக்கவுள்ளதெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் கனடியப் பிரதமர் ஹாப்பர் கனடாவானது உக்கிரைனின் நெருக்கடிக்குப் பதில் கொடுக்கும் வகையில் CF-18 jet என அழைக்கப்படுகின்ற போர் விமானங்களில் ஆறினை அனுப்பி வைக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரிகிறது. குறிப்பிட்ட விமானங்களை நேட்டோ அமைப்பிற்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். மேலும் ஹாப்பர் தொடர்ந்து தெரிவிக்கையில் விமானங்கள் மட்டுமல்ல தரையிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளதெனவும் இவைகள் யாவும் பொலந்தினைத் தளமாகக் கொண்டு இயங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார். நேட்டோ அமைப்பானது கனடாவைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இராணுவத்தினரும் கிட்டத்தட்ட 20 எண்ணிக்கையிலான தொகையினர் கனடாவை NATO வில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனுப்புப்படவுள்ளனர் எனத் தெரிவித்திருக்கின்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைஞானி இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்!

Posted: 17 Apr 2014 09:14 AM PDT

sruthi-hasan

sruthi-hasanநீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் இந்திப் படத்துக்காக பாடினார் ஸ்ருதி ஹாஸன். பிரபல இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது படம் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை அக்ஷராவின் அக்காவும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இப்பாடலை பாடிக் கொடுக்கும்படி ஸ்ருதி ஹாசனிடம் தனுஷ்தான் கேட்டுக்கொண்டாராம். அதனால் தனுஷுக்காகவும், தனது தங்கை அக்ஷராவுக்காகவும் பிரசாத் ஸ்டுடியோவில் பாடிக் கொடுத்தாராம் ஸ்ருதி. ஸ்ருதியின் முதல் பாடல் அரங்கேறியதும் இளையராஜா இசையில்தான். 'தேவர்மகன்', 'ஹேராம்', 'என் மன வானில்' ஆகிய படங்களில் இளையராஜா இசையில் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் மீண்டும் பாடியுள்ளார் ஸ்ருதி.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட எல்ஜி L65 டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Posted: 17 Apr 2014 08:50 AM PDT

LG-L65-dual

LG-L65-dualஎல்ஜி நிறுவனம் அதன் எல் தொடரில் மேலும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனான எல்ஜி L65 டூயல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் RUB 7,490 (சுமார் ரூ. 12,500) விலையில் கிடைக்கிறது, விரைவில் மற்ற சந்தைகளில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி L65 டூயல், பெயர் குறிப்பிடுவதை போல, இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகளுடன் வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. L65 டூயல் ஸ்மார்ட்ஃபோனில் WVGA (480x800 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 217ppi ஒரு பிக்சல் அடர்த்தி கொண்ட 4.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 1GB மற்றும் 1.2GHz டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. L65 டூயல் 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இது 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. எல்ஜி L65 டூயல் ஸ்மார்ட்ஃபோனில் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, Wi-Fi நேரடி, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் / எஜிபிஎஸ், எட்ஜ் / ஜிபிஆர்எஸ், மைக்ரோ-USB மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். சாதனத்தில் 2100mAh நீக்கக்கூடிய பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. எல்ஜி L65 டூயல் ஸ்மார்ட்ஃபோனில் 0.1mm சேர்க்கப்பட்ட தடிமன் கொண்ட 127.2x66.8x9.6mm மெஷர்ஸ் உள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது, மற்றும் 126 கிராம் எடையுடையது. எல்ஜி L65 டூயல் ஸ்மார்ட்போன் அம்சங்கள்: WVGA (480x800 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1.2GHz டூயல் கோர் ப்ராசசர், ரேம் 1GB, இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு, Wi-Fi, Wi-Fi நேரடி, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் / எஜிபிஎஸ், எட்ஜ் / ஜிபிஆர்எஸ், மைக்ரோ-USB, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 2100mAh பேட்டரி, 126 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்!

Posted: 17 Apr 2014 07:59 AM PDT

glass

glass

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆக்ரோஷமான பாம்புடன் ஜாலியாக விளையாடும் மனிதர்!!

Posted: 17 Apr 2014 07:54 AM PDT

snake

snake

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலையில்லா திண்டாட்டம் இலங்கையில் அதிகரிப்பு! மத்திய வங்கி அறிக்கை!!

Posted: 17 Apr 2014 07:39 AM PDT

Srilanka-bank

Srilanka-bankஇலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 5 முதல் 9 ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் உயர்தரம் வரை மாத்திரம் படித்தவர்கள் மத்தியில் தொழில் வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. எனினும் சாதாரண தரம் வரை படித்தவர்கள் மத்தியில் இந்த பிரச்சினை குறைந்து காணப்படுகிறது. உயர்தரம் மற்றும் அதனையும் தாண்டி மேல் படிப்பு படித்தவர்கள் மத்தியில் காணப்படும் தொழில் வாய்ப்பின்றிய பிரச்சினையானது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். இதனால் நாட்டின் உயர் கல்வியை இன்றைய தொழில் வர்த்தக சந்தைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் மத்திய வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்கம்: பாலித ரங்கே பண்டார தகவல்!

Posted: 17 Apr 2014 07:30 AM PDT

Pali-Ranke-pandera

Pali-Ranke-panderaநாடு முழுவதும் இடம்பெறும் கொள்ளை, தரகு கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி வருகிறது. ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்கம் மேலதிகமாக கொள்ளை மற்றும் தரகு பணத்தை பெற்று வருகிறது. இவைதான் இன்றைய அரசாங்கத்தின் உண்மையாக அடையாளங்கள். எங்காவது கொள்ளை அல்லது மோசடி அல்லது தரகு பணம் பெறும் சம்பவங்கள் நடந்தால் அங்கு அரசாங்கத்தின் அரசியல்வாதி ஒருவர் கட்டாயமாக இருப்பார். மதுபான பாவனையில் இலங்கை உலக நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அரசாங்கத்தின் கொள்ளையடிப்பு மற்றும் தரகு பணம் பெறும் செயற்பாடுகளை கணக்கிட்டால் இலங்கை உலகில் முதலிடத்திற்கு வந்து விடும். இந்த விடயங்கள் தொடர்பிலான கின்னஸ் சாதனைகள், அரசாங்கத்தின் தலைவருக்கே கிடைக்கும் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்: அல் கய்தா தீவிரவாதிகள் மிரட்டல்!

Posted: 17 Apr 2014 07:20 AM PDT

terrorist

terroristஅமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஏமனில் உள்ள அல் கய்தா தீவிரவாத பிரிவு தலைவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்து தாக்குதல் நடத்தினர். அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அதன்பின், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். எனினும், அமெரிக்காவை தீவிரவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் உள்ள அல் கய்தா பிரிவு தலைவர்கள், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் கடந்த வாரம் அல் கய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சிறையை உடைத்துக் கொண்டு 19 அல் கய்தா தீவிரவாதிகள் தப்பினர். அதை ஆடி பாடி தீவிரவாதிகள் கொண்டாடும் காட்சிகள் அடங்கிய வீடியோவை ஆன்லைனில் அல் கய்தா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். 15 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏமனில் உள்ள அல் கய்தா தீவிரவாதிகள் பலம் பெற்று வருவதாகவும், அந்த பிரிவில் 400 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், வீடியோவை வைத்து அல் கய்தா பலம் பெற்றுள்ளது என்று கூற முடியாது. இதற்கு முன்பும் எத்தனையோ மிரட்டல்கள் அமெரிக்காவுக்கு எதிராக வந்து விட்டன என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™