Tamil News | Online Tamil News |
- இளைஞர்கள் தேவைகளை அறிந்து இருக்கிறேன்:ஜெகன்மோகன் ரெட்டி
- தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 4 முனை போட்டி: காங்கிரசை சுமக்க தயாரில்லை தி.மு.க.,: ஜெ., பிரசாரத்தில் வழக்கமான 'இலவச புராணம்'
- புதிய கட்சிகளுக்கு இடமில்லை: கருணாநிதி விளக்கம்
- 'துரோகம் இழைத்த காங்., - தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுங்கள்': காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா அறைகூவல்
- மங்களகரமாக துவங்கியது தேர்தல் பிரசாரம்: ஜோதிடர்கள் கையில் கம்யூனிஸ்ட்களுக்கான 'சீட்'
- காங்கிரசின் கடைசி முயற்சியும் தோல்வி: கூட்டணி இல்லை என தி.மு.க., கைவிரிப்பு
- அனைத்து குடும்பங்களுக்கும் வீடு, குடிநீர், அடிப்படை வசதி கிடைக்கும்: அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்ற மோடி உறுதிமொழி
- மின் வாரிய ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை
- ஆளை விடுங்கப்பா; அந்த பையன் என் மகன் தான்; அடம் பிடித்த என்.டி.திவாரி வழிக்கு வந்தார்
- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தவர் திருட்டுப்பசங்க: வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பரூக் அப்துல்லா
- மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்: இலங்கை அரசு தகவல்
| இளைஞர்கள் தேவைகளை அறிந்து இருக்கிறேன்:ஜெகன்மோகன் ரெட்டி Posted: எலுரு : இளைஞர்களின் தேவைகளை நான் அறிந்து இருக்கிறேன் என்றும் சந்திரபாபு நாயுடுக்கு அதெல்லாம் தெரியாது என்கிறார் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்., கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.சந்திரபாபு நாயுடு இளைய தலைமுறை பிரதிநிதி என கூறுகிறார். நான் ஆட்சிக்கு வந்த பின்னர் இளைஞர்களின் ஒவ்வொருவரின் கனவையும் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறேன் என்றார்.தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு இளைஞர்கள் நிலை தெரியாது.அதுவும் குறிப்பாக மாணவர்கள் பற்றி தெரியவே தெரியாது. அவர் பழைய தலைமுறைக்கு சொந்தக்காரர்.பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் ... |
| Posted: லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தயாராக இல்லை என்பதால், தமிழகத்தில், நான்கு முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், காஞ்சிபுரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கிய, முதல்வர் ஜெ., தன் அரசால் வழங்கப்படும் இலவசங்கள் குறித்த புராணத்தையே தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தேதி, இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், மத்திய அரசில் முக்கிய இடம் பிடித்து விடலாம் என, திட்டமிட்டுள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 'கம்யூனிஸ்ட் ... |
| புதிய கட்சிகளுக்கு இடமில்லை: கருணாநிதி விளக்கம் Posted: சென்னை: ''தி.மு.க., கூட்டணியில், புதிய கட்சிகளுக்கு, இடம் இருப்பதாக தெரியவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் அவரது பேட்டி: தி.மு.க., தேர்தல் அறிக்கை, இரு நாட்களில், வெளியிடப்படும். கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, இரு நாட்களில் நடத்தப்படும். வேட்பாளர்கள் பட்டியல், சில நாட்களுக்குள் வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணியில், புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.தி.மு.க., நேர்காணல் முடிந்தது; தொகுதி பங்கீடு இன்று துவங்குகிறது: லோக்சபா தேர்தலில், 40 ... |
| Posted: காஞ்சிபுரம்: ''மத்தியில் உள்ள காங்., ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க, அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள்,'' என, காஞ்சிபுரத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு, மத்தியில் உள்ள காங்., அரசு செய்த துரோகங்களையும், முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் துவக்கினார். பிரசார பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த, 2011 தேர்தலில், தமிழகத்தில், குடும்ப ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க ... |
| மங்களகரமாக துவங்கியது தேர்தல் பிரசாரம்: ஜோதிடர்கள் கையில் கம்யூனிஸ்ட்களுக்கான 'சீட்' Posted: அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில், எல்லாமே ஜோதிடம் மற்றும் சாஸ்திரப்படிதான் நடக்கும். அந்த வகையில், லோக்சபா தேர்தலுக்காக, நேற்றிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தை துவங்கி இருப்பது, ஜோதிடர்களின் அறிவுரைப்படியே.காஞ்சிபுரத்தில், நேற்று மாலை, தேர்தல் பிரசாரத்தை துவங்கினார், ஜெயலலிதா. இதற்காக அவர், ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரத்துக்குச் சென்றார். காஞ்சிபுரத்தில், தேர்தல் பிரசாரம் துவங்கிய அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும், அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும், ஆங்காங்கே இருக்கும், லோக்கல் தலைவர்களை அழைத்து, தேர்தல் பிரசாரத்தை ... |
| காங்கிரசின் கடைசி முயற்சியும் தோல்வி: கூட்டணி இல்லை என தி.மு.க., கைவிரிப்பு Posted: காங்கிரசின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 'கூட்டணியில் இடமில்லை' என, தி.மு.க., திட்டவட்டமாக கூறி, கைவிரித்து விட்டது. இதையடுத்து, நேர்காணலை முடித்த சூட்டோடு, இன்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை தொகுதி உடன்பாட்டை அறிவிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் எப்படியும் இடம் கிடைத்து விடும் என்ற, எதிர்பார்ப்பில் தமிழக காங்கிரசார் இருந்தனர். கட்சி மேலிடம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்ற ரீதியில், தமிழக காங்கிரசார், கவலைப்படாமல் ... |
| Posted: முசாபர்பூர்: ''மத்தியில், எங்கள் தலைமையிலான ஆட்சியில், வரும், 10 ஆண்டுகளில், நம் நாட்டில் உள்ள ஏழைகளின் அடிப்படை தேவைகள் நிறைவேறும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவதே, எங்களின் கனவு,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உறுதியுடன் பேசினார்.பீகார் மாநிலம், முசாபர்பூரில் நேற்று நடந்த, பா.ஜ., லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பங்கேற்றார். சமீபத்தில், பா.ஜ.,வுடன் இணைந்த, ராம்விலாஸ் பஸ்வான், அவர் மகன் ... |
| மின் வாரிய ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை Posted: கோடை காலத்தில், மின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், அப்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க, மின் வாரிய ஊழியர்கள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.40 நாட்கள்: தமிழ்நாடு மின்சார வாரியத் தில், கள உதவியாளர், தொழிற்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு, 12 நாட்கள் தற்செயல் விடுப்பு; இரண்டு நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு; 15 நாட்களுக்கு, ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. மேலும், பணியில் சேர்ந்தது முதல், ஓய்வு பெறும் ... |
| ஆளை விடுங்கப்பா; அந்த பையன் என் மகன் தான்; அடம் பிடித்த என்.டி.திவாரி வழிக்கு வந்தார் Posted: புதுடில்லி: ஆறு ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு பின், டில்லியைச் சேர்ந்த ரோகித் சேகர், 'என் மகனே' என, காங்., மூத்த தலைவர், என்.டி.திவாரி, ஒருவழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.காங்., மூத்த தலைவர்களில் ஒருவர், என்.டி.திவாரி, 89; உத்தரகண்ட், உ.பி., மாநிலங்களின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஆந்திர மாநில கவர்னராக இருந்தபோது, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதையடுத்து, கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.மரபணு சோதனை: இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த ரோகித் சேகர் என்பவர், 2008ல், 'திவாரி தான், என் தந்தை. ஆனால், அவர், இதை ஏற்க ... |
| ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தவர் திருட்டுப்பசங்க: வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பரூக் அப்துல்லா Posted: ஸ்ரீநகர்: 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தவர்கள், சரியான திருட்டுப்பசங்க!' என, கூறிய, அந்த மாநிலத்தை சேர்ந்த, மத்திய அமைச்சர், பரூக் அப்துல்லாவுக்கு, மாநில சட்டசபையில் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர், ஒமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, பரூக் அப்துல்லா, மத்திய, புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சராக உள்ளார். இவர், நீண்டகாலம், அந்த மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.மகா ... |
| மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்: இலங்கை அரசு தகவல் Posted: கொழும்பு: சர்வதேச மனித உரிமை கூட்டம், ஜெனிவாவில் நேற்று, துவங்கியது. போர் குற்றம் குறித்து உரிய விசாரணை நடத்த தவறிய இலங்கைக்கு எதிராக, இந்த கூட்டத்தில், அமெரிக்கா, மூன்றாவது முறையாக, தீர்மானம் கொண்டு வரும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா.,. தெரிவித்துள்ளது. சரண் அடைய சென்ற ஏராளமான விடுதலை புலிகளை, இலங்கை ராணுவம் சுட்டு கொன்றதாக புகார் உள்ளது. 'இறுதி கட்ட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 04,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |