Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடக்கம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
- பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் வரவேற்போம்
- செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக அவ்வை நடராஜன்: மத்திய அரசுக்கு ஞானதேசிகன் நன்றி
- காணொலிக் காட்சி மூலம் உதயகுமார் பிரசாரம்?
- புதுச்சேரி தொகுதியில் 36 பறக்கும் படை: ஆட்சியர்
- கிருஷ்ணகிரியில் ரூ.25 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
- தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
- கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி
- அதிமுக - கம்யூனிஸ்ட்டுகளின் 5 ஆண்டுகால கூட்டணி முறிந்தது
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு
- தேர்தல் கூட்டணி: முடிவெடுக்க ராமதாஸூக்கு அதிகாரம்
- சென்னையில் 283 பதற்றமான வாக்குச்சாவடிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
- தென்காசி தொகுதியில் 5-ஆவது முறையாக களமிறங்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
- வறட்சிக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு மட்டுமே: ஜெயலலிதா பேச்சு
- ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம்: உள்ளூர் விஷயங்களும் இடம்பெறுகின்றன
- காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு: சில மணி நேரத்தில் வாபஸ்
- 130 மணி நேரம் இடைவிடாது பாடம்: டேராடூன் பேராசிரியர் உலக சாதனை
- ஹரியாணா அமைச்சர் மீது வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
- 20 பேருக்கு பிரதமரின் காவல் பதக்கம்
- "பெருந்தொகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள்'
- தேர்தல் நெறிமுறைகளை மீறியுள்ளார் கேஜரிவால்: தேர்தல் ஆணையம்
- கான்பூர் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
- கர்நாடக மாநில அரசியல் நிலவரம்: வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மஜத, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இழுபறி
- இராக் : தொடர் குண்டு வெடிப்பில் 37 பேர் பலி
- எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைது தொடரும்: இலங்கை
- "எஃப்1 பந்தயம் 2015-ல் இந்தியாவில் நடைபெறாது'
- தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்: அம்மா குடிநீரில் முதல்வர் ஸ்டிக்கர் அகற்றம்
- உண்மையான குதூகலம்
- வாராக்கடன் என்னும் எரிமலை!
- தவறுக்கு துணைபோவதா?
- ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் மனு மீதான விசாரணை 26-க்கு ஒத்திவைப்பு
- தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி
- ஆம்ஆத்மி கட்சியினர் 14 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு
- 17-இல் தசரதபுரி ராஜாராம் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் தொடக்கம்
- தெருவில் சுற்றித் திரியும் சிறார்கள்: தில்லி காவல் ஆணையர் கவலை
- குஜராத் போலீஸ் வேவு பார்த்ததாக மணீஷ் சிசோடியா புகார்
- போலீஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
- தில்லியில் மேலும் 55,000 ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கை தொடக்கம்
- தாக்குதல் சம்பவம்: ஆம்ஆத்மி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
- உள்துறை அமைச்சர் ஷிண்டேவுடன் துணைநிலை ஆளுநர் சந்திப்பு
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
- முண்ட்காவில் "ஷூ' தயாரிப்பு ஆலையில் குழந்தைத் தொழிலாளர்கள் 13 பேர் மீட்பு
- அரவிந்த் கேஜரிவாலின் தேர்தல் செலவு: தில்லி தேர்தல் அலுவலகம் அறிக்கை தாக்கல்
- ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: நட்புரீதியாக சூதாடியதாக குருநாத் மெய்யப்பன் ஒப்புதல்
- சிறுவனிடம் தகாத உறவு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
- ஜாட்களுக்கு இட ஒதுக்கீட்டால் முஸ்லிம்கள் அதிருப்தி
- கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம்
- தில்லி, மீரட், ஆக்ரா பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
- தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி புகார்
- ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன்: ஜெயலலிதா அறிவிப்பு
- மாநிலங்களவை நியமன உறுப்பினராக கே.டி.எஸ். துளசி பதவியேற்பு
- புதுக்கட்சி தொடங்கினார் கிரண்குமார் ரெட்டி
- ம.பி. விவசாயிகளுக்கு மழை நிவாரண நிதியுதவி: குடியரசுத் தலைவர் தலையிட பாஜக கோரிக்கை
- மணிப்பூரின் 2 தொகுதிகளிலும்பேராசிரியர்கள் போட்டி: பாஜக
- பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாய் மீது 13 வயது சிறுமி புகார்
- தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி புகார்
- நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ஜெயலலிதா பேச்சு
- தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க 8 குழுக்கள்: ஆட்சியர்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25ஆம் தேதி கடைசி நாள்
- வண்டலூரில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- கோடைகால இலவச சமயப் பயிற்சி வகுப்பு
- மதுராந்தகம் நகரில் காந்தி சிலை மூடல்
- திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம்
- ஆவடியில் வெவ்வேறு சாலை விபத்து: 4 பேர் சாவு
- சோழா அரிமா சங்க கூட்டம்
- இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
- பட்டமளிப்பு விழா
- பாதுகாப்பு பணிக்கு 12 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை
- இளம்பெண் மாயம்
- காஞ்சிபுரத்தில் 120 டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்
- வழிபாட்டுத்தலங்களில் பிரசாரம் கூடாது: ஆட்சியர்
- கூடுவாஞ்சேரி ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல்
- 87 ஆண்டு பழமையான பள்ளியை விற்க முயற்சிக்கும் நிர்வாகம்
- பெண் கொலை: போலீஸ் விசாரணை
- அதிமுகவின் நலத்திட்டங்கள் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும்
- வெவ்வேறு சாலை விபத்து: 4 பேர் சாவு
- மக்களவைத் தேர்தல் அறிவிப்பு: சுவர் விளம்பரம் எழுதும் பணி தீவிரம்
- காது கேளாதோர் தன்மை அறியும் இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்
- அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம்
- மனைவியின் சாவுக்கு காரணமானகணவருக்கு 2 ஆண்டு சிறை
- ஆழ்குழாய் கிணறுகளை மூட நடவடிக்கை: பேரூராட்சியில் தீர்மானம்
- அம்மா தண்ணீர் பாட்டில் மற்றும் "ஸ்மால்' பஸ்களில் இரட்டை இலை: மறைக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் வழக்கு
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்
- காட்டில் செம்மரங்களை வெட்டியவர் கைது
- தேர்தல் விதிமீறல்: அதிமுக வேட்பாளர் மீது புகார்
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 2500 பேர் பங்கேற்பு
- விதிமுறைகள் கண்காணிப்பு:தேர்தல் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
- தேர்தல் புகார், தகவல்களை அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
- ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
- இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் 73 பேர் கைது
- ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
- பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
- ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த ஆந்திரா இளைஞர் சாவு
- பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் தர்னா போராட்டம்
- தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை, புள்ளியியல் கணிப்பாய்வுக் குழு பணி தொடக்கம்
- ஆம்னி வேனில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி
- 7,800 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
- குறைதீர் கூட்டங்கள் ரத்து:மாற்றாக புகார் பெட்டி
- தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்கள்
| Posted: 06 Mar 2014 12:29 PM PST தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகே புதிய தலைமைச் செயலகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் வரவேற்போம் Posted: 06 Mar 2014 12:29 PM PST பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் அதனை வரவேற்போம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். |
| செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக அவ்வை நடராஜன்: மத்திய அரசுக்கு ஞானதேசிகன் நன்றி Posted: 06 Mar 2014 12:28 PM PST மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக தமிழறிஞர் அவ்வை நடராஜனை நியமனம் செய்துள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் நன்றி தெரிவித்துள்ளார். |
| காணொலிக் காட்சி மூலம் உதயகுமார் பிரசாரம்? Posted: 06 Mar 2014 12:27 PM PST காணொலிக் காட்சி முறையில் உதயகுமாரை பிரசாரம் செய்யவைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். |
| புதுச்சேரி தொகுதியில் 36 பறக்கும் படை: ஆட்சியர் Posted: 06 Mar 2014 12:26 PM PST புதுச்சேரி எம்.பி. தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்த 120 அரசு அதிகாரிகள் கொண்ட 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தீபக்குமார் தெரிவித்துள்ளார். |
| கிருஷ்ணகிரியில் ரூ.25 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் Posted: 06 Mar 2014 12:25 PM PST தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி கட்டண மையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின் போது, ரூ.25 லட்சம் மதிப்புள்ள 48 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
| தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி Posted: 06 Mar 2014 12:21 PM PST தலைமைச் செயலகம் முன்பாக நடுத்தர வயது பெண் ஒருவர் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றார். |
| கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி Posted: 06 Mar 2014 12:20 PM PST திமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். |
| அதிமுக - கம்யூனிஸ்ட்டுகளின் 5 ஆண்டுகால கூட்டணி முறிந்தது Posted: 06 Mar 2014 12:19 PM PST அதிமுக - இடதுசாரி கட்சிகளிடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி உறவு வியாழக்கிழமை முறிந்தது. |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு Posted: 06 Mar 2014 12:10 PM PST திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| தேர்தல் கூட்டணி: முடிவெடுக்க ராமதாஸூக்கு அதிகாரம் Posted: 06 Mar 2014 12:09 PM PST வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்ய ராமதாஸூக்கு அதிகாரம் அளித்து பாமக தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. |
| சென்னையில் 283 பதற்றமான வாக்குச்சாவடிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் Posted: 06 Mar 2014 12:07 PM PST சென்னையில் மொத்தம் 283 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் தெரிவித்தார். |
| தென்காசி தொகுதியில் 5-ஆவது முறையாக களமிறங்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி Posted: 06 Mar 2014 12:06 PM PST தென்காசி மக்களவைத் தொகுதியில் 5-ஆவது முறையாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். |
| வறட்சிக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு மட்டுமே: ஜெயலலிதா பேச்சு Posted: 06 Mar 2014 12:04 PM PST இந்திய அளவில் வேளாண் உற்பத்தி பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வறட்சிக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு மட்டுமே என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. |
| ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம்: உள்ளூர் விஷயங்களும் இடம்பெறுகின்றன Posted: 06 Mar 2014 12:02 PM PST முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதியின் நிலைமைக்கு ஏற்பவும் பேச்சில் மாற்றங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. |
| காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு: சில மணி நேரத்தில் வாபஸ் Posted: 06 Mar 2014 11:52 AM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது வியாழக்கிழமை தேசத்துரோக வழக்கு தொடர்ந்த போலீஸார் சில மணி நேரத்தில் அதனை வாபஸ் பெற்றனர். |
| 130 மணி நேரம் இடைவிடாது பாடம்: டேராடூன் பேராசிரியர் உலக சாதனை Posted: 06 Mar 2014 11:52 AM PST உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் அரவிந்த் மிஸ்ரா 130 மணி நேரம் இடைவிடாது பாடம் நடத்தி உலக சாதனை புரிந்துள்ளார். |
| ஹரியாணா அமைச்சர் மீது வழக்கு: நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Mar 2014 11:51 AM PST போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| 20 பேருக்கு பிரதமரின் காவல் பதக்கம் Posted: 06 Mar 2014 11:51 AM PST உத்தரகண்ட் பேரழிவு உள்பட கடந்த ஆண்டு இயற்கைப் பேரிடர்களின்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) வீரர்கள் 20 பேருக்கு பிரதமரின் காவல் பதக்கம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| "பெருந்தொகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள்' Posted: 06 Mar 2014 11:51 AM PST தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பெரிய அளவிலான தொகையை எடுத்துச் செல்பவர்கள் அந்தத் தொகை எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. |
| தேர்தல் நெறிமுறைகளை மீறியுள்ளார் கேஜரிவால்: தேர்தல் ஆணையம் Posted: 06 Mar 2014 11:50 AM PST ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், குஜராத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதற்கு முகாந்திரம் காணப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| கான்பூர் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் Posted: 06 Mar 2014 11:50 AM PST உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. |
| Posted: 06 Mar 2014 11:46 AM PST மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது. |
| இராக் : தொடர் குண்டு வெடிப்பில் 37 பேர் பலி Posted: 06 Mar 2014 11:43 AM PST இராக் தலைநகர் பாக்தாத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 37 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். |
| எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைது தொடரும்: இலங்கை Posted: 06 Mar 2014 11:43 AM PST சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடரும் என இலங்கை கூறியுள்ளது. |
| "எஃப்1 பந்தயம் 2015-ல் இந்தியாவில் நடைபெறாது' Posted: 06 Mar 2014 11:41 AM PST ஃபார்முலா 1 (எஃப்1) கார்ப் பந்தயம் 2015-ம் ஆண்டிலும் இந்தியாவில் நடைபெறாது என்று எஃப்1 தலைவர் பெர்னி எக்லெஸ்டோன் தெரிவித்துள்ளார். |
| தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்: அம்மா குடிநீரில் முதல்வர் ஸ்டிக்கர் அகற்றம் Posted: 06 Mar 2014 11:38 AM PST தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் எதிரொலியாக, அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் அங்காடிகளில் முதல்வரின் படங்கள் மறைக்கப்பட்டுள்ளன. |
| Posted: 06 Mar 2014 11:32 AM PST அண்மைக்காலமாக திருமணம் போன்ற விழாக்களில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பேசிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது: |
| Posted: 06 Mar 2014 11:32 AM PST அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வளர்ந்து வரும் வாராக்கடன்கள், நிதி அமைச்சகத்தையும், ரிசர்வ் வங்கியையும் திகைக்க வைத்திருக்கின்றன. |
| Posted: 06 Mar 2014 11:25 AM PST உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். |
| ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் மனு மீதான விசாரணை 26-க்கு ஒத்திவைப்பு Posted: 06 Mar 2014 11:21 AM PST முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி Posted: 06 Mar 2014 11:20 AM PST மக்களவைத் தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். |
| ஆம்ஆத்மி கட்சியினர் 14 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு Posted: 06 Mar 2014 11:19 AM PST தில்லியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் கைதான ஆம் ஆத்மி கட்சியினர் 14 பேர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். |
| 17-இல் தசரதபுரி ராஜாராம் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் தொடக்கம் Posted: 06 Mar 2014 11:19 AM PST தில்லி தசரதபுரியில் உள்ள அகில பாரத ஸாது சமாஜத்தின் ஸ்ரீ ராஜாராம் கோயிலில் ஸ்ரீராம நவமி உத்ஸவம் வரும் 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| தெருவில் சுற்றித் திரியும் சிறார்கள்: தில்லி காவல் ஆணையர் கவலை Posted: 06 Mar 2014 11:19 AM PST தில்லி மாநகரில் தெருக்களில் சுற்றித் திரியும் சிறார்கள் குறித்து தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கவலை வெளியிட்டுள்ளார். |
| குஜராத் போலீஸ் வேவு பார்த்ததாக மணீஷ் சிசோடியா புகார் Posted: 06 Mar 2014 11:18 AM PST குஜராத் போலீஸ் தன்னை வேவு பார்த்ததாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற் குழு உறுப்பினர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். |
| போலீஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Mar 2014 11:18 AM PST தில்லியில் வசித்துவரும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் பிரச்னைகளைக் கையாள்வதற்கு போலீஸாருக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| தில்லியில் மேலும் 55,000 ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கை தொடக்கம் Posted: 06 Mar 2014 11:18 AM PST தில்லியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கூடுதலாக 55,000 ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை நகரில் ஆட்டோக்கள் தட்டுப்பாட்டைக் பெருமளவு குறைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. |
| தாக்குதல் சம்பவம்: ஆம்ஆத்மி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் Posted: 06 Mar 2014 11:17 AM PST பாஜக தலைமை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. |
| உள்துறை அமைச்சர் ஷிண்டேவுடன் துணைநிலை ஆளுநர் சந்திப்பு Posted: 06 Mar 2014 11:17 AM PST : மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை Posted: 06 Mar 2014 11:17 AM PST மக்களவைத் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். |
| முண்ட்காவில் "ஷூ' தயாரிப்பு ஆலையில் குழந்தைத் தொழிலாளர்கள் 13 பேர் மீட்பு Posted: 06 Mar 2014 11:16 AM PST தில்லி முண்ட்கா பகுதியில் ஷூ மற்றும் காலணிகள் தயாரிப்பு ஆலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தை உள்பட 13 குழந்தைத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர். |
| அரவிந்த் கேஜரிவாலின் தேர்தல் செலவு: தில்லி தேர்தல் அலுவலகம் அறிக்கை தாக்கல் Posted: 06 Mar 2014 11:16 AM PST ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் செலவு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தில்லி தேர்தல் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. |
| ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: நட்புரீதியாக சூதாடியதாக குருநாத் மெய்யப்பன் ஒப்புதல் Posted: 06 Mar 2014 11:16 AM PST ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நட்புரீதியாக விண்டூ தாராசிங்கிடம் சூதாடியதாக (பெட்டிங்) குருநாத் மெய்யப்பன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. |
| சிறுவனிடம் தகாத உறவு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை Posted: 06 Mar 2014 11:16 AM PST ஆறு வயது சிறுவனிடம் தகாத உறவு கொண்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஜாட்களுக்கு இட ஒதுக்கீட்டால் முஸ்லிம்கள் அதிருப்தி Posted: 06 Mar 2014 11:16 AM PST ஜாட் சமூகத்தினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை அறிவித்திருப்பது முஸ்லிம்களுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி விமர்சித்துள்ளார். |
| கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் Posted: 06 Mar 2014 11:15 AM PST கோடை காலத்தில் மின் விநியோகம் தடையின்றி இருக்கும் என்பதை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆர்சி) உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
| தில்லி, மீரட், ஆக்ரா பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது Posted: 06 Mar 2014 11:15 AM PST தில்லி, மீரட், ஆக்ரா பகுதிகளில் கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த 4 பேர் கும்பலை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி புகார் Posted: 06 Mar 2014 11:15 AM PST ஆம்ஆத்மி தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக் கட்சி வியாழக்கிழமை புகார் தெரிவித்துள்ளது. |
| ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன்: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 06 Mar 2014 11:15 AM PST ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வி.என்.பி.வெங்கட்ராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார். |
| மாநிலங்களவை நியமன உறுப்பினராக கே.டி.எஸ். துளசி பதவியேற்பு Posted: 06 Mar 2014 11:15 AM PST மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
| புதுக்கட்சி தொடங்கினார் கிரண்குமார் ரெட்டி Posted: 06 Mar 2014 11:14 AM PST ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த கிரண்குமார் ரெட்டி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். |
| ம.பி. விவசாயிகளுக்கு மழை நிவாரண நிதியுதவி: குடியரசுத் தலைவர் தலையிட பாஜக கோரிக்கை Posted: 06 Mar 2014 11:14 AM PST கடும் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநில விவசாயிகளுக்கு நிவாரண நிதியுதவி வழங்கும் விஷயத்தில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரை பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. |
| மணிப்பூரின் 2 தொகுதிகளிலும்பேராசிரியர்கள் போட்டி: பாஜக Posted: 06 Mar 2014 11:14 AM PST : மணிப்பூரின் 2 மக்களவைத் தொகுதிகளிலும் கல்லூரிப் பேராசிரியர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். |
| பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாய் மீது 13 வயது சிறுமி புகார் Posted: 06 Mar 2014 11:14 AM PST பாலியல் தொழில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதாக தாய் மீது 13 வயது சிறுமி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இந்த வகையில் பச்சிம் விஹார் பகுதியில் பலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் புகாரில் அச் சிறுமி தெரிவித்துள்ளார். |
| தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி புகார் Posted: 06 Mar 2014 11:14 AM PST ஆம்ஆத்மி தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக் கட்சி வியாழக்கிழமை புகார் தெரிவித்துள்ளது. |
| நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ஜெயலலிதா பேச்சு Posted: 06 Mar 2014 11:13 AM PST அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா. |
| தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க 8 குழுக்கள்: ஆட்சியர் Posted: 06 Mar 2014 11:13 AM PST தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தெரிவித்தார். |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25ஆம் தேதி கடைசி நாள் Posted: 06 Mar 2014 11:12 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், சேர்க்க தவறியவர்கள் வரும் மார்ச் 25ஆம் தேதி வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். |
| வண்டலூரில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 06 Mar 2014 11:12 AM PST கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் கொளப்பாக்கத்தில் காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொளப்பாக்கத்தில் நடைபெற்றது. |
| கோடைகால இலவச சமயப் பயிற்சி வகுப்பு Posted: 06 Mar 2014 11:12 AM PST காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைகால இலவச சமயப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. |
| மதுராந்தகம் நகரில் காந்தி சிலை மூடல் Posted: 06 Mar 2014 11:12 AM PST மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி சின்னங்கள் ஆகியவற்றை மூடி வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை காந்தி சிலையை மூடி வைத்த சம்பவம் |
| திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் Posted: 06 Mar 2014 11:11 AM PST கூடுவாஞ்சேரியில் திமுக தேர்தல் பிரசாசர கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார். |
| ஆவடியில் வெவ்வேறு சாலை விபத்து: 4 பேர் சாவு Posted: 06 Mar 2014 11:11 AM PST ஆவடி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர். திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (30). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவர் |
| Posted: 06 Mar 2014 11:11 AM PST உத்தரமேரூரில் சோழா அரிமா சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவர் கோ.காளிதாஸ் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் டாக்டர்.சி. |
| இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு Posted: 06 Mar 2014 11:11 AM PST இருங்காட்டுக்கோட்டை பகுதியில் திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
| Posted: 06 Mar 2014 11:10 AM PST மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பாதுகாப்பு பணிக்கு 12 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை Posted: 06 Mar 2014 11:10 AM PST காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியை |
| Posted: 06 Mar 2014 11:10 AM PST ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இளம் பெண் மாயமானதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பீமன்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர |
| காஞ்சிபுரத்தில் 120 டிஜிட்டல் பேனர்கள் அகற்றம் Posted: 06 Mar 2014 11:10 AM PST காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 120 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கா.பாஸ்கரன் புதன்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறை |
| வழிபாட்டுத்தலங்களில் பிரசாரம் கூடாது: ஆட்சியர் Posted: 06 Mar 2014 11:10 AM PST கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது என்று அரசியில் கட்சியினரிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்தார். |
| கூடுவாஞ்சேரி ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல் Posted: 06 Mar 2014 11:09 AM PST கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய லாரி மற்றும் டிராக்டர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| 87 ஆண்டு பழமையான பள்ளியை விற்க முயற்சிக்கும் நிர்வாகம் Posted: 06 Mar 2014 11:09 AM PST அம்பத்தூரில் 87 ஆண்டுக் கால பழமையான பள்ளியை விற்க அதன் நிர்வாகம் முயற்சி செய்து வருவதால், அப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் போராடி வருகின்றனர். |
| Posted: 06 Mar 2014 11:08 AM PST அம்பத்தூர் அருகே பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அதிமுகவின் நலத்திட்டங்கள் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் Posted: 06 Mar 2014 11:08 AM PST அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வழிவகுக்கும் என ùüவருவாய்த் துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார். |
| வெவ்வேறு சாலை விபத்து: 4 பேர் சாவு Posted: 06 Mar 2014 11:08 AM PST ஆவடி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர். திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (30). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவர் |
| மக்களவைத் தேர்தல் அறிவிப்பு: சுவர் விளம்பரம் எழுதும் பணி தீவிரம் Posted: 06 Mar 2014 11:07 AM PST மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து திருவள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுவர் விளம்பரம் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| காது கேளாதோர் தன்மை அறியும் இயந்திரம் அமைக்க வலியுறுத்தல் Posted: 06 Mar 2014 11:07 AM PST திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோரின் சதவீதத் தன்மை குறித்து கண்டறியும் கருவி அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான நலன் குறித்த கருத்தரங்கம் வசந்தம் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். உள்ளிட்ட 8 தொண்டு நிறுவனங்கள் சார்பில் திருவள்ளூரில் புதன்கிழமை நடத்தப்பட்டது. கருத்தரங்கை, ஐ.ஆர்.சி.டி.எஸ். நிறுவனத் தலைவர் டைட்டஸ் தொடங்கி வைத்தார். திட்ட மேலாள |
| அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம் Posted: 06 Mar 2014 11:07 AM PST போதிய அடிப்படை வசதிகளின்றி அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். |
| மனைவியின் சாவுக்கு காரணமானகணவருக்கு 2 ஆண்டு சிறை Posted: 06 Mar 2014 11:07 AM PST திருவள்ளூர் அருகே மனைவியின் சாவுக்கு காரணமான கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| ஆழ்குழாய் கிணறுகளை மூட நடவடிக்கை: பேரூராட்சியில் தீர்மானம் Posted: 06 Mar 2014 11:06 AM PST நாரவாரிக்குப்பம் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| அம்மா தண்ணீர் பாட்டில் மற்றும் "ஸ்மால்' பஸ்களில் இரட்டை இலை: மறைக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் வழக்கு Posted: 06 Mar 2014 11:06 AM PST மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மா தண்ணீர் பாட்டில் மற்றும் அரசு "ஸ்மால்' பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் Posted: 06 Mar 2014 11:06 AM PST மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிகள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| காட்டில் செம்மரங்களை வெட்டியவர் கைது Posted: 06 Mar 2014 11:06 AM PST திருவள்ளூர் அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காட்டில் செம்மரங்களை வெட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர். |
| தேர்தல் விதிமீறல்: அதிமுக வேட்பாளர் மீது புகார் Posted: 06 Mar 2014 11:05 AM PST தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக, மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் (படம்) மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 2500 பேர் பங்கேற்பு Posted: 06 Mar 2014 11:05 AM PST பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் 2500 பேர் பங்கேற்றனர். |
| விதிமுறைகள் கண்காணிப்பு:தேர்தல் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை Posted: 06 Mar 2014 11:05 AM PST திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக மண்டல அலுவலர்கள், வங்கியாளர்கள், பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புப் படை, செலவின கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் புகார், தகவல்களை அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு Posted: 06 Mar 2014 11:05 AM PST திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார், தகவல்களை அளிக்க தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை Posted: 06 Mar 2014 11:05 AM PST திருச்சி தென்னூர் அருகே வியாழக்கிழமை ரயிóல் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 06 Mar 2014 11:04 AM PST ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி திருச்சி விமான நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட வந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து டி.வி.எஸ்.டோல்கேட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு Posted: 06 Mar 2014 11:03 AM PST திருச்சி பொன்மலை அருகே நடந்துச் சென்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு Posted: 06 Mar 2014 11:03 AM PST திருச்சி திருவெறும்பூர் அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த ஆந்திரா இளைஞர் சாவு Posted: 06 Mar 2014 11:03 AM PST திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு ஹோட்டல் 5-வது மாடியிலிருந்து விழுந்த ஆந்திரா இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். |
| பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் தர்னா போராட்டம் Posted: 06 Mar 2014 11:02 AM PST நீண்ட காலமாக உள்ள ஊதிய முரண்பாடுகளை அகற்ற வலியுறுத்தி திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சன்ஜார் நிகாம் அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை, புள்ளியியல் கணிப்பாய்வுக் குழு பணி தொடக்கம் Posted: 06 Mar 2014 11:02 AM PST தேனி மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த கண்காணிப்புப் பணியை, தேர்தல் பறக்கும் படை மற்றும் புள்ளியியல் கணிப்பாய்வுக் குழு தொடங்கியுள்ளது. |
| ஆம்னி வேனில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி Posted: 06 Mar 2014 11:01 AM PST கம்பம்மெட்டு சாலையில் புளியந்தோப்பில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த வேனிலிருந்து 600 கிலோ ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| 7,800 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி Posted: 06 Mar 2014 11:01 AM PST திண்டுக்கல் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம், நத்தம் தாலுகா அளவில் நத்தம், கோட்டைப்பட்டி, லிங்கவாடி, குட்டுப்பட்டி, சிறுகுடி, கோசுகுறிச்சி மற்றும் செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மையங்களில், 6ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒரு |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது Posted: 06 Mar 2014 11:01 AM PST திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கா. ராஜா(45). இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள் |
| குறைதீர் கூட்டங்கள் ரத்து:மாற்றாக புகார் பெட்டி Posted: 06 Mar 2014 11:01 AM PST குறைதீர் கூட்டங்களுக்கு பதிலாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்கள் Posted: 06 Mar 2014 11:00 AM PST தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளது: வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்கள் நியமிக்கப்பட |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |