Daily Thanthi |
- மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
- அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பு காரணங்களால் ஐ.பி.எல். காப்பீட்டு பிரிமியம் 2 மடங்கு உயரும்
- நரேந்திரமோடியின் ஹெலிகாப்டர்
- வாகனங்கள் விற்பனை: மார்ச் நிலவரம்
- துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி
- குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காக அபராத கட்டணம் விதிக்க கூடாது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
- பாதுகாப்பு வளையத்தை மீறிய ராகுல் காந்தி***
- விசைப்படகின் பின்பகுதி சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
- அ.தி.மு.க.வில் இணைந்தார்
- ராஜீவ் கொலை கைதிகள் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
| மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் Posted: 01 Apr 2014 01:14 PM PDT |
| அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பு காரணங்களால் ஐ.பி.எல். காப்பீட்டு பிரிமியம் 2 மடங்கு உயரும் Posted: 01 Apr 2014 01:13 PM PDT மும்பை அரசியல் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான காப்பீட்டு பிரிமிய கட்டணம் 2 மடங்கு உயர வாய்ப்புள்ளது. கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்பார்க்கும் பாதுகாப்பை வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது. எனவே கட்டுப்பாட்டு வாரியம், அணி உரிமதாரர்கள் மற்றும் ஊடக பங்குதாரர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு எதிராக போதிய அளவு காப்பீட்டு வசதி பெறுவதில் அவசரம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் பயங்கரவாத எதிர்ப்பு, தனிப்பட்ட விபத்து, போட்டி ரத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செலவு போன்றவற்றுக்காக இழப்பீடு பெற காப்பீடு செய்யப்படுவதாக தெரிகிறது. சென்ற ஆண்டு சீசனில் மறு காப்பீட்டு நிறுவனங்கள் பயங்கரவாத அசம்பாவிதங்களுக்கு எதிராக ரூ.900 கோடிக்கு பெறப்படும் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.7 கோடியை பிரிமிய கட்டணமாக வசூலித்தனர். இந்த ஆண்டில் அதற்கான கட்டணம் ரூ.14 கோடியாக, அதாவது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என தெரிகிறது. பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் பிரிமிய கட்டணம் 1.20 சதவீதமாக இருக்கும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக போட்டியை ரத்து செய்ய நேரிடும் பட்சத்தில் ரூ.900 கோடி இழப்பீடு பெற கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதே சமயம் தங்கு தடையின்றி போட்டி நடந்து முடியும் பட்சத்தில் ரூ.2,000 கோடி வருவாய் கிடைக்கும். மல்டி ஸ்கிரீன் மீடியாவின் பொழுதுபோக்கு டி.வி. சேனலான சோனி சிக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் பெற்றுள்ளது. இந்த சேனல் ரூ.1,200 கோடிக்கு காப்பீட்டு வசதி பெற திட்டமிட்டுள்ளது. இந்த சீசனில் எட்டு அணியினரிடையே மொத்தம் 80 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பிற்காக மட்டும் ஒவ்வொரு போட்டியும் தலா ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் வருவாய் இழப்பு மற்றும் தனிப்பட்ட விபத்துகளுக்காக காப்பீடு செய்யப்படுகின்றனர். தற்போது 85 விளையாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். காயங்கள் மற்றும் பிற காரணங்களுக்காக ரூ.2 கோடி அல்லது அதற்கு அதிகமாக ஏற்படும் வருவாய் இழப்பிற்காக இவர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட விபத்திற்காக இவர்களுக்கு போட்டியில் விளையாடுவதற்கான ஊதியத்தை விட 3.5 மடங்கு அதிகமாக காப்பீட்டு வசதி செய்யப்படுகிறது. யுவராஜ் சிங் தற்போதைய சீசனில் யுவராஜ் சிங்தான் தனிப்பட்ட விபத்திற்காக அதிகபட்ச காப்பீட்டு வசதி (ரூ.49 கோடி) பெறுகிறார். அடுத்து, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ரூ.31.50 கோடிக்கு காப்பீடு செய்யப்படுகிறார். image: category:Tagging: |
| Posted: 01 Apr 2014 01:10 PM PDT |
| வாகனங்கள் விற்பனை: மார்ச் நிலவரம் Posted: 01 Apr 2014 01:08 PM PDT மகிந்திரா – மகிந்திரா 51,636 கார்கள் விற்பனை மகிந்திரா – மகிந்திரா நிறுவனம், மார்ச் மாதத்தில் மொத்தம் 51,636 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 51,904–ஆக இருந்தது. உள்நாட்டு விற்பனை 1.49 சதவீதம் குறைந்து 49,225–லிருந்து 48,490–ஆக சரிவடைந்துள்ளது. சைலோ, வெர்ட்டோ உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 9.33 சதவீதம் குறைந்து 25,847–லிருந்து 23,433–ஆக சரிவடைந்துள்ளது. நான்கு சக்கர வர்த்தக வாகனங்கள் விற்பனை 2.53 சதவீதம் அதிகரித்து 17,212–லிருந்து 17,649–ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி 17.43 சதவீதம் உயர்ந்து 2,679–லிருந்து 3,146–ஆக அதிகரித்துள்ளது. *** டி.வி.எஸ். மோட்டார் விற்பனை 17 சதவீதம் வளர்ச்சி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, மார்ச் மாதத்தில் மொத்தம் 1,96,826 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1,67,583–ஆக இருந்தது. ஆக, விற்பனை 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை 63.24 சதவீதம் உயர்ந்து 29,621–லிருந்து 47,766–ஆக அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை 10.27 சதவீதம் அதிகரித்து 61,808–லிருந்து 68,158–ஆக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 57.68 சதவீதம் உயர்ந்து 5,076–லிருந்து 8,004–ஆக அதிகரித்துள்ளது. *** மாருதி சுசுகி 1,13,350 கார்கள் விற்பனை மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், மார்ச் மாதத்தில் மொத்தம் 1,13,350 கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1,19,937–ஆக இருந்தது. ஆக, விற்பனை 5.5 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை 5.2 சதவீதம் குறைந்து 1,07,890–லிருந்து 1,02,269–ஆக சரிவடைந்துள்ளது. மாருதி 800, ஆல்டோ உள்ளிட்ட சிறிய ரக கார்கள் விற்பனை 11 சதவீதம் குறைந்து 45,047–லிருந்து 40,085–ஆக குறைந்துள்ளது. ரிட்ஸ் உள்ளிட்ட 'காம்பாக்ட்' கார்கள் விற்பனை 9.3 சதவீதம் அதிகரித்து 25,868–லிருந்து 28,285–ஆக உயர்ந்துள்ளது. 'செடான்' டிசையர் கார்விற்பனை 14.1 சதவீதம் குறைந்து 20,078–லிருந்து 17,237–ஆக சரிவடைந்துள்ளது. நடுத்தர செடான் எஸ்.எக்ஸ்.4 கார் விற்பனை 54.5 சதவீதம் குறைந்து 903–லிருந்து 411–ஆக சரிவடைந்துள்ளது. ஆம்னி உள்ளிட்ட வேன்கள் விற்பனை 2.6 சதவீதம் உயர்ந்து 9,506–லிருந்து 9,752–ஆக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து 12,047–லிருந்து 11,081–ஆக குறைந்துள்ளது. image: category:Tagging: |
| Posted: 01 Apr 2014 01:06 PM PDT |
| குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காக அபராத கட்டணம் விதிக்க கூடாது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு Posted: 01 Apr 2014 01:04 PM PDT புதுடெல்லி அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களிடமிருந்து அபராத கட்டணம் வசூலிக்க கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். ஆய்வறிக்கை நடப்பு நிதி ஆண்டிற்கான முதல் இடைநிலை பணக்கொள்கை ஆய்வு அறிக்கையை நேற்று ரகுராம் ராஜன் வெளியிட்டார். அப்போது அவர் ''வாடிக்கையாளரின் கஷ்டம் அல்லது கவனக்குறைவை வங்கிகள் சாதகமாக பயன்படுத்தக்கூடாது. சாதாரண வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க தவறும் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராத கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக அந்த கணக்குகளுக்காக அவர்களுக்கு வழங்கும் சில சேவைகளை குறைத்து கொள்ளலாம். குறைந்தபட்ச இருப்பு தொகையை எட்டியதும் சேவைகள் மீண்டும் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார். செயல்படாத நிலையில் உள்ள கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வர்களிடமும் அபராத கட்டணம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மாறுபடும் வட்டிவிகிதத்தில் குறித்த கால கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்த கடனை தவணை காலத்திற்கு முன் கூட்டியே செலுத்தும்போது அபராதம் விதிக்ககூடாது என்று ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் நலன் கருதி உள்நாட்டு மற்றும் சர்வதேச நடைமுறை அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. முக்கிய கடன் வட்டி ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே வீடு, வாகன கடனிற்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்பில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வீடு, வாகன கடனிற்கான செலுத்தும் மாத தவணை தொகையில் மாற்றம் ஏற்படாது. image: category:Tagging: |
| பாதுகாப்பு வளையத்தை மீறிய ராகுல் காந்தி*** Posted: 01 Apr 2014 01:02 PM PDT |
| விசைப்படகின் பின்பகுதி சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம். Posted: 01 Apr 2014 12:57 PM PDT |
| Posted: 01 Apr 2014 12:53 PM PDT |
| Posted: 01 Apr 2014 12:47 PM PDT புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஆயுள் தண்டனையாக குறைப்பு இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுக்க மத்திய அரசு நீண்ட காலஅவகாசத்தை எடுத்துக்கொண்டது. இந்த தாமதத்தை காரணம்காட்டி, இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது.விசாரணை முடிந்து கடந்த பிப்ரவரி 18–ந் தேதி இந்த வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. சீராய்வு மனு தள்ளுபடி இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு பிப்ரவரி 20–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.மத்திய அரசின் சீராய்வு மனு மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களை கவனத்துடன் மறுஆய்வு செய்ததாகவும், அந்த மனுவில் பரிசீலனைக்கான முகாந்திரம் ஏதும் இல்லை எனவும் கூறி மத்திய அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோட்டின் இந்த தீர்ப்பினால் இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை கிடையாது என்பது உறுதியாகி இருக்கிறது. மற்றொரு மனு ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவின் மீதான விசாரணையும் கடந்த மாதம் 27–ந் தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மனுவின் மீது எழுத்துப்பூர்வமான வாதங்களை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





