Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வைணவக் கல்லூரியில் பக்திக் கருத்தர்ங்கம்

Posted: 27 Mar 2014 11:51 AM PDT

நேற்று (16.03/14) டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற "பக்தி இலக்கியங்களில் பன்முகப் பார்வை" என்னும் தலைப்பில் நடந்த மாநிலக் கருத்தரங்கில் "நாயன்மார்கள் அறுபத்து நால்வர்" என்று இயற்பகை நாயனாரின் துணைவியாரைப் பற்றிப் பேசிய போது என் மாணவிகள் பதிவு செய்தது. (நேரமின்மையால் கட்டுரை வாசிக்கவில்லை) (இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்) நாயன்மார்கள் அறுபத்து ...

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!

Posted: 27 Mar 2014 09:44 AM PDT

தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர் உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் ...

வெள்ளாமையும் நாங்களே... விக்கிறதும் நாங்களே!

Posted: 27 Mar 2014 09:36 AM PDT

வேளாண் விளைபொருட்களை விவசாயிகளே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் திட்டம் கர்நாடகாவில் அறிமுகமாகியுள்ளது நாட்டிலேயே முதன்முறையாக, புதிய சந்தைக் கொள்கைகள் அடங்கிய, விவசாய விளைபொருட்களுக்கான ஒருங்கிணைந்த சந்தைத் திட்டம் கர்நாடகாவில் அறிமுகமாகியுள்ளது. இதன்படி தொழில் நிறுவனங்களைப் போல, தங்களின் விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்துகொள்ளலாம். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் ...

மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

Posted: 27 Mar 2014 09:30 AM PDT

ஊரே கூடி கோயில் கட்டினால் பக்தி மணக்கும்; பள்ளிக்கூடம் கட்டினால் கல்வி சிறக்கும். இந்த வரிசையில், மக்களின் நோய் தீர்க்க ஒரு ஊரே கைகோர்த்து மருத்துவமனை கட்டியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது திருப்பூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊத்துக்குளி. கிராமத்தில், ஊர் மக்களே சேர்ந்து மருத்துவமனை கட்டி, அதற்கு மக்கள் மருத்துவமனை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அரசின் உதவியையோ, தொண்டு நிறுவனங்களின் உதவியையோ நாடாமல், தங்களது உழைப்பில் கிடைத்த வருமானத்தைச் சேர்த்து அந்த மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார்கள். ...

வாராயோ!

Posted: 27 Mar 2014 08:51 AM PDT

http://kaviyinkavi.blogspot.in/2014/01/normal-0-false-false-false-en-in-x-none.html#links அந்தி ஆதவன் மங்கி போக பன்னீர் தெளித்தது வரவேற்று காத்திருக்கிறது பனித்துளிகள்! மார்கழியில் மயங்கிய மாதவனாய் மன்னவனாய் நானிருக்க! - உந்தன் ஆடையும் அச்சம் கொள்ள! மனம் விரும்பும் மல்லிகையை சூட்டி மெழுகுச் சிலை மேனியோ நாணம் கொள்ள! நழுவும் முந்தானையை தொட்டிலக்கி நெஞ்சில் பிறந்த காதலை தாலாட்ட வாராயோ! பெண்ணே வாராயோ! -          கவிதா தினேஷ்குமார்

இந்த ஜென்மம் போதுமே!

Posted: 27 Mar 2014 08:46 AM PDT

http://kaviyinkavi.blogspot.in/2014/03/blog-post.html#links இந்த ஜென்மம் போதுமே!!! தீ மூட்டும் காதல்வத்திக்குச்சி, நீதானே! – அது நீ தானே! என்னை நனைக்கும் காதல் மழையும், நீதானே! – அது நீ தானே! உன்னை நான் தேடுகிறேன்! என்னை நான் தேடுகிறேன்! பசலையும் என்னைத் தீண்டுதே அன்பே! என் அன்பே!!! காதல் விளையாட்டில் சேர்ந்தே தானே – நாம் தொலைந்து போனோமே! - அங்கே காதல் சடுகுடு நாமும் ஆடினோமே! கண்ணில் உன்னை சுமந்தேனே! உன் தோளில் நானும் சாய்ந்தேனே! ஜென்மம் போதுமே-  எனக்கு இந்த ஜென்மம் ...

எனது கவிதைகள்

Posted: 27 Mar 2014 08:35 AM PDT

வானவில் தமிழ் சாப்ட்வெர் நிறுவ உதவி வேண்டும்

Posted: 27 Mar 2014 08:16 AM PDT

நண்பர்களுக்கு மாலை வணக்கம். என்னுடைய சிஸ்டத்தில் வானவில் தமிழ் சாப்ட்வெர் (Vanavil-W7-HP) நிறுவி உள்ளேன். வேர்டு 2010 ல் நம்லாக் ஆப் செய்து ஆன் செய்தால் பாண்ட் மாறவில்லை மாறாக நாட் வெலிட் நம்பர் என்று வருகிறது. என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும், டைப்பிங் செய்ய வருபவர்கள் வானவில் தமிழ்பான்ட்தான் கேட்கிறார்கள்.எனக்கும் ஆங்கிலம் தமிழ் என மாறி டைப் செய்ய அது வசதியாக இருக்கும். தெரிந்தவர்கள் உதவுங்கள்

நாம் எப்பொழுது திருந்துவோம் ?

Posted: 27 Mar 2014 07:01 AM PDT

      HE IS SHOWING HIS ID...NONE OF THE LADIES STOOD UP       FROM DOING THEIR JOB              இப்பொழுது இதை பாருங்கள் --------

விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா மறைத்து வைத்த ரகசியம் இதோ இதுதான்!

Posted: 27 Mar 2014 06:40 AM PDT

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு. இப்போது நாம் கூறப்போகும் விஷயம், மலேசியாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், "விமானம் மூழ்கிவிட்டது" என்று மட்டும் அறிவித்தது. அதை எப்படி கண்டுபிடித்தோம் ...

கவிதையில் யாப்பு

Posted: 27 Mar 2014 06:02 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

"ஷாக்' அடிக்கும் உண்மை!

Posted: 27 Mar 2014 05:45 AM PDT

தமிழகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையான மின் பற்றாக்குறையைப் பொருத்தவரை நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே பொறுப்பற்ற முறையில்தான் நடந்து கொள்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தையுமே பாதிக்கும் மின்பற்றாக்குறையை உணர்ந்து செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள், மின்பற்றாக்குறையைத் தேர்தல் குற்றச்சாட்டாக முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு மக்களை முட்டாள்களாகக் கருதுகின்றன என்பதை நாம் உணர மறுக்கிறோம். தினந்தோறும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் ...

கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'!

Posted: 27 Mar 2014 05:44 AM PDT

மலை கிராமங்களில் இருந்து பெரிது பெரிதாக உடைத்து எடுத்து வரப்பட்ட கருங்கல் பாறைகள் ஒரு புறம். ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்ட கல் தச்சர்களுக்கான பட்டறை மறு புறம். பாளம்பாளமாக அறுக்கப்பட்ட கல் தூண்களில் சிற்பம் வடிக்கும் சிற்பிகள். அருகே சாரக்கட்டைகளின் ஊடாக சிற்ப வேலைப்பாடுகளுடன் வளர்ந்து வரும் கற்றளி.. விடாது கேட்டுக் கொண்டிருக்கும் சிற்பிகளின் உளிஓசை.. இந்த காட்சி, ஊர்தோறும் ஆலயங்கள் கட்டிய பண்டைய மன்னர்கள் காலத்திற்கே நம்மை இட்டுச்செல்கிறது. 'முழுவதும் கருங்கற்களாலேயே கட்டப்படும் கற்றளியா..? ...

பட்டினி இல்லா பாரதம்...

Posted: 27 Mar 2014 05:30 AM PDT

அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் ...

பாதிப்பு நமக்குத்தான்!

Posted: 27 Mar 2014 05:27 AM PDT

குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பு ஆறுகள் உள்பட நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 88 தொழில் நிறுவன குழுமங்கள் (இன்டஸ்டிரியல் கிளஸ்டர்) அடங்கிய பகுதிகளை மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்து ...

கவலைப்பட்டாக வேண்டும்!

Posted: 27 Mar 2014 05:22 AM PDT

நிலப்பரப்பு என்று எடுத்துக் கொண்டால், 3,287,263 சதுர கி.மீ. விஸ்தீரணத்துடன் உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்பதுடன், உலக மக்கள் தொகையில் 16.7% பேர் வாழும் பிரதேசம் இது. ஏறத்தாழ 120 கோடி மக்கள் தொகையுடன் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திக் கொண்டு உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடாக நம்நாடு மாறக்கூடும். மத்திய வேளாண் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2007-08 இருந்து 2010-11 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7,90,000 ...

பெருகிவரும் பேராபத்து!

Posted: 27 Mar 2014 05:15 AM PDT

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதிலும் தெரிவுசெய்யப்பட்ட 121 நதிகளில், அதன் நீரோட்டத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்த நதிகளின் நீர், குடிக்கும் தரம் இல்லாத மாசுபட்ட நீராக இருக்கிறது. இவற்றை சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது. அப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு. நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தகவல் இது. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளுமே புனிதமானவைதான். அது கங்கையாக இருந்தாலும், குக்கிராமத்தில் பாயும் சிற்றாறாக இருந்தாலும் ஒவ்வொரு நதிக்கும் ஒரு புராணம் ...

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Posted: 27 Mar 2014 04:54 AM PDT

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? - 108 - -------------------------------------------- - 2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்... - காரைக்காலம்மையார் - ----------------------------------------- - 3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்...... - அப்பர்(திருநாவுக்கரசர்) - -------------------------------------------- - 4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்.. - ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன் - --------------------------------------------- - 5. ...

நீரின் அருமை உணர்வோம்!

Posted: 27 Mar 2014 04:50 AM PDT

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இயற்கை வளங்கள், மனித வளம், நீடிப்புத் திறனுள்ள பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஆயுத பலம், பூகோள ராஜதந்திரங்கள் ஆகியவற்றுடன் நன்னீர் வளமும் எதிர்கால அரசியலை வடிவமைக்கும் காரணியாக அமையும். தேவையான அளவில் நன்னீரும் உணவும் ஆற்றலும் கிடைக்கிற வரைதான் உலகில் அமைதி நிலவும். இயற்கை ...

நொறுங்குகிறது இந்தியச் சமூகம்!

Posted: 27 Mar 2014 04:49 AM PDT

பசி, காமம் என இரண்டும் இயற்கையானவை. உடலோடு ஒட்டியவை. இந்த இரண்டு தேவைகளும் நிறைவு செய்யப்பட்டே ஆக வேண்டும். முதல் தேவை பிறந்து விழுந்தவுடன் தோன்றிச் செத்து மடிவதற்குச் சிறிது முன் வரை நீடிக்கிறது. இரண்டாம் தேவை பன்னிரண்டு வயதில் தோன்றி எழுபது வரையிலும் நீடிக்கிறது. "பட்டது பார் மனம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறியீரே' என்பான் மெய்யியல் வல்ல திருமூலன். இவற்றிற்கு அப்பால் எந்த உயிர்க்கும் எந்தத் தேவையுமில்லை. இவை இரண்டுக்காகவும்தான் இவற்றிற்கிடையே போட்டியும், மோதலும் ஏற்படுகின்றன. ...

இயற்கை விவசாய இன்னிசை!

Posted: 27 Mar 2014 04:48 AM PDT

தற்போது விவசாயத்தில் இயற்கை வழி விஞ்ஞானம் அழிந்து ரசாயன ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இன்றைய நவீன ரசாயன விவசாயத்திலிருந்து பழைய நிலையை மீட்டெடுக்கும் முயற்சி நிகழ்வதால், விவசாயத்தை இயற்கை விவசாயமா, ரசாயன விவசாயமா என்று பிரித்து நோக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. மேலை நாட்டுத் தொழில் உலகம் கீழை நாடுகளுக்கு வழங்கியுள்ள பல்வேறு இழிவுகளில் வெடிகுண்டு விஞ்ஞானமும் ஒன்று. வெடிகுண்டு விஞ்ஞானத்தால் ஒரு பக்கம் வன்முறையும் மறுபக்கம் ரசாயன விவசாயமும் வளர்ந்தன. வெடிகுண்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் ...

எதைக் கொண்டும் கடக்க முடியா சில கேள்விகள்... -

Posted: 27 Mar 2014 04:44 AM PDT

ஒரு புன்னகையினாலோ சிறு மௌனத்தினாலோ அல்லது பெரும் கோபம் கொண்டோ என எதைக் கொண்டும் கடக்க முடிவதில்லை சில கேள்விகளை... - >அனிதா ராஜு - ----------------------------------------- - புல்லாங்குழல் விற்பவன் ஊதுகிறான் தன் பசியையும் சேர்த்து..! - >மன்னை முத்துக்குமார் - ---------------------------------------- - உள்ளங்கை சகதியாக்கிய களிமண் உருமாறி சிதைவதைப் பார்த்து கண்ணீர் சிந்த அழுதான் கை பிடித்திருந்த குழந்தை. உருட்டிப் பிடித்த கைகளுக்குள் பெருமழைக்கு முன்னர் சிறுகுச்சி ஒடித்துக் ...

படைப்பாளிகளை உருவாக்கிய தி.க.சி!

Posted: 27 Mar 2014 04:23 AM PDT

சுடலைமாடன் கோயில் தெரு நம் பார்வைக்கு குறுகலாக இருப்பது. ஆனால் அந்தத் தெருவின் தோற்றத்தைத் தகர்த்துக்கொண்டு ஒரு விசாலமான மனிதர் அந்தத் தெருவின் கடைக் கோடியில் இருந்தார். திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் (தி.க.சி) என்ற ஆளுமையே அவர்; வந்தாரை வரவேற்றுவிட்டால் நேரமும் காலமும் போவதுதெரியாமல் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவரிடம். நீங்கள் அவர் வீட்டுக்குள் கால் வைக்கும்போது ஒருவேளை காலை 8 மணியாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் அவர் அன்றைய பெரும்பாலான நாளிதழ்களையும் நேற்று மாலையில் வாங்கிய இலக்கிய இதழ்களையும் ...

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது!

Posted: 27 Mar 2014 04:13 AM PDT

"எனக்குத் தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடித்த விஷயத்தையே சமூகத்துக்கும் பயனுள்ள விஷயமாக அமைத்துக்கொள்ள நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மாடித் தோட்டம். ரசாயனப் பூச்சிக்கொல்லியோ, உரமோ இல்லாத அக்மார்க் இயற்கை தோட்டம் இது" என்கிறார் பாக்கியலக்ஷ்மி கோதண்டராமன். மதுரையை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீநாகலக்ஷ்மி அம்மாள் அறிவியல் கல்லூரியின் பொருளாளர். கிராமத்தில் இடத்துக்கா பஞ்சம்? பின் எதற்கு மாடித் தோட்டம் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாகத் ...

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

Posted: 27 Mar 2014 03:24 AM PDT

நீயே சொல்
*
காற்றில் மிதந்து வரும் மண் வாசனை
அணைத்த வுடன் வீசியது
குழந்தை மேல் பால் வாசனை.
*
சத்தியமாய் நீயே சொல்
உண்மைப் பேசாத
உன் மனமே பாராங்கல்
*
பேசியதையே பேசி
மீண்டும் பேசிப் பேசி
அறுக்கிறான் தொடர்ந்துப் பேசி.

MAS மற்றும் போயிங் மீது 4.95பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி குடும்பத்தினர் வழக்கு

Posted: 27 Mar 2014 03:13 AM PDT

கோலாலம்பூர், மார்ச் 27 – மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் போயிங் விமான நிறுவனங்களுக்கு எதிராக MH370 பயணிகளின் குடும்பத்தினர் 4.95பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில் சிக்காகோவை மையமாகக் கொண்டு செயல்படும் Ribbeck Law Chartered வழக்கறிஞர் நிறுவனம் MH370 விமானத்தின் பயணிகள் சார்பாக வழக்காடுகிறது. விமான போக்குவரத்து சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள Ribbeck Law Chartered நிறுவனத்தை MH370 விமானத்தில் பயணம் செய்த சீனா மற்றும் இந்தோனேசியப் பயணிகளின் குடும்பத்தினர் ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 27 Mar 2014 03:09 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Posted: 27 Mar 2014 02:23 AM PDT

Android Phone', Smart Phone களுக்கு போடுகின்ற Lock'ஐ உங்கள்கணணியில் போட வேண்டுமா?? Android Phone களுக்கு போடுகின்ற லாக்( Lock ) உங்கள்  கணணியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த Lock (லாக் ) இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக ...

25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈ-தலைவருக்கு வாழ்த்துகள்!

Posted: 27 Mar 2014 01:15 AM PDT



மப்பும் மந்தாரமுமாக 25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரை தலைவர் ராஜசேகரனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

யாரைப் போல் சாப்பிடுவீங்க?

Posted: 27 Mar 2014 12:45 AM PDT

- காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார், - "நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?' என்றார். - இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப் போல் ஏன் சாப்பிட வேண்டும்? "மனிதர்களைப்போல்தான்!' என்று பதிலளித்தனர். - "உங்கள் பதில் தவறு' என்றார் குரு. சீடர்கள் திகைத்துப் போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு, "ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ...

சிரிப்பு ஒரு வலி நிவாரணி...!

Posted: 26 Mar 2014 11:18 PM PDT

- எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். யாருமே மற்றவர்களின் துன்பங்களைக் கேட்க விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கே வண்டி நிறையத் துன்பங்கள் இருக்கின்றன. - - யாரோ. - ------------------------------------- உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருப்பவனைப் போல சிரிக்கும் துணிச்சல் உள்ளவனும் உலகின் எஜமானன். - - கிளாகோமா லியோபார்டி. - ------------------------------------------- - மகிழ்ச்சி அடையும் முன் ஒருவன் சிரிக்க வேண்டும். அல்லது சிரிக்காமலே இறந்து விடலாம். - ஜீன் ...

மருத்துவப் பழமொழிகள்

Posted: 26 Mar 2014 11:03 PM PDT

நம் முன்னோர் கூறிய முதுமொழிகளை "பழமொழிகள்' என்றும் கூறுவர். அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன. அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப் பயன்படுகிறது என்பதைக் கீழ்வரும் பழமொழிகள் கூறுகின்றன: * "கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை' * "வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல்வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்' * "கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி' மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி' ...

படித்ததில் பிடித்தது

Posted: 26 Mar 2014 11:02 PM PDT

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு ...

மரமும் யானையும்…

Posted: 26 Mar 2014 10:59 PM PDT

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே - உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது.குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு 'யானை! யானை' என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; ...

சுற்றுலா மன அழுத்தத்தை குறைக்குமா?

Posted: 26 Mar 2014 10:55 PM PDT

- -- இன்று ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளைச் சொல்லாதவர்களும் கேட்காதவர்களும் இருக்க முடியாது. அகராதியின் படி ஸ்ட்ரெஸ் என்றால் (மன) அமுக்கம், அதாவது அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவை மன அழுத்தத்தை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். - பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம் அதிகம். இது சமீபத்தில் ஆய்வு கூறு உண்மை. அவர்கள் செய்யும் வேலை மற்றும் கணவர், குழந்தைகள், பணவரவு, செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம் என்று ...

கால வரிசையில் ஆறு ஒளவையார்கள்…

Posted: 26 Mar 2014 10:49 PM PDT

- - 1 ) கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் - அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்தவர் - ———————————————— - 2 கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் - - அங்கவை சங்கவை -க்கு திருமணம் செய்வித்தவர் - ————————————————— - 3) 12-ஆம் நூற்றாண்டு (சோழர் காலத்தில்_ - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை – பாடியவர் - —————————————————– - 4) 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள், விநாயகர் அகவல் விநாயகர் …இயற்றியவர் - ————————————————- - 5) 16, 17-ஆம் நூற்றாண்டு ...

நம்ம கஷ்டத்தை சொன்னாப் போதும்..!

Posted: 26 Mar 2014 10:30 PM PDT

- உறக்கத்தை வேட்டையாடி புசிக்கும் கனவின் முடிவில் நாமே வென்றவனும் தோற்றவனும் ஆகிறோம்..! - >மாஸ்டர் சிவா - --------------------------------------------- - எந்த முனிவரின் சாபத்தினால், கடவுளெல்லாம் கல்லாகின கோயில்களில்..? - >பனிமலர் வைத்தி - --------------------------------------------- - கண்ணாடியைப் பார்க்கும்போது வரும் டயட் கண்ட்ரோல், சாப்பாட்டை பார்க்கும்போது ஏனோ வருவதில்லை..! - >தில்லை அருணா ராஜ் - ------------------------------------------- - சிலரை சந்தோஷப்படுத்த, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™