Tamil News | Online Tamil News |
- வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் உத்தரவு
- தெலுங்கர் பிடியில் கூட்டணி' : பா.ம.க., லபோதிபோ!
- தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? விஜயகாந்திடம் பட்டியல் ஒப்படைத்தது பா.ஜ.,
- மலேசிய விமானத்தில் பயணித்த 4 பேர் பயங்கரவாதிகளா? இரண்டு நாட்களாகியும் மர்மம் நீடிப்பு
- வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல ஒரு வாய்ப்பு: நாகர்கோவிலில் ஜெ., பேச்சு
- ரூ.70 கோடி பரிசு பொருட்கள் மகளிர் மேம்பாட்டுக்கு தானம்: மோடி
- கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்!
- பாரதிய ஜனதாவில் மோதல்இல்லை: முரளி மனோகர் ஜோஷி அறிவிப்பு
- தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்க கருணாநிதி திட்டம்: கூட்டணி கிடைத்ததில் காங்., மேலிடம் அதிக திருப்தி?
- மேற்கு வங்கத்தில் சிறப்பான வளர்ச்சி: மம்தா
| வர்த்தகர்கள் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: நிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் உத்தரவு Posted: புதுடில்லி:'வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும், கொண்டு செல்ல லாம். அதற்கு, கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் எதுவும், தேர்தல் கமிஷனில் இல்லை. எனினும், அதிக தொகை கொண்டு செல்லும் போது, அதற்கான, முறையான ஆவணங்களை காண்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:கறுப்பு பண புழக்கத்தை கண்டறியவும், இது தொடர்பாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு தொகுதியிலும், கிராம அளவிலும், வார்டு அளவிலும், குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கறுப்பு ... |
| தெலுங்கர் பிடியில் கூட்டணி' : பா.ம.க., லபோதிபோ! Posted: பிற கட்சிகளோடும், சமூகங்களோடும், தாங்கள் எடுக்கும் உரசல் நிலைப்பாட்டால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் பா.ம.க., தற்போது, 'தமிழக பா.ஜ., கூட்டணி, தெலுங்கர்கள் பிடியில் சிக்கியுள்ளது. தெலுங்கர் அல்லாதவர்கள் தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் கிடைக்குமா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தையில் புது தூபத்தை போட்டுள்ளது.தமிழகத்தில், முதல்முறையாக, பா.ஜ., தலைமையில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - புதிய நீதிக்கட்சி - இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளோடு லோக்சபா தேர்தல் கூட்டணி அமையவுள்ளது. ... |
| தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? விஜயகாந்திடம் பட்டியல் ஒப்படைத்தது பா.ஜ., Posted: தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் பட்டியலை இறுதி செய்து, நேற்று மாலை, பா.ஜ., நிர்வாகிகள், விஜயகாந்திடம் ஒப்படைத்துள்ளனர்.பா.ஜ., கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துள்ள, விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சி, 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, கேட்டது. அதற்கு, பா.ஜ., தரப்பில், 14 தொகுதிகள் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், இரு கட்சிகளின் தரப்பிலும், தொகுதிகள் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், பா.ஜ., நிர்வாகிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை, தே.மு.தி.க., நடத்தி வருகிறது. இவ்விரு ... |
| மலேசிய விமானத்தில் பயணித்த 4 பேர் பயங்கரவாதிகளா? இரண்டு நாட்களாகியும் மர்மம் நீடிப்பு Posted: கோலாலம்பூர்:சீனாவை நோக்கி சென்ற மலேசிய விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்றபோது நடுவானில் மாயமானது. இந்த விமானத்தில் சென்ற நான்கு பேர், போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளதால், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை ... |
| வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல ஒரு வாய்ப்பு: நாகர்கோவிலில் ஜெ., பேச்சு Posted: நாகர்கோவில் : ''அமைதி, வளம், வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல, அ.தி.மு.க., வுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்,'' என, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெ., வேண்டுகோள் விடுத்தார்.கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜாண்தங்கத்தை அறிமுகப்படுத்தி, நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியது:வரும் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைக்கும் தேர்தல்; மக்களின் துயரங்களை தீர்க்கும் தேர்தல். கடந்த 2011 சட்டசபை தேர்தலில், 'குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்' என, உங்களிடம் கோரிக்கை வைத்த போது, அதை நிறைவேற்றி தந்தீர்கள். ... |
| ரூ.70 கோடி பரிசு பொருட்கள் மகளிர் மேம்பாட்டுக்கு தானம்: மோடி Posted: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியை, 'டீக்கடை நடத்தியவர்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட பலர் விமர்சித்தனர். அதையே, தங்களின் தேர்தல் பிரசாரமாக மாற்றியது, பாரதிய ஜனதா.நாட்டின் பல பகுதிகளில் உள்ள, டீக்கடைகளின் முன் கூடியிருக்கும் பொதுமக்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' முறை மூலம், மோடி, கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 'சாய் பே சர்ச்சா' என, பெயரிடப்பட்டுள்ளது.கடந்த மாதம், 'சிறந்த நிர்வாகம்' என்ற தலைப்பில், மோடி, கலந்துரையாடினார். இரண்டாவது நிகழ்ச்சி, சர்வதேச ... |
| கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்! Posted: பெங்களூரு : பெங்களூரில், 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிடுவதற்கு, ஒரு நபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வார இறுதியில், பெங்களூரு வரவுள்ளார். அப்போது, இரண்டு நாட்கள் தங்கியிருந்து, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இந்நிலையில், கர்நாடக மாநில, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு, கெஜ்ரிவால் சுற்றுப்பயணத்தை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.இதன் படி, கெஜ்ரிவால், பெங்களூரில் தங்கியிருக்கும்போது, ... |
| பாரதிய ஜனதாவில் மோதல்இல்லை: முரளி மனோகர் ஜோஷி அறிவிப்பு Posted: புதுடில்லி:''வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, பா.ஜ.,வில் எவ்வித சர்ச்சையும் இல்லை; மீடியாக்கள் தான், இதை, ஊதி பெரிசாக்குகின்றன. கட்சியின், பார்லிமென்ட் குழு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுவேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.பா.ஜ.,வில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை, மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வாரணாசியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.காரசார ... |
| Posted: 'தமிழகத்தில் காங்கிரசுக்கு, ஐந்து 'சீட்' ஒதுக்குவோம்; அதை ஏற்றுக் கொண்டால், கூட்டணி கதவு திறக்கும்' என, தி.மு.க., கூறிய யோசனையை, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.'கூட்டணியில் இனி மேல் எந்த கட்சிக்கும் இடமில்லை; கதவு அடைக்கப்பட்டு விட்டது' என, கூறி வந்த, தி.மு.க., தலைமை, இப்போது, 'கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் வரவேற்போம்' என, கூறி, கதவை திறந்து வைத்து உள்ளது.இது, அறிவாலய கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்து, திறக்காமல் போன தால், அலுத்து ஒதுங்கி நிற்கும் காங்கிரசுக்கு தெம்பை தந்துள்ளது. உள்ளே அனுமதிக்க...:இதை அடுத்து, மீண்டும், ... |
| மேற்கு வங்கத்தில் சிறப்பான வளர்ச்சி: மம்தா Posted: புதுடில்லி:''நக்சல் பயங்கரவாதி களின் ஆதிக்கம், டார்ஜிலிங் பிரிவினைவாதிகளின் கோஷம், நிதிப் பற்றாக்குறை போன்ற, பல பிரச்னைகளையும் தாண்டி, மேற்கு வங்கம் வளர்ச்சி அடைந்துள்ளது,'' என, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.தொழிற்சாலை மூடல்:முதல்வர், மம்தா பானர்ஜி பேசியதாவது: கம்யூனிஸ்டுகளால், 34 ஆண்டுகள் செய்ய முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த, 34 மாதங்களில் செய்து காட்டியுள்ளோம். கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், தொடர் போராட்டங்களால், 50 ஆயிரத்திற்கும் மேலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.மாநிலம், 2 லட்சம் கோடி ரூபாய் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |