Tamil News | Online Tamil News |
- மத்திய மந்திரி சிதம்பரம் மீது ஜெயலலிதா தாக்கு: தி.மு.க.,வும் சேர்ந்து சதி செய்ததாக பாய்ச்சல்
- பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க சோனியாவுக்கு உத்தரவு: சீக்கியர் வழக்கில் அமெரிக்க கோர்ட் கண்டிப்பு
- தமிழக நலனுக்காக மோடியிடம் சண்டை போடுவேன்: நாகர்கோவிலில் விஜயகாந்த் வாக்குறுதி
- 'நாங்கள் அவர்கள் அல்ல!'
- 'அ.தி.மு.க., ஆதரவு பெறவேண்டிய அவசியம் ஏற்படாது'
- பெங்களூரு சிறப்பு கோர்ட் மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி
- குஷ்பு பிரசாரம் உண்டு: கருணாநிதி திட்டவட்டம்
- சாதனையே இல்லாத ஆட்சி ஜெ.,வின் ஆட்சி: ஸ்டாலின் கடும் தாக்கு
- சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு தடாலடி முடிவு
| மத்திய மந்திரி சிதம்பரம் மீது ஜெயலலிதா தாக்கு: தி.மு.க.,வும் சேர்ந்து சதி செய்ததாக பாய்ச்சல் Posted: காரைக்குடி: ''சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர், ப.சிதம்பரம்,உங்களுக்கு ஏதாவது செய்தாரா? அவர், உங்கள் மீதும், இந்திய பொருளாதாரம் மீதும் அக்கறை செலுத்தவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பெரும் சரிவு ஏற்பட்டு, அழிவின் விளிம்புக்குச் சென்றது. தமிழகத்திற்கு, மத்திய அரசு, போதுமான நிதியை ஒதுக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணி அரசில் பங்கேற்ற, தி.மு.க.,வும் சேர்ந்து செய்த சதியே, இதற்கு காரணம்,'' என, நிதி அமைச்சர் சிதம்பரத்தையும், தி.மு.க.,வையும், முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக தாக்கி பேசினார்.நேற்று, சிவகங்கை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ... |
| பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க சோனியாவுக்கு உத்தரவு: சீக்கியர் வழக்கில் அமெரிக்க கோர்ட் கண்டிப்பு Posted: புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம், 7ம் தேதிக்குள், பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்கும்படி, காங்., தலைவர் சோனியாவுக்கு, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சீக்கியர் கொலை: கடந்த, 1984ல், பிரதமராக இருந்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திரா, அவரின் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக, காங்கிரசார் தாக்குதல் நடத்தினர்; இதில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சீக்கியர் படுகொலைகளில் தொடர்புடைய, காங்கிரஸ் ... |
| தமிழக நலனுக்காக மோடியிடம் சண்டை போடுவேன்: நாகர்கோவிலில் விஜயகாந்த் வாக்குறுதி Posted: நாகர்கோவில்: ''தமிழகத்தின் நலனுக்காக, மோடியிடம் சென்று என்னால் சண்டை போட முடியும். தமிழகத்தில் லஞ்சத்தை ஒழிக்க, நான் இருக்கிறேன்; இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்க மோடியை, மக்கள் ஆதரிக்க வேண்டும்,'' என, நாகர்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, வடசேரி சந்திப்பில் நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: சினிமா படிப்பிடிப்புக்காக கீரிப்பாறைக்கு வந்துள்ளேன். அங்கு, ஏராளமான ரப்பர் மரங்கள் உள்ளன. ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, ... |
| Posted: கடந்த 1977க்கு பின், தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி என்பதே தமிழகத்தில் மறைந்துவிட்டது. அந்த வகையில், தற்போது, பா.ஜ., தலைமையில் அமைந்து உள்ள கூட்டணி, மாபெரும் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதை சாத்தியப்படுத்திய மோடி மந்திரத்திற்கும், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் உழைப்பிற்கும்; குழப்பம் ஏற்படுத்தி, கொள்ளை அடிப்பவர்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 11ம் தேதி, 'தேர்தல் களம்' இணைப்பில், மோடியை முன்னிறுத்தி அ.தி.மு.க.,வினர் செய்யும் பிரசாரம் குறித்து பதிவு செய்யப்பட்டது.கடந்த 19ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவிலில் பிரசாரம் ... |
| 'அ.தி.மு.க., ஆதரவு பெறவேண்டிய அவசியம் ஏற்படாது' Posted: கடும் முயற்சிக்கு பின், தமிழகத்தில் வரலாறு காணாத சாதனையை, பா.ஜ., படைத்து உள்ளது. இதுவரை திராவிட கட்சிகளே கூட்டணியில் கோலோச்சி வந்த சூழலில், தேசிய கட்சியான பா.ஜ., தலைமையில், பல மாநில கட்சிகள் இணைந்து, பிரமாண்ட கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் பலம், வெற்றியை உறுதி செய்து விட்டதாக கருதும், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ஒரு பெரும் சாதனை முடிந்த உற்சாகத்தோடு 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:* இந்த கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், உங்களுக்கு எப்போது தோன்றியது? கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பே, இதுகுறித்து, ... |
| பெங்களூரு சிறப்பு கோர்ட் மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி Posted: சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும், பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் அணுகுமுறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு, விசாரணையில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், சென்னையைச் சேர்ந்த, 'லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ்' நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.2000ல் மனு: முடக்கத்தை நீக்கக் கோரி, சென்னை, சிறு வழக்குகள் கோர்ட்டில், அந்த நிறுவனம் சார்பில், 2000ல், மனுத் தாக்கல் ... |
| குஷ்பு பிரசாரம் உண்டு: கருணாநிதி திட்டவட்டம் Posted: சென்னை: 'தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகை குஷ்பு பிரசாரம் செய்யும் சுற்றுப்பயண விவரம், ஓரிரு நாளில் வெளி வரும்' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க.,வில், குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை; அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்படவில்லை. கட்சியின் முன்னணிப் பேச்சாளர்கள் அனைவரும், என் சுற்றுப்பயணம் வெளி வருவதற்காக காத்திருந்தனர். காரணம், எந்த தேதியில் நான், எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காக தான் தாமதம். தற்போது, என் சுற்றுப்பயணம் ... |
| சாதனையே இல்லாத ஆட்சி ஜெ.,வின் ஆட்சி: ஸ்டாலின் கடும் தாக்கு Posted: "தமிழகத்தில் கடந்த முறை ஆண்ட, தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், சாதனைகளே இல்லாத ஆட்சி என்றால், அது ஜெயலலிதாவின் ஆட்சி தான்," என, திருவையாறு பிரசாரத்தில், ஸ்டாலின் கடுமையாகத் தாக்கி பேசினார்.சட்டம் - ஒழுங்கு இல்லை: தஞ்சை லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, கடந்த, 20ம் தேதி, பல இடங்களில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். முடிவில், தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், இரவு, 9:30 மணிக்கு பங்கேற்று, 9:59 மணிக்கு ஸ்டாலின் பேச்சை முடித்தார்.இதைத்தொடர்ந்து, ... |
| சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு தடாலடி முடிவு Posted: புதுடில்லி: மாயமான மலேசிய விமானத்தை தேடி, இந்திய கடல் பகுதிக்குள் நுழைய முயற்சித்த, சீன கப்பல்களுக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. சமீபத்தில், மலேசியாவின், கோலாலம்பூர் நகரில் இருந்து, சீனாவின், பீஜிங்கிற்கு சென்ற, மலேசிய பயணிகள் விமானம், திடீரென மாயமானது. இந்த விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என்பது, 14 நாட்களாக, இன்னும், மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில், விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக, ஆஸ்திரேலிய செயற்கைக்கோள், நேற்று முன்தினம் கண்டுபிடித்தது. இதையடுத்து, அந்த கடல் பகுதியில், தேடுதல் பணிக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |