Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின்சாரம் பற்றி ஜெ., பேசினாலே பல மணி நேரம் மின்வெட்டு

Posted:

''என் தலைமையிலான, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது,'' என, முதல்வர் ஜெயலலிதா, எப்போது பேசுகிறாரோ, அன்றைய தினமே, மின் உற்பத்தி குறைவால், பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இது, பொது மக்களை மட்டும் அல்லாமல், மின் வாரிய அதிகாரிகளையும், விரக்தி அடையச் செய்துள்ளது.தமிழகத்தில், கடந்த ஆட்சியில், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், குடியிருப்புகளுக்கு, சுழற்சி முறையில், மின் தடை அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளில், மின்சாரம் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.*''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களில், மின்வெட்டு ...

மம்தாவுக்கு 28, ஜெயாவுக்கு 21, மாயாவுக்கு 18!

Posted:

இன்றே லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி - 233 இடங்களையும், காங்., தலைமையிலான ஐ.மு.கூட்டணி - 119 இடங்களையும் வெல்லும் என, ஏ.பி.பி., - நீல்சன் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.அதன்படி: கருத்து கணிப்பின்படி, பா.ஜ., தனியாக - 209 இடங்களிலும், கூட்டணியாக - 233 இடங்களிலும் வெல்லும். அதேபோல், காங்., தனியாக - 91 இடங்களையும், கூட்டணியுடன் சேர்ந்து - 119 இடங்களையும் வெல்லும்.திரிணமுல் காங்., - 28 தொகுதிகளையும், இடதுசாரிகள் - 23 தொகுதிகளையும், அ.தி.மு.க., - 21 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி - 18 தொகுதிகளையும், பிஜு ஜனதா தளம் - 17 தொகுதிகளையும் வெல்லும்.அந்த ...

'அ.தி.மு.க., வேட்பாளரை நாடு கடத்த வேண்டும்': விஜயகாந்த்

Posted:

ஆதம்பாக்கம் : ''ஆலந்துார் மண்டல குழு தலைவராக இருந்த வெங்கட்ராமனை, நாடு கடத்த வேண்டும்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.ஆலந்துார் சட்டசபை தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் காமராஜ், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் மாசிலாமணி ஆகியோருக்காக, ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:ஆலந்துார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கட்ராமன், மண்டல குழு தலைவராக இருந்தவர். மண்டலத்தில், எங்கு வீடு கட்டினாலும் மிரட்டி பேரம் பேசுபவர். இது மக்களுக்கே ...

ஜெ., தேடிச்சென்று சந்திக்கும் நபர் யார் தெரியுமா: ஸ்டாலின் தகவல்

Posted:

கோவை : ''முதல்வர் ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடிவதில்லை. ஆனால், அவர் தேடிச் சென்று சந்திக்கும் நபர் யார் தெரியுமா?'' என, கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், கேள்வி கேட்டு, வியப்பை ஏற்படுத்தினார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர், 'மாஜி' அமைச்சர் பழனிசாமியை ஆதரித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று தொண்டாமுத்துார், செல்வபுரம், குனியமுத்துார், சுந்தராபுரம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், கோவையின் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட மேற்கு புறவழிச்சாலை உட்பட, பல திட்டங்கள், ...

ஒவ்வொருவரும் பிரசார பீரங்கியாகுங்கள்! தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடித 'குண்டு'

Posted:

அ.தி.மு.க., தொண்டர்கள், ஒவ்வொருவரும், பிரசார பீரங்கியாக மாற வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை, கவர வேண்டும்' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர், ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடித விவரம்:இந்த மடல் வழியாக, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட, கட்சி தொண்டர்களிடம், என் உள்ளத்து உணர்வுகளை, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அ.தி.மு.க., வரலாற்றில், முதன் முறையாக, 40 லோக்சபா தொகுதிகளிலும், நாமே போட்டியிடும் வாய்ப்பினை, இந்தத் தேர்தலில் பெற்றுள்ளோம். எனவே, இந்த தேர்தல், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்.எதிரொலிக்கும் ...

வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆதரவு கேட்கிறார் சோனியா

Posted:

லக்கிம்பூர் : ''கடந்த லோக்சபா தேர்தலில் என்ன வாக்குறதி அளித்தோமோ, அதை நிறைவேற்றி காட்டியுள்ளோம். இம்முறை நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, உங்கள் ஆதரவு தேவை,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறி னார்.அசாம் மாநி லம், லக்கிம்பூர் தொகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் சோனியா பேசியதாவது:சமத்துவத்தை விரும் பும் காங்கிரஸ், நாட்டை வலுப்படுத்துகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள், குறிப்பாக, பா.ஜ., பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை பலவீனமாக்குகிறது. பா.ஜ.,வினர், வாய்கிழிய பேசுவர் பேசியபடி செய்யமாட்டார்கள். பேசுவதற்கும், பேசிய படி நிறைவேற்றி ...

விவசாயிகள் பற்றி சரத் கண்டுகொள்வதில்லை: நரேந்திர மோடி

Posted:

அமராவதி: ''மத்திய விவசாய அமைச்சர், சரத் பவாருக்கு, கிரிக்கெட்டை பற்றி மட்டும் பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், அவரின் சொந்த மாநிலத்தில், கடன் தொல்லையால், விவசாயிகள் செத்து மடிவதை பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.விவசாயிகள் தற்கொலை:மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:மகாராஷ்டிர மாநிலத்தில், கடன் தொல்லை காரணமாக, ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. ஆனால், இந்த மாநிலத்தை ...

மோடி பிரதமராவார் என்பதை பிரதிபலிக்கிறது பங்குச்சந்தை: மத்திய காங்., அரசின் தவறுகளை பட்டியலிட்டு பா.ஜ., புகார்

Posted:

புதுடில்லி: ''பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்ந்தால், அதற்கு, காங்கிரஸ் தலைமையிலான சிறப்பான ஆட்சி தான் காரணம் என கூறும், நிதியமைச்சர் சிதம்பரத்தின் முன், 18 கேள்விகள் வைக்கிறேன்; அதற்கு, அவர் பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறினார்.ரூபாய் மதிப்பு உயர்வு:மும்பை பங்குச்சந்தை மற்றும் 'நிப்டி' என்ற தேசிய பங்குச்சந்தை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. அமெரிக்கா டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து ...

வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்: சாடுவதை கைவிட்டு மத்திய ஆட்சி பற்றி பேச்சு

Posted:

தமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், தமிழகம் பெறப் போகும் நலன்கள் பற்றியும், பிரசாரத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளார். தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் சாடுவதற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைத்துள்ளதை போலவே, தி.மு.க.,வின் பிரசார யுக்தியும் மாறியுள்ளது. 'மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைய தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்' என, அக்கட்சியின் ...

சென்னையில் தகிக்கும் வெப்பம்: மழை பெய்ய வாய்ப்பில்லை

Posted:

சென்னை: சென்னை, திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் பகுதிகளில், இயல்பளவை காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஏப்ரல், 10ம் தேதிக்கு மேல் வழக்கமாக துவங்க வேண்டிய கோடை வெயில், இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே துவங்கிவிட்டது.40 டிகிரியை தாண்டி... : தற்போது, இயல்பளவை காட்டிலும் தொடர்ந்து, வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர் பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) அளவில், நேற்று காலையில் வெப்பம் பதிவாகியது. இதே போல், தர்மபுரி, மதுரை, சேலம், 39; திருச்சி, ...

சந்திரபாபுவுக்கு 24 மணி நேர கெடு : பா.ஜ., தலைவர்கள் அதிரடி முடிவு

Posted:

ஐதராபாத்: ஆந்திராவில், தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணி பேச்சு இன்னும் இழுபறியில் உள்ளது. இந்நிலையில், "தெலுங்கு தேசம், 24 மணி நேரத்திற்குள் முடிவை அறிவிக்கவில்லை யெனில், தனியாக போட்டியிட தயார்' என பா.ஜ., அறிவித்து உள்ளது. தெலுங்கானா, சீமாந்திரா மாநிலங்களில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, பா.ஜ., பேச்சு நடத்தியது. மோடி அலையால், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள செல்வாக்கை பயன்படுத்த, சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் விரும்பியது. இருப்பினும், பல கட்சிகள் ஆந்திராவில் தனித்தனியாக போட்டியிடுவதால், பா.ஜ.,வுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™