Tamil News | Online Tamil News |
- ரூ.2,400 கோடி விற்பனை வரி பாக்கி: நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்?
- பண முதலைகளுடன் விருந்து சாப்பிடுவதா? கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
- கடுப்படைந்தார் கல்மாடி; பா.ஜ.,வில் இணைகிறார்?
- சிதம்பரம் மீதான வழக்கு மட்டும் நிலுவையிலா?
- எங்கெங்கு காணினும் மதுக்கடை : எதிர்க்க தயாராகிறது மாணவர் படை!
- நான் முதல்வராவது இரண்டாம்பட்சம் தான்: தூத்துக்குடியில் விஜயகாந்த் பேச்சு
- மனிதனின் பண்பாடு வணக்கம் சொல்வது: சொல்லி தருகிறார் ஸ்டாலின்
- தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா செல்வாக்கு அதிகரிப்பு: தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் வலுவான கூட்டணி
- 'அ.தி.மு.க., கூட்டணியால் வேதனைப்பட்ட வாஜ்பாய்': கருணாநிதி
- 'பேச வரவில்லை; பார்க்க வந்தேன்': பழங்குடி பெண்களிடம் ராகுல் தகவல்
- பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த் சிங் விரைவில் விலகல்? விரும்பிய தொகுதி கிடைக்காததால் அதிரடி
- ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அபத்தம்! நாட்டின் பெயரை மாற்ற ஒப்புக் கொள்ளுமா பா.ஜ.,?
| ரூ.2,400 கோடி விற்பனை வரி பாக்கி: நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்? Posted: 'வணிக வரி நிலுவையான, 2,400 கோடி ரூபாயை செலுத்த வேண்டும்' என, சென்னை நோக்கியா இந்தியா நிறுவனத்துக்கு தமிழக அரசு, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பின்லாந்து நாட்டை சேர்ந்த, நோக்கியா நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை அமைத்து, மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுனத்தில், 8,000 பேர் பணி புரிகின்றனர். இந்திய வருமான வரித்துறைக்கு, உரிய வரியை இந்நிறுவனம் செலுத்தவில்லை என புகார் எழுந்ததது. வரி பாக்கிக்காக, நோக்கியா இந்தியா நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான, வழக்கில், வரியை ... |
| பண முதலைகளுடன் விருந்து சாப்பிடுவதா? கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி கேள்வி Posted: கோல்கட்டா: 'கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக, பண முதலைகளுடன் விருந்து சாப்பிடும், கெஜ்ரிவாலின் செயல், கேவலமானது,'' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, கடுமையாக விமர்சித்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ளது. 'லோக்சபா தேர்தலில், காங்., - பா.ஜ., வுக்கு மாற்றாக, மத்தியில் புதிய அரசு அமைய வேண்டும்' என்ற கோஷத்துடன் மம்தா, லோக்சபா தேர்தலில், களம் இறங்கியுள்ளார். மேற்கு வங்கத்தின், 42 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் திரிணமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, மம்தா, ... |
| கடுப்படைந்தார் கல்மாடி; பா.ஜ.,வில் இணைகிறார்? Posted: புனே: லோக்சபா தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் கட்சி, இடம் ஒதுக்காததால், அதிருப்தியடைந்துள்ள, காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின், மாஜி ஒருங்கிணைப்பாளர், சுரேஷ் கல்மாடி, இரண்டு நாட்களில் தன் முடிவை தெரிவிக்க உள்ளார். அவர், பா.ஜ.,வில் இணையலாம் என, அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஊழல்: மகாராஷ்டிர மாநிலம், புனே தொகுதியில், மூன்று முறை எம்.பி.,யாக இருந்தவர் சுரேஷ் கல்மாடி. டில்லியில் நடந்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்பாளராக, கல்மாடி இருந்த போது, பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது. இது தொடர்பாக குற்றம் ... |
| சிதம்பரம் மீதான வழக்கு மட்டும் நிலுவையிலா? Posted: கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து, மொத்தம், ஏழு தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஆறு வழக்குகள் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளன. மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு மட்டுமே, நிலுவையில் உள்ளது.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.2009 தேர்தலில்...: ஆனால், 2009 லோக்சபா தேர்தல் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் இன்னும் விசாரணையே ... |
| எங்கெங்கு காணினும் மதுக்கடை : எதிர்க்க தயாராகிறது மாணவர் படை! Posted: ஆளும்கட்சிக்கு எதிராக, இந்த தேர்தலில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன என்று பட்டியலிட்டால்...மின் வெட்டு, தொழில் பாதிப்பு, பஸ் மற்றும் மின் கட்டண உயர்வு, அரசுத் துறைகளில் அதிகரித்துள்ள லஞ்சம், வளர்ச்சிப் பணிகளில் தேக்கநிலை, செயல்பாடற்ற அமைச்சர்கள்...என்று நீட்டிக் கொண்டே போகலாம். பலரும் மறந்து விட்ட ஒரு விஷயம்...மக்களை வெறுப்பேற்றும் மதுக்கடைகள்.தனியாரிடம் உள்ள மதுக்கடைகளை, அரசே நடத்துவது என்ற மாபெரும் கொள்கை முடிவை எடுத்தது, இதே அ.தி.மு.க., அரசுதான்; அதை அப்படியே வழி மொழிந்தது தி.மு.க., அரசு; இரு கட்சிகளுக்கிடையிலும், ஆயிரம் முரண் ... |
| நான் முதல்வராவது இரண்டாம்பட்சம் தான்: தூத்துக்குடியில் விஜயகாந்த் பேச்சு Posted: தூத்துக்குடி: ''தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல் கடமை; நான் முதல்வராவது, இரண்டாம் பட்சம் தான், '' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தூத்துக்குடியில் பேசினார்.தூத்துக்குடி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, செல்வநாயகபுரம் ரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில், விஜயகாந்த் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம், மீனவர், தீப்பெட்டி தொழிலாளர், உப்பள தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆனால், இங்கு வேலைவாய்ப்பு இல்லாமல், வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. ... |
| மனிதனின் பண்பாடு வணக்கம் சொல்வது: சொல்லி தருகிறார் ஸ்டாலின் Posted: திருவாரூர்: ''திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, குழந்தை பிறந்து விட்டது. திருமண உதவித்தொகை கிடைக்க அலைக்கழிக்கப்படுகின்றனர் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது,'' என, குட வாசலில் ஸ்டாலின் பேசினார்.நாகை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பளர் விஜயனை ஆதரித்து, நாகை தொகுதியில் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். அதன்பின், திருவாரூர் மாவட்டம், குடவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: அதிக திட்டங்களை நிறைவேற்றுவார்: ஆட்சியில் இருந்தாலும், ... |
| Posted: ஐதராபாத்: நாடு முழுவதும் வீசும், மோடி அலையால், வட மாநிலங்களில், பலமாக வேரூன்றியுள்ள, பா.ஜ., தென் மாநிலங்களான, கர்நாடகா, தமிழகத்தை அடுத்து, ஆந்திராவிலும் கால் பதிக்க முயற்சித்து வருகிறது. லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமைப்பது குறித்து, ஆந்திர முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன், பா.ஜ., தலைவர்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது முதலே, நாட்டின், பல பகுதிகளிலும் மோடி அலைவீசத் துவங்கியுள்ளது. குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணமான, மாநில முதல்வர், நரேந்திர மோடியை பிரதமராக ... |
| 'அ.தி.மு.க., கூட்டணியால் வேதனைப்பட்ட வாஜ்பாய்': கருணாநிதி Posted: சென்னை: 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இருந்த காலம் தான், தன் அரசியல் வாழ்க்கையில் வேதனையான காலம் என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வர்ணித்தார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'தி.மு.க., மத்திய ஆட்சியில், அங்கம் வகித்த போது, என்ன செய்தனர்' என, கூட்டத்திற்கு கூட்டம், முதல்வர் ஜெயலலிதா கேட்கிறார். நாங்கள் உங்களைப் போல இப்படியெல்லாம், மத்திய அரசிடம் கேட்கவில்லை தான். ஆனால், தமிழகத்திற்கு தேவையான சேது சமுத்திர திட்டத்தைக் கேட்டுப் பெற்றோம். தமிழ் மொழிக்கு, செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தோம். சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை ... |
| 'பேச வரவில்லை; பார்க்க வந்தேன்': பழங்குடி பெண்களிடம் ராகுல் தகவல் Posted: மண்ட்லா: மத்திய பிரதேசத்தில், தேர்தல் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், ''நான் மற்றவர்களை போல பேச வரவில்லை; உங்களை பார்த்து குறைகளை கேட்க வந்துள்ளேன்,'' என, தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும், அவரது கட்சியினர் அவரை, அடுத்த பிரதமராக தான் பார்க்கின்றனர். உத்தர பிரதேசத்தின், அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல், கட்சி தலைவர் என்ற முறையில், நாடு முழுவதும் சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய பிரதேசத்தின், மண்ட்லா மாவட்டத்துக்கு சென்ற ராகுல், பழங்குடி ... |
| பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த் சிங் விரைவில் விலகல்? விரும்பிய தொகுதி கிடைக்காததால் அதிரடி Posted: சீட் கிடைக்காத கோபத்தில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ஜஸ்வந்த் சிங், கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளார். நெருக்கமானவர்: பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜஸ்வந்த் சிங், 76. வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு நெருக்கமானவர். வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், வெளியுறவு, நிதி, ராணுவம் போன்ற முக்கிய இலாகாக்களை வகித்தவர். கடந்த லோக்சபா தேர்தலில், மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யானார். வரும் லோக்சபா தேர்தலில், தன் சொந்த மாநிலமான, ராஜஸ்தானில், பார்மர் தொகுதியில் போட்டியிட, பா.ஜ., ... |
| ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அபத்தம்! நாட்டின் பெயரை மாற்ற ஒப்புக் கொள்ளுமா பா.ஜ.,? Posted: நாட்டின் பெயரை, 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்று மாற்ற வேண்டும்' என, அபத்தமான கோரிக்கை, வைகோ நேற்று வெளியிட்ட, ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 'தேசிய கட்சியும், தமிழகத்தில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு தலைமை வகிப்பதுமான, பா.ஜ., இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமா?' என, அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ம.தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான, சென்னை தாயகத்தில், ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ வெளியிட, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.தேர்தல் அறிக்கையில், எட்டாவது பக்கத்தில், 'இந்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |