ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிந்தனைத் துளிகள்
- உண்மையான வீரம்
- பஞ்சாங்கம்
- நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து
- உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்
- சர்வதேச விசாரணை தீர்மானம்
- மொபைல் கடை - Dealers?
- மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
- உங்கள் வலது பக்க மூளையையும், இடது பக்க மூளையையும் சீண்டிப் பார்க்கும் சில புகைப்படங்கள்!
- நண்பர்களே வங்கி நேர்முகத்தேர்வுக்கான பொதுவான வினா விடை தேவை தந்து உதவுங்களேன்
- பழைய பயனர் பெயரை திரும்ப பெற..
- ஆய்வாளர்களை அதிர வைத்தவிசித்திர உயிரினம்!!!!
- சொல் புதிது தேடுவோம் வாருங்கள்...
- அம்மா அதிகம் சாப்பிடுவாள்!
- ஒடுக்கப்பட்ட புரட்சி!
- கல்லில் எதிரொலிக்கும் வரலாறு!
- உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!
- காற்றில் உலாவரும் கல்கியின் படைப்புகள்!
- படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!
- ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?
- நாளும் ஒரு அழகின் அலை
| Posted: 30 Mar 2014 12:16 PM PDT ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
| Posted: 30 Mar 2014 12:15 PM PDT உங்கள் எப்போதும் கீதையின் வாக்கியங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். "விஹாய காமான் யஸ்ஸர்வான் புமான் சரதி நிஸ்ப்ருஹ: நிர்மமோ நிரஹங்காரோ ஸ சாந்திம் அதிகச்சதி'' எவன் ஆசைகள், நான் என்ற எண்ணம், அகந்தை இவற்றிலிருந்து விடுபட்டு நிற்கிறானோ அவன் அமைதியை அடைவான். ச்ரத்தாவான் லபதே க்ஞானம் தத்பராஸ் ஸம்யதேந்த்ரியா: க்ஞானம் லப்த்வா பராம்சாந்திம் அசிரேணாதி கச்சதி நம்பிக்கையுள்ளவன் ஞானம் பெறுகிறான். ஆன்மாவிடத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கும், இந்திரியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கும் ... |
| Posted: 30 Mar 2014 12:10 PM PDT • மூன்று வகையான பஞ்சாங்கங்கள் உள்ளன. அவை வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம், எபிமெரிஸ் பஞ்சாங்கம் ஆகும். • வாக்கியப் பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் கணித்து சொல்லப்பட்ட சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது. • திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது கோள்களின் பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்தியாசத்தைக் கணக்கில்கொண்டு கணிக்கப்படுவது. • எபிமெரிஸ் பஞ்சாங்கம் என்பது மேல்நாட்டு முறைப்படி கணிக்கப்படுவது. • பஞ்சாங்கத்தின் உதவியுடனே தினசரி நாள்காட்டிகள் ... |
| நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து Posted: 30 Mar 2014 12:07 PM PDT பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடி வேர்களின் மருத்துவக் குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடிகளின் வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினர். ஜெர்மானிய நிறுவனம் ஏற்றுமதியாளர்கள் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இருப்பதைக் கண்டு கத்தரிச் செடி வேர் வேண்டாம். கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி ... |
| உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம் Posted: 30 Mar 2014 11:55 AM PDT சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஸேப்பியன் நல அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார். நிகழ்ச்சியில் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் பேசியதாவது: சிறுநீரக செயலிழப்புக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் பொதுவான காரணிகளாகும். இந்தியாவைப் பொறுத்தவரை உணவில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்வதும் ஒரு முக்கியக் காரணமாகும். அன்றாட உணவில் நாம் சேர்க்கும் உப்பின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். ஒரு ... |
| Posted: 30 Mar 2014 11:50 AM PDT உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகத்தான் கருதப்பட்டு, எல்லோருடைய இன்பம், துக்கங்களிலும் அனைவரும் பங்குபெறும் வகையில், நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள இலங்கையில் குடியிருக்கும் தமிழர்கள் தொப்புள்கொடி உறவாகவே கருதப்படுகிறார்கள். அந்த வகையில்தான், 2009–ம் ஆண்டு மே மாதம் 16–ந்தேதி முதல் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை தமிழ்ச்சமுதாயம் மறந்துவிடவில்லை. இலங்கை ... |
| Posted: 30 Mar 2014 10:59 AM PDT மொபைல் கடை திறக்க இருக்கிறேன். யாராவது dealers நம்பர் இருந்தால் தாருங்கள். சென்னை அல்லது புதுசேரி. உங்களுக்கு தெரிந்த மேலும் பல தகவல்களை பதிவிடுங்கள். PS : கீழே உள்ள பெட்டியில் தமிழில் எழுதும் பொழுது ஏன் மேலே உள்ள பெட்டியில் எழுத முடியவில்லை? |
| மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Posted: 30 Mar 2014 09:35 AM PDT கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ... |
| உங்கள் வலது பக்க மூளையையும், இடது பக்க மூளையையும் சீண்டிப் பார்க்கும் சில புகைப்படங்கள்! Posted: 30 Mar 2014 09:16 AM PDT ![]() |
| நண்பர்களே வங்கி நேர்முகத்தேர்வுக்கான பொதுவான வினா விடை தேவை தந்து உதவுங்களேன் Posted: 30 Mar 2014 06:23 AM PDT நண்பர்களே எனது நண்பனுக்கு வங்கி நேர்முகத்தேர்வுக்கான பொதுவான வினா விடை தமிழில் தேவை தந்து உதவுங்களேன் |
| பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Posted: 30 Mar 2014 04:34 AM PDT பெயர்: தமிழ்நேசன்1981 சொந்த ஊர்: தமிழ்நாடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: ஏற்கனவே ஈகரையின் உறுப்பினர் ஆக இருந்துள்ளேன்..கடவுச்சொல் மறந்து விட்டது..மின்னஞ்சல் முகவரியினையும் மாற்றம் செய்து விட்டேன்.. தற்போதைய மின்னஞ்சல் முகவரி newtamilnesan@gmail.com. எனது பழைய பயனர்பெயரில் தொடர நண்பர்கள்..ஈகரை சொந்தங்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது. விருப்பமான நூல்களை மின்நூல் ஆக்கம் செய்வது மிகவும் பிடித்த வேலை. கடல்புறா..யவனராணி..அர்த்தமுள்ள ... |
| ஆய்வாளர்களை அதிர வைத்தவிசித்திர உயிரினம்!!!! Posted: 30 Mar 2014 04:17 AM PDT https://m.ak.fbcdn.net/photos-e.ak/hphotos-ak-frc3/t1.0-0/1506031_1430563640523616_205462822_n.jpg அண்மையில் ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பின்வருமாறு: இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டு ள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது ... |
| சொல் புதிது தேடுவோம் வாருங்கள்... Posted: 30 Mar 2014 03:35 AM PDT நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும். "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து'' என்ற வள்ளுவருக்குக் ... |
| Posted: 30 Mar 2014 01:58 AM PDT சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உண்ணுவாள் தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் அக்கா அதிகம் சாப்பிடுவாள் சமைத்தது மீதமானால் மட்டுமே அம்மா அதிகம் சாப்பிடுவாள்! உண்மைதானே... (நன்றி-முகநூல்) |
| Posted: 30 Mar 2014 01:46 AM PDT ஊரின் பொது இடத்தில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் இறுகிக் காணப்படுகின்றன. நடுநாயகமாக நின்றிருந்தவனின் கையில் ஒரு செப்பேடு பளபளக்கிறது. அனைவரின் கண்களும் செப்பேட்டையே இமைக்காமல் பார்க்கின்றன. அதை அவன் தன் கைகளால் உடைக்கத் தொடங்குகிறான். செப்பேடு முறியத் தொடங்க, சுற்றி நின்றவர் களின் கண்களில் ஆசுவாசம் பெருகுகிறது. ஆர்ப்பாட்டமும் கூச்சலும் இல்லாமல் செப்பேட்டினைச் சிதைத்தவர் தன் கடமை நிறைவேறியதுபோல் நகருகிறார். அரசனின் அதிகாரம் சிதைக்கப்பட்டு மண்ணில் துண்டுகளாகக் கிடந்தது. இந்தச் ... |
| கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Posted: 30 Mar 2014 01:27 AM PDT இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் `Brihadisvara: The Monument and the Living Tradition,' என்ற பெயரிலான கண்காட்சி மார்ச் 20 ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தொடங்கியது. முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என். கோபாலஸ்வாமி மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர். கண்காட்சியின் தொடக்க நாள் அன்று, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரண நடனச் சிற்பங்கள் பற்றி பத்மா சுப்ரமணியம் உரையாற்றினார். அடுத்துப் பேசிய தொல்லியல் அறிஞர் டாக்டர் ... |
| உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை! Posted: 30 Mar 2014 01:24 AM PDT தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும். பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய ... |
| காற்றில் உலாவரும் கல்கியின் படைப்புகள்! Posted: 30 Mar 2014 01:21 AM PDT இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் சேர்த்து ஒலிப் புத்தகங்களாகத் தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் பம்பாய் கண்ணன். ஏறக்குறைய 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட வரி வடிவங்களை ஒலிப் புத்தகமாக்கிய அனுபவம் இவருக்கு உண்டு. லட்சக்கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்ட கல்கியின் சரித்திர நாவல்களான `சிவகாமியின் சபதம்', `பொன்னியின் செல்வன்' ஆகியவற்றை ஒலிப் புத்தகங்களாக இளைய தலைமுறைக்கு நவீன வடிவில் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து கல்கியின் `பார்த்திபன் கனவு' தொடரை ... |
| படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி! Posted: 30 Mar 2014 01:01 AM PDT சுடலைமாடன் கோயில் தெரு நம் பார்வைக்கு குறுகலாக இருப்பது. ஆனால் அந்தத் தெருவின் தோற்றத்தைத் தகர்த்துக்கொண்டு ஒரு விசாலமான மனிதர் அந்தத் தெருவின் கடைக் கோடியில் இருந்தார். திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (தி.க.சி) என்ற ஆளுமையே அவர்; வந்தாரை வரவேற்றுவிட்டால் நேரமும் காலமும் போவதுதெரியாமல் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவரிடம். நீங்கள் அவர் வீட்டுக்குள் கால் வைக்கும்போது ஒருவேளை காலை 8 மணியாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் அவர் அன்றைய பெரும்பாலான நாளிதழ்களையும் நேற்று மாலையில் வாங்கிய இலக்கிய இதழ்களையும் ... |
| ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? Posted: 30 Mar 2014 12:58 AM PDT "இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்" என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். "நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்" என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். "ஆங்கிலத்தைத் தடைசெய்யக் ... |
| Posted: 29 Mar 2014 10:32 PM PDT ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
