Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாட்டுக்கோழி ரசம்

Posted: 20 Mar 2014 02:33 PM PDT

தேவையானவை: நாட்டுக்கோழி - ஒரு கிலோ, தக்காளி - 300 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, பட்டை, சோம்பு - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 5 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 5, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ...

புதைகுழி தேசம்!

Posted: 20 Mar 2014 02:28 PM PDT

'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!' இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி. இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் ...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 20 Mar 2014 02:23 PM PDT

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர் பெயர்களை கட்சித்தலைமை வெளியிட்டுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் - விஸ்வநாதன், ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு, ஆரணி - விஷ்ணு பிரசாரத், திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், கடலூர் - கே.எஸ். அழகிரி, நீலகிரி - காந்தி, திருச்சி - சாருபாலா, திண்டுக்கல் - சித்தன், பெரம்பலூர் - ராஜசேகரன், மயிலாடுதுறை - மணிசங்கர் ஐயர், தஞ்சை - கிருஷ்ணசாமி வாண்டையார், சிவகங்கை - கார்த்தி சிதம்பரம், நெல்லை ...

MH370: அறிவியலின் தோல்வியா... மனிதனின் வியூகமா..!?

Posted: 20 Mar 2014 02:22 PM PDT

239 உயிர்கள்..!? அந்த விமானம் மர்மமாக மறைந்து ஒரு வாரத்துக்கு மேலான பிறகும், இன்னும்  தகவல் ஏதும் இல்லை! 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரத்துக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370, இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் நிமிடம் வரை கண்டுபிடிக்கப்பட வில்லை. விஞ்ஞான வளர்ச்சி, உச்சத்தைத் தொட்டு விட்டதாகச் சொல்லப்படும் இந்த யுகத்தில், ஒரு விமானம் காணாமல்போன ஒரு வாரத்துக்குப் பிறகும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, நிச்சயம் நமது அறிவியல் கண்டுபிடிப்புகளைக் ...

மொபைல் எண் '7777777' ரூ.13 கோடிக்கு விற்பனை

Posted: 20 Mar 2014 01:47 PM PDT

வளைகுடா நாடுகளில், அபுதாபியில், மொபைல் போன், 'பேன்சி' எண், 13 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.கார்கள் மற்றும் போன்களுக்கு, வித்தியாசமான எண்களை பெற, உலகம் முழுவதும் பலரும் ஆர்வப்படுகின்றனர். பேன்சி எண்களை பெற, பலத்த போட்டி இருப்பதால், அந்த எண்கள், ஏலத்தில் விடப்படுகின்றன.அதிக தொகை, யார் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு, அந்த எண்கள் வழங்கப்படுகின்றன.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, அபுதாபியில், தொலைபேசி நிறுவனம் நடத்திய, ஏல விற்பனையில், ' 7777777' என்ற எண், 13 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. -- ...

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Posted: 20 Mar 2014 01:44 PM PDT

புதுடில்லி: பிரபல எழுத்தாளரும், பத்ரிகையாளருமான குஷ்வந்த்சிங் இன்று காலமானார். இவருக்கு வயது (99). மத்திய அரசு நடத்திய யோஜனா பத்திரிகை, இல்ஸ்ட்ரேட்டடு வீக்லி, நேஷனல் ஹெரால்டு, இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், பத்ம பூஷண் , பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். 1984ல் பொற்கோவில் ராணுவம் நுழைந்ததை கண்டித்து பத்ம பூஷண் விருதை திரும்ப கொடுத்தார். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் -- dinamalar

30 வகை குட்டீஸ் ரெசிபி

Posted: 20 Mar 2014 01:41 PM PDT

பிரெட் க்ரிஸ்பிஸ் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் ...

யார் இவர்? - தாமஸ் ஆல்வா எடிசன் !

Posted: 20 Mar 2014 11:44 AM PDT

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

உங்களுக்கு தெரியுமா?

Posted: 20 Mar 2014 11:42 AM PDT

www. rtoaifmvd.com இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. www. consumer.tn.gov.in தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ...

சிறுவனும் சிவமணியும்

Posted: 20 Mar 2014 08:59 AM PDT

சிவமனிஉடன் சிறுவன் அபாரமாக ட்ரம்ஸ் வாசிக்கும் காணொளி

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!

Posted: 20 Mar 2014 08:55 AM PDT

கார்ப்பரேஷன் ஆபிஸில் தவமாய் தவம் கிடந்து, ஒரு வழியாக வீட்டிற்குத் தண்ணீரைக் கொண்டு வந்தே. குழாயில் அடைப்பை அறுத்தெறிந்து, உடைப்பிற்கு ஒட்டு போட்டு என்று இது பெரிய வேலையாகி விட்டது. ன்று பூமிக்குக் கங்கையைக் கொண்டு வர தவம் செய்த பகீரதனை, இன்று வீட்டிற்குக் கார்ப்பரேஷன் தண்ணீரைக் கொண்டு வர தவம் செய்யச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் எந்தத் தவம் கடினம் என்று எனப் பேசினாள் பக்கத்து வீட்டு பார்வதி. பேச்சுக்குப் பேச்சு தவம், தவம் என்கிறாளே என்று மனம் தவம் என்ற பொருளிற்கு தாவியது. தவம் என்றால் ...

வந்தாளே.... வசந்தா!

Posted: 20 Mar 2014 08:09 AM PDT

ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் தன் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய வசந்தா டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று தானும் கணவன் மோகனும் மகள் சிந்துவும் பதினைந்து நாள்கள் விடுமுறையில் வெஸ்ட் வர்ஜீனியாவிலிருந்து சென்னைக்கு வரப்போவதாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்தாள். "பதினைந்து நாட்களுக்கு மட்டும்தானா?' என்று சரஸ்வதிக்கும் ஷங்கருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் வசந்தா கலியாணமாகி அமெரிக்கா போய் ஐந்து வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் முதல்முறையாகச் சென்னை வருகிறாள். மூன்று வருடங்களுக்கு ...

ஒரு பேய் குறுக்கே வந்தது...!

Posted: 20 Mar 2014 08:03 AM PDT

-
இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது
ஒரு பேய் வந்தது.
-
ஒருத்தன் பயந்து கத்தினான்.இன்னொருத்தன்
தைரியமாய்ப் போய்க் கொண்டிருந்தான்.
...
ஏன்னு சொல்லுங்க..?

உலகிலேயே காஸ்ட்லி 12 கோடிக்கு விலை போன நாய்

Posted: 20 Mar 2014 08:00 AM PDT

சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது. இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது. சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில், 'ஆடம்பர செல்ல பிராணிகள்' கண்காட்சி நேற்று நடந்தது. உலகின் காஸ்ட்லியான பல்வேறு இன நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஷாங் என்பவர் கொண்டு வந்திருந்த திபெத்திய வேட்டை நாய், ரூ.12 கோடிக்கு விலை போனது. மிகவும் அரிய இனமாக கருதப்படும் திபெத்திய வேட்டை நாய்கள். பார்ப்பதற்கு சிங்கம் போல காட்சியளிக்கின்றன. ...

விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா !

Posted: 20 Mar 2014 07:57 AM PDT

* விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும் காலமும் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின் பொறுப்பாகும். * ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும் அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம் மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா வழங்கப்படும். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சரி பார்த்துக் கொள்வது அனைத்து பயணிகளுடைய கடமையாகும். * பயணிகள் ...

வீடு!

Posted: 20 Mar 2014 07:54 AM PDT

சின்னச் சின்ன குட்டிப் பாப்பாக்களே! இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. பதில் சொல்ல முடியுமா பாருங்களேன். மனிதர்கள் ஏன் வீடுகளில் வசிக்கின்றனர்? மிருகங்கள் ஏன் காடுகளிலும், மலைகளிலும் வசிக்கின்றன? உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்லட்டுமா?பல கோடி வருடங்களுக்கு முன் மனிதர்கள், மிருகங்களுடனும், பறவைகளுடனும் சேர்ந்தே குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுக்க, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களையும், மட்டைகளையும் வைத்து ஒரு புலி, ஒரு யானை, ஒரு மனிதன் மூவரும் சேர்ந்து ஒரு ...

கோபம்!

Posted: 20 Mar 2014 07:51 AM PDT

திவாகர் கையில் இருந்த பொம்மைக் காரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனுடைய மாமா அவன் பிறந்தாள் பரிசாக அவனுக்கு அளித்திருந்தார்.திவாகர் மாமா அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். மிகவும் அற்புதமான பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். அவர் அவற்றை எல்லாம் வாங்கி திவாகர் பிறந்தநாளின் போது அவனுக்கு வழங்குவார். இப்போது அவர் திவாகருக்கு பரிசாக வழங்கியிருந்த பொம்மைக்கார் குட்டிக் கரணம் போட்டும், சுவரின் மீது ஏறியும், ஒரே இடத்தில் நின்று வட்டமடித்தும், கண்சிமிட்டியும் செய்யும் வேடிக்கைகளையெல்லாம், ...

பஞ்சு மெத்தை!

Posted: 20 Mar 2014 07:46 AM PDT

கனகராஜ் தன் வயதான தாய், தந்தையுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தான். அவன் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இரும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். அவன் வீட்டில் சகல வசதிகள் இருந்தும், அவன் படுக்கும் போது இரவில் அவனுக்கு தூக்கம் வருவ தில்லை. இதனால் அவன் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. இரும்பாலையில் வேலை பார்க்கும்போது அவனுக்கு தூக்கம் வரும். வேலை செய்யுமிடத்தில் தூங்கமுடியாதல்லவா? அதனால் தூக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேலை செய்தான். தூக்கம் இல்லாததால், அவன் சக தொழிலாளர்களிடம் எரிந்து ...

–கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 20 Mar 2014 07:41 AM PDT

இளமையும் முதுமையும்
--

-

இளமை ஒருவரை
ஒருவருக்கு விருந்தாக்குகிறது
முதுமை ஒருவரை
ஒருவருக்கு மருந்தாக்குகிறது
-
இளமை நினைத்ததை
நடத்தும்
முதுமை
நடந்ததை நினைக்கும்..!
-
————————–

இளவரசியை ஜொலிக்க வைத்த ஐதராபாத் நிஜாமின் வைர நெக்லஸ்!

Posted: 20 Mar 2014 07:36 AM PDT

பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி, கேத் வில்லியம் , குழந்தை பிறந்த பின், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த, வி.ஐ.பி., களின் கண்களும், கேத் வில்லியமின் கழுத்தையே, வைத்த கண் வாங்காமல் பார்த்தன. அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ், விழா அரங்கில் இருந்த விளக்குகளின் வெளிச் சத்தையும் மீறி, ஜொலி ஜொலித்தது தான், அதற்கு காரணம். இந்த நெக்லஸ், ஐதரா பாத் நிஜாமுக்கு சொந்த மானது. பிரிட்டன் ...

எப்படி இருக்கீங்க நண்பர்களே !

Posted: 20 Mar 2014 07:34 AM PDT

எப்படி இருக்கீங்க நண்பர்களே ! நலமா? என்னுடைய சொந்த வேலையாக வெளியூர் சென்றதால் கொஞ்சநாளாக இங்கு வர முடியலை வந்ததும் அலைச்சலால் கொஞ்சம் இடுப்பு வலி இப்போ தேவலாம் அது தான் இங்கு வந்துட்டேன்....................       நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க?

படித்ததில் பிடித்தது :) - துணிச்சலாக செயல்படுங்கள் பெண்களே !

Posted: 20 Mar 2014 07:27 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

இருவரும் ஒன்றே....!

Posted: 20 Mar 2014 07:12 AM PDT

காய்கறி வாங்கிக் கொண்டு, மார்க்கெட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வினோதினி, எதிரில், பேங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள்.''என்னப்பா... நல்லா இருக்கியா... பார்த்து ரொம்ப நாளாச்சு. நானும் பேங்குக்கு போகணும்ன்னு அவர்கிட்டே சொல்லிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கல.'' ''போன வாரம் கூட சார் பேங்க்கு வந்திருந்தாரே மேடம்... டெபாசிட் பணம் அஞ்சு லட்சத்த, ஏதோ அவசரத் தேவைன்னு, மானேஜர்கிட்ட பேசி, வாங்கிட்டுப் போனாரு. நான்தான் அவரு கூட இருந்தேன்.''ஒரு கணம் துணுக்குற்றவள், ''ம்... ஆமாம் சொன்னாரு; நான் தான் ...

இன்று உலக சிட்டுக்குருவி தினம்

Posted: 20 Mar 2014 01:10 AM PDT

- இன்று உலக சிட்டுக்குருவி தினமாகும், அழிந்து வரும் அரிய பறவைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவிகளை பு துவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குமாரி தனது வீட்டில் வளர்த்து வருகிறார். - எங்கள் வீட்டில் சிறிய பானைகள், பெட்டிகளை ஆங்காங்கே வைத்து சிட்டுக்குருவிகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்பாடு செய்தோம். தினந்தோறும் காலையில் கம்பு, தினை போன்றவற்றை அவை உண்பதற்காக வைப்போம். காலையில் 7 மணிக்கு வெளியே சென்று விடும் சிட்டுக்குருவிகள், மாலை 6 மணிக்கு வந்து விடுகின்றன. அக்கம்பக்கத்தினரும் ...

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.

Posted: 19 Mar 2014 10:49 PM PDT

* நகரங்கள் * கோயில் நகரம் மதுரை. மாங்கனி நகரம் சேலம். முத்து நகரம் தூத்துக் குடி . பஞ்சாலை நகரம். கோiவை. பட்டு நகரம் காஞ்சி . பின்னலாடை நகரம் திருப்பூர் . பூக்கள் நகரம் உதகை. நெற் களஞ்சிய நகரம் தஞ்சாவூர் . அல்வா நகரம் திருநெல்வேலி . வெயில் நகரம் வேலூர் . நகரின் பெயரை மனனம் செய்து மனதில் நன்குப் பதிப்பீரே மதிப்பெண் நன்று பெறுவீரே…!

கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி!

Posted: 19 Mar 2014 08:02 PM PDT

http://media.dinamani.com/2014/03/20/anema.jpg/article2118857.ece/alternates/w460/anema.jpg ஆழ்கடலில் வாழும் கடல் அனிமோன் எனப்படும் நட்சத்திர வடிவ சிறுமலரில் விலங்கின மரபுப் பண்பும், தாவர இன மரபுப் பண்பும் கலந்திருப்பதை உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து "ஜெனோம் ரிசர்ச்' என்னும் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி உல்ரிச் டெக்னாவ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நட்சத்திர வடிவ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™