Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு

Posted: 03 Mar 2014 11:45 AM PST

ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு


The seven Harry Potter novels available as ebooks in Eegarai Library






தரவிறக்கம் செய்ய:
http://eegarai.com/ebooks/?p=1486

அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்கள் மின்நூல் வேண்டுமா?

Posted: 03 Mar 2014 11:01 AM PST

நண்பர்களே! அர்த்தமுள்ள இந்துமதம் பத்துபாகங்கள் மின்நூல் வேண்டுபவர்கள் http://thamizhthenee.blogspot.com/ இந்த தளத்திற்கு வாருங்கள்.பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கருத்துரை பகுதியில் தெரிவியுங்கள்.கூடவே உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புத்தகத்தின் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.இது நிபந்தனை அல்ல, வேண்டுகோள். அல்லது tamilnesan1981@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்,

விஜயமகாதேவி-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய மின்நூல்

Posted: 03 Mar 2014 10:16 AM PST

வாசக நண்பர்களே! சாண்டில்யனின் தெளிவான மின்நூல்வரிசையில் பண்ணிரெண்டாவது நாவலாக விஜயமகாதேவி. இந்நூலை ஓவியங்களோடு ஸ்கேன் செய்து அழகாக வழங்கியுள்ள அருமை நண்பர் ஜீவா அவர்களுக்கு முதற்கண் நன்றியை தமிழ் வாசகர்கள் சார்பாகவும் தமிழ்த்தேனீ வாசகர்கள் சார்பாகவும் கூறிக்கொள்கிறேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். பதிவிறக்க

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Posted: 03 Mar 2014 09:44 AM PST

அதிக எடை பல்வேறு நோய்களை உடம்பில் கொண்டுவந்துவிடுகிறது.. எடையை குறைக்க என்ன செய்யலாம் என்று தவிப்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்கள்: * எந்த உணவின் மீது அதிகம் ஆசை கொள்கிறீர்களோ, எதை அதிகம் சாப்பிடுகிறீர்களோ, அதை முதலில் படிப்படியாக குறைத்து விடுங்கள். * கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை குறைத்து விடுங்கள். அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், சட்டென்று உங்கள் உடல் எடையையும் நினைத்துக் கொள்ளுங்கள். போகப்போக நீங்களே குறைத்து விடுவீர்கள். * நீங்கள் அருந்தும் பால் கொழுப்பு நீக்கப்பட்டதாக ...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...

Posted: 03 Mar 2014 09:41 AM PST

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் ...

திரைப்பட செய்திகள்

Posted: 03 Mar 2014 09:36 AM PST

இனி அதிரடி வேடங்கள்தான் - ப்ரியாமணி - - - பருத்தி வீரனுக்காக தேசிய விருதுபெற்ற நடிகை ப்ரியாமணிக்கு தமிழ்த் திரையுலகில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. - அதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது, ஒரு கன்னடப் படத்தில், சி.பி.ஐ., அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதுவரை தான் நடிக்காத அதிரடியான வேடம் என்பதால், இந்த கதாபாத்திரத்தில், தன்னைக் கவர்ந்த சில பெண் சி.பி.ஐ. அதிகாரிகளை முன்னுதாரணமாக வைத்து நடிப்பதாகக் கூறுகிறார். - இனி மென்மையான பிரியாமணியைத் திரையில் ...

பிரம்மன் - திரை விமர்சனம்

Posted: 03 Mar 2014 09:28 AM PST

நடிகர் : சசிகுமார் நடிகை : லாவண்யா திரிபாதி இயக்குனர் : சாக்ரடீஸ் இசை : தேவி ஸ்ரீபிரசாத் ஓளிப்பதிவு : ஜோமோன் டி ஜான் / பைசல் அலி சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார். சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக ...

வண்ணங்களை கண்களால் புசியுங்கள் நாக்கினால் ருசிக்காதீர்

Posted: 03 Mar 2014 09:07 AM PST

கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்' என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது! ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, ...

டிரைவிங்கின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!!

Posted: 03 Mar 2014 08:55 AM PST

கார் ஓட்டும்போது சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். இது நமக்கும், சாலையில் வரும் பிறருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும். ஒரு சில சிறிய விஷயங்கள்தான் பெரும்பான்மையான கோர விபத்துக்களுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, சில சிறிய விஷயங்களை எப்போதும் கவனத்தில் வைத்திருந்தால், பெரிய பாதிப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும். - கார் கன்டிஷன் காரில் கிளம்புவதற்கு முன்னர் கார் கன்டிஷன் சரியாக இருக்கிறதா, அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். பேட்டரி, ...

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

Posted: 03 Mar 2014 08:48 AM PST

4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்- ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார். 14 வயதில்- என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை. 18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் ...

புதிய இந்தியா!

Posted: 03 Mar 2014 08:13 AM PST

"levis jeans" ஸும்,"van heusen"ஸும் வந்ததால் - எங்களின் பருத்தி ...காதி துணிகள் ... பழசாய்ப் போயின! "நைட்டியும்","கவுனும்" வந்ததால் - எங்களின் தாவணிகளும்,புடவைகளும் தரமிழந்துப் போயின! "pizza" வும் "burger" ம் வந்ததால் - எங்களின் இட்லி,சப்பாத்திக்களை சுவை இழக்க வைத்தன! "axe perfume" ம் "olay" க்களும் வந்ததால் - எங்களின் மஞ்சளும்,மருதாணிக்களும் வாசம் இழந்துப் போயின! "valentine's day, friendship day" க்களும் வந்ததால் - எங்களின் நட்புக்களும்,கல்யாணங்களும் கோர்ட் படிகள் ...

எதிர்பார்க்காத பதில்கள்!!!!.

Posted: 03 Mar 2014 08:09 AM PST

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்? பதில்: அவரது கடைசி போரில்... ... 2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது? பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்..... 3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது? பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு. 4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன? பதில்: இன்னொரு பாதி? 5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்? பதில்: கல் ஈரமாகி விடும். 6. கேள்வி: ஒரு ...

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Posted: 03 Mar 2014 07:52 AM PST

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ...

தமிழ் மொழி!!!!!......

Posted: 03 Mar 2014 07:38 AM PST

நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமுதினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை; அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய ...

எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது

Posted: 03 Mar 2014 07:34 AM PST

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம். தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும். நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம். மயக்கம், ...

கண்தானம் செய்வது எப்படி?

Posted: 03 Mar 2014 07:07 AM PST

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். 2. மின்விசிறியை இயக்கக்கூடாது. 3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். 4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும். 5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும். யார் கண்தானம் செய்ய முடியாது? நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், ...

ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......

Posted: 03 Mar 2014 07:04 AM PST

தன் எஜமானியைக் கொன்றவரை ஒரு கிளி காட்டிக் கொடுத்துள்ளது. தடயமின்றித் தவித்து வந்த போலீஸாருக்கு உரிய நேரத்தில் கொலையாளியை அந்தக் கிளி அடையாளம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேஷ்வர் பகுதியில் வசிப்பவர் விஜய்சர்மா. உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23-ம் தேதி விஜய்சர்மா ஒரு திருமணத்துக்குச் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம் சர்மா (45) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதை மிகவும் திறமையுடன் செய்த கொலையாளி, இது குறித்த எந்தவிதமான ...

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!

Posted: 03 Mar 2014 06:58 AM PST

சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. உள்ளாடை அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும். மொபைல் பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் ...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…

Posted: 03 Mar 2014 06:08 AM PST

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. 'முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு' (100 பேர் வரை), 'பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு ...

ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்.

Posted: 03 Mar 2014 05:48 AM PST

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது...!!  அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது...!!   டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்........   ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்........   தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும். ஆனாஇருமல் மருந்து சாப்பிட்டா ...

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

Posted: 03 Mar 2014 05:26 AM PST

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ? பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ... இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை ...

முன்னேற்றத் தடைகள் மூன்று

Posted: 03 Mar 2014 05:21 AM PST

முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது. இவை நம்மிடையே உள்ளவை இந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன மூன்று பண்புகளையும் முடிவு, முயற்சி, ...

ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….

Posted: 03 Mar 2014 05:16 AM PST

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள். சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது ...

இளமை தரும் ஆரஞ்சு பழம்

Posted: 03 Mar 2014 05:12 AM PST

http://www.dinakaran.com/Healthnew/H_image/ht2439.jpg உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த ...

நம்மை நாம் நம்ப வேண்டும்

Posted: 03 Mar 2014 05:11 AM PST

ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல! நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது. ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய ...

மனக்கண்ணாடி

Posted: 03 Mar 2014 05:09 AM PST

தன்னம்பிக்கை, சாதனைகள் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் எண்ணம் இருக்கும். அது என்ன தெரியுமா? அதிகம் படித்தவர்கள், முதல் மதிப்பெண் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள்… என்று. அப்படி இல்லையென்று இந்த மாதிரியான 'இமேஜ்'ஜை உடைத்துக் காண்பித்தவர்கள் நம் அருகிலேயே இருக்கலாம். சாதனை என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். இதிலே ஏற்றத்தாழ்வுக்கு இடமே இல்லை. காலையில் எழுகின்ற நேரம் முதல் இரவு படுக்கையைத் தட்டிப் போடும் வரை நாம் எல்லோருமே ஒருவித குறிக்கோளை நோக்கி, தன்னம்பிக்கையை நோக்கி நகர்கிறோம் என்பதை ...

ரஷியாவின் 2014-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி

Posted: 03 Mar 2014 04:33 AM PST


-
ரஷியாவின் 2014-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி
மாஸ்கோவில் நடைபெற்றது.

அதில் அழகியாக தேர்வு பெற்ற 23 வயது யுலியா
அலிபோவாவுக்கு (நடுவில் நிற்பவர்) கிரீடம் சூட்டப்பட்டது
--

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி

Posted: 03 Mar 2014 03:57 AM PST

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் 'பிடித்து' வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது. சமீபத்தில் பிரான்சில் 'கார்மட்' எனும் உயிரி மருந்தியல் துறை நிறுவனம் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது. மாரடைப்பு வந்தவரின் இதயத்தில் ...

சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..

Posted: 03 Mar 2014 01:57 AM PST

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

பெண்மை

Posted: 03 Mar 2014 01:41 AM PST

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
பெண் கண்டு நீயேன் இரங்கவில்லை
பெற்றோர் பாதுகாத்து வளர்ந்தவள்
பெண்மை பறிபோய் கிடப்பதேன்?
பெண்மையை பறித்ததோடல்லாது
பெண்ணின் உயிரையுமேன் பறித்தாய்?
பெரும்பதவி வகித்தாலும் இவள்
பெண்தானே எனும் இளப்பமா?
பெருஞ்செல்வம் ஈன்றாலும்
பெதும்பை தான் என்றாலும்
பெண் கண்டாய் பேரிளம்பெண்ணிலும்
பெண் கண்டாய் பேதையிலும்
பெண் மட்டுமே கண்டாய் போதையில்???

புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்

Posted: 03 Mar 2014 01:21 AM PST

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

பேஸ்புக் நிறுவனர் சொத்து ரூ.2 லட்சம் கோடி

Posted: 03 Mar 2014 12:18 AM PST

பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான மார்க் ஜூகர்பெர்க் சொத்து கடந்த மே 2012ல் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்தபோது 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து 68.46 அமெரிக்க டாலரானது. சமீபத்திய கணக்கீட்டின்படி ஜூகர்பெர்க்கிற்கு 47.89 கோடி பங்குகள் உள்ளதாக நாஸ்டாக் பங்குச்சந்தை தெரிவிக்கிறது. இது மொத்த பங்கில் 19.6 சதவீதம் ஆகும். இதன்படி தற்போதைய அவரது சொத்து ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 600 கோடி. Nandri Dinakaran

”முழங்கு தமிழ்...!” - கவிஞர் தமிழ்க்காதலன்

Posted: 02 Mar 2014 10:49 PM PST

எட்டுக எட்டுக வையகம் எட்டுக கொட்டுக கொட்டுக வானுர கொட்டுக மானுடம் பிறந்த மண்கதை கொட்டுக மாந்தர் குழாம் காதில் உறைக்கவே தட்டுக தட்டுக பண்ணிசை தட்டுக பைந்தமிழ் பாடியே நல்லிசை தட்டுக வாய்மொழி யாம்தமிழ் வையகத் துதித்த தொன்மொழி யாம்புகழ் கொண்டிட கொட்டுக இலக்கண மரபுகள் பிறந்ததும் தமிழிலே இசையியல் மரபதன் ஊற்றாம் தமிழ் இன்பத்தை பகிரவே இயல் இசைத்தமிழ் உணர்வெலாம் ஊற்றாக பொங்கிடும் தமிழ் பன்னெடுங் காலமாய் பாடிய தமிழ் தன்னெடுங் காவியம் மேவிய தமிழ் பொன்னேடு பொதிந்த பொக்கிசத் தமிழ் என்னாடு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™