Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தண்டவாளத்தில் விரிசல்: பெண்ணின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

Posted: 10 Mar 2014 11:40 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பீவி (வயது 55). இவரது வீடு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ளது. நேற்று காலை 6.30 மணி அளவில் தனது வீட்டு பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில்

இந்தியக் கல்வி முறையில் பெறும் பட்டங்களுக்கு உலக அங்கீகாரம்

Posted: 10 Mar 2014 10:52 PM PDT

கடந்த 1989-ம் ஆண்டில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வாஷிங்டன் உடன்படிக்கையை அடுத்து இந்தியாவின் பொறியியல் பட்டங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றன. இந்த உடன்படிக்கையில் உறுப்பினர்களாக இருக்கும் 16 நாடுகள் இந்திய மாணவர்களை அங்கீகரித்துக் கொண்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டில் வாஷிங்டன் உடன்படிக்கையில் ஒரு தற்காலிக உறுப்பினர் என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றது. வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும்

கிரண்குமார் ரெட்டி புதிய கட்சி தொடக்கம்

Posted: 10 Mar 2014 10:50 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். இதைத்தொடர்ந்து அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரது ஆதரவாளர்கள் சார்பில் நாளை ராஜமுந்திரியில் நடைபெறும்

கெஜ்ரிவால் பாதுகாப்புக்கு 22 பூனை படை வீரர்கள்: டெல்லி போலீஸ் தகவல்

Posted: 10 Mar 2014 10:39 PM PDT

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதமர், முதல்–மந்திரிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருக்கு அவரவர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் வி.ஐ.பி. கலாசாரத்துக்கு எதிரான கொள்கை உடையவர் என்பதால் முதல்–

டெல்லியில் நாளை மம்தா பானர்ஜி–ஹசாரே கூட்டாக பிரசாரம்

Posted: 10 Mar 2014 10:23 PM PDT

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்காளத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. டெல்லி, பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த கட்சியின் தேசிய அளவிலான பிரசார கூட்டம் நாளை (12–ந் தேதி) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மம்தா

கேரள கவர்னராக ஷீலாதீட்சித் இன்று பதவி ஏற்கிறார்

Posted: 10 Mar 2014 09:36 PM PDT

கேரள மாநில கவர்னராக இருந்த நிகில்குமார் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் குதித்து உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் அவுரங்காபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து கேரள மாநில புதிய கவர்னராக டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலாதீட்சித்

தேசிய கொடியை தவறாக பயன்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது வழக்கு

Posted: 10 Mar 2014 09:01 PM PDT

மும்பை ஐகோர்ட்டில் ராம் சாமுத்ரே என்பவர் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டங்களின் போது, அந்த கட்சியின் இணைய தளத்தில் தேசியகொடி தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதை கட்சி கொடியாக பயன்படுத்தும் முயற்சி நடந்துள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக தேசியகொடியை தவறாக பயன்படுத்தி சட்டத்தை மீறி உள்ளனர். அந்த கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மாயங்க்

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை

Posted: 10 Mar 2014 08:44 PM PDT

கடந்த டிசம்பர் மாதம் ஒரு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு, சட்ட கமிஷனுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதை, குற்ற நிரூபணத்தின் அடிப்படையில் செய்வதா? குற்றச்சாட்டு பதிவு அடிப்படையில் செய்வதா? குற்றப்பத்திரிகை தாக்கல் அடிப்படையில் செய்வதா? என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன்படி, சட்ட கமிஷன் தனது சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராகுலிடம் இருந்து மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: மிசா பார்தி

Posted: 10 Mar 2014 04:14 PM PDT

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் மிசா பாரதி, "பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார். மேலும் "மக்களிடம் எப்படி உரையாடுவது? என்று மோடி, ராகுலிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மோடி மேடைகளில் பேசுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. அவர் நல்ல பேச்சாளர். நன்றாக பேசுகிறார்.

நிதிஷ்குமாரின் ஆணவம் எவரெஸ்ட் சிகரத்தை விட பெரியது: மோடி

Posted: 10 Mar 2014 02:32 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மூன்றாவது நாள் தேர்தல் பிரச்சாரமாக பீகாரின் பூர்னியாவிலுள்ள ரங்கபூமி மைதானத்தில் உரையாற்றினார். அப்போது சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியதாவது:- பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தள கூட்டணி எப்படி உடைந்தது? நிதிஷ்குமாரின்

கணவர் பா.ஜனதாவில் இணைந்ததால் பீகார் மந்திரி ராஜினாமா

Posted: 10 Mar 2014 01:29 PM PDT

பீகார் மாநில தொழில்துறை மற்றும் பேரழிவு மேலாண்மைத்துறை மந்திரியாக ரேணு குஷ்வாகா பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் விஜய் சிங் நேற்று முன்தினம் பூர்ணியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நரேந்திர மோடி முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து ரேணு குஷ்வாகா தார்மீக அடிப்படையில் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் நிதிஷ்குமாருக்கு அனுப்பினார். பீகார் முதல்வர், ராஜினாமா குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ரேணு குஷ்வாகாவிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

பாராளுமன்ற தேர்தலுக்கு அணிகள் தயார்: தமிழகத்தில் 5 முனை போட்டி உறுதி

Posted: 10 Mar 2014 01:04 PM PDT

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந்தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. இந்தமுறை தனித்து சந்திக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

மதச்சார்பற்ற சக்திகள் மோடிக்கு எதிராக ஒன்று சேர வேண்டும்: லாலு

Posted: 10 Mar 2014 12:28 PM PDT

"பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து விடுவார். எனவே அவர் ஆட்சிக்கு வருவதை தடுக்க மதச்சார்பற்ற சக்திகள் மோடிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். "என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், "முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மோடியை நீக்க

காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்: வெங்கையா

Posted: 10 Mar 2014 09:26 AM PDT

திருப்பதியில் இன்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். 'பிரதமர் பதவிக்கு மோடி' என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடினார்.

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை

Posted: 10 Mar 2014 08:57 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் நகரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபாகர் என்ற மீனு சிங் (வயது 35) என்ற அந்த வழக்கறிஞர் இன்று பிற்பகல் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிந்தபோது, மோட்டார்

சோனியா-ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம்: அகிலேஷ்

Posted: 10 Mar 2014 06:24 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

ஒடிசா: மதுபானக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

Posted: 10 Mar 2014 06:10 AM PDT

ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்ட நிர்வாகம், வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அடுத்த இரண்டு மூன்று நாள்களில் பொருத்த உத்திரவிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் தோல்வி: பா.ஜனதா

Posted: 10 Mar 2014 05:30 AM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனால், அருணச்சல பிரதேசத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்களின் பொறுப்பற்ற தன்மையால் இத்திட்டம் தோல்விடையந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தேச்சி நேச்சா கூறியதாவது:- தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று சிறப்பு முகாமை அறிவித்தது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, பல மாவட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதனால் மாநிலம் முழுவதும் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது இடாநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளில் எங்கள் பிரதிநிதிகள் சென்று பார்த்தபோது, அவற்றில் வாக்குச்சாவடி அதிகாரிகள் இல்லை.

மக்களவைத் தேர்தல்: ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைச்சரவை பரிந்துரை

Posted: 10 Mar 2014 04:08 AM PDT

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி 9 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுபற்றிய பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி, தேர்தல் தேதிகள் தொடர்பான முறையான அறிவிப்புகளை வெளியிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிக்கைகளுக்கு அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

Posted: 10 Mar 2014 03:39 AM PDT

கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீ நகர் இடையேயான நெடுஞ்சாலை இன்று மீண்டும் மூடப்பட்டது. பனிஹால் பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாகவும், ராம்பான் மாவட்டத்தில் உள்ள பாந்தால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™