Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சேலத்தில் திரையரங்கு காவலாளி உள்பட 2 பேர் கொலை
- ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரசாரம்
- அதிமுக ஆட்சியில் தொழில்துறை நசிந்துவிட்டது: கனிமொழி குற்றச்சாட்டு
- மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
- நக்ஸல்கள் தாக்குதலில் அதிரடிப்படை வீரர் பலி
- கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- அக்னி ஏவுகணை முதன்முறையாக இரவில் வெற்றிகரமாக சோதனை
- மன்மோகன் ராஜிநாமா மிரட்டல் விடுத்தார்: புதிய புத்தகத்தில் தகவல்
- கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்
- "அதானி உள்ளே.. அத்வானி வெளியே...' ராகுல் காந்தி விமர்சனம்
- அபூர்வ மனிதர்கள்
- தேர்தல் பற்றிய சில தெளிவுகள்...
- தேவையற்ற தலையீடு!
- பொது சிவில் சட்டத்தை மதிமுக ஏற்காது: வைகோ
- மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
- டிஜிபி ராமானுஜத்தை மாற்றக் கோரி திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி
- தமிழகம் முழுவதும் மின்வெட்டு மீண்டும் அதிகரிப்பு
- முஸ்லிம் பெண் பட்டதாரிக்கு டி.எஸ்.பி. பதவி
- வாக்குச் சாவடிகளுக்குள் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட தொப்பிகள், சால்வைகளுக்கு தடை
- ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு
- திமுக அங்கம் வகிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்கும்
- திருவட்டாறு அருகே விஷம் அருந்தி தம்பதி தற்கொலை
- காங்கிரஸால் மட்டுமே நிரந்தர ஆட்சியைத் தரமுடியும்
- திருவிதாங்கோடு, கோதநல்லூர் பகுதிகளில் எம்ஜிஆர் இளைஞரணியினர் பிரசாரம்
- கிள்ளியூர் பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
- திமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்டிபிஐ பிரசாரம்
- எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தயாராகி விட்டது
- களியக்காவிளையில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்
- சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- இளம்பெண்ணை வெட்டிக் கொல்ல முயற்சி: போலீஸ் விசாரணை
- தேர்தல் பறக்கும் படையினர் விழிப்புடன் பணியாற்ற உத்தரவு
- ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் பேசி வாக்கு சேகரிக்கக் கூடாது
- திமுக வேட்பாளரை ஆதரித்து முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
- தவசு கால உயிர் மீட்சி கூட்டம்: இன்று தொடக்கம்
- இளைஞர் பெருமன்றத்தினர் நாசரேத்தில் பிரசாரம்
- தூத்துக்குடியில் 15 முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை
- ஓய்வூதியர்களுக்கான நேர்காணலுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அழைப்பு
- பயிற்சி வகுப்பில் பங்கேற்காத தேர்தல் பணியாளர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்
- திராவிடக் கட்சிகள் மின் உற்பத்திக்கான திட்டங்களை தீட்டவில்லை
- அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?
- பள்ளக்குறிச்சி பள்ளி ஆண்டு விழா
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரசாரம்
- தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலி பறித்தவர் கைது
- மதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
- லட்சத் தீவில் 87% வாக்குப் பதிவு
- அதிமுகவை ஆதரித்து நடிகை, இயக்குநர் பிரசாரம்
- வேன் ஓட்டுநருக்கு கத்திக்குத்து
- தேர்தலில் வாக்களித்து விட்டு வரும் நோயாளிகளுக்கு 25% கட்டண சலுகை
- முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய இந்தியாவை நிர்மாணிக்க அதிமுகவை ஆதரியுங்கள்
- அமர் சிங், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி
- அதிமுகவுக்கு ஆதரவாக பேரவையினர் வாக்கு சேகரிப்பு
- திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- அமெரிக்கத் தேர்தல் முறை இந்தியாவுக்கு ஒத்துவராது
- 16 புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
- இடி தாக்கி ஒருவர் பலி
- மிஸோரமில் 60% வாக்குப்பதிவு
- மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
- வெடிபொருள்கள் விற்பனை: 2 பேர் கைது
- திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஸ்டாலின் பிரசாரம்
- "கவுத்தி மலை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்'
- ஊராட்சி மன்றச் செயலர் மீது தாக்குதல்: நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்
- ஒடிஸா: 22 சாவடிகளில் மறுவாக்குப் பதிவு
- மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- மக்களவைத் தேர்தல்: இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு
- கன்னியாகுமரி
- மோடி பிரதமராக பிரார்த்தனை செய்யும் மனைவி
- ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள்
- மோடியைச் சாட வாஜ்பாயைப் புகழும் காங்கிரஸ்
- உ.பி.: பிரசாரம் செய்ய அமித் ஷா, ஆஸம் கானுக்கு தடை
- ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் விருது
- திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ஆஸ்திரேலிய முன்னாள் தூதர்
- உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா
- என்சிஆரில் வாக்குப்பதிவு 10-15% அதிகரிப்பு
- சர்ச்சைக்குரிய பேச்சு: முலாயம் சிங்குக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
- வாக்களிக்க முடியாததால் தலைநகரில் திபெத்தியர்கள் ஏமாற்றம்!
- இலங்கையில் 2 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை
- தில்லி தமிழ்ச் சங்கத்தில் சித்திரைத் திருவிழா
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஜி. ரோஹிணி ஏப்ரல் 15-இல் பொறுப்பேற்பு
- தில்லியில் 30 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு
- கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி தேவை
- மெட்ரோ ரயில் முன் குதித்து பெண் தற்கொலை
- "மோடியின் செல்வாக்கால் காங்கிரஸுக்கு அச்சம்'
- தில்லி நர்சரி மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
- இசைக் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது
- முதல்வர் பதவியில் இருந்து விலகியது தவறு
- ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள்
- முலாயம் சிங்குக்கு "நிர்பயா' பெற்றோர் கண்டனம்
- அரை மணி நேரம் சேவை நிறுத்தம்
- மோடிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை
- மாயமான கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு
- தங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்தவர்கள் நாட்டைப் பற்றி பேசக்கூடாது: மம்தா
- பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்தேர்தல் பார்வையாளர்கள்
- "அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவை ஆதரிப்பதற்கு சமம்'
- உண்ணாவிரதம் இருந்த அகதி சிறையில் அடைப்பு
| சேலத்தில் திரையரங்கு காவலாளி உள்பட 2 பேர் கொலை Posted: 11 Apr 2014 01:21 PM PDT சேலத்தில் இயற்கைக்கு மாறான உறவு காரணமாக, திரையரங்கு காவலாளி உள்பட இருவரைக் கொலை செய்ததாக கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரசாரம் Posted: 11 Apr 2014 01:20 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளனர். |
| அதிமுக ஆட்சியில் தொழில்துறை நசிந்துவிட்டது: கனிமொழி குற்றச்சாட்டு Posted: 11 Apr 2014 01:19 PM PDT அதிமுக ஆட்சியில் தொழில்துறை நசிந்துவிட்டது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து மீஞ்சூரில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். |
| மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் Posted: 11 Apr 2014 01:17 PM PDT குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது தாக்கல் செய்த வேட்புமனுக்களில், திருமணமானதை மறைத்த பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது. |
| நக்ஸல்கள் தாக்குதலில் அதிரடிப்படை வீரர் பலி Posted: 11 Apr 2014 01:17 PM PDT மகாராஷ்டிரத்தில் நக்ஸல் இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலில் காவல்துறை அதிரடிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். |
| கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 11 Apr 2014 01:17 PM PDT நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| அக்னி ஏவுகணை முதன்முறையாக இரவில் வெற்றிகரமாக சோதனை Posted: 11 Apr 2014 01:16 PM PDT உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி - ஐ ஏவுகணை, முதன்முறையாக இரவில் ஏவி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநிலம் பாலாசூர் அருகே வீலர் தீவில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. |
| மன்மோகன் ராஜிநாமா மிரட்டல் விடுத்தார்: புதிய புத்தகத்தில் தகவல் Posted: 11 Apr 2014 01:13 PM PDT இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பணிந்தால், பிரதமர் பதவியை விட்டு விலகுவேன் என்று மன்மோகன் சிங் எச்சரித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. |
| கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார் Posted: 11 Apr 2014 01:11 PM PDT இசைத் துறையில் சாதனை படைத்துவரும் கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம், மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், நாகஸ்வர வித்வான் திருவிழா ஜெய்சங்கர், பரதக் கலைஞர் ஜமுனா கிருஷ்ணன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு 2013-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வழங்கி கௌரவித்தார். |
| "அதானி உள்ளே.. அத்வானி வெளியே...' ராகுல் காந்தி விமர்சனம் Posted: 11 Apr 2014 01:04 PM PDT ""பாஜகவிலிருந்து அத்வானி, ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்கள் வீசியெறியப்பட்டு விட்டார்கள்; அதானி குழுமம் உள்ளே வந்து விட்டது'' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். |
| Posted: 11 Apr 2014 12:47 PM PDT நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப் பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கி வந்தன. |
| தேர்தல் பற்றிய சில தெளிவுகள்... Posted: 11 Apr 2014 12:46 PM PDT உலகிலேயே இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே மிகப்பெரிய தேர்தல் என்று கூறும் வகையில் 81 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் இந்த மாதம் இந்தியாவின் 16ஆவது பொதுத் தேர்தலில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். |
| Posted: 11 Apr 2014 12:45 PM PDT நடைமுறைக்கு ஒவ்வாத சட்டதிட்டங்கள் நாணயமானவர்களையும் தவறிழைக்கத் தூண்டும் என்பார் மூதறிஞர் ராஜாஜி. |
| பொது சிவில் சட்டத்தை மதிமுக ஏற்காது: வைகோ Posted: 11 Apr 2014 12:39 PM PDT பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தை மதிமுக ஏற்றுக் கொள்ளாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். |
| மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை Posted: 11 Apr 2014 12:37 PM PDT தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். |
| டிஜிபி ராமானுஜத்தை மாற்றக் கோரி திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி Posted: 11 Apr 2014 12:36 PM PDT தமிழக டிஜிபியாக (நிர்வாகம்) ராமானுஜம் தொடர்வதற்கு அனுமதிக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| தமிழகம் முழுவதும் மின்வெட்டு மீண்டும் அதிகரிப்பு Posted: 11 Apr 2014 12:33 PM PDT தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக மின்வெட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. |
| முஸ்லிம் பெண் பட்டதாரிக்கு டி.எஸ்.பி. பதவி Posted: 11 Apr 2014 12:32 PM PDT துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்பட குரூப் 1 தொகுதிக்குள் வரும் 25 காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு உத்தரவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) வழங்கப்பட்டன. |
| வாக்குச் சாவடிகளுக்குள் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட தொப்பிகள், சால்வைகளுக்கு தடை Posted: 11 Apr 2014 12:30 PM PDT அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் கொடிகள் அச்சிடப்பட்ட தொப்பிகள் மற்றும் சால்வைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்குள் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு Posted: 11 Apr 2014 12:29 PM PDT ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம் பிறப்பித்தார். |
| திமுக அங்கம் வகிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்கும் Posted: 11 Apr 2014 12:29 PM PDT திமுக அங்கம் வகிக்கும் கட்சியே இம்முறையும் மத்தியில் ஆட்சியமைக்கும் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார். |
| திருவட்டாறு அருகே விஷம் அருந்தி தம்பதி தற்கொலை Posted: 11 Apr 2014 12:29 PM PDT திருவட்டாறு அருகே தம்பதி வெள்ளிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். கொட்டாரத்தைச் சேர்ந்தவர் தீபக் பிரவீன் (32). மேக்காமண்டபம் அருகே பிலாங்காலையைச் |
| காங்கிரஸால் மட்டுமே நிரந்தர ஆட்சியைத் தரமுடியும் Posted: 11 Apr 2014 12:29 PM PDT காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிரந்தர ஆட்சியைத் தர முடியும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| திருவிதாங்கோடு, கோதநல்லூர் பகுதிகளில் எம்ஜிஆர் இளைஞரணியினர் பிரசாரம் Posted: 11 Apr 2014 12:28 PM PDT திருவிதாங்கோடு, கோதநல்லூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியினர் வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். |
| கிள்ளியூர் பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:28 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை கிள்ளியூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| திமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்டிபிஐ பிரசாரம் Posted: 11 Apr 2014 12:28 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினத்தை ஆதரித்து, எஸ்டிபிஐ கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். |
| எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தயாராகி விட்டது Posted: 11 Apr 2014 12:28 PM PDT மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி விட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| களியக்காவிளையில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம் Posted: 11 Apr 2014 12:27 PM PDT களியக்காவிளையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் களியக்காவிளை |
| சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் Posted: 11 Apr 2014 12:27 PM PDT அய்யா வைகுண்டசாமியின் தலைமைப் பதியான சாமித்தோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:27 PM PDT நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| இளம்பெண்ணை வெட்டிக் கொல்ல முயற்சி: போலீஸ் விசாரணை Posted: 11 Apr 2014 12:27 PM PDT நாகர்கோவில் கோட்டாறில் இளம்பெண்ணை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாறு பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாராம் (33). இவர் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த சமீராபானுவை (30) 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன் கோலம் போட சமீரா பானு வெளியே வந்தாராம். அப்போது |
| தேர்தல் பறக்கும் படையினர் விழிப்புடன் பணியாற்ற உத்தரவு Posted: 11 Apr 2014 12:26 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர், விடியோ கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளர் செலவின நிலை கண்காணிப்புக் குழுவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டனர். |
| ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் பேசி வாக்கு சேகரிக்கக் கூடாது Posted: 11 Apr 2014 12:26 PM PDT ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் பேசி வாக்கு சேகரிக்கக் கூடாது என வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ண குப்தா கேட்டுக் கொண்டார். |
| திமுக வேட்பாளரை ஆதரித்து முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:26 PM PDT சாத்தான்குளம் மற்றும் ஆறுமுகனேரி பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.ஜெகனை ஆதரித்து முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். அபுபக்கர் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| தவசு கால உயிர் மீட்சி கூட்டம்: இன்று தொடக்கம் Posted: 11 Apr 2014 12:25 PM PDT கோவில்பட்டி சி.எஸ்.ஐ. தூய பவுலின் ஆலயத்தில், தவசுக் கால உயிர்மீட்சிக் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்குகிறது. |
| இளைஞர் பெருமன்றத்தினர் நாசரேத்தில் பிரசாரம் Posted: 11 Apr 2014 12:25 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதாரித்து நாசரேத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கு, தென்காசி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அப்பாத்துரை தலைமை |
| தூத்துக்குடியில் 15 முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை Posted: 11 Apr 2014 12:25 PM PDT தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் ஏப்.15 ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஓய்வூதியர்களுக்கான நேர்காணலுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அழைப்பு Posted: 11 Apr 2014 12:24 PM PDT ஓய்வூதியர்களுக்கான நேர்காணலுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கருவூல அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| பயிற்சி வகுப்பில் பங்கேற்காத தேர்தல் பணியாளர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் Posted: 11 Apr 2014 12:24 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத தேர்தல் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திராவிடக் கட்சிகள் மின் உற்பத்திக்கான திட்டங்களை தீட்டவில்லை Posted: 11 Apr 2014 12:24 PM PDT தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மின் உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார். |
| அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காதது ஏன்? Posted: 11 Apr 2014 12:23 PM PDT அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காதது ஏன் என விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கமளித்தார். |
| பள்ளக்குறிச்சி பள்ளி ஆண்டு விழா Posted: 11 Apr 2014 12:23 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி ஸ்ரீசாரதா திருஇருதய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:23 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, ஆறுமுகனேரி பகுதியில் வாக்கு சேகரித்தார். |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரசாரம் Posted: 11 Apr 2014 12:23 PM PDT சாத்தான்குளம் பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வழக்குரைஞர் மோகன்ராஜ் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். சாத்தான்குளம் ஒன்றியம் தாய்விளை, பிள்ளைவிளை, ஆனந்தபுரம், பழங்குளம், டிகேசிநகர், தோ |
| Posted: 11 Apr 2014 12:22 PM PDT திருச்செந்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலி பறித்தவர் கைது Posted: 11 Apr 2014 12:22 PM PDT கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே நடந்துசென்ற கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவரை போலீஸார் கைதுசெய்தனர். |
| மதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:22 PM PDT சாத்தான்குளத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயலை ஆதரித்து, மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் அபுபக்கர் வாக்கு சேகரித்தார். |
| லட்சத் தீவில் 87% வாக்குப் பதிவு Posted: 11 Apr 2014 12:22 PM PDT லட்சத் தீவு மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. |
| அதிமுகவை ஆதரித்து நடிகை, இயக்குநர் பிரசாரம் Posted: 11 Apr 2014 12:22 PM PDT சாத்தான்குளம் பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து திரைப்பட நடிகை வாசுகி, இயக்குநர் பாலு ஆனந்த் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். |
| வேன் ஓட்டுநருக்கு கத்திக்குத்து Posted: 11 Apr 2014 12:21 PM PDT கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே வேன் ஓட்டுநரை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தேர்தலில் வாக்களித்து விட்டு வரும் நோயாளிகளுக்கு 25% கட்டண சலுகை Posted: 11 Apr 2014 12:21 PM PDT தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தல், மற்றும் பல்வேறு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்துவிட்டு, தங்களிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, கட்டணத்தில் 25 சதவீத சலுகை அளிக்குமாறு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய இந்தியாவை நிர்மாணிக்க அதிமுகவை ஆதரியுங்கள் Posted: 11 Apr 2014 12:21 PM PDT ஆத்திரத்தில், பொல்லாங்கில், புறங்கூறுகின்ற பேர்வழிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு புதிய இந்தியாவை முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் நிர்மாணிக்க அதிமுகவை ஆதரியுங்கள் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். |
| அமர் சிங், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி Posted: 11 Apr 2014 12:21 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள அமர் சிங் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அதிமுகவுக்கு ஆதரவாக பேரவையினர் வாக்கு சேகரிப்பு Posted: 11 Apr 2014 12:20 PM PDT திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து, திருவண்ணாமலை நகரில் 8,25,26-வது வார்டுகளில் ஜெயலலிதா பேரவையினர் வாக்குகளைச் |
| திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 11 Apr 2014 12:20 PM PDT திருவண்ணாமலை, செங்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாமக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 250 பேர் அக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். |
| அமெரிக்கத் தேர்தல் முறை இந்தியாவுக்கு ஒத்துவராது Posted: 11 Apr 2014 12:20 PM PDT அமெரிக்காவின் தேர்தல் முறை இந்தியாவுக்கு ஒத்துவராது. அதுபோன்ற தேர்தல் வந்தால் லட்சியப்பூர்வமான சிறிய கட்சிகள் அழிந்து விடும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில |
| 16 புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை Posted: 11 Apr 2014 12:20 PM PDT திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவ-மாணவியர் 16 புதிய கருவிகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். |
| Posted: 11 Apr 2014 12:19 PM PDT போளூரை அடுத்த சந்தவாசல் அருகே இடிதாக்கி ஒருவர் பலியானார். வேலூர் அரசு மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். |
| Posted: 11 Apr 2014 12:19 PM PDT மிஸோரமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. |
| மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல் Posted: 11 Apr 2014 12:19 PM PDT சேத்துப்பட்டை அடுத்த ஊத்தூர் மணப்பாக்கம் அருகே வட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் வருவாய்த் துறையினர் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். |
| வெடிபொருள்கள் விற்பனை: 2 பேர் கைது Posted: 11 Apr 2014 12:19 PM PDT ஆரணியில் அனுமதியின்றி வெடிபொருள்களை விற்பனை செய்ததாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரணி கொசப்பாளையத்தில் உள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த சர்தார்கான் மகன் பாபு (32), அதே |
| திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஸ்டாலின் பிரசாரம் Posted: 11 Apr 2014 12:19 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| "கவுத்தி மலை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' Posted: 11 Apr 2014 12:18 PM PDT திருவண்ணாமலை கவுத்தி மலையில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதைத் தடுத்து நிறுத்த, தேர்தலுக்குப் பிறகு மத்தியில் வரக்கூடிய அரசிடம் வலியுறுத்தி திமுக தீர்வு காணும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| ஊராட்சி மன்றச் செயலர் மீது தாக்குதல்: நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2014 12:18 PM PDT தெள்ளாறு ஒன்றியத்துக்குள்பட்ட சீயமங்கலம் ஊராட்சி மன்றத்தின் செயலர் பூங்காவனத்தை (40) தாக்கியவரை கைது செய்யக் கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தில் |
| ஒடிஸா: 22 சாவடிகளில் மறுவாக்குப் பதிவு Posted: 11 Apr 2014 12:18 PM PDT ஒடிஸாவில் வியாழக்கிழமை முதல் கட்டமாக 10 மக்களவை, 70 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 22 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்று மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி மோனா சர்மா தெரிவித்தார். |
| மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 11 Apr 2014 12:18 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த கரையாம்பாடி செய்யாற்றில் இருந்து மணல் கடத்தியதாக, 4 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. |
| மக்களவைத் தேர்தல்: இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு Posted: 11 Apr 2014 12:17 PM PDT பதினாறாவது மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு கோவா, அஸ்ஸாம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. |
| Posted: 11 Apr 2014 12:17 PM PDT |
| மோடி பிரதமராக பிரார்த்தனை செய்யும் மனைவி Posted: 11 Apr 2014 12:16 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி ஜசோதாபென் விரதமிருந்து பிரார்த்தனை செய்துவருகிறார். |
| ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள் Posted: 11 Apr 2014 12:15 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 67 கவிதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படள்ளது. |
| மோடியைச் சாட வாஜ்பாயைப் புகழும் காங்கிரஸ் Posted: 11 Apr 2014 12:14 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியைச் சாடுவதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் கட்சி பாராட்டியுள்ளது. |
| உ.பி.: பிரசாரம் செய்ய அமித் ஷா, ஆஸம் கானுக்கு தடை Posted: 11 Apr 2014 12:10 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் ஆஸம் கான் ஆகிய இருவரும் உத்தரப்பிரதேசத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் மற்றும் சாலையோரப் பிரசாரக் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. |
| ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் விருது Posted: 11 Apr 2014 12:09 PM PDT டாடா குழுத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு, பிரிட்டன் அரசி எலிசபெத், அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கெüரவித்துள்ளார். |
| திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ஆஸ்திரேலிய முன்னாள் தூதர் Posted: 11 Apr 2014 12:08 PM PDT இந்தியாவில் திருடப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவன் சிலை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் இரு நாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகள் பாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார். |
| உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா Posted: 11 Apr 2014 12:08 PM PDT நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர மால் லோதா நியமிக்கப்பட்டுள்ளார். |
| என்சிஆரில் வாக்குப்பதிவு 10-15% அதிகரிப்பு Posted: 11 Apr 2014 12:07 PM PDT தேசியத் தலைநகர் வலயத்தில் (என்சிஆர்) உள்ள காஜியாபாத், கெளதம் புத்த நகர், குர்கான் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் |
| சர்ச்சைக்குரிய பேச்சு: முலாயம் சிங்குக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் Posted: 11 Apr 2014 12:07 PM PDT பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு, மகளிர் தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| வாக்களிக்க முடியாததால் தலைநகரில் திபெத்தியர்கள் ஏமாற்றம்! Posted: 11 Apr 2014 12:07 PM PDT தில்லியில் நீண்ட காலமாக வசிக்கும் ஏராளமான திபெத்தியர்கள் வாக்களிக்க விரும்பியபோதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர்களால் மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை செலுத்த முடியவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். |
| இலங்கையில் 2 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை Posted: 11 Apr 2014 12:06 PM PDT இலங்கை வவுனியா மாவட்டத்தில் ராணுவத்துடன் நிகழ்ந்த சண்டையில் விடுதலைப்புலிகள் எனக் கருதப்படும் இருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். |
| தில்லி தமிழ்ச் சங்கத்தில் சித்திரைத் திருவிழா Posted: 11 Apr 2014 12:06 PM PDT தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தில்லி தமிழ்ச் சங்கத்தில் "சித்திரைத் திருவிழா-2014' சனிக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற உள்ளது. |
| வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 11 Apr 2014 12:06 PM PDT மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. |
| தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஜி. ரோஹிணி ஏப்ரல் 15-இல் பொறுப்பேற்பு Posted: 11 Apr 2014 12:06 PM PDT தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஜி. ரோஹிணி (58) ஏப்ரல் 15-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். அவருக்கு தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் |
| தில்லியில் 30 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு Posted: 11 Apr 2014 12:05 PM PDT தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 30 ஆண்டு காலத்தில் இல்லாத அளவாக 65.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் தெரிவித்தார். |
| கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி தேவை Posted: 11 Apr 2014 12:05 PM PDT தற்போதைய சூழலில் கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி அவசியமாகிறது என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வலியுறுத்தினார். |
| மெட்ரோ ரயில் முன் குதித்து பெண் தற்கொலை Posted: 11 Apr 2014 12:05 PM PDT தில்லியில் நான்கு குழந்தைகளின் தாய், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியது: தில்லி சங்கம் விஹார் பகுதியி |
| "மோடியின் செல்வாக்கால் காங்கிரஸுக்கு அச்சம்' Posted: 11 Apr 2014 12:05 PM PDT குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகரித்துவரும் செல்வாக்கை கண்டு காங்கிரஸ் கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக |
| தில்லி நர்சரி மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை Posted: 11 Apr 2014 12:04 PM PDT தில்லியில் உள்ள நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| இசைக் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது Posted: 11 Apr 2014 12:04 PM PDT இசைத் துறையில் சாதனை படைத்துவரும் கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம், மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், நாகஸ்வர வித்வான் திருவிழா ஜெய்சங்கர், பரதக் கலைஞர் ஜமுனா கிருஷ்ணன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு 2013-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது |
| முதல்வர் பதவியில் இருந்து விலகியது தவறு Posted: 11 Apr 2014 12:04 PM PDT முதல்வர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு தவறானது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஒப்புக் கொண்டுள்ளார். |
| ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள் Posted: 11 Apr 2014 12:03 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 67 கவிதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படள்ளது. |
| முலாயம் சிங்குக்கு "நிர்பயா' பெற்றோர் கண்டனம் Posted: 11 Apr 2014 12:03 PM PDT "பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது தவறு' என்று கருத்து வெளியிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தில்லியில் பாலியல் சம்பவத்தால் உயிர |
| Posted: 11 Apr 2014 12:03 PM PDT தில்லி மெட்ரோ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் ஜஹாங்கீர்புரியில் இருந்து ஹுடா சிட்டி சென்டருக்கு செல்லும் ரயில் தடத்தில் அரை மணிநேரம் சேவை நிறுத்தப்பட்டது. |
| மோடிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2014 12:03 PM PDT திருமண விவகாரம் தொடர்பாக குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக தில்லி மகளிர் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி பிரதேச மகிளர் காங்கிரஸ் தலைவர் ஓனிகா மெஹரோத்ரா |
| குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 11 Apr 2014 12:02 PM PDT 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி "குற்றமற்றவர்' என சிறப்பு விசாரணைக் குழு அளித்த நற்சான்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை Posted: 11 Apr 2014 12:02 PM PDT காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு பகுதியில் பட்டா வழங்காததைக் கண்டித்து அப்பகுதியினர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
| மாயமான கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு Posted: 11 Apr 2014 12:02 PM PDT காஞ்சிபுரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவர் வாலாஜாபாத் அருகே கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். |
| தங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்தவர்கள் நாட்டைப் பற்றி பேசக்கூடாது: மம்தா Posted: 11 Apr 2014 12:01 PM PDT தங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளவர்கள் நாட்டைப் பற்றி பேசக் கூடாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மறைமுகமாக விமர்சித்தார். |
| பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்தேர்தல் பார்வையாளர்கள் Posted: 11 Apr 2014 12:01 PM PDT காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் 24 வாக்குச்சாவடிகளுக்கு நுண்தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| "அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவை ஆதரிப்பதற்கு சமம்' Posted: 11 Apr 2014 12:01 PM PDT மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பது என்பது பாஜகவை ஆதரிப்பதற்கு சமம் என்று சமூக சமத்துவப்படைக் கட்சியின் நிறுவனர் சிவகாமி தெரிவித்தார். |
| உண்ணாவிரதம் இருந்த அகதி சிறையில் அடைப்பு Posted: 11 Apr 2014 12:01 PM PDT செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இலங்கை அகதி ஒருவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |