Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது – அவுஸ்திரேலியா

Posted: 20 Mar 2014 11:36 PM PDT

Julie-Bishop

Julie-Bishopஅமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அவுஸ்திரேலியா இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு அளித்தல் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியா தனது நட்பு நாடுகளிடம் கோரி வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் 1100 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிஷொப் தெரிவித்துள்ளார்.இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர்  சுட்டிக் காட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில்

Posted: 20 Mar 2014 11:32 PM PDT

mh-debris-3-630x332

mh-debris-3-630x332239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந் தேதி திடீரென மாயமானது தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. அதையடுத்து 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது வியட்நாம் அருகே புகுவாக் தீவு அருகே கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக தகவல் வெளியாகின.

எனவே அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமாகி 2 வாரங்களாகயும் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் குடும்பத்தினர் தீராத கவலை மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே மாயமான விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 2 பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்க பட்டதாக தகவல் வெளியானது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீட்டர் தொலைவில் அவை கடலில் மதிப்பதை செயற்கை கோள் படம் காட்டிக் கொடுத்துள்ளது.

24 மீட்டர் (78 அடி) நீளம் கொண்ட அந்தப் பொருள் பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீரில் மேலே அடித்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மாயமான விமானத்தின் சிதைவுகளை கண்டறிய ஆஸ்திரேலியாவின் 5 கப்பல்கள் விரைந்துள்ளன.

மேலும், ஆஸ்திரேலியாவின் செயற்கை கோள்படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகமா? என்பதை உறுதி செய்ய ஆய்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இத்தகவலை ஆஸ்திரோலியா பிரதமர் (பொறுப்பு) வாரன் டிரஸ் தெரிவித்துள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறும் – ரோஹித்த அபேகுணவர்தன

Posted: 20 Mar 2014 11:28 PM PDT

images

imagesஅடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலகு வெற்றியீட்டுவார். ஜனாதிபதி மஹிந்தவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக்க உயிரைக் கொடுத்து முயற்சிப்போம். வேறும் ஒருவர் ஜனாதிபதி ஆகக் கூடிய சாத்தியம் தற்போதைக்கு கிடையாது. நாட்டின் ஜனாதிபதி ஆகக்கூடிய தகுதியுடைய எவரும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

Posted: 20 Mar 2014 11:25 PM PDT

sri-lanka-india-flag

sri-lanka-india-flagஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 25ம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் எனவும், இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது,ஆளும் காங்கிரஸ் கூட்டணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.உத்தேச தீர்மானத்தை ஆராய்ந்ததன் பின்னரே இறுதி;த் தீர்மானம் எடுக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்முறை தீர்மானத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.ராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கவனம் செலுத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்;ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய கடல் எல்லைக்குள் சீன யுத்தக் கப்பல்கள் நுழைய அனுமதி மறுப்பு

Posted: 20 Mar 2014 11:18 PM PDT

[½¨¾ü£¸£°ÖÜÄê]£¨1£©º£¾üÐÂÒ»´úºóÇÚ×°±¸±£ÕÏÑÝÁ·¼Íʵ

[½¨¾ü£¸£°ÖÜÄê]£¨1£©º£¾üÐÂÒ»´úºóÇÚ×°±¸±£ÕÏÑÝÁ·¼Íʵகாணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடுவதற்காக இந்திய கடல் எல்லைக்குள் தங்களுடைய நான்கு யுத்தக் கப்பல்களை அனுப்புவதற்கு மத்திய அரசாங்கத்திடம் சீனா அனுமதி கேட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சீன போர்க் கப்பல்களை அனுமதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

சீனா குறிப்பிடும் அந்தப் பகுதியில் இந்திய விமானப் படையும் கடற்படையும் ஏற்கெனவே முழுமையாக தேடுதல் பணி மேற்கொண்டுவிட்டது என்று சீனாவுக்கு அளித்துள்ள பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உண்மையிலே நீங்க உலகமகா திறமைசாலி தான் பாஸ்….

Posted: 19 Mar 2014 11:40 PM PDT

trick_shot_001.w245

trick_shot_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

1000 தடவை பார்த்தாலும் உங்களை சொக்க வைக்கும் இவர்களின் நட்பு….

Posted: 19 Mar 2014 11:38 PM PDT

dolphin_dog_001.w245

dolphin_dog_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி சார் வசனத்தை சொல்றதுக்கு எவ்வளவு போராட்டம்……

Posted: 19 Mar 2014 11:35 PM PDT

vaila_kolukata_001.w245

vaila_kolukata_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த குட்டி அம்மணியின் தோரணை உங்களுக்கு பிடிச்சிருக்கா?…..

Posted: 19 Mar 2014 11:32 PM PDT

bangle_robbery_001.w245

bangle_robbery_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த குட்டி அம்மணியின் தோரணை உங்களுக்கு பிடிச்சிருக்கா?…..

Posted: 19 Mar 2014 11:26 PM PDT

treadmill_walk_001.w245

treadmill_walk_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பொலிஸ் வாகனத்தால் கொடூரமாக நடுரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்…..

Posted: 19 Mar 2014 11:23 PM PDT

police_girl_road_001.w245

police_girl_road_001.w245தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகளுக்கு தாயாகிய கிளாடியா சில்வா பெரேய்ரா(38) என்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், வாகனத்தின் பின்கதவு திறந்து கொண்டதால் சுமார் 250 மீற்றர் தூரம் உடல் தேயும் அளவிற்கு தெருவில் இழுத்துச் செல்லப்பட்டதால் இறுதியில் உயிரிழந்துள்ளார். இதனால் காயமடைந்த பெண்ணை இவ்வாறு இறக்கமின்றி நடந்து கொண்ட பொலிசார் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கை மக்களுக்காகவா?

Posted: 19 Mar 2014 11:20 PM PDT

இலங்கையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேசிய மருந்துக் கொள்கை சட்டவடிவம் பெறத் தயார் நிலையில் இருப்பதாக நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 'மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவது' தான் தேசிய மருந்துக் கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வெறும் பேச்சு மட்டத்திலேயே இருந்துவந்த தேசிய மருந்துக் கொள்கையை பகிரங்கப்படுத்தாமல் அரசு அவசரமாக சட்டமாக்கப் பார்ப்பதாக மருத்துவ உரிமைச் செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தேசிய மருந்துக் கொள்கை […]

வழக்கின் மூலம் வடமாகாணத்தின் அதிகாரங்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்! சீ.வி.விக்னேஸ்வரன்

Posted: 19 Mar 2014 11:17 PM PDT

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூலம் வடமாகாண ஆளுநருக்கும், வடமாகாண பிரதம செயலாளருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மைத் தகவல்கள் வெளிவரும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சரினால் தனக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஸினால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த சட்டத்தின் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™