Tamil News | Online Tamil News |
- கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை: சரத்பவார்
- மோடியை அச்சுறுத்தும் வகையில் பேசிய மசூது கைது: ரத்தானது ஜாமின்: 14 நாள் காவலில் வைக்க உத்தரவு
- கூடுதலாக 22 வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையா?மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மத்திய அரசு
- கொள்கைக்காக எந்த தியாகத்துக்கும் தயார் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேச்சு
- சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்தது உண்மைதான் : ராமநாதபுரத்தில் ஜெ., விளக்கம்
- கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமர்: ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை
- ஆளும்கட்சி, ஆண்ட கட்சிகளின் சொத்து பட்டியல்: பிரசாரத்திற்கு கையில் எடுக்கும் பா.ஜ., கூட்டணி
- முதல்வரின் ஹெலிகாப்டரிலும் சோதனை: தேர்தல் அதிகாரி தகவல்
- சென்னை 'சூப்பர்கிங்ஸ்'க்கு தோனி 'குட் பை?'சூதாட்ட சர்ச்சையால் 'இமேஜ்' பாதிக்கப்படுவதாக கோபம்
- கடல் மேல் மிதக்க விட்டான்:என். சத்தியமூர்த்தி
- தனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்
| கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை: சரத்பவார் Posted: புதுடில்லி: மன்மோகன் சிங்கை பாராட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கட்சி சரியாக கையாளவில்லை என குறைகூறியுள்ளார். லோக்சபாவுக்கு முதல் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பவாரின் கருத்து காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் நீணட காலமாக கூட்டணியில் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் மத்தியிலும், கடந்த 1999ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநில அரசிலும் பங்கெடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகள் பவாருக்கு அதிருப்தியை ... |
| மோடியை அச்சுறுத்தும் வகையில் பேசிய மசூது கைது: ரத்தானது ஜாமின்: 14 நாள் காவலில் வைக்க உத்தரவு Posted: ஷகாரன்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, 'துண்டாக்கி கொலை செய்வேன்' என, பேசிய, உ.பி., காங்கிரஸ் வேட்பாளர், இம்ரான் மசூது, கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு தள்ளுபடியானதால், 14 நாட்கள் கோர்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின், 16வது லோக்சபாவுக்கான தேர்தல், வரும், 7ம் தேதி துவங்கி, ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்திற்கு, வரும், 24ம் தேதி தேர்தல் நடக்கிறது.பல மாநிலங்களில், வேட்பு மனு தாக்கல் துவங்கி, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில், நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இன்னும் ... |
| கூடுதலாக 22 வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையா?மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மத்திய அரசு Posted: நாட்டில், வி.ஐ.பி., கலாசாரம் பெருகிவிட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மேலும், 22 வி.ஐ.பி.,க்களுக்கு, மத்திய துணை ராணுவப் படையின் சிறப்பு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை, ஊழல் போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவால், மக்கள் வரிப்பணம் மேலும் வீணடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.100 நாட்களில்...மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ... |
| கொள்கைக்காக எந்த தியாகத்துக்கும் தயார் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேச்சு Posted: லக்னோ:""தனிப்பட்ட குடும்பத்தை விட, சமூகமே உயர்ந்தது. நாட்டுக்காகவும், கொள்கைக்காகவும், எந்த தியாகத்தையும் செய்ய தயார். எங்களின் கொள்கைகளை, காங்., துணைத் தலைவர் ராகுல் விமர்சிப்பது குறித்து, கவலையில்லை,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.சமூகமே உயர்ந்ததுஉ.பி., மாநிலம், பக்பாத்தில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பேசியதாவது:எனக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து, காங்., துணைத் தலைவர் ராகுல், விமர்சித்து பேசுகிறார். எனக்கென, ஒரு கொள்கை உள்ளது. ... |
| சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்தது உண்மைதான் : ராமநாதபுரத்தில் ஜெ., விளக்கம் Posted: ராமநாதபுரம்: ""சேது சமுத்திர திட்டம், ஒரு பாழான திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும். முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான்,'' என, ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து, அவர் பேசியதாவது:ஏழை மக்களின் நலன் கருதி சமையல் காஸ் சிலிண்டர்களின், மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்துள்ளேன். சிறுபான்மையினர் நலனுக்காக, உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளேன். நோன்புக் கஞ்சி அரிசிக்கு கூடுதல் மானியம் ... |
| கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமர்: ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை Posted: பெருந்துறை:திருப்பூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதனை ஆதரித்து, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பவானி ஆகிய இடங்களில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:பெருங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். நீதிமன்ற சம்மனை மதித்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், வழக்கை முடிந்த வரை இழுத்தடிக்கிறார்.ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம், 'செய்வீர்களா, செய்வீர்களா' என கேட்கிறார். நாங்கள் கேட்கிறோம், 'நீங்கள் என்ன செய்தீர்கள்' ... |
| ஆளும்கட்சி, ஆண்ட கட்சிகளின் சொத்து பட்டியல்: பிரசாரத்திற்கு கையில் எடுக்கும் பா.ஜ., கூட்டணி Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட, ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலையும், அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட, கருணாநிதி குடும்பத்தினரின், சொத்து பட்டியலையும், பிரசாரத்திற்கு பயன்படுத்த, பா.ஜ., கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.அபரிதமான செல்வாக்கு:கடந்த லோக்சபா தேர்தலைப் போல் இல்லாமல், இந்த முறை வித்தியாசமாக ஐந்து முனைகளாக நின்று தமிழக கட்சியினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., மக்களிடம் அபரிதமான செல்வாக்கு உள்ளது என்ற நம்பிக்கையில், முதன் முறையாக, 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுகிறது. ... |
| முதல்வரின் ஹெலிகாப்டரிலும் சோதனை: தேர்தல் அதிகாரி தகவல் Posted: சென்னை:""முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும், ஹெலிகாப்டரிலும் சோதனை நடத்தப்படுகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரின், வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. முதல்வர் பயணம் செய்யும், ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்படுகிறது.அரசியல் தலைவர்கள், விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் பயணம் செய்தால், அங்கு ... |
| சென்னை 'சூப்பர்கிங்ஸ்'க்கு தோனி 'குட் பை?'சூதாட்ட சர்ச்சையால் 'இமேஜ்' பாதிக்கப்படுவதாக கோபம் Posted: சென்னை:சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுகிறார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பையும் உதற உள்ளார்.கடந்த, 2008ல், பிரீமியர், 'டுவென்டி-20' தொடர் துவங்கியபோது, சென்னை அணியின் கேப்டனாக, தோனி நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான தலைமையில், சென்னை அணி, 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. முத்கல் குழு அறிக்கை:தொடர்ந்து, பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசனுக்கு சொந்தமான, 'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தின், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ... |
| கடல் மேல் மிதக்க விட்டான்:என். சத்தியமூர்த்தி Posted: 'இலங்கை போர் குற்றம்' குறித்த அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில், இந்தியா பங்கெடுக்கவில்லை என்பதை அறிந்த; அடுத்த நாளே, அந்நாட்டு சிறைகளில் வாடும், அனைத்து தமிழக மீனவர்களையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே விடுவித்ததோடு, முடிச்சு போட்டு பேசுவது, அரசியல் ரீதியாக சிலருக்கு பயன்படலாம். ஆனால், லோக்சபா தேர்தலுக்கு, இதனால், யாருக்கும், எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றே சொல்லலாம்.ஜெனிவா வாக்களிப்பை, இந்தியா புறக்கணித்ததற்கு காரணகர்த்தா என்று சுட்டிக் காட்டப்படும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் ... |
| Posted: தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.நிர்ணயம் : தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை, அரசால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு செய்து வருகிறது. இக்குழு, மூன்று ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 30,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |