ஈகரை தமிழ் களஞ்சியம் |
- MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
- கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!
- ஒற்றைத் தலைவலி
- ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
- பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119
- மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி
- மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்!
- MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி
- ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை!
- பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK)
- நலம் நலமறிய ஆவல்!
- கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?
- சூப்பர் விளம்பரம்; பாருங்களேன் - கிருஷ்ணாம்மா :)
- ஈகரையில் புதிய Text Editor அறிமுகம்!
- குஜராத் என்ன சொல்கிறது?
- பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்...
- அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவா..!!
- அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் (ஸ்ரீவாஞ்சியம் ) - photos
- பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -106)
- "முட்டாள்கள் தினம்" நல்வாழ்த்துக்கள்
- புகை – ஒரு பக்க கதை
- சின்ன சின்ன சமையல் குறிப்புகள்
- வாழ்க்கை தரும் பாடம்…
- கையில் கிடைத்தவை
- கவிதையில் யாப்பு
- மறதியை மறக்க 7 வழிகள்
- நாவிஷ் செந்தில்குமார் கவிதைகள்
- பேராசையால் பொய் பேசியதன் விளைவு!
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- வேலன்:-வீடியோக்களை 3D மற்றும் 2D வீடியோக்களாக மாறற
| MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!! Posted: 01 Apr 2014 03:37 PM PDT |
| கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Posted: 01 Apr 2014 12:30 PM PDT - கோடை காலத்தில், கோழிக்கறி (சிக்கன்) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது, உடல் வெப்பத்தைக் கூட்டச் செய்து, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடும். முடிந்த அளவு, எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். மொத்தத்தில், கோடை கால பாதிப்பில் சிக்காமல் தப்புவது, அவரவர் கையில் தான் உள்ளது. - டாக்டர் எம்.ஆனந்த்பிரதாப், நிலைய மருத்துவ அதிகாரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை. - நன்றி: ஹலோ தோழியே (தினமலர்) - |
| Posted: 01 Apr 2014 11:26 AM PDT 'ஒற்றைத் தலைவலி' அல்லது மைக்ரேன் எனப்படும் பிரச்சினை மூளையின் நரம்பு செல்கள் அல்லது ரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வருவது; முழுமையாக அறியப்படாதது! பொதுவாக உலகில் எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் தலைவலி வந்து போகிறது! ஆலோசனைக்காக மருத்துவரை அணுகும் முதல் மூன்று காரணங்களில் தலைவலியும் ஒன்று என்கிறது உலகச் சுகாதார நிறுவனம் (WHO). 18 வயது முதல் 65 வயது வரை 50% முதல் 75% பேருக்குத் தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலி (அ) மைக்ரேன், இறுக்கம் சார்ந்த தலைவலி (அ) 'டென்ஷன்' தலைவலி இவை இரண்டும் ... |
| ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Posted: 01 Apr 2014 11:22 AM PDT மூன்று மாதங்களாக, "கோமா' நிலையில் இருக்கும், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கருக்காக, 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய அறையை, அவரது மனைவி அமைத்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த, மைக்கேல் ஷூமாக்கர், 45, உலகளவில் நடத்தப்படும், "பார்முலா ஒன்' கார் பந்தயத்தில், ஏழு முறை, "சாம்பியன்' பட்டம் வென்றவர். கடந்த, டிசம்பரில், பிரான்சில் உள்ள, ஆல்ப்ஸ் மலையில், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில், ஷூமாக்கரின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ... |
| பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119 Posted: 01 Apr 2014 11:22 AM PDT வரும் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 119 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபீ நியூஸ், ஏ.சி. நீல்சன் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதிமுகவுக்கு 21 இடங்கள் பாஜக 209 தொகுதிகளிலும் காங்கிரஸ் 91 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மாநில கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் 28 இடங்களிலும் இடதுசாரிகள் 23 இடங்களிலும் அதிமுக 21 இடங்களிலும் பகுஜன் ... |
| மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Posted: 01 Apr 2014 11:08 AM PDT தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில், பட்டாடை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் வேண்டினால், "நினைத்த காரியம் கைகூடும்' என்ற நம்பிக்கையில், ஏராளமான ... |
| மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Posted: 01 Apr 2014 10:39 AM PDT சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்(53). போதை பழக்கத்துக்கு அடிமையாகி பணியில் இருக்கும்போதே பல தவறான செயல்களை செய்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். போதை பழக்கத்தால் பணியையும், குடும்பத்தையும் இழந்த மீனாட்சி சுந்தரம், தொடர்ந்து குடித்து சனிக்கிழமை இரவு எழும்பூர் காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு யாருமே முன்வராத ... |
| MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி Posted: 01 Apr 2014 10:29 AM PDT மாயமான மலேசிய விமானம் MH370 விவகாரத்தை, அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலான மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். மெர்டேக்கா மையம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், 50 சதவிகித மக்கள் அதிருப்தியையும், 43 சதவிகித மக்கள் திருப்தியையும் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச்13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 513 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. எனினும், அரசாங்கம் இவ்விவகாரத்தை கையாளும் விதம் குறித்த பதில், இனத்தைப் பொறுத்து வேறுபடுவதாக ... |
| ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை! Posted: 01 Apr 2014 10:24 AM PDT ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. அந்த முடிவு மீதான மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம்உத்தரவிட்டிருந்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலைசெய்யலாம் என்றும் கருத்து ... |
| பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) Posted: 01 Apr 2014 10:20 AM PDT பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) கல்கியின் பொன்னியின் செல்வன் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பொன்னியின் செல்வன் அனைத்து பாகமும் ஆடியோ வடிவில் கொடுக்கபட்டுள்ளது .. இந்த பதிவின் பெருமை இணையத்தில் தரவேற்றிய நண்பர் ரெங்கமணி அவர்களையே சேரும் ....அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/?a7d76p937zf5y |
| Posted: 01 Apr 2014 09:44 AM PDT உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் ... |
| கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா? Posted: 01 Apr 2014 09:38 AM PDT இது வெயில் காலம். செயற்கை மென்பானங்களுக்குப் பொற்காலம். நம்மில் மென்பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மென்பானங்களின் தித்திப்பான ருசியும், கண்ணைக் கவரும் வண்ணங்களும் நம்மை மயக்கிவிடுகின்றன. போதாக் குறைக்கு 'மென்பானங்களைக் குடித்தால் புத்துணர்வு கிடைக்கிறது' என்று பொய் சொல்லும் ஊடக விளம்பரங்களும் நமக்குப் போதை ஏற்றிவிடுகின்றன. இந்த மென்பானங்கள் நம் தாகத்தைத் தணிக்க உதவுகின்றன என்பது உண்மை என்றாலும், இவற்றால் நமக்கு எத்தனை கெடுதல்கள் என்பதை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறோம். மென்பானம் ... |
| சூப்பர் விளம்பரம்; பாருங்களேன் - கிருஷ்ணாம்மா :) Posted: 01 Apr 2014 09:27 AM PDT நான் ரொம்ப ரசித்தேன் இந்த விளம்பரத்தை.............நீங்களும் பாருங்களேன்; உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் |
| ஈகரையில் புதிய Text Editor அறிமுகம்! Posted: 01 Apr 2014 08:50 AM PDT நம் தளத்தில் புதிய Text Editor இணைக்கப்பட்டுள்ளது! ஒவ்வொரு பதிவின் கீழும் உள்ள Reply பட்டனை அழுத்தி மறுமொழி எழுதலாம். ![]() பயன்படுத்திப் பாருங்கள், உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்! |
| Posted: 01 Apr 2014 07:21 AM PDT குஜராத்தின் இளைஞர்கள் மற்றைய மாநிலத்தின் இளைஞர்களைப் போல நாளைய இந்தியா பிரகாசமாக இருக்கும் என்றே நினைக்கிறார்கள். நான் சந்தித்த முஸ்லிம் இளைஞர்களும் எதிர்காலத்தைப் பற்றி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பணத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, இந்தியாவின் மற்றைய இளைஞர்களிடம் அதிகம் இல்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். துவாரகை போன்ற சிறிய இடங்களில் கூட பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதுபற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. துவாரகை நமது வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் எல்லா அழுக்குகளும் ... |
| பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Posted: 01 Apr 2014 07:16 AM PDT டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க.... மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : நல்ல ... |
| அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவா..!! Posted: 01 Apr 2014 07:13 AM PDT - புடவைக்கு போடறதுக்காக கஞ்சி காய்ச்சி வைச்சேனே எங்க அது? - எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வைச்சிருக்கேன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேனே! - ——————————————– - "ஏம்பா! சாயம் போகாதுன்னு நீ சொல்லி கொடுத்த புடவை ஒரு தடவை தோய்ச்ச உடனே சாயம் போயிடுத்தேப்பா?" - "உன்னை யாரும்மா தோய்க்கச் சொன்னது?" - ———————————————- - "சார்! டைம் என்னனு கொஞ்சம் கடிகாரத்தைப் பார்த்து சொல்லுங்களேன்" - "கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன். கடிகாரம் ஓடலை" - —————————————– - மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு ... |
| அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் (ஸ்ரீவாஞ்சியம் ) - photos Posted: 01 Apr 2014 06:49 AM PDT கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர் இறைவி-மங்கள நாயகி தீர்த்தம்-குப்த கங்கை புனித நீராடல்: திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை ... |
| பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி? Posted: 01 Apr 2014 06:35 AM PDT நம்மில் பிளாக் அல்லது வெப்சைட் நடத்தும் அநேகம் பேர்களுக்கு என்னதான் மணிக்கணக்கில் Facebook உபயோகம் செய்தாலும், அதன் மூலம் தங்களது வலைத்தளங்களுக்கு Traffic கொண்டுவருவதற்கான சரியான வழி தெரிவதில்லை. நன்றாக பிளாக் எழுதும் என்னுடைய நண்பர் ஒருவர் Facebook மூலம் அவரது தளத்திற்கு Traffic கொண்டுவர எண்ணி, அவரது தளத்தில் அவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளையும் அவரது அனைத்து Facebook நண்பர்களின் Timeline களிலும் அவர்களது அனுமதியின்றி ஷேர் செய்து விட்டார். பல நண்பர்கள் இதனை ஒரு தொந்தரவாக ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -106) Posted: 01 Apr 2014 04:47 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| "முட்டாள்கள் தினம்" நல்வாழ்த்துக்கள் Posted: 01 Apr 2014 04:34 AM PDT இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய "முட்டாள்கள் தின" நல்வாழ்த்துக்கள் * மனிதப் பிறவியில் எவரும் அறிவாளிகள்,முட்டாள்கள் என்று எவரும் இல்லை. எல்லாமே சுரப்பிகளின் விளையாட்டுக்கள். அவர்களை முட்டாள்கள் என்று எந்த முட்டாள்கள் சொன்னது? முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்களா என்ன? முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பதில்லை என்றும் முட்டாள்கள் என்பவர்கள் அறிவாளிகள் இல்லையா? அறிவாளிகள் முட்டாள்களாக இருப்பதில்லையா? ஏதேனு மொரு கருத்தை உள்வாங்கிக் கொண்டு அறிவாளிகளைக் கூட முட்டாள்களாக்கி ... |
| Posted: 01 Apr 2014 03:37 AM PDT தீபாவளிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவீட்டார் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்துகொண்ட லதா, மகேந்திரன் தம்பதிகளுக்கு இதுதான் தலை தீபாவளி. - "அந்தச் செருப்ப வாங்காமலே வந்துட்டீங்களே, ஏன்?" கேட்டாள் லதா. - "அது தரமான ரகமா தெரியலை. வேற நல்லதா வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்" - "அதுபோகட்டும். அந்த அயர்ன் பாக்ஸையாவது வாங்கியிருக்கலாமே?" - "இதோ பார் லதா! உனக்கு இதெல்லாம் புரியாது. பார்க்குறதுக்குத்தான் அது நல்லாயிருக்கு. ... |
| சின்ன சின்ன சமையல் குறிப்புகள் Posted: 01 Apr 2014 03:35 AM PDT - முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது. - —————————————– - பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம். - —————————————— - பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு ... |
| Posted: 01 Apr 2014 02:37 AM PDT ![]() |
| Posted: 31 Mar 2014 09:13 PM PDT - -தொங்கித் தொடரும் உறவுகளும் - - மங்கி மறையும் மனிதர்களும்… -=========================== நன்றி: ராஜ்பாவ் |
| Posted: 31 Mar 2014 08:42 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 31 Mar 2014 08:40 PM PDT ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான ... |
| நாவிஷ் செந்தில்குமார் கவிதைகள் Posted: 31 Mar 2014 08:02 PM PDT அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு - சித்தாள் வேலை செய்கிற அவனை கொத்தனார், தச்சர் உள்ளிட்ட வீட்டு வேலை பார்ப்பவர்கள் 'டே.. ஊமையா…' என்றுதான் அழைப்பார்கள். - மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு ஓய்வெடுக்கும் போது வீடு கட்ட குவிக்கப்பட்டிருக்கும் மணலில் 'ராமு' என்ற தன் பெயரை எழுதி கொஞ்சநேரம் வெறித்துவிட்டு அழிப்பான் அவன். - —————————— –நாவிஷ் செந்தில்குமார் |
| பேராசையால் பொய் பேசியதன் விளைவு! Posted: 31 Mar 2014 07:59 PM PDT தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும். - விளக்கம்: மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள் முழுதும் வாட்டி வதைக்கும். - —————————————— முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன். குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான். வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன் மனைவி நச்சரித்து வந்தாள். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால், முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை. - ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர் பதட்டத்துடன் ஏறினார். வண்டியை ... |
| Posted: 31 Mar 2014 07:35 PM PDT 1.தாளம் போட்டு சிரித்தது தாத்தாவின் தொந்தியைத் தட்டி மடியில் உட்கார்ந்தக் குழந்தை. 2.மருத்துவர் கொடுத்த மருந்தால் அழிந்தது குழந்தை வயிற்றில் பூச்சிகள். 3.தங்கச் சங்கலி பறித்தவன் நம்பிக்கைத் தகர்ந்துப் போனது கிடைத்ததோ கவரிங் நகை. 4.வலது கைமணிக் கட்டில் கலர் கலராய் கோயிலில் வாங்கியக் கயிறுகள். |
| வேலன்:-வீடியோக்களை 3D மற்றும் 2D வீடியோக்களாக மாறற Posted: 31 Mar 2014 07:15 PM PDT நம்மிடம் உள்ள வீடியோக்களை நாம் 2டி மற்றும் 3 டி ஆக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.23 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பைல் ஒபபன் செய்து நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் வீடியோ தேர்வானதும் அதனை கிளிக் செய்து மேலே உள்ள எடிட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். சில வீடியோக்கள் Brightness Contrast Hue.Saturation போன்றவை குறைவாக இருக்கும். ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

