Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஒரு வழியாக சுமுக முடிவுக்கு வந்தது தமிழக பா.ஜ., கூட்டணி: ஒரே மேடையில் ராஜ்நாத் சிங், விஜயகாந்த், அன்புமணி, வைகோ

Posted:

தொகுதி பங்கீட்டை, சுமுகமாக முடித்து, தமிழகத்தில் ஒரு அசத்தல் கூட்டணியை, தமிழக பா.ஜ., அமைத்துள்ளது. தொகுதி உடன்பாட்டை, ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள் வைகோ, விஜயகாந்த், அன்புமணி முன்னிலையில், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங், சென்னையில் நேற்று முறைப்படி அறிவித்தார். தே.மு.தி.க., - 14, பா.ம.க., - 8, ம.தி.மு.க., - 7, பா.ஜ., - 8, ஐ.ஜே.கே., - 1, கொ.ம.தே.க., - 1 என, கூட்டணி கட்சிகளுக்கு இடையே, தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன என, தெரிவித்த அவர், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி, வலுவான ஓர் அணியாக உருவெடுத்து உள்ளது என, நம்பிக்கை தெரிவித்தார்.தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், ஐந்து கட்சிகள் இணைந்த, ...

காதுகுத்து விழாக்களில் உள்குத்து துவக்குகிறார் அழகிரி: தென்மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம்

Posted:

'முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியுடன், யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது' என, தி.மு.க., மேலிடம் எச்சரிக்கை விடுத்த பின்னும், அழகிரியை தேடி வரும், கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், ராஜபாளையம், முதுகுளத்தூர், தஞ்சாவூர், ஆரணி என, பல இடங்களில், தன் ஆதரவாளர்கள் வீட்டு, காது குத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அழகிரி, அங்கு வரும், தி.மு.க., அதிருப்தியாளர்களிடம், தேர்தலில், சில வேட்பாளர்களுக்கு எதிராக, உள்குத்து வேலைகள் செய்வது தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 'தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட்' ...

காந்தி நகரில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்த அத்வானி சமாதானம்: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி சந்திப்பால் மனமாற்றம்

Posted:

லோக்சபா தேர்தல், பா.ஜ., வேட்பாளர், ஐந்தாவது பட்டியல், நேற்று முன்தினம், இரவில் வெளியானது. அதில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கூடுதலாக, குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவார் எனவும், மூத்த தலைவர், அத்வானி, அவரின், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் எனவும், அறிவிப்பு வெளியானது.மத்திய பிரதேசத்தின், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானிக்கு, குஜராத்தின், காந்திநகர் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அவரை, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், ...

அரசியல் ஆதாய தந்திரத்தின் உச்சகட்டம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்

Posted:

சென்னை: 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால், தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது, அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம்' என, ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க., தயங்காது: அவரது அறிக்கை: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள், அமலில் உள்ளன. இலை போன்ற தோற்றம் எங்கிருந்தாலும், அதை இரட்டை இலை என, நினைத்து, தேர்தல் கமிஷனிடம், மனு கொடுக்கிற சூழ்நிலையில், சில அடிப்படைத் தேவைகள் குறித்து, நடவடிக்கை எடுப்போம் என்று ...

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு கருணாநிதி எதிர்ப்பு

Posted:

சென்னை: 'இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.50 மீனவர்கள், 12 படகுகள்: அவரது அறிக்கை: இந்திய - இலங்கை மீனவர்கள் இடையே பேச்சு நடைபெறுவதற்கு முன், அதை திசை திருப்பி, குழப்புவதைப் போல, அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்வு, இலங்கை கடற்படையினரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களின், ஐந்து படகுகளை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த, 25 பேரையும் சிறை பிடித்து ...

ஆடு பகை குட்டி உறவு

Posted:

'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர பகைவரும் இல்லை' என்பது, முரண்பட்ட இரண்டு கட்சிகள் கூட்டணி சேரும் போதெல்லாம் பிரயோகிக்கப்படும் சொற்றொடர். அந்த சொற்றொடரை, இப்போது பா.ம.க.,வும் - தே.மு.தி.க.,வும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.விஜயகாந்த், தே.மு.தி.க.,வை ஆரம்பிக்கும் முன்பு இருந்தே, 'நடிகர்கள் தான் தமிழகத்தை ஆள நினைக்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது' என்ற பாணியில் பற்பல விமர்சனங்களை பா.ம.க., வெளிப்படுத்தி வந்து உள்ளது. இதனாலேயே, விஜயகாந்த், தன்னுடைய கட்சியை, வன்னியர்கள் அதிகம் இருக்கும் வட மாவட்டங்களை மையமாக வைத்து ...

'தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேராததை வரவேற்கிறேன்!'

Posted:

கேரளாவில் இப்போது மின் தட்டுப்பாடு இல்லை; தகவல் தொழில்நுட்ப துறையிலும் முன்னேறி வருகிறது; கொச்சியில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இவற்றை எல்லாம், சட்டசபையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லாமலேயே திறம்பட செய்து வருகிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடிய இவர், தன் சொத்து விவரங்களை முதல்வருக்கான இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும், முதல்வர் அலுவலக அறையில் நடப்பவற்றை, இணையதளம் மூலம், நேரலையாக ஒளிபரப்பு செய்து, வெளிப்படை தன்மைக்கான புதிய அளவுகோலை உருவாக்கி இருக்கிறார். வரும் ஏப்., 10 ல், ...

கெஜ்ரிவால் கூட்டம்: கட்டணம் ரூ.1,100

Posted:

வாரணாசி: 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கும், வாரணாசி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், 1,100 ரூபாய் கொடுக்க வேண்டும்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேசத்தின், வாரணாசி லோக்சபா தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி, மாநிலத்தில், 49 நாட்கள், முதல்வராக இருந்து, பல குழப்பங்களை நிகழ்த்திய, அரவிந்த் கெஜ்ரிவால், போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், ...

இருக்கையின் வரிசை மாறினால் கூட்டணி முறிந்து விடுமோ? பா.ஜ., நிர்வாகிகளின் கடைசி நேர படபடப்பு

Posted:

பா.ஜ., தலைமையிலான கூட்டணி முடிவாகி, தொகுதிப் பங்கீடு இறுதியானாலும், இவற்றை அறிவிக்கும் கூட்ட மேடையில், யார், யாரை எங்கு அமர வைப்பது என்பதில், பா.ஜ., நிர்வாகிகளிடம் பெரும் குழப்பம் நிலவியது.பகல், 12:00 மணியளவில் தான், மேடையின் பின்புறம், பா.ஜ., கூட்டணியின் பிளக்ஸ் போர்டு கட்டப்பட்டது. அதில், மோடி, ராஜ்நாத் சிங்குடன், கூட்டணிக் கட்சித் தலைவர்களான, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, பச்சமுத்து, ஈஸ்வரன் ஆகியோரது படங்களும், அவர்களின் சின்னமும் வரையப்பட்டிருந்தன. இதைப் பார்த்ததும் கூட்டணி உறுதியாகி விட்டது என்ற முடிவுக்கு வர முடிந்தது. இதன்பின், தலைவர்கள் அமருவதற்கான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™