Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அங்கே துக்கமும் இல்லை, சுகமும் இல்லை தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

Posted: 22 Mar 2014 09:55 AM PDT

ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொன்று, ஸைகலாஜிகல் காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகிவரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றில் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பர். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது ...

இளைஞர் புராணம்

Posted: 22 Mar 2014 06:36 AM PDT

அன்புடையீர்!

இன்றைய இளைஞர்கள் நம் புராண இதிகாசக் கதைகளை வெறும் கற்பனையென ஒதுக்கி
அவற்றில் உறையும் தத்துவங்களை அறியாது இருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் மாற
ஒரு சிறு முயற்சியாக வாரியார் சுவாமிகள் விளக்கிய 'விநாயக மூர்த்தி கனி பெற்ற' கதையைக்
கவிதையில் தரலாம் என்று தோன்றியதில் எழுந்ததே இந்தப் படைப்பு. இதுபற்றிய அன்பர்களின்
நிறை-குறை கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன்,
ரமணி

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Posted: 22 Mar 2014 06:23 AM PDT

நண்பர்களுக்கு மாலை வணக்கம்
வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் கிடைக்கும் வைப்சைட் வேண்டும்,
தமிழ்நாடு எலக்ஸன் வெப்சைட்டில் பெயர்,முகவரி மட்டுமே உள்ள லிஸ்ட்தான்
எனக்கு கிடைத்தது, போட்டோவுடன் உள்ள லிஸ்ட் எப்படி கிடைக்கும் என
தெரிந்த நண்பர்கள் கூறுங்களேன்.

காலை உணவு அவசியமா?

Posted: 22 Mar 2014 04:16 AM PDT

"வரும் போது மலம் கழிக்கலாம்; காசு தந்தால் பின்னிரவிலும் வேலை செய்யலாம்; அழகாய் தெரிவேன் என்றால் அணுசக்தி ரசாயனத்தையும் அள்ளிப்பூசிக் கொள்ளலாம்; ருசியாய் இருக்கும் என்றால் பெயர் தெரியாத வேதிக்கலவையையும் உறிஞ்சி உள்ளம் களிக்கலாம்," என்ற மனோபாவம் உச்சி முதல் பாதம் வரை ஒட்டிப்போனதுக்கு இந்த நிலையில்லா அறிவியலும், அதன் நிழலில் நங்கூரமிடும் பெரும் வணிகப்பிடியும்தான் காரணம். உலகின் பல வளர்ந்த நாடுகளின் காலை உணவை நிர்ணயிப்பது என்பது ஓரிரு மிகப்பெரிய உணவு நிறுவனங்கள் மட்டுமே!.. "சோள அவலா?..ஓட்ஸ் கஞ்சியா? ...

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை

Posted: 22 Mar 2014 04:09 AM PDT

இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். .

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

Posted: 22 Mar 2014 04:01 AM PDT

1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண் எழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்புரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அகம் சுருக்கேல் 14. கண்டொன்று சொல்லேல் 15. ஙப் போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட உரை 18. இடம்பட வீடு எடேல் 19. இணக்கம் அறிந்து இணங்கு 20. தந்தை தாய்ப் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர் செய் 23. மண் பறித்து உண்ணேல் ...

orphanages in pondicherry

Posted: 22 Mar 2014 03:45 AM PDT

வணக்கம்.

பாண்டிசேரியில் உங்களுக்கு தெரிந்த ஆனாதை இல்லம் தெரிந்தால், முகவரி தாருங்கள்.
நபர்களிடம் கேட்டாவது சொல்லிடுங்க புன்னகை

வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Posted: 22 Mar 2014 02:51 AM PDT

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த மாசி (அ) பங்குனி மாதத்திற்கு நாங்கள் வேறு வாடகை வீட்டிற்கு மாற உள்ளோம். மிதுன ராசி, மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த குடும்பத்தலைவருக்கு உரிய பால் காய்ச்சும் நல்ல நாளை தெரிந்தவர்கள் கூறவும்
நன்றி.
Senthamarai Kannan.


மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி

Posted: 22 Mar 2014 02:16 AM PDT

  புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெருநகரமான ரோட்டர்டாமில் டியெர்கார்டே ப்லிஜ்டார்ப் வன விலங்கு காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் உள்ள அசுத்தங்களை கழுவி சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் மரியோ(54) ...

நான் தடை செய்யப் பட்டதாக வருகிறது

Posted: 22 Mar 2014 01:24 AM PDT

நான் ஈகரை இன்று லாகின் செய்ய வந்தப்ப நான் தடை செய்யபட்டதாக இன்வருகிறது. எதனால் எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்ப லாகின் செய்தது நான் ப்ராக்சி செர்வெர் மூலமாக.


நான் இப்போது வெளியே செல்கிறேன். பிறகு வந்து பார்க்கிறேன்.

யாரோடு…

Posted: 22 Mar 2014 12:46 AM PDT

சிலருக்குப் பிடிப்பது எனக்குப் பிடிப்பதில்லை - சிலருக்கு அழகானது எனக்கு அழகாயில்லை - சிலருக்கு சிறந்தது எனக்குச் சிறந்ததில்லை - சிலருக்கு உகந்தது எனக்கு உகந்ததில்லை - சிலருக்கு உடன்பாடானது எனக்கு உடன்பாடில்லை - சிலருக்கு நியாயமானது எனக்கு நியாயமானதில்லை - சிலருக்கு ருசியானது எனக்கு ருசிக்கவில்லை - ஊரோடு ஒது வாழ வேண்டுமாம் சரி… யாரோடு ஒத்து வாழ்வது..? - ———————————- >கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

தேர்{ஆறு}தல் கவிதைகள்

Posted: 21 Mar 2014 10:08 PM PDT

* வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்…

ந.க.துறைவன் புதுக் கவிதைகள்

Posted: 21 Mar 2014 09:16 PM PDT

பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ...

பிணி

Posted: 21 Mar 2014 05:02 PM PDT

உடலின் நிலை மோசமாகி உயிரின் நிலை ஊசலாடையில் உறவின் நிலை தெரிந்திடும் உற்றார் நிலை புரிந்திடும் உற்ற நட்பும் அறிந்திடும் உருகி மனம் தெளிந்திடும் உலகம் மறந்துபோய் உழைத்ததன் பலனாய் உரமேறிய உடல்கொண்டு உயர்வான வாழ்வு பெற்று உவகை பொங்க வாழ்ந்தது உன்கண் முன்வந்து போகும் உதயமுண்டா தெரியாது உண்டெனில் இன்னுமொரு உனக்கான வாழ்வில் உயர்வு தாழ்வு பாராது உணர்வுகளை மதித்து உன்னதம் ஆகும் மனம் உலகத்தின் இயல்பும் உதவியின் அருமையும் உண்மை வாழ்வில் உந்தன் பங்கும் உணர்த்த இறைவன் உனக்களித்த ...

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.

Posted: 21 Mar 2014 04:55 PM PDT

* நகரங்கள் * கோயில் நகரம் மதுரை. மாங்கனி நகரம் சேலம். முத்து நகரம் தூத்துக் குடி . பஞ்சாலை நகரம். கோiவை. பட்டு நகரம் காஞ்சி . பின்னலாடை நகரம் திருப்பூர் . பூக்கள் நகரம் உதகை. நெற் களஞ்சிய நகரம் தஞ்சாவூர் . அல்வா நகரம் திருநெல்வேலி . வெயில் நகரம் வேலூர் . நகரின் பெயரை மனனம் செய்து மனதில் நன்குப் பதிப்பீரே மதிப்பெண் நன்று பெறுவீரே…!

வாடகைத் தாய் சிரிக்கிறாள்

Posted: 21 Mar 2014 04:52 PM PDT




பணத்திற்காய்
சிரிக்கிறாள்
வாடகைத் தாய்
பிள்ளையை
அழ வைத்து
விட்டு .


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™