மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பவன் கல்யாண்தான் எனது முக்கிய எதிரி: சிரஞ்சீவி ஆவேசம்
- திருப்பதி மலையில் காட்டு தீ அணைக்கப்பட்டது
- ஆதரவு அலை வீசினால் 2 தொகுதிகளில் மோடி போட்டி ஏன்?: உமர் அப்துல்லா
- சிறுபான்மையினருக்கு அதிகம் வாய்ப்பளித்த மாயாவதி
- காங்கிரசின் 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- வதோதரா தொகுதியில் மோடியை எதிர்க்கும் காங்.வேட்பாளர்
- மும்பை டப்பாவாலாக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
- மக்களவை தேர்தல் காங். சார்பில் சிதம்பரத்திற்கு பதில் மகன் போட்டி
- பாடலிபுத்திரம் தொகுதியில் லல்லு பிரசாத் பிரசாரம்: ராம்கிரிபால் மீது தாக்கு
- மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் - ஒன் தேர்வு எழுதிய பெண்
- மும்பையில் ரெயில் தடம் புரண்டு ஒருவர் பலி: 6 பேர் படுகாயம்
- ராகுல் பொதுக்கூட்டத்திற்கு மம்தா அரசு அனுமதி மறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- காந்தி நகரில் போட்டியிட அத்வானி சம்மதம்: சர்ச்சை முடிவுக்கு வந்தது
- யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை
- ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கெட்டுகள் விற்பனை: இந்திய ரெயில்வே புதிய சாதனை
- மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு
- மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போர்: ராகுல்
- அருணாச்சல பிரதேசத்தில் 67 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
- தீவிரவாத அச்சுறுத்தல்: உள்துறை மந்திரியை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு
- பா.ஜனதாவின் அதிக நம்பிக்கை ஆபத்தில் முடியும்: சரத் பவார்
| பவன் கல்யாண்தான் எனது முக்கிய எதிரி: சிரஞ்சீவி ஆவேசம் Posted: 20 Mar 2014 10:22 PM PDT மத்திய மந்திரியும், காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவருமான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் 'ஜனசேனா' என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ''தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன்'' என்றார். பவன்கல்யாண் புதிய கட்சி குறித்து அண்ணன் சிரஞ்சீவி கூறியதாவது:– |
| திருப்பதி மலையில் காட்டு தீ அணைக்கப்பட்டது Posted: 20 Mar 2014 09:54 PM PDT திருப்பதி சேஷாலம் மலையில் வரலாறு காணாத வகையில் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. நேற்று 5–வது நாளாக 37 இடங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து கவர்னர் நரசிம்மன் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு |
| ஆதரவு அலை வீசினால் 2 தொகுதிகளில் மோடி போட்டி ஏன்?: உமர் அப்துல்லா Posted: 20 Mar 2014 09:00 PM PDT பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது இந்த முடிவினை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கேலியாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக |
| சிறுபான்மையினருக்கு அதிகம் வாய்ப்பளித்த மாயாவதி Posted: 20 Mar 2014 05:00 PM PDT மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்திர பிரதேசத்தில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டார். அப்பட்டியலில் 21 தொகுதிகளுக்கு பிராமின் இனத்தை சேர்ந்தவர்களும் 19 தொகுதிகளுக்கு முஸ்லீம் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த தேர்தலின் போது 20 பிராமின் வேட்பாளர்களும் 14 முஸ்லீம் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது சிறும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். |
| காங்கிரசின் 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 20 Mar 2014 04:23 PM PDT மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் 30 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பெயர்களும் போட்டியிடும் தொகுதிகளும் பின்வருமாறு: மத்திய சென்னை - சி.டி. மெய்யப்பன், திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், காஞ்சிபுரம் - விஸ்வநாதன், ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு, ஆரணி - விஷ்ணு பிரசாரத், கடலூர் - கே.எஸ். அழகிரி, நீலகிரி - காந்தி, திருச்சி - சாருபாலா, திண்டுக்கல் - சித்தன், பெரம்பலூர் - ராஜசேகரன், மயிலாடுதுறை - மணிசங்கர் ஐயர், தஞ்சை - கிருஷ்ணசாமி வாண்டையார், சிவகங்கை - கார்த்தி சிதம்பரம், நெல்லை - ராமசுப்பு, தூத்துக்குடி - சண்முகம்,கோவை - பிரபு, விருதுநகர் - மாணிக் தாகூர், தேனி - ஜே.எம். ஆரூண், ராமநாதபுரம் - திருநாவுக்கர |
| வதோதரா தொகுதியில் மோடியை எதிர்க்கும் காங்.வேட்பாளர் Posted: 20 Mar 2014 01:04 PM PDT வதோதரா பாராளுமன்ற தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நரேந்திர ரவாத் என்ற என்ஜினீயர் போட்டியிடுகிறார். குஜராத் முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும், குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடிக்கு எதிராக மல்லுக்கட்டப் போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. |
| மும்பை டப்பாவாலாக்களுக்கு இலவச மருத்துவ முகாம் Posted: 20 Mar 2014 12:00 PM PDT தங்களுடைய குறைந்த தொழில்நுட்பத்தினை வைத்துக்கொண்டு உயரிய திறனுடன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் அவர்களின் மதிய உணவை கொண்டு சேர்க்கும் டப்பாவாலாக்களின் சேவை உலகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களின் சேவைக்கான தங்களின் அஞ்சலியாக மும்பை டப்பாவாலா சங்கத்தின் குழு உறுப்பினரான விலாஸ் ஷிண்டே,நிர்வாக இயக்குனரும், சுகாதார சேவைகள் இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவருமான சுனில் லகே ஆகியோர் இணைந்து வரும் 22 ஆம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த முகாம் மேற்கு அந்தேரியின் ஜே.பி சாலையில் உள்ள சாகர் குட்டி சங்கரா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 1000 டப்பாவாலாக்களுக்கு வாய் புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.குட்கா, பான், புகையிலை போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் இந்தப் பரிசோதனை அவர்களுக்கு அவசியமாகின்றது. |
| மக்களவை தேர்தல் காங். சார்பில் சிதம்பரத்திற்கு பதில் மகன் போட்டி Posted: 20 Mar 2014 11:49 AM PDT வருகிற மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள 50 வேட்பாளர்கள் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுவரை இல்லாத அளவில் குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த முறை போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பதில் அவரது மகனும் வழக்கறிஞருமான கார்த்தி சிதம்பரம் போட்டியிடவுள்ளார். அதே போல் முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரும் இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் ராஜ்ய சபா எம்.பியான மணிசங்கர் அய்யர் தனது தொகுதியான மயிலாடுதுறையில் மீண்டும் போட்டியிடுகிறார். |
| பாடலிபுத்திரம் தொகுதியில் லல்லு பிரசாத் பிரசாரம்: ராம்கிரிபால் மீது தாக்கு Posted: 20 Mar 2014 09:21 AM PDT பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் நேற்றிரவு தனது மகள் மிசா பார்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிக்ராம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பிக்டா பகுதி அருகே வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் - ஒன் தேர்வு எழுதிய பெண் Posted: 20 Mar 2014 08:53 AM PDT கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண், குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| மும்பையில் ரெயில் தடம் புரண்டு ஒருவர் பலி: 6 பேர் படுகாயம் Posted: 20 Mar 2014 08:24 AM PDT மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்திலிருந்து இன்று மதியம் புறநகர் ரெயில் சென்றது. இந்த ரெயில், தானே மாவட்டம் திட்வாலா அருகே சென்றபோது, மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் தவால் லோதா (38) என்ற பயணி பலியானார். மேலும் |
| ராகுல் பொதுக்கூட்டத்திற்கு மம்தா அரசு அனுமதி மறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 20 Mar 2014 08:24 AM PDT மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்திற்கு, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதி வழங்க மறுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவரும், ரெயில்வே இணை |
| காந்தி நகரில் போட்டியிட அத்வானி சம்மதம்: சர்ச்சை முடிவுக்கு வந்தது Posted: 20 Mar 2014 07:04 AM PDT வரும் மக்களவைத் தேர்தலில் அத்வானி காந்திநகர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று பா.ஜ.க. அறிவித்தது. ஆனால், கடந்த 16 ஆண்டுகளாக காந்திநகர் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வரும் அத்வானி, இந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. |
| யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை Posted: 20 Mar 2014 06:09 AM PDT மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மரண தண்டனை பெற்ற யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசின் முடிவை அடிப்படையாகக் கொண்டு, யாகூப் |
| ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கெட்டுகள் விற்பனை: இந்திய ரெயில்வே புதிய சாதனை Posted: 20 Mar 2014 05:42 AM PDT இந்திய ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் நேற்று மட்டும் ஈ-டிக்கெட்டுகள் என்ற இணையதளப் பதிவில் 5.80 லட்சம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 5.72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. |
| மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு Posted: 20 Mar 2014 05:12 AM PDT "வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் போட்டியிடும். மதவாத கட்சியான பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்து நிற்கும்." என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். |
| மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போர்: ராகுல் Posted: 20 Mar 2014 04:39 AM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று இமாச்சல பிரதேசம் தண்டாவில் முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, வரும் மக்களவைத் தேர்தல், எண்ணங்களுக்கிடையிலான போர் என்று குறிப்பிட்டார். |
| அருணாச்சல பிரதேசத்தில் 67 டெட்டனேட்டர்கள் பறிமுதல் Posted: 20 Mar 2014 04:39 AM PDT அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில், கரங் குமே மாவட்டத்தின் கோலோரியாங் என்ற |
| தீவிரவாத அச்சுறுத்தல்: உள்துறை மந்திரியை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு Posted: 20 Mar 2014 04:10 AM PDT தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க. தனது தலைவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரக்கோரி மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேயை சந்திக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- |
| பா.ஜனதாவின் அதிக நம்பிக்கை ஆபத்தில் முடியும்: சரத் பவார் Posted: 20 Mar 2014 04:00 AM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் மந்திரியுமான சரத்பவார் டெல்லியில் இன்று அளித்த பேட்டி வருமாறு:- கடந்த 2004 தேர்தலி்ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற வாசகத்தை மையப்படுத்தி பிரச்சாரம் செய்த பா.ஜ.க., தோல்வியை சந்தித்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |