Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் முழுவதும் நாளை மனு தாக்கல் ஆரம்பம்: ஏப். 5ம் தேதி வரை ஒரு வாரம் அவகாசம்

Posted:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், நாளை, 29ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்., 5ம் தேதி வரை, மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, அசாமில், ஐந்து மற்றும் திரிபுராவில், ஒரு தொகுதிக்கும், ஏப்., 7ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 21ம் தேதியுடன் முடிந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 24ம் தேதி, வேட்பாளர் இறுதி பட்டியல், ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பை புறக்கணித்தது இந்தியா

Posted:

ஜெனிவா: சர்வதேச மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.மனித உரிமை மீறல்: இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே, 2009ல் நடந்த சண்டையின் போது, தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்கள் ஏராளமாக நடந்தன. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்த தவறிய, அதிபர், ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. 'இலங்கையில், போர் நடந்த பகுதிகளில், மனித உரிமை மீறல்கள் ...

'கருப்பு பண முதலைகள் பட்டியல் கிடைக்கவில்லை'

Posted:

புதுடில்லி: ''சுவிஸ் வங்கிகளில், கருப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் மற்றும் அது தொடர்பான விவரங்களை, இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ள அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது,'' என, காங்கிரசை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறினார்.கண்டனம்: வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் முடக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை, வெளிக்கொண்டு வருவதற்கு, மத்திய அரசு, 60 ஆண்டுளாக எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை; இது வருந்தமளிக்கிறது என நேற்று முன் தினம் சுப்ரீம் கோர்ட் தன் கண்டத்தை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் ...

கனிமொழி, ராஜாத்தியிடம் அழகிரி பேசியது என்ன? நியாயம் கிடைக்க செய்வதாக வாக்குறுதி

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி ஆகியோரை, சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில், அழகிரி நேற்று காலை சந்தித்தார். அவர்களுடன், ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, 'எனக்கும், என் ஆதரவாளர்களுக்கும் கட்சியில் கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் இருவரும் ஆதரவு தர வேண்டும்' என, அழகிரி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, 'உன் வேண்டுகோளை, கருணாநிதியிடம் தெரிவிக்கிறேன். அதுவரை, அமைதியாகவும், பொறுமையாகவும் இரு' என, ராஜாத்தி, அழகிரிக்கு யோசனை தெரிவித்ததாகவும், தகவல்கள் ...

பி.சி.சி.ஐ., சீனிவாசனுக்கு பதில் கவாஸ்கர்: பரிந்துரைக்கிறது உச்சநீதிமன்றம்

Posted:

புதுடில்லி: 'பிரீமியர் தொடரில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க வேண்டும். சீனிவாசனுக்குப் பதில், கவாஸ்கரை பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சென்னை அணியின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.ஆறாவது பிரீமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. இதை மூடி மறைக்க முயற்சித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) முயற்சிகள் பலிக்கவில்லை. இதுகுறித்த, பி.சி.சி.ஐ., விசாரணையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதி, முகுல் முத்கல் தலைமையில், மூன்று பேர் ...

போனால் போகட்டும் போடா! விரக்தியில் மன்மோகன் சிங்

Posted:

பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையில், இந்த லோக்சபா தேர்தல் மறக்க முடியாத ஒரு வரலாறாக அல்ல வடுவாகவே இருக்கும்.பின்னே! கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெரிய ஜனநாயக தேசத்தின் பிரதமராக இருந்த ஒருவர், சில மாதங்களில் யாராலும் கண்டுகொள்ளப்படாத நபராக புறக்கணிக்கப்படுகிறார் என்றால், அதை விட வலி தரும் விஷயம் அவருக்கு வேறு என்ன இருக்க முடியும்? விஷயம் இதுதான். உத்தரபிரதேச மாநிலத்தில், லோக்சபா தேர்தலை ஒட்டி, பிரசாரங்களுக்கு செல்ல வேண்டிய தலைவர்கள் பட்டியலை, காங்., வெளியிட்டு உள்ளது. அதில், மொத்தம் 40 பேர் உள்ளனர். இந்தமுறை, பாலிவுட் நட்சத்திரங்களை பிரசாரத்திற்கு ...

கோவை மக்களுக்கான திட்டங்களை முடக்கினார் ஜெ.,: பட்டியலிட்டு ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted:

''கோவை மக்களுக்காக, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டுவிட்டன. ஜெ.,வுக்கு புத்தி புகட்டும் வகையில் தேர்தல் முடிவு அமைய வேண்டும்,'' என, கோவையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில், ஸ்டாலின் பேசினார்.கோவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சோமனூர், பல்லடம், சூலூர், சிங்காநல்லூர், சவுரிபாளையம், கணபதி, சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2011 தேர்தல் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்போம், ...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும்: காங்., - என்.ஆர்.காங்., மீது ஜெ., சரமாரி குற்றச்சாட்டு

Posted:

புதுச்சேரி: காங்., தி.மு.க., என்.ஆர்.காங்., சேர்ந்து, புதுச்சேரிக்கு செய்த துரோகத்துக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மத்தியில் அ.தி.மு.க., அங்கம்வகிக்கும் ஆட்சி அமையும்போது, அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும், பாதிப்பில்லாத, தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும். ''மத்தியில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்,'' என, புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா பேசினார்.புதுச்சேரி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து, அவர் நேற்று பேசியதாவது: நடக்க உள்ள ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 'அத்தனையும் பொய்': சொல்கிறார் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி

Posted:

கும்லா: ''காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையில், நம்ப முடியாத, தவறான வாக்குறுதி களை அளித்துள்ளது; அவை, அனைத்தும் பொய் யானவை; கடந்த 10 ஆண்டுகளில், அளித்த உறுதிமொழிகளை, அக்கட்சி நிறைவேற்ற வில்லை. இது, காங்கிரசார் திருந்த வில்லை என்பதையே காட்டுகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த, முதல்வர், சிபு சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் மாநிலம், கும்லாவில், நேற்று தேர்தல் பிரசாரம் செய்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியதாவது: காங்கிரஸ் கட்சி, போலியான உறுதிமொழிகளுடன் தேர்தல் அறிக்கை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™