Tamil News | Online Tamil News |
- நாள் ஒன்றுக்கு நான்கு கூட்டம்: அசத்த போகிறார் மோடி
- கேரள கவர்னராக ஷீலா தீட்ஷித்: மாநிலம் தழுவிய எதிர்ப்பு பேரணி
- கூட்டணி 'மெகா சீரியல்'இல் முக்கிய திருப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பம்
- பா.ஜ., அலுவலகத்தை தாக்கிய 'ஆம் ஆத்மி'க்கு 'நோட்டீஸ்': விளக்கம் அளிக்க உத்தரவு
- காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்!முதல்வர் ஜெ., ஆவேசம்
- கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி
- பரிதவிக்கவிட்ட ஜெ.,க்கு பாடம் புகட்ட சபதம்: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்!
- டில்லியில் வலுவிழக்கிறது ஆம் ஆத்மி
- ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பை எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு
- 5,083 அரசு பஸ்களில் விளம்பரம் செலவினத்தை சமாளிக்க ஏற்பாடு
- உழுதுண்ட நிலம் பழுதாகி விட்டதே! வறட்சியால் விவசாயிகள் விரக்தி பசுமை பூமி பாலைவனமானது
| நாள் ஒன்றுக்கு நான்கு கூட்டம்: அசத்த போகிறார் மோடி Posted: புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, அடுத்த வாரத்திலிருந்து, நாள் ஒன்றுக்கு, நான்கு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.லோக்சபா தேர்தல் தேதி, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதற்கு, பல மாதங்களுக்கு முன்பே, அதாவது, கடந்த ஆண்டு, ஜூலை முதலே, நரேந்திர மோடி, தீவிர, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அவர், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால், மோடி அலை, நாடு முழுவதும் வீசுவதாக, பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர். ... |
| கேரள கவர்னராக ஷீலா தீட்ஷித்: மாநிலம் தழுவிய எதிர்ப்பு பேரணி Posted: திருவனந்தபுரம்: டில்லி, 'மாஜி' முதல்வர், ஷீலா தீட்ஷித், கேரள கவனர்னராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஆம் ஆத்மி' கட்சியினர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவின் பல இடங்களில் பேரணிகளை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.சட்டசபை தேர்தலில் தோல்வி: டில்லியில், தொடர்ந்து, 15 ஆண்டுகளாக முதல்வர் பதவி வகித்த, காங்., கட்சியை சேர்ந்த ஷீலா தீட்ஷித், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த, சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வெற்றி பெற்றதோடு, டில்லி ... |
| கூட்டணி 'மெகா சீரியல்'இல் முக்கிய திருப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., அதிகாரபூர்வ பேச்சு ஆரம்பம் Posted: கூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான் முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த, பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை வெளியிட்டுள்ளார். ... |
| பா.ஜ., அலுவலகத்தை தாக்கிய 'ஆம் ஆத்மி'க்கு 'நோட்டீஸ்': விளக்கம் அளிக்க உத்தரவு Posted: டில்லியில், பா.ஜ., தலைமையகம் மீது, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியினர், நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல் குறித்து, விளக்கம் அளிக்குமாறு, ஆம் ஆத்மி கட்சிக்கு, தேர்தல் கமிஷன் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.குஜராத்திற்கு சென்றிருந்த, ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை, நேற்று முன்தினம், அம்மாநில போலீசார், கைது செய்தனர். உரிய அனுமதியில்லாமல், பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த காரணத்திற்காக, அவரை தடுத்து நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்து, பின் விடுவித்து விட்டனர். வன்முறையில் ஈடுபட்டதாக, ஆம் ஆத்மியின், மூத்த தலைவர்களான, அசுதோஷ், சாசியா ... |
| காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்!முதல்வர் ஜெ., ஆவேசம் Posted: ''விவசாயிகளின் நலனுக்கு எதிரான மரபணு மாற்று பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய காங்., அரசுக்கு, வரும் தேர்தலில், சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக பேசினார்.அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நாகபட்டினம், மயிலாடுதுறை தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:டெல்டா பகுதி மக்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி நதி நீர். காவிரி நீரில் நமது பங்கைதர, கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை ????ல் வெளியிடப்பட்டது. மத்தியிலும், ... |
| கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி Posted: சென்னை : ''கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து இடதுசாரி கட்சிகள் விலகியுள்ள நிலையில், தி.மு.க., தலைவர்கருணாநிதி, சென்னையில் நேற்றிரவுநிருபர்களிடம் கூறியதாவது:கூட்டணிக்கு வரும்படி, இடதுசாரிகளுக்கு அழைப்பு விடக்கூடாது என்று ஒன்றுமில்லை. அழைப்பு விடுக்கப்பட்டு, இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.முன்னதாக, தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி ஒதுக்கீடு பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'தி.மு.க., கூட்டணிக்கு ... |
| பரிதவிக்கவிட்ட ஜெ.,க்கு பாடம் புகட்ட சபதம்: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்! Posted: அ.தி.மு.க.,வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, அ.தி.மு.க., 'கல்தா' கொடுத்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், பரஸ்பரம் ஆலோசித்தனர். தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று நிர்வாகக் குழுக் ... |
| டில்லியில் வலுவிழக்கிறது ஆம் ஆத்மி Posted: அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, டில்லியில், மக்கள் செல்வாக்கை வேகமாக இழந்து வருவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் - ஐ.பி.என்., மற்றும் சி.எஸ்.டி.எஸ்., இணைந்து, டில்லியில் நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த ஜனவரி மாதம், ஆம் ஆத்மி கட்சிக்கு, 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பா.ஜ.,வுக்கு, 30 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த கால கட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் ஆட்சியில் இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது. ... |
| ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பை எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு Posted: புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும், தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தொடர்ந்த, 'ரிட்' மனு மீதான இறுதி விசாரணையை, இம்மாதம், 26ம் தேதிக்கு, சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சதாசிவம் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்,' இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்து உள்ளது.கருணை மனு: 'எங்கள் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி கால தாமதம் செய்ததால், எங்கள் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்' என, ராஜிவ் கொலையாளிகள், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன், சுப்ரீம் கோர்ட்டில் ... |
| 5,083 அரசு பஸ்களில் விளம்பரம் செலவினத்தை சமாளிக்க ஏற்பாடு Posted: கோவை மற்றும் சென்னை பகுதிகளில் இயங்கும், 5,083 அரசு பஸ்களில் விளம்பரம் செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டு போக்குவரத்து கழகங்கள் மூலம், 20,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு என, பஸ்களுக்கான இயக்கச் செலவு அதிகரிக்கிறது. தவிக்கிறது: இதனால், போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. எனவே, பஸ்களில் கூரியர் சேவை, விளம்பரம் செய்வதற்கு கழகங்களின் நிர்வாத்தினர் அனுமதிக்கின்றனர்.நிறுவனங்கள் ஆர்வம்: விளம்பர வருவாயைக் கொண்டு, நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க ... |
| உழுதுண்ட நிலம் பழுதாகி விட்டதே! வறட்சியால் விவசாயிகள் விரக்தி பசுமை பூமி பாலைவனமானது Posted: விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்த, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவின் கிழக்குப்பகுதி கிராமங்களில் கிணறுகள் நிரம்பி, சிற்றாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து வெளியேறிய காலம்போய், இன்று குடிப்பதற்கு நான்கு குடம் தண்ணீர் கிடைக்க, 15 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயக்கூலிகளும், 'இனியும் இங்கிருந்தால் வாழ முடியாது' என்ற, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் நிலத்தை விற்று விட்டு, நகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.வளம் கொழித்த விவசாய நிலங்கள், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 07,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |