Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகங்களா? தெற்கு இந்தியப்பெருங்கடல் பகுதியில் தேடும் பணி தொடங்கியது

Posted: 21 Mar 2014 01:05 PM PDT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் தெற்கு இந்தியப்பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலிய, அமெரிக்க மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

239 பயணிகளுடன் மாயம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது.

மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகளை சேர்ந்த விமானங்கள், கப்பல்களுடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படுகிற இரண்டு பொருட்கள் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் நேற்று முன்தினம் அறிவித்தார். சுமார் 24 மீட்டர் நீளமுள்ள பொருள் உள்பட 2 பொருட்கள், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் கடலில் மிதப்பதை தங்கள் நாட்டு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக அவர் அறிவித்தார்.

எளிதில் நெருங்க முடியாது

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, 'செயற்கைக்கோள் படம் பிடித்துள்ள அந்த இடத்தை அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. ஆனால் அந்த பகுதியில் ஏதாவது மூழ்கியிருந்தால், நாங்கள் கண்டுபிடிப்போம். அப்பகுதியில் மிதக்கும் பொருட்கள்தான் மாயமான விமானம் தொடர்பாக நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம். ஆனால் அது விமானத்தின் பாகம் தானா? என்பது அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரியவரும்' என்றார்.

5 விமானங்கள்

இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று வானிலை சீராக இருந்ததால், செயற்கைக்கோள் காட்டிய இடத்துக்கு ஆஸ்திரேலிய மீட்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி ஆஸ்திரேலிய விமானப்படை விமானம் (ஆரியன்) ஒன்று முன்செல்ல, மற்றொரு விமானப்படை விமானம் மற்றும் 'கல்ப்ஸ்ட்ரீம் ஜெட்' என்ற விமானமும் பின்தொடர்ந்து சென்றன.

நேற்று மாலையில், ஆஸ்திரேலிய விமானப்படையை சேர்ந்த மற்றொரு விமானமும், அமெரிக்க கடற்படையின் நவீன ஜெட் விமானம் ஒன்றும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன. அவையும் விரைவில் மீட்புக்குழுவுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல அண்டாட்டிகா ஆராய்ச்சிக்காக சீனா வடிவமைத்துள்ள நவீன கப்பல் ஒன்றும் விரைவில் பெர்த்திலிருந்து, பயணத்தை தொடங்கும் என்று தெரிகிறது.

மூழ்கியிருக்கலாம்?

தெற்கு இந்திய பெருங்கடலில் 23 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் மீட்புக்குழுவினர் தேடும் பணிகளை தொடங்கியுள்ளனர். எனினும் இந்த தேடுதல் வேட்டை பல நாட்கள் நீடிக்கும் என மீட்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே கடலில் மிதந்து கொண்டிருந்த பொருட்கள் மூழ்கியிருக்கலாம் என ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'செயற்கைக்கோள் படம் கடந்த 16–ந்தேதி எடுத்ததாகும். கடலில் மிதக்கும் ஒரு பொருள் நீண்ட நாட்கள் மிதக்காது. அதன்படி இந்த பொருட்களும் கடலில் மூழ்கியிருக்கலாம்' என்றார்.
 

category:

News Group Category:

சர்வதேச போலீசாரால் தேடப்பட்ட போலி ஏ.டி.எம். கார்டு மோசடி மன்னன் சென்னையில் கைது

Posted: 21 Mar 2014 01:00 PM PDT

சென்னை,

சர்வதேச போலீசாரால் தேடப்பட்ட போலி ஏ.டி.எம். கார்டு மோசடி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை பற்றி பரபரப்பான தகவல்களை போலீசார் வெளியிட்டனர்.

போலி ஏ.டி.எம். கார்டு கும்பல்

ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை போலியாக தயாரித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் சர்வதேச அளவில், சங்கிலி போல கைகோர்த்து செயல்படுகிறது.

கடந்த 14-ந்தேதி அன்று சென்னையில், போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து, அதன் மூலம் ரூ.25 லட்சம் வரை பணத்தை சுருட்டிய 7 பேரை, சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட செல்வநேசன் என்ற பிரேம் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் ஏற்கனவே கைதாகி சிறைக்கு சென்றவர். பின்னர் கர்நாடக மாநிலம் மைசூரில் தங்கி இருந்து போலி ஏ.டி.எம். கார்டு தொழிலை செய்து வந்துள்ளார். நிச்சயமாக இவருக்கு பின்னணியில் சர்வதேச கும்பல் ஒன்று இருக்க வேண்டும், என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணையை தீவிரமாக நடத்தும்படி, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

போலீஸ் காவலில் விசாரணை

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் ஜெயசிங் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட செல்வநேசனை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்தது. இந்த போலி ஏ.டி.எம். கார்டு தொழிலை சர்வதேச அளவில் செய்து வந்த, சர்வதேச மோசடி மன்னன் ஜெயதரன் (28) என்பவர், சென்னை ராமாவரம், வெங்கடேசன் நகர், 7-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார், ராமாவரத்தில் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து சோதனை போட்டனர். அங்கு தங்கி இருந்த ஜெயதரனை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரோடு தங்கி இருந்த, அவரது கூட்டாளிகள் பிரதீப்குமார், நவநீதராஜா ஆகியோரும் பிடிபட்டனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் போலி கிரெடிட் கார்டுகள், போலி ஏ.டி.எம். கார்டுகள், 5 செல்போன்கள், 2 லேப்டாப்புகள், போலி கார்டுகள் தயாரிக்க உதவும் இடிசி மெஷின் போன்றவை சிக்கின. ரூ.18,500 ரொக்கப்பணமும் அங்கு கைப்பற்றப்பட்டது.

கைது -வாக்குமூலம்

ஜெயதரனும் அவரது கூட்டாளிகள் பிரதீப்குமார், நவநீதராஜா ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர். ஜெயதரன், சர்வதேச போலீசாரால், தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர். சிவப்பு எச்சரிக்கை நோட்டீசு வெளியிட்டு, உலகம் முழுவதும் அவரை சர்வதேச போலீசார் கண்காணித்து தேடி வந்தனர்.

இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு, போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு வழக்கில் இலங்கை போலீசாரிடம் கைதாகி சிறை சென்றுள்ளார். அதன் பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் விசா வாங்கிக்கொண்டு, தமிழகம் வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல், சென்னை ராமாவரத்தில் தங்கி இருந்து கொண்டு போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கொடுக்கும் ஆலோசனை அடிப்படையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள செல்வநேசன் செயல்பட்டுள்ளார்.

சிவில் என்ஜினீயர்

போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் தொழிலை தொடங்கியது எப்படி? என்பது குறித்து, ஜெயதரன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனது பெற்றோர் இலங்கை திரிகோணமலையில் வசிக்கிறார்கள். அங்கு அவர்கள் விவசாய தொழிலை செய்கிறார்கள். நான் சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சில காலம் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். அப்போது கனடா நாட்டை சேர்ந்த சிலரின் நட்பு கிடைத்தது. அவர்கள் தான் எனக்கு, போலி கிரெடிட்கார்டு மற்றும் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்று கொடுத்தனர். மேலும் வெளிநாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும், ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்கள், ரகசிய குறியீட்டு எண்களை சேகரித்து அனுப்புவார்கள். அவற்றை வைத்து, சர்வதேச அளவில் பயன்படும் போலி கார்டுகளை தயாரிப்பேன்.

சிறையில் அடைப்பு

வங்கி கணக்கில் அதிக பணம் உள்ள ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களை பார்த்து, அவற்றின் விவரங்களை சேகரித்து, போலி கார்டு தயாரிப்போம். சென்னையிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம். கார்டு விவரங்களை தெரிந்து கொண்டு போலி கார்டு தயாரிப்போம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் கடந்த 7 மாதங்களில் ரூ.25 லட்சம் வரை போலி கார்டுகள் மூலம் சுருட்டி உள்ளோம். இந்த பணத்தை பலருக்கும் பங்கு போட்டு கொடுப்போம். எனக்கு ரூ.5 லட்சம் வரை பங்கு கிடைத்தது.

இவ்வாறு ஜெயதரன் தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். அவரும், அவருடன் கைதான மேலும் இருவரும், நேற்று நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

‘என்னை கண்ணீர் விட வைத்த சிவசேனா வேட்பாளரை தோற்கடிப்பேன்’ நடிகை நவ்நீத் ரானா வேட்பு மனு தாக்கல்

Posted: 21 Mar 2014 12:59 PM PDT

அமராவதி

அமராவதி தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நடிகை நவ்நீத் ரானா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். என்னை கண்ணீர் விட வைத்த சிவசேனா வேட்பாளரை தோற்கடிப்பதே எனது குறிக்கோள் என்று தெரிவித்தார்.

வேட்பு மனு

தென்னிந்திய நடிகை நவ்நீத் ரானா, அமராவதி பாராளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்வில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது துணை முதல்–மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், அனில் தேஷ்முக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து நவ்நீத் ரானா நிருபர்களிடம் கூறியதாவது:–

குறிக்கோள்

இந்த தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் ஆனந்த் அத்சுல் என் மீது அவதூறு புகார் தெரிவித்து கண்ணீர் விட வைத்தார். இதனால் அவரை இனி எப்போதும் கண்ணீர் விட வைப்பேன். இதற்காக அவரை தோற்கடிப்பதே எனது ஒரே குறிக்கோள். ஆனந்த் அத்சுல் மும்பையை சேர்ந்தவர். இதனால் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பேன்.

ஆனந்த் அத்சுல் எம்.பி.யால் தொகுதி வளர்ச்சி அடையவில்லை. இந்த பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எழுப்பி ஓட்டு கேட்பேன்.

இவ்வாறு நவ்நீத் ரானா கூறினார்.

இன்று கடைசிநாள்

அமராவதி தொகுதியில் நேற்று ஒரே நாளில் நவ்நீத் ரானா உள்பட 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அமராவதி உள்ளிட்ட 10 தொகுதிகளில் முதல்கட்டமாக ஏப்ரல் 10–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இதனால் இன்று 10 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

category:

News Group Category:

வாக்குசாவடி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது

Posted: 21 Mar 2014 12:56 PM PDT

சென்னை,

சென்னை செனாய்நகர் மாநகராட்சி கலை அரங்கில் வாக்குசாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குசாவடி தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் தயாளன், உதவி ஆணையர் இளங்கோவன், வரி மதிப்பீட்டாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை எவ்வாறு வினியோகிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரதமர் ஆக ஆதரவு தெரிவித்தார் நரேந்திர மோடியுடன் நடிகர் பவன் கல்யாண் சந்திப்பு

Posted: 21 Mar 2014 12:49 PM PDT

ஆமதாபாத்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் புதிய  கட்சியை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், பவன் கல்யாண் நேற்று குஜராத் முதல்&மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி பொருத்தமானவர் என்றும், அவர் பிரதமர் ஆவதற்கு ஜன சேனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.ஆந்திராவில் உங்கள் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
 

category:

News Group Category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது

Posted: 21 Mar 2014 12:37 PM PDT

மிர்புர்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.

சூப்பர்–10 சுற்று தொடக்கம்

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. தகுதி சுற்று முடிந்து நேற்று 'சூப்பர்–10' எனப்படும் பிரதான சுற்று போட்டிகள் தொடங்கின. சூப்பர்–10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றின் முதல் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மிர்புர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு சந்தித்தன. இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுடன், 3–வது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ராவும் சேர்க்கப்பட்டதால், ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

பாகிஸ்தான் 130 ரன்

மிர்புர் சுழன்று திரும்பக்கூடிய மெதுவான (ஸ்லோ) ஆடுகளம் என்பதால் இந்திய கேப்டன் டோனி சுழற்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்தினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் 8 ரன்னில் தேவையில்லாமல் ரன்–அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் முகமது ஹபீஸ் 5 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து (விட்டவர் யுவராஜ்சிங்) தப்பித்தார். ஆனாலும் நீண்ட நேரம் நீடிக்காத அவர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 15 ரன்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன் சேகரிக்க இயலவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த அதே வேளையில், அவர்களின் ரன் வேகமும் சராசரிக்கும் குறைவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய முதல் ஓவரில் இருந்து கடைசி வரை எதிரணியின் கை ஓங்க விடாமல் இந்திய கேப்டன் டோனி கவனித்துக் கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்களும் (30 பந்து, 2 பவுண்டரி), எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி 8 ரன்னும் (10 பந்து) எடுத்தனர்.

பாகிஸ்தானை கட்டுப்படுத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா கூட்டணியாக 12 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தவான் 30 ரன்

பின்னர் 131 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் முதல் 3 ஓவர்களில் (7 ரன்) நிதானம் காட்டினர். ஜூனைட் கானின் 4–வது ஓவரில் ரோகித் ஷர்மா பவுண்டரியும், சிக்சரும் விளாச, சயீத் அஜ்மலின் அடுத்த ஓவரில் தவான் 3 பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து தந்தது. தவான் 30 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி), ரோகித் ஷர்மா 24 ரன்னிலும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (1 ரன்) கிளீன் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இந்தியா வெற்றி

இதையடுத்து துணை கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா 7 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, முதலாவது ஸ்லிப்பில் நின்ற அப்ரிடி வீணடித்தார். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி உருவாகியிருக்கும்.

சிறிய இலக்கு என்பதால் கோலியும், ரெய்னாவும் பதற்றமின்றி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர். நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 19–வது ஓவரில் ரெய்னா, சிக்சரும், அதைத் தொடர்ந்து ஒரு ரன்னும் எடுத்து ஆட்டத்தை தித்திப்பாக நிறைவு செய்தார்.

இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி 36 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரெய்னா 35 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பெருமை தொடருகிறது

இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி மண்ணை கவ்வுவது இது 4–வது முறையாகும்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.

ஸ்கோர் போர்டு

பாகிஸ்தான்

கம்ரன் அக்மல்(ரன்–அவுட்)    8

அகமது ஷேசாத் (ஸ்டம்பிங்)             டோனி (பி) மிஸ்ரா 22

ஹபீஸ் (சி) புவனேஷ்வர்குமார்

    (பி) ஜடேஜா 15

உமர் அக்மல்(சி) ரெய்னா

    (பி) ஷமி 33

சோயிப் மாலிக் (சி) ரெய்னா

    (பி) மிஸ்ரா 18

அப்ரிடி (சி) ரெய்னா (பி)

    புவனேஷ்வர்குமார் 8

சோகைப் மசூத்(ரன்–அவுட்) 21

பிலாவல் பாத்தி(நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா    5

மொத்தம் (20 ஓவர்களில்

    7 விக்கெட்டுக்கு) 130

விக்கெட் வீழ்ச்சி: 1–9, 2–44, 3–47, 4–97, 5–103, 6–114, 7–130

பந்து வீச்சு விவரம்

அஸ்வின்    4–0–23–0

புவனேஷ்வர்குமார்    3–0–21–1

முகமது ஷமி    4–0–31–1

அமித் மிஸ்ரா    4–1–22–2

ஜடேஜா    4–0–18–1

யுவராஜ்சிங்.    1–0–13–0

இந்தியா

ரோகித் ஷர்மா(பி)அஜ்மல்    24

தவான் (சி) அஜ்மல் (பி)

    உமர்குல் 30

கோலி (நாட்–அவுட்)    36

யுவராஜ்சிங் (பி)

    பிலாவல் பாத்தி 1

ரெய்னா (நாட்–அவுட்)    35

எக்ஸ்டிரா    5

மொத்தம் (18.3 ஓவர்களில்

     3 விக்கெட்டுக்கு) 131

விக்கெட் வீழ்ச்சி: 1–54, 2–64, 3–65

பந்து வீச்சு விவரம்

முகமது ஹபீஸ்    3–0–14–0

ஜூனைட் கான்    3–0–23–0

சயீத் அஜ்மல்    4–0–18–1

உமர்குல்    3.3–0–35–1

அப்ரிடி    3–0–24–0

பிலாவல் பாத்தி    2–0–17–1

கேப்டன்கள் கருத்து

சில கேட்ச்சுகளை நழுவ விட்டதுடன், 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறினார். 'சில கேட்ச்சுகளை தவற விட்டோம். மற்றபடி இந்த ஆட்டம் அருமையாக அமைந்தது' என்று இந்திய கேப்டன் டோனி குறிப்பிட்டார்.

category:

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

Posted: 21 Mar 2014 12:36 PM PDT

சைலெட்

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

மூன்று அணிகள் தலைவிதி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், தகுதி சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து–நெதர்லாந்து அணிகள் ( பி பிரிவு) சைலெட் மைதானத்தில் நேற்று மோதின. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எதிரணி பயன்படுத்திய 8 பந்து வீச்சாளர்களையும் பின்னியெடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே பாய்ன்டர் 57 ரன்களும் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கெவின் ஓ பியைரன் 42 ரன்களும் (16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு 47 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

190 ரன்கள் இலக்கை 14.2 ஓவருக்குள் நெதர்லாந்து 'சேசிங்' செய்து விட்டால் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி சூப்பர்–10 சுற்றை எட்டும். தோற்றால் அயர்லாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். 14.2 ஓவர்களை தாண்டி நெதர்லாந்து இலக்கை அடைந்தால் ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இப்படி மூன்று அணிகளின் தலைவிதியை நிர்ணயித்த இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து பவுண்டரியுடன் ரன்கணக்கை தொடங்கியது.

சிக்சர் மழை

நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரெனும், ஸ்டீபன் மைபர்க்கும் அயர்லாந்தின் பந்து வீச்சை சூறாவளியாய் சுழன்றடித்தனர். நாலாபக்கமும் பந்து ஓடிக் கொண்டே இருந்தது. மெக் பிரையன் மற்றும் குசாக்கின் ஓவர்களை புரட்டியெடுத்த மைபர்க் இரண்டு முறை 'ஹாட்ரிக்' சிக்சர்களை பறக்க விட்டார். 'இது நேரடி போட்டியா? அல்லது சிக்சர் மற்றும் பவுண்டரியை மட்டும் காண்பிக்கும் 'ஹைலெட்சா' என்று பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் சந்தேகமே வந்திருக்கும். அந்த அளவுக்கு இந்த ஜோடி களத்தில் அமர்க்களப்படுத்தியது. 'பவர்–பிளே'யான முதல் 6 ஓவர்களில் மட்டும் 91 ரன்கள் திரட்டி பிரமிக்க வைத்தனர். பீட்டர் போரென் 31 ரன்களில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த மைபர்க் 63 ரன்களில் (23 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

ஆனாலும் நெதர்லாந்தின் வாணவேடிக்கை மட்டும் பஞ்சமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. டாம் ஹூப்பரும், விக்கெட் கீப்பர் வெஸ்லே பரேசியும் கைகோர்த்து,  தங்கள் பங்குக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். டாக்ரெலின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை ஹூப்பர் தூக்கியடித்தார். இதனால் நெதர்லாந்து அணி ஜெட் வேகத்தில் இலக்கை நோக்கி முன்னேறியது. இவர்களை எப்படி அடக்குவது என்பதே அயர்லாந்து கேப்டனுக்கு தெரியவில்லை. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜிம்பாப்வே வீரர்களும் நொந்து போய் விட்டனர்.

நெதர்லாந்து வெற்றி

டாம் ஹூப்பர் 45 ரன்களில் (15 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆனார். இதன் பின்னர் பரேசி 14–வது ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் விரட்டியடித்து தங்களது லட்சியத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். நெதர்லாந்து அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரிலிங்கான வெற்றியை சுவைத்தது. பரேசி 40 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். 13.5 ஓவரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் 175 ரன்களை குவித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

அது மட்டுமின்றி இந்த இன்னிங்சில் நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் 19 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் ஓட விட்டனர். அதாவது 162 ரன்களை ஓடாமலேயே எடுத்து விட்டனர். அதிக சிக்சர் பதிவான இன்னிங்சாகவும் இது அமைந்தது.

'பி' பிரிவில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்த போதிலும், ரன்–ரேட்டில் முன்னிலை பெற்ற நெதர்லாந்து அணி சூப்பர்–10 என்ற அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

ஜிம்பாப்வேவுக்கு ஆறுதல்

முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை ஜிம்பாப்வே 13.4 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிகும்புரா 53 ரன்களுடன் (21 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி ஜிம்பாப்வே நம்பிக்கையான நிலையை அடைந்த போதிலும், நெதர்லாந்தின் விசுவரூபத்தால் ஜிம்பாப்வேயின் கனவு கோட்டை உடைந்து போய் விட்டது.

தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தகுதி சுற்றில் 8 சிறிய அணிகள் கலந்து கொண்டன. இதில் 'ஏ' பிரிவில் வங்காளதேசமும், 'பி' பிரிவில் நெதர்லாந்தும் சூப்பர்–10 சுற்றை எட்டியுள்ளன. எஞ்சிய நேபாளம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின.

***

நெதர்லாந்து நிகழ்த்திய உலக சாதனைகள்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணி நேற்று ஒரே நாளில் பல வியக்கத்தக்க சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு:–

* தனது இன்னிங்சில் நெதர்லாந்து அணி 19 சிக்சர்களை நொறுக்கியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 18 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

* இந்த ஆட்டத்தில் நெதர்லாந்தும் (19 சிக்சர்), அயர்லாந்தும் (11 சிக்சர்) மொத்தம் 30 சிக்சர்கள் எடுத்துள்ளன. இதுவும் உலக சாதனை தான். இதற்கு முன்பு நியூசிலாந்து–இந்தியா (2009–ம் ஆண்டு), ஆஸ்திரேலியா–இந்தியா (2010–ம் ஆண்டு) இடையிலான ஆட்டங்களில் தலா 24 சிக்சர் எடுக்கப்பட்டதே ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது. அந்த சாதனையும் காலியானது.

* பவர்–பிளேயில் (முதல் 6 ஓவர்) நெதர்லாந்து 91 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு பவர்–பிளேயில் நியூசிலாந்து அணி 2009–ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* நெதர்லாந்து வீரர் 30 வயதான ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் 2–வது அதிவேக அரைசதம் இதுவாகும். இந்தியாவின் யுவராஜ்சிங் 12 பந்துகளில் (2007–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) அரைசதம் அடித்து இந்த சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 17 பந்தில் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2012–ம் ஆண்டு) அரைசதம் அடித்திருந்தார். அவருடன் ஸ்டீபன் மைபர்க் 2–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 21 Mar 2014 12:36 PM PDT

இலங்கை–தென்ஆப்பிரிக்கா (குரூப்1)

இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி

தரவரிசை

1 4

கேப்டன்கள்

தினேஷ் சன்டிமால் டு பிளிஸ்சிஸ்

நட்சத்திர வீரர்கள்

சங்கக்கரா, தில்ஷன், மேத்யூஸ், அஜந்தா மென்டிஸ், மலிங்கா, செனநாயக்கே.

டிவில்லியர்ஸ், டுமினி, அம்லா, டேவிட் மில்லர், ஸ்டெயின், மோர்கல், தாஹிர்.

இதுவரை நேருக்கு நேர் (4)

வெற்றி 1 வெற்றி 3

20 ஓவர் உலக கோப்பையில் சிறந்த நிலை

இறுதிசுற்று (2009, 2012) அரைஇறுதி (2009)

நம்பர் ஒன் அணியான இலங்கைக்கு, வங்காளதேச சூழல் எல்லாம் அத்துப்பிடி. இங்கு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடிய இலங்கை அணி, அதே வேகத்தை 20 ஓவர் உலக கோப்பையிலும் காண்பிக்க முயற்சிப்பார்கள். யார்க்கர் மன்னன் மலிங்காவும், சுழல்வாதிகள் அஜந்தா மென்டிஸ், செனநாயக்கே, சதுரங்க டி சில்வா ஆகியோர் தான் இலங்கையின் துருப்பு சீட்டுகள். 'ஆசிய கிரிக்கெட்டில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எங்கள் பிரிவில் உள்ள அணிகள் சுழற்பந்து வீச்சில் தடுமாறக்கூடியவை. எனவே இங்கு எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்புள்ளது' இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணியில் காயப்பிரச்சினை ஆட்டிப்படைக்கிறது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இருவரும் தசைப்பிடிப்பால் அவதிப்படுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் அவர்கள் ஆடுவது சந்தேகம் தான். போட்டிக்கு முன்பாகத் தான் அவர்கள் களம் இறங்குவார்களா? என்பது உறுதியாக தெரிய வரும். 'இலங்கை அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. சுழற்பந்து வீச்சை நாங்கள் எப்படி எதிர்கொண்டு ஆடப்போகிறோம் எனபதே இந்த ஆட்டத்தில் முக்கியமான விஷயமாகும்' என்று பிளிஸ்சிஸ் குறிப்பிட்டார். பிளிஸ்சிஸ் ஆடாவிட்டால், டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார்.

நியூசிலாந்து–இங்கிலாந்து (குரூப்1)

இடம்: சிட்டகாங், நேரம்: இரவு 7 மணி

தரவரிசை

7 8

கேப்டன்கள்

பிரன்டன் மெக்கல்லம் ஸ்டூவர்ட் பிராட்

நட்சத்திர வீரர்கள்

கப்தில், கோரி ஆண்டர்சன், ராஸ் டெய்லர், மெக்லெனஹான், நாதன் மெக்கல்லம், வில்லியம்சன்

மோர்கன், ரவி போபரா, அலெக்ஸ் ஹாலஸ், ஜோர்டான், மைக்கேல் லம்ப், டிரெட்வெல், பெல்

இதுவரை நேருக்கு நேர் (11) முடிவில்லை (1)

3 வெற்றி 7 வெற்றி

20 ஓவர் உலக கோப்பையில் சிறந்த நிலை

அரைஇறுதி (2007), சாம்பியன் (2010)

பயிற்சி ஆட்டங்களில் இரண்டிலும் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. பார்ப்பதற்கு சாதாரண அணி போன்று தெரிந்தாலும் தங்களால் அசத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த அணியின் கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் கால் முட்டி காயத்தால் அவதிப்படுகிறார். ஆனாலும் தொடக்க ஆட்டத்தில் தன்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த கோரி ஆண்டர்சன், மார்ட்டின் கப்தில், டெய்லர், கேப்டன் மெக்கல்லம் என்று அதிரடிக்கு பிரபலமான வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். இருப்பினும் கடந்த அக்டோபர்–நவம்பர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடந்த ஒரு நாள் தொடரில் 0–3 என்ற கணக்கில் நியூசிலாந்து தோற்று இருந்தது. எனவே இங்குள்ள ஆடுகளத்தில், சீதோஷ்ண நிலையில் எப்படி ஆட வேண்டும் என்பதை பல்வேறு வகையில் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப நியூசிலாந்து வீரர்கள் தயாராகியுள்ளனர்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

category:

5 முனை போட்டியால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்

Posted: 21 Mar 2014 12:34 PM PDT

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

5 முனை போட்டி

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுவதால் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.

அனைத்துக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியது உள்ளது. இதற்கிடையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டனர்.

ஜெயலலிதா பிரசாரம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா கடந்த 3-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

மத்திய அரசுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்துவரும் அவர், மாநில அரசின் சாதனைகளையும் பிரசார கூட்டங்களில் பட்டியலிட்டு வருகிறார். மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் வலுவான அரசு அமைய ஆதரவு அளிக்கும்படி தமிழக மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நாகப்பட்டினம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5-ந்தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சென்று திறந்த வேனில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைவதற்கு முன்பே தனது பிரசாரத்தை தொடங்கி விட்ட விஜயகாந்த், நேற்று நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பா.ம.க. தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாளை மதுரையில் பிரசாரம் தொடங்குகிறார்.

நரேந்திரமோடி

தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் பிரசார பேரணிகளில் பங்கேற்றுவரும் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 2 முறை வந்து திருச்சி மற்றும் சென்னை வண்டலூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பேசினார்.

தற்போது பா.ஜனதா தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், நரேந்திரமோடி மீண்டும் தமிழகத்திற்கு வந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேரணியில் பங்கேற்க இருக்கிறார்.

வருகிற திங்கட்கிழமை அன்று பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடைபெற இருக்கும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் நரேந்திரமோடி தமிழகம் வரும் தேதி குறித்து முடிவு செய்யப்படும்.

மன்மோகன்சிங்- சோனியா

தமிழ்நாட்டில் தனித்து களம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் பிரசாரம் செய்யும் தேதி குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று, தமிழக தலைவர் ஞானதேசிகன் நேற்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அகில இந்திய தலைவர்களும் தமிழகத்திற்கு படையெடுக்க இருப்பதை அடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

7–வது சுற்றில் ஆனந்த் ‘டிரா’

Posted: 21 Mar 2014 12:31 PM PDT

கந்தி மான்சிஸ்க்,

2014–ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த நிலையில் நேற்று நடந்த 7–வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், ரஷிய வீரர் பீட்டர் ஸ்விட்லரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 37–வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. மற்ற ஆட்டங்களில் டிமிட்ரி ஆன்டிரீகின் (ரஷியா), வெசெலின் தபலோவ்வையும் (பல்கேரியா), லெவோன் அரோனியன் (அர்மேனியா), செர்ஜி கர்ஜகினையும் (ரஷியா), விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா), ஷக்ரியர் நேம்ட்யாரோவ்வையும் (அஜர்பைஜான்) தோற்கடித்தனர். 7–வது சுற்று முடிவில் இந்திய வீரர் ஆனந்த், அர்மேனியா வீரர் லெவோன் அரோனியன் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர். ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக் 4 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™