Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சங்கக்காரவின் இடத்தில் திரிமான்னே

Posted: 10 Mar 2014 02:36 AM PDT

srilanka_paksitan_asiancup_final_021

srilanka_paksitan_asiancup_final_021இலங்கை வீரர் சங்கக்கார ஓய்வுக்கு பின், அவரது இடத்தை திரிமான்னே நிரப்புவார் என இலங்கை அணியின் அணித்தலைவர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடந்த ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதில் திரிமான்னே சதம் விளாசி கைகொடுத்தார்.

இதுகுறித்து மாத்யூஸ் கூறுகையில், அனுபவ வீரர்களான சங்கக்கார, ஜெயவர்தனாவின் ஓய்வுக்கு பின் இவர்களது இடத்தை முறையே திரிமான்னே, சண்டிமால் நிரப்புவார்கள்.

திரிமான்னேவை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்கினாலும், ஓட்டங்கள் எடுக்கும் திறன் பெற்றவர்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் தில்ஷன் காயம் அடைந்தார்.

இதனால் ஆசிய கிண்ணப் போட்டியில் தொடக்க வீரர் வாய்ப்பு திரிமான்னேவுக்கு கிடைத்தது.

இதைப்பயன்படுத்திய இவர், இறுதிச்சுற்றில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மலிங்கா பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கிண்ணத்தை வென்றது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆசிய நாடுகளே வெற்றி பெறும்: மிஸ்பா உல் ஹக்

Posted: 10 Mar 2014 02:33 AM PDT

டுவென்டி-20 உலக கிண்ணத்தை ஆசிய நாடுகளே கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை நடக்கிறது. இறுதிபோட்டியில் வெற்றி பெற்று, ஆசிய நாடுகள் கிண்ணத்தை கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிக்கான அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து முடிந்தது, இங்குள்ள மைதானங்களில் விளையாடிய […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

Posted: 10 Mar 2014 02:32 AM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றது. சாமுவேல்ஸ் 46 பந்தில் 69 ஓட்டங்களை கடந்தார் கிறிஸ் கெய்ல் 35 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் முதலிடத்தில் விராட் கோஹ்லி

Posted: 10 Mar 2014 02:30 AM PDT

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் விராட் கோஹ்லி 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு தலைமை ஏற்ற கோஹ்லி, வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி மூளையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தலாம்: ஆய்வில் தகவல்

Posted: 10 Mar 2014 02:29 AM PDT

ஆன்டி-சைகாட்டிக் மருத்துவம் மூளை புற்று கட்டிகளை குணப்படுத்தும் முடிவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டீகோ நகரில் அமைந்த கலிபோர்னிய பல்கலை கழகத்தின் நியூரோசர்ஜரி பிரிவின் துணை தலைவரும், ஆராய்ச்சி குழுவின் தலைவருமான மருத்துவர். கிளார்க் சி. சென் என்பவர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், மூளையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த தேவையான மருத்துவ முறைகள் குறித்து சில முடிவுகள் பெறப்பட்டு உள்ளன. இதனால் மூளையில் ஏற்படும் புற்றுகட்டிகளை ஆரம்ப […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவில் அறிமுகமாகும் Nokia X ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 10 Mar 2014 02:26 AM PDT

நோக்கிய நிறுவனமானது புதிதாக வெளியிட்டுள்ள Nokia X ஸ்மார்ட் கைப்பேசியானது இம்மாதம் 15ம் திகதி இந்தியாவில் அறிமுகமாகின்றது. இக்கைப்பேசியானது முதன் முதலில் கடந்த மாதம் பார்சிலேனியாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 4 அங்குல தொடுதிரை, 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual-Core Snapdragon S4 8225 Processor, 512MB RAM, என்பனவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 8,500 இந்திய ரூபாய்கள் ஆகும்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

Windows Phone 8.1 இயங்குதளத்தின் புதிய அம்சங்களை விளக்கும் வீடியோ வெளியீடு

Posted: 10 Mar 2014 02:25 AM PDT

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது. பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இதெல்லாம் இவங்களுக்கு ரொம்ப சாதாரணமாம்……

Posted: 10 Mar 2014 02:21 AM PDT

bear_rope_001.w245

bear_rope_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலையைத் தூக்கியெறிந்த இளம் செய்தியாளர்…. நேரடி ஒளிபரப்பில் கூறியதால் பரபரப்பு!….

Posted: 10 Mar 2014 02:20 AM PDT

news_reader_001.w245

news_reader_001.w245உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சியின் லிஸ் வால் என்ற பெண் செய்தி வாசிப்பாளர் தன் பணியிலிருந்து நீங்க முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் கூறுகையில், இத்தொலைக்காட்சி ரஷ்யாவின் க்ரைமியா மீதான இராணுவ ஆதிக்கத்தை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது என்றும் ரஷ்ய அரசின் நிதி உதவியால் இயங்கப்படும் இவ்விடத்தில் இனிமேலும் தன்னால் தொடர்ந்து பணிபுரிய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இச்செய்தி வாசிக்கப்பட்டு முடிந்ததும் இந்தத் தொலைக்காட்சியிலிருந்து, தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என செய்தி வாசிப்பின் போது கூறியுள்ளார்.

இவர் அறிவித்த ராஜினாமா வீடியோ காட்சி நேரடி ஒளிபரப்பால் உலகேங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கலகலப்பான நிகழ்ச்சியில் கதிகலங்க வைத்த சம்பவம்……

Posted: 10 Mar 2014 02:17 AM PDT

student_001.w245

student_001.w245கலிபோர்னியாவிலுள்ள உயர் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சியின்போது மேடை உடைந்து விழுந்ததில் 40 வரையான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் சுமார் 250 வரையான மாணவர்கள் குறித் மேடையில் இருந்தமையாலேயே குறித்த மேடை உடைந்து விழுந்ததாக கருதப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணின் முத்தத்திற்கு இம்புட்டு போட்டியா?…..

Posted: 10 Mar 2014 02:14 AM PDT

kiss_lion_001.w245

kiss_lion_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா இணக்கம்! போர்க்குற்றம் தொடர்பில் இணக்கமில்லை

Posted: 10 Mar 2014 02:10 AM PDT

இலங்கை உட்பட்ட பிராந்திய மற்றும் இருதரப்பு விடயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணக்கங்களை வெளியிட்டுள்ளன. எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடைகள் தொடர்வதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் உயர்தர அலுவலரான இராஜாங்க உதவி செயலாளர் நிஷா பிஷ்வால்ää இந்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். ஏற்கனவே இந்தியாவின் அமெரிக்காவுக்கான அலுவலர் தேவ்யானி கொராகேட் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இந்திய – அமெரிக்க இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த […]

நெஞ்சைப் பதற வைக்கும் கொடூர விபத்து…..

Posted: 10 Mar 2014 02:08 AM PDT

bike_accident_003.w245

bike_accident_003.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இல்லத்தரசிகளும், கேக் பிரியர்களும் இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க!….

Posted: 10 Mar 2014 02:03 AM PDT

cake_make_001.w245

cake_make_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனீவாவில் சாதிக்கலாம் என்றவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்: டக்ளஸ்

Posted: 10 Mar 2014 02:00 AM PDT

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் தற்போது ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்' என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேரூந்து நிலையத்தின் உப அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற நிலையப் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு காண்பதற்கு […]

அழுத்தங்களுக்கு அடிபணியத் தயாரில்லை – ஜனாதிபதி

Posted: 10 Mar 2014 01:55 AM PDT

president-mahinda-rajapaksa-newsfirst

president-mahinda-rajapaksa-newsfirstமக்கள் ஆணைக்கு ஒழிய காலணித்துவத்திற்கு தலைவணக்க தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

கம்பஹாவில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து:-

"நாட்டில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் சரிபிழையை நாட்டுமக்களே தீர்மானிக்க வேண்டும். அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தீர்மானிக்க முடியாது என நாங்கள் மிகத் தெளிவாகக்கூறுகின்றோம். இதனை தெரியப்படுத்தும் தீர்மானம் உங்கள் வசமே காணப்படுகின்றது. நாட்டு மக்கள் முன்னிலையில் தலைவணங்க நாங்கள் தயாராக உளளோம் ஆனால் வெளிநாடுகளின் ஏகாபத்தியவாதிகளுக்கோ, அவர்களின் சாகக்களுக்கோ நாங்கள் ஒருபோதும் அடிபணிய தயாராவில்லை என மிகத்தெளிவாகக்கூறுகின்றோம்."

மீரிகம பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான திலக் அசோக்க மற்றும் சனத் ரணசிங்க ஆகியோரும் மினுவாங்கொடை பிரதேச சபையில் எதிர்க்கட்சி தலைவர் சந்திக்க நாராயணபிட்டிய , பிரதேச சபையின் உறுப்பினர் டெஸ்மன் குணவர்த்தன ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனிவா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்: ஐ.தே.க அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted: 10 Mar 2014 01:54 AM PDT

ஜெனிவா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை, அரசியல் மயப்படுத்தி குறுகிய லாபங்களை ஈட்ட அரசாங்ம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை கருத்திற்கொள்ளாது, அரசியல் நிகழ்ச்சி நிலின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது. பாலர் பாடசாலை சிறுவர்களின் மனோ நிலையில் அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை கையாள்கின்றது. இனவாத கொள்கைகளைத் தூண்டும் வகையில் […]

காணாமற்போனதாக கூறப்படும் மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு

Posted: 10 Mar 2014 01:51 AM PDT

காணாமல் போனதாக கூறப்படும் மலேஷியப் பயணிகள் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என மலேஷிய சிவில் விமானப் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரி அசாரூதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். குறித்த விமானத்தினது என சந்தேகிக்கப்படும் பாகங்கள் வியட்நாம் கடற்பரப்பில் கண்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்தமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விமானத்தை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அசாரூதீன் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.. காணாமல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மாகாணசபைத் தேர்தல்களில் உளவுப் பணிகளில் அமெரிக்கா

Posted: 10 Mar 2014 01:49 AM PDT

sri-lanka-and-USA

sri-lanka-and-USAஇலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கத் தூதரகம் 1500 அதி நவீன தொலைபேசிகள் மற்றும் 1500 கமராக்களை தருவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு என்ற போர்வையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பில் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

அதி நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்தி உளவுப் பணிகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாதனங்களை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசிய விமானத்தில் பயணம் செய்த கனடிய தமிழரின் கதி என்ன? திடுக்கிடும் தகவல்

Posted: 10 Mar 2014 01:44 AM PDT

safe_image

safe_imageநேற்று முன் தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி வியட்நாம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் பலியானதாக அஞ்சப்படும் வேளையில் இந்த விமானத்தில் இரண்டு கனடா நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளார்கள் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தியாவை பிறப்பிடமாக கொண்டு கனடாவில் வாழ்ந்து வந்த முகேஷ் முகர்ஜியும் அவருடைய மனைவி Xiaomo Bai அவர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்தார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. முகேஷ் முகர்ஜி, தமிழகத்தை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் அவர்களுடைய பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் குமாரமங்கலம பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து கடந்த 1970ஆம் ஆண்டு எம்.பியாக பணிபுரிந்தவர்.

 முகேஷ் முகர்ஜி கனடாவில் உள்ள சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தொழில் விஷயமாக தனது மனைவியுடன் சீனாவிற்கு செல்லும் வழியில்தான் விமானம் மாயமாகி உள்ளது. முகேஷ் முகர்ஜியின் Xiaomo Bai என்ற சீனப்பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முகேஷ் முகர்ஜியின் தாத்தா மோகன் குமாரமங்கலம் அவர்களும் டெல்லியில் நடந்த விமான விபத்து ஒன்றில் பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™