Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


முழுமையானதொரு பெண்மணி

Posted: 01 Apr 2014 01:31 PM PDT

அன்று தினமணியில் குமரி அபுபக்கரின் மகன் அலி உசென் 1990இல் சமஸ்க்ருதத்தில் மாநிலத்தில் முதலாக வந்தார் என்றும் அவர் சாவித்திரி அம்மாள் பள்ளியின் மாணவர் என்றும் படித்தோமே... அந்த சாவித்திரி அம்மாள் எங்கள் பாட்டி. பாட்டி என்றால் என் தந்தையின் அத்தை.

தீர்ப்பும் தெளிவும்!

Posted: 01 Apr 2014 01:30 PM PDT

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவைச் சீராய்வு செய்யுமாறு மத்திய அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்ற நீதிஇருக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

புதிய தலைமை செயலாளராக மோகன் வர்கீஸ் பொறுப்பேற்பு

Posted: 01 Apr 2014 01:28 PM PDT

புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத், திங்கள்கிழமை இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார்.

இலங்கை கடற்படைத் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர்கள் காயம்: படகுகள் சேதம்

Posted: 01 Apr 2014 01:26 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் பைப், கல் மற்றும் கம்புகளால் சரமாரியாகத் தாக்கியதில் மீனவர்கள் காயமடைந்தனர். மேலும், படகுகளைச் சேதப்படுத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

தமிழகத்தில் மட்டும்தான் அரசே குடிநீரை விற்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 01 Apr 2014 01:22 PM PDT

அனைத்து மக்களுக்கும் இலவசமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டிய அரசு, அதை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் கொடுமை நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

முதல்வர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

Posted: 01 Apr 2014 01:19 PM PDT

பொள்ளாச்சிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக செவ்வாய்க்கிழமை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சின்னம் ஒதுக்கக் கோரி கட்சிகள் மனு: முடிவெடுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 01 Apr 2014 01:18 PM PDT

மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னமும், மனித நேய மக்கள் கட்சிக்கு மெழுவர்த்தி சின்னமும் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய தேதியில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் உள்பட 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

Posted: 01 Apr 2014 01:18 PM PDT

ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் புதன்கிழமையுடன் (ஏப்ரல் 2) முடிவடைகிறது. ஏற்கெனவே, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்கள், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.

தேனியில் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல்

Posted: 01 Apr 2014 01:17 PM PDT

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபன், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச்

திமுக வேட்பாளருக்காக வீடு வீடாக வாக்கு சேகரித்த கம்பம் எம்.எல்.ஏ.

Posted: 01 Apr 2014 01:16 PM PDT

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருக்காக, கம்பம் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஆண்டிபட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 01 Apr 2014 01:16 PM PDT

ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

போடி பகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Posted: 01 Apr 2014 01:15 PM PDT

போடி பகுதியில் தேனி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

அம்மா குடிநீர் பாட்டில்களில் இலை வடிவ ஓவியங்கள்: தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பிரவீண்குமார் கடிதம்

Posted: 01 Apr 2014 01:15 PM PDT

அம்மா குடிநீர் பாட்டில்களில் இலைவடிவ ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது தொடர்பாக திமுக அளித்துள்ள புகாருக்கு உரிய விளக்கம் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கம்பத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 01 Apr 2014 01:15 PM PDT

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் எம்.பி., திங்கள்கிழமை மாலை கம்பம் நகரில்

சாலை வசதி செய்து தராததால் தேர்தலைப் புறக்கணிக்க போடி மலைக் கிராம மக்கள் முடிவு

Posted: 01 Apr 2014 01:14 PM PDT

சாலை வசதி செய்து தராததால், தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 01:14 PM PDT

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அ.அன்வர்ராஜா செவ்வாய்க்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலரும்,

ஜூன் 25-இல் வெளிநாட்டு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு

Posted: 01 Apr 2014 01:14 PM PDT

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை பொறியியல் படிப்புகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி தொடங்குகிறது.

அரசு அலுவலர்களுக்கு நாளை தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆட்சியர்

Posted: 01 Apr 2014 01:13 PM PDT

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கு  வியாழக்கிழமை(ஏப்.3) சிறப்பு பயிற்சி நடத்தப்பட இருப்பதாக

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Apr 2014 01:13 PM PDT

ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைக்கோல் படப்பு எரிந்து நாசம்

Posted: 01 Apr 2014 01:12 PM PDT

கமுதி பால் பண்ணை ஒன்றில், வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

அதிகமாக மது அருந்தியவர் சாவு

Posted: 01 Apr 2014 01:12 PM PDT

மனைவியுடன் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறிய கவலையில் அதிக மது அருந்தியவர் திங்கள்கிழமை, உயிரிழந்தார்.

மதுரை அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 01:11 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ரூ.7.26 கோடி சொத்து

Posted: 01 Apr 2014 01:10 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கு ரூ.7.26 கோடி சொத்து மதிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் ரூ. 850 கோடி சொத்துள்ள வேட்பாளர்

Posted: 01 Apr 2014 01:10 PM PDT

பிகார் மாநிலத்தில் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அனில் குமார் சர்மா, அதிக சொத்து மதிப்பு கொண்டவராக உள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸின் வெற்றி உறுதி

Posted: 01 Apr 2014 01:09 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும், இங்கு மோடி அலை ஏதும் இல்லை என்று முதல்வர் நபம் டுகி கூறினார்.

பள்ளி மாணவரை காரில் கடத்தி திருமங்கலம் அருகே விட்டுச் சென்ற முகமூடிக் கும்பல்

Posted: 01 Apr 2014 01:09 PM PDT

மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் ஆள் மாறாட்டம் ஏற்பட்டதால், திருமங்கலம்-கப்பலூர்

ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

Posted: 01 Apr 2014 01:09 PM PDT

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும்

தேர்தல் விதி மீறல்: முன்னாள் அமைச்சர் உள்பட 30 பேர் மீது வழக்கு

Posted: 01 Apr 2014 01:08 PM PDT

வத்தலகுண்டு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, முன்னாள் திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி உள்பட 30 பேர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 01:07 PM PDT

பகுஜன் சமாஜ் வேட்பாளர் மு. பழனிச்சாமி, செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

வெடிபொருள் கிடங்குகளை மூட உத்தரவு

Posted: 01 Apr 2014 01:07 PM PDT

தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நாள்களில் வெடிபொருள் கிடங்குகளை மூட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடசாலம் உத்தரவிட்டுள்ளார்.

பாஜகவுக்கு எம்.எல்.ஏ. தாவல்: காங்கிரஸ் விளக்கம்

Posted: 01 Apr 2014 01:07 PM PDT

தொழிலைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில்தான் பாஜகவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் பாடக் சேர்ந்திருப்பதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் மானக் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாடு தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடத்தில் அடக்கம்

Posted: 01 Apr 2014 01:07 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மூங்கில்பட்டியில் அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாட்டை மறுபடியும் தோண்டி எடுத்து, விளாம்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

பெண் கொலை வழக்கில் மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள்

Posted: 01 Apr 2014 01:06 PM PDT

பழனி அருகே பெண்ணைக் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேருக்கு,

தீப்பிடித்து தென்னை மரங்கள், திராட்சைக் கொடிகள் சேதம்

Posted: 01 Apr 2014 01:06 PM PDT

சின்னமனூர் அருகே மின்சாரக் கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், தென்னந்தோப்பில் இருந்த தென்னை மரங்களும்,

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 01:05 PM PDT

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். உதயகுமார் செவ்வாய்க்கிழமை தனது வே ட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதரில் வீசப்பட்ட பெண் சிசு: அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பு

Posted: 01 Apr 2014 01:05 PM PDT

புதரிலிருந்து மீட்கப்பட்ட பெண் சிசு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போட்டி?

Posted: 01 Apr 2014 01:04 PM PDT

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவன தலைவரான மறைந்த என்.டி.ராமாராவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.

பழனி-கொடைக்கானல் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 01 Apr 2014 01:04 PM PDT

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து சுமார் 5 மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 01 Apr 2014 01:03 PM PDT

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டி, திண்டுக்கல் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிட  சுயேச்சைகள் வேட்பு மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 01:03 PM PDT

விருதுநகர் மக்களவைத் தொகுதியின் மதிமுக வேட்பாளர் வைகோ,  அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன்

சோதனையான காலகட்டத்தில் தேர்தல்: நல்லகண்ணு

Posted: 01 Apr 2014 01:02 PM PDT

ராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 01 Apr 2014 01:01 PM PDT

உசிலம்பட்டி அருகே உள்ள பானா மூப்பன்பட்டி, எர்வார்பட்டி, அரசமரத்துப்பட்டி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில்

நன்றி செலுத்தும் நாள் விழா

Posted: 01 Apr 2014 01:01 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நன்றி செலுத்தும் நாள் தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

மோடி பற்றிய விமர்சனம்: உமா பாரதி விளக்கம்

Posted: 01 Apr 2014 01:01 PM PDT

"நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் அல்ல' என்று கூறியதால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஜக மூத்த தலைவரும் ஜான்ஸி தொகுதி வேட்பாளருமான உமா பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர சமையல்காரர் ஸ்ரீவிலி.யில் மாயம்

Posted: 01 Apr 2014 01:01 PM PDT

ஆந்திர மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், பாலாநகர், கே.பி.எச்.பி. காலனியைச் சேர்ந்தவர் பி.சிவநாராயண ரெட்டி.

ராஜபாளையத்தில் கி.வீரமணி பிரசாரம்

Posted: 01 Apr 2014 01:00 PM PDT

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு வாக்குக் கேட்டு ராஜபாளையத்தில்

தமிழகத்தில் பாஜக கூட்டணியே வெற்றிபெறும்: ஹெச். ராஜா

Posted: 01 Apr 2014 01:00 PM PDT

தமிழகத்தில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என அக்கட்சியின் சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அதிமுக, திமுக வெற்றிபெற்றால் மத்திய அரசில் இடம்பெற முடியாது: ப.சிதம்பரம்

Posted: 01 Apr 2014 12:59 PM PDT

அதிமுக, திமுக வெற்றிபெற்றால் மத்திய அரசில் இடம்பெற முடியாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மிஸோரம் அகதிகள் தபால் மூலம் வாக்குப் பதிவு

Posted: 01 Apr 2014 12:58 PM PDT

திரிபுரா மாநிலத்தின் 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மிúஸாரம் மாநிலத்தைச் சேர்ந்த புரு அகதிகள் செவ்வாய்க்கிழமை முதல் தபால் மூலம் வாக்குகள் அளிக்கத் துவங்கினர்.

வைகோவுக்கு ரூ.1.42 கோடி, மனைவிக்கு ரூ.1.38 கோடி சொத்துகள்

Posted: 01 Apr 2014 12:58 PM PDT

விருதுநகர் மக்களவைத் தொகுதி மதிமுகவின் வேட்பாளர் வைகோ வேட்பு மனு விண்ணப்பத்தில் உள்ள படிவம்-26ல்

இணையதளத்தில் வாக்குச் சாவடி குறித்த தகவல்

Posted: 01 Apr 2014 12:57 PM PDT

கேரள மாநிலத்தில், வாக்காளர்கள் தங்களுக்குரிய சரியான வாக்குச் சாவடியை இணையதளம் மூலமாக கண்டறியும் வழிமுறையை அந்த மாநில தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆர்.ஜே.டி. முன்னாள் தலைவர்கள் இருவரை எதிர்த்து லாலு மகள் போட்டி

Posted: 01 Apr 2014 12:56 PM PDT

ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்.ஜே.டி.) கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் இருவரை எதிர்த்து அந்தக் கட்சியின் தலைவர் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி, பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கோழி கழிவுகளால் சுகாதாரக் கேடு

Posted: 01 Apr 2014 12:54 PM PDT

கமுதி அருகே பேரையூரில் பிராய்லர் கோழி கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது என்று அந்த பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

தேர்தல் செலவில் கருப்புப் பணத்தின் பங்கு ரூ.10,000 கோடி! ஆய்வில் தகவல்

Posted: 01 Apr 2014 12:53 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.30,000 கோடி செலவிடப்படும் என்று பிரபல நிதி மேலாண்மைச் சேவைகள் நிறுவனமான சி.எம்.எஸ். மேற்கொண்ட ஓர் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு அளவு, கணக்கில் வராத கருப்புப் பணமாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

செலவினங்கள் புகார்களை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்

Posted: 01 Apr 2014 12:53 PM PDT

மக்களவைத் தேர்தலில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகாரினை தொடர்புடைய பார்வையாளர்களிடம்

வாகன சோதனை தீவிரம்

Posted: 01 Apr 2014 12:53 PM PDT

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் உத்தரவில்

காரைக்குடியில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 01 Apr 2014 12:52 PM PDT

காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் முன்னிலையில் திமுக, தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

அதிகமான விவசாயிகள் எம்.பி.க்களாக வேண்டும்

Posted: 01 Apr 2014 12:51 PM PDT

மிகுதியான விவசாயிகளை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று வாக்காளர்களை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல்

Posted: 01 Apr 2014 12:51 PM PDT

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

திருத்தங்கலில் பொருள்காட்சி திறப்பு

Posted: 01 Apr 2014 12:51 PM PDT

திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயில் 39வது பங்குனிப்

மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி சாதனை

Posted: 01 Apr 2014 12:50 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி எம்.நிவேதா மாநில அளவிலான ஆங்கில கவிதை எழுதும் போட்டியில்

தேள் கொட்டி 9 மாத குழந்தை சாவு

Posted: 01 Apr 2014 12:50 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை தேள் கொட்டியதில் 9 மாத குழந்தை உயிரிழந்தது.

ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டி

Posted: 01 Apr 2014 12:49 PM PDT

பாஜக சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து பிரபல உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் அஜய் அகர்வாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து நடிகை ஸ்மிருதி இரானியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கவனம் சிதறாமல் படித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்: முன்னாள் துணைவேந்தர்

Posted: 01 Apr 2014 12:49 PM PDT

பொறியியல் படிக்ககும் மாணவர்கள், நான்கு ஆண்டுகளும் கவனம் சிதறாமல் படித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

திருச்சுழி பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பேன்: காங்கிரஸ் வேட்பாளர்

Posted: 01 Apr 2014 12:49 PM PDT

திருச்சுழி பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ்

ராஜபாளையத்தில் மதுரை ஆதீனம் பிரசாரம்

Posted: 01 Apr 2014 12:48 PM PDT

தென்காசி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து மதுரை ஆதீனம் ராஜபாளையத்தில் பிரசாரம் செய்தார்.

சிவகாசியில் 3 இடங்களில் தீ விபத்து

Posted: 01 Apr 2014 12:48 PM PDT

சிவகாசியில் திங்கள்கிழமை மூன்று இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 01 Apr 2014 12:47 PM PDT

விருதுநகர் அருகே முத்துக்குமாரபுரம் டி.சி.ஏ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு

சிவகாசி

Posted: 01 Apr 2014 12:47 PM PDT

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்

Posted: 01 Apr 2014 12:46 PM PDT

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணி நிறுத்தம்

Posted: 01 Apr 2014 12:46 PM PDT

ஆசிரியர் மீதான தாக்குதலைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.

உழவர் வாழ்வுரிமை மாநாடு

Posted: 01 Apr 2014 12:45 PM PDT

உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் திங்கள்கிழமை உழவர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.

தீப்பற்றி இளம்பெண் சாவு

Posted: 01 Apr 2014 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சமையல் செய்யும்போது தீ காயமடைந்த இளம்பெண் உயிரிழந்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

Posted: 01 Apr 2014 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விடுதலைப்புலிகள், 15 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகளுக்கு தடை: இலங்கை அரசு

Posted: 01 Apr 2014 12:44 PM PDT

விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் 15 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 01 Apr 2014 12:43 PM PDT

சிவகங்கைத் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் மானாமதுரை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம்

பிரத்யங்கிரா தேவி கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

Posted: 01 Apr 2014 12:43 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் மழை வேண்டி வருணஜெபம்

காரைக்குடியில் இன்று காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்

Posted: 01 Apr 2014 12:42 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து புதன்கிழமை(ஏப்.2)

தாயமங்கலம் 

Posted: 01 Apr 2014 12:42 PM PDT

விலை உயர்வுக்கு பாஜக, காங்கிரஸை காரணம்: ஆம் ஆத்மி

Posted: 01 Apr 2014 12:41 PM PDT

தில்லியில் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான விலை உயர்வுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் தூர்வாரும் பணி தொடக்கம்

Posted: 01 Apr 2014 12:40 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதி விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த நெய்யாறு இடதுகரைக்

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகள் மே மாதத்தில் நிறைவடையும்?

Posted: 01 Apr 2014 12:40 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 78 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும்

குமரி அருகே அரசு பஸ்கள் உரசல்: பயணி கை முறிவு

Posted: 01 Apr 2014 12:39 PM PDT

கன்னியாகுமரி அருகே 2 அரசு பஸ்கள் உரசியதால் ஏற்பட்ட விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த தொழிலாளியின் கை முறிந்தது.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

Posted: 01 Apr 2014 12:39 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜான் தங்கம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

பறக்கை கோயில் பங்குனித் திருவிழா: ஏப். 4-ல் கொடியேற்றம்

Posted: 01 Apr 2014 12:38 PM PDT

பறக்கை அருள்மிகு மதுசூதன பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வன்னியூர் ஊராட்சி அலுவலகத்தில் தலைவரைக் கண்டித்து உறுப்பினர் தர்னா

Posted: 01 Apr 2014 12:38 PM PDT

வன்னியூர் ஊராட்சியில் மன்ற கூட்டப் புத்தகத்தில் திருத்தம் செய்யும் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, வார்டு உறுப்பினர்

வெடிபொருள்கள் பறிமுதல்: மோடியைக் கொல்ல சதியா?

Posted: 01 Apr 2014 12:38 PM PDT

பிகாரில் நவாடா மாவட்டத்தில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி புதன்கிழமை தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இருந்து திங்கள்கிழமை இரவு ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர் சங்கக் கூட்டம்

Posted: 01 Apr 2014 12:37 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில்

துடிக்கும் நிலையில் இதய அறுவை சிகிச்சை: தூத்துக்குடி மருத்துவர்கள் சாதனை

Posted: 01 Apr 2014 12:37 PM PDT

தூத்துக்குடியில் முதல் முறையாக துடிக்கும் நிலையில் இதய அறுவை சிகிச்சை செய்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

மோடி பிரதமரானால் விசா தடை தானாகவே விலகும்: அமெரிக்கா

Posted: 01 Apr 2014 12:36 PM PDT

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமரானால் அவருக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தானாகவே நீங்கிவிடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்கலை பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 01 Apr 2014 12:36 PM PDT

பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்மநாபபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்

தேர்தல் துளிகள் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி பூசல்

Posted: 01 Apr 2014 12:35 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது.

சல்மான் கான் மீதான வழக்கு: 28-ல் மறு விசாரணை

Posted: 01 Apr 2014 12:35 PM PDT

கட்டுப்பாடின்றி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் மீதான மறு விசாரணை, இம்மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் சாவு

Posted: 01 Apr 2014 12:35 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே செவ்வாய்க்கிழமை கிணறு தூர் வாரும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மரத்தில் மோதிய மினி பஸ்: 5 பேர் காயம்

Posted: 01 Apr 2014 12:34 PM PDT

கல்லிடைக்குறிச்சியில் மினி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

சர்வதேச இணைய மேலாண்மை குழுவில் 2 இந்தியர்கள்

Posted: 01 Apr 2014 12:34 PM PDT

இணைய மேலாண்மை, மற்றும் இணையக் கொள்கைகள் விவகாரங்களைக் கையாளும் சர்வதேசக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

Posted: 01 Apr 2014 12:34 PM PDT

குமரி மாவட்டம், களியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயமடைந்தார்.

முசாஃபர்நகர்: சர்ச்சைக்குள்ளான பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராம்தேவ் பிரசாரம்

Posted: 01 Apr 2014 12:34 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாஜக வேட்பாளர்கள் இருவரை ஆதரித்து மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

Posted: 01 Apr 2014 12:33 PM PDT

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி துறைமுகம் 28.64 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

Posted: 01 Apr 2014 12:33 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2013-14 ஆம் நிதியாண்டில் 28.64 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனைப் படைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™