Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அன்புமணியா?அல்போன்ஸா மாம்பழமா?

Posted:

அன்புமணியா, அல்போன்ஸா மாம்பழமா? என்ற, தேர்வு கேள்வி தான் பா.ம.க., திக்கி திணறி, கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்ததற்கு காரணம் என, தெரிகிறது.அன்புமணிக்கும் - குரு + ராமதாசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பா.ம.க.,வின் மாம்பழ சின்னத்திற்கான போராட்டம் குறித்தெல்லாம் பல்வேறு கால கட்டங்களில், 'தினமலர்' நாளிதழ் பதிவு செய்து உள்ளது.இந்த கேள்விகள் எழுந்து சில மாதங்களாகியும், உயர்ந்த மருத்துவ படிப்பு படித்தவர்களால் இதை தீர்க்க முடியவில்லையா என்ற எண்ணம், பல்வேறு தரப்பினருக்கு எழுந்து உள்ளது.சமீபத்தில் பொறுமைக்கு புதிய அளவுகோலான பா.ஜ.,வே, 'கூட்டணியில் ...

கன்னியாகுமரிக்கு காங்கிரசில் அடிதடி: சோனியா கையில் இறுதி முடிவு

Posted:

கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான, காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில், மிகப்பெரிய, யுத்தமே நடக்கிறது. இந்தத் தொகுதிக்கான, காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதில், கடும் இழுபறி நிலவுவதால், அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு, சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில், போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி, டில்லியில், கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. முதல்கட்டமாக, சோனியா தலைமையிலான, மத்திய தேர்தல் குழு, 12 தொகுதிகளுக்கான, வேட்பாளர்களின் பெயர்களை இறுதி ...

'தமிழ், தமிழ்' எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: பொள்ளாச்சியில் விஜயகாந்த் விளாசல்

Posted:

பொள்ளாச்சி:''கருணாநிதி 'தமிழ், தமிழ்" எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறார் ,'' என தே.மு.தி.க., தலைவர் பொள்ளாச்சியில் பேசினார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பொள்ளாச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திருவள்ளுவர் திடலில் பேசியதாவது:அமராவதி, திருமூர்த்தி அணைகளை துார்வாராமல், இரு கட்சிகளுமே ஏமாற்றுகின்றன. இங்குள்ள தென்னை மரங்கள், சிலந்திப்பூச்சி தாக்குதலால் பட்டுப்போய் விட்டதாக, ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், வறட்சியின் காரணமாகத்தான் தென்னைகள் வாடியுள்ளன.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டு கட்சியினருமே கூட்டணி அமைத்து, மணல் கொள்ளை அடிப்பது ...

ஒரு வழியாக முடிந்ததாம்; பிரச்னைகள் தீர்ந்ததாம்: பா.ஜ., கூட்டணியில் தொகுதி உடன்பாடு

Posted:

நீண்ட இழுபறிக்குப் பின், பா.ஜ., கூட்டணியில், கட்சிகளுக்கு இடையே, தொகுதி உடன்பாடு தொடர்பாக, சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கூட்டணியின் தொகுதி உடன்பாடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. மேலும், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படுகிறது. சென்னையில் இன்று பகல், 12:00 மணிக்கு, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இந்த விவரங்களை அறிவிக்கிறார்.தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி உள்ளது. அதில், இடம்பெற்றுள்ள, தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் கொ.ம.தே.க., கட்சிகளுக்கு இடையிலான, ...

மத்திய அரசு மீது பழி போடுவதா? முதல்வருக்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு தான் காரணம் எனச் சொல்லி, முதல்வர் ஜெயலலிதா தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, எட்டாத உயரத்திற்கு சென்றுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.அதன் காரணமாக, கட்டுமான தொழில் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர். ஆனால், விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு தான் காரணம் எனக்கூறி, தான் தப்பித்துக் கொள்ள முயலுகிறார் ...

40லும் காங்கிரஸ் டெபாசிட் இழக்கணும்: சங்கரன்கோவிலில் ஜெ., சூளுரை

Posted:

திருநெல்வேலி:''தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் காங்கிரசை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்,'' என முதல்வர் ஜெயலலிதா பேசினார்.தென்காசி (தனி) தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் வசந்திமுருகேசனை ஆதரித்து சங்கரன்கோவிலில் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெ.,பேசியதாவது:இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து, பொருளாதார சீரழிவில் இருந்தும், ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்தும் விடுவிக்கும் தேர்தல். மத்திய காங்., அரசின் வேதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பாதுகாப்பு துறையில் கூட ...

பா.ஜ.,வுக்கு மாயாவதி 'ஓகே!'

Posted:

லக்னோ: உ.பி.,யில், ஆளும் கட்சியான, சமாஜ்வாதியை விட, எதிர்க்கட்சியான, பகுஜன் சமாஜ், லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்படுவதால், தேர்தலுக்கு பின், பா.ஜ., - பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே, உடன்பாடு ஏற்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.அதிக தொகுதிகள்:உ.பி,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி, ஆட்சி நடக்கிறது. நாட்டிலேயே, மிக அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகள், இந்த மாநிலத்தில் உள்ளன. இங்கு, அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக, நம்பப்படுகிறது.தற்போது, இங்கு, நான்கு முனை போட்டி ...

நரேந்திர மோடிக்கு எதிராக திக்விஜய் களமிறங்குகிறார்?

Posted:

புதுடில்லி :லோக்சபா தேர்தலில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, உத்தர பிரதேசத்தின், வாரணாசியில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, திக்விஜய் சிங்கை களமிறக்க, அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.புனித நகரம்:இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும், வாரணாசியில் மோடி போட்டியிடுவதின் மூலம், உ.பி.,யில், கணிசமான தொகுதிகளை கைப்பற்ற, பா.ஜ., ...

அழகிரியுடன் தொடர்பு கொண்டால் தி.மு.க.,வில் இருந்து 'கல்தா': அன்பழகன் பெயரில் கட்சி மேலிடம் திடீர் எச்சரிக்கை

Posted:

கட்சியிலிருந்து, இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அழகிரி, தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களை, தன் ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சியில், ஈடுபட்டு வருவதால், அவருக்கு, 'செக்' வைக்கவும், அவரின் வியூகங்களை முறியடிக்கவும், தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. 'அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும், கட்சியினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பொதுச்செயலர் அன்பழகன் பெயரில், தி.மு.க., மேலிடம், எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாத அழகிரி, வரும், 23ம் தேதி, ராஜபாளையத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். ...

மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது விமானி தானா?

Posted:

கோலாலம்பூர்:கடந்த, 13 நாட்களாக, காணாமல் போயுள்ள, மலேசிய பயணிகள் விமானத்தின் பைலட், தன் வீட்டில் பயன்படுத்திய, மாதிரி விமான பயிற்சி இயந்திரத்தில் இருந்த, சில தகவல்கள் அழிக்கப்பட்டுஉள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.239 பயணிகள்:மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, கடந்த 8ம் தேதி, சீனாவின், பீஜிங் நகருக்கு, 'மலேசியன் ஏர் லைன்ஸ்' விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்கள், 239 பேருடன் புறப்பட்டது.அந்த விமானத்தில், சென்னை பெண் உட்பட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டை சேர்ந்த, ஒரு தமிழரும் பயணித்தனர்.அந்த விமானம், வியட்நாம் எல்லையில் நுழைந்ததும், தரை ...

பா.ஜ., அணியில் சேர மாட்டேன்: சரத் பவார்

Posted:

புதுடில்லி : ''தேசியவாத காங்கிரஸ் கட்சி, எந்த சூழ்நிலையிலும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேராது. அந்த கூட்டணியால், மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது; அதற்கான, தொகுதிகள் அந்த கூட்டணிக்கு கிடைக்காது,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவார் கூறினார்.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், அதிக, எம்.பி.,க்களை கொண்டுள்ள, இரண்டாவது பெரிய கட்சியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. இக்கட்சியின் தலைவர், மகாராஷ்டிராவை சேர்ந்த, சரத் பவார், மத்திய, விவசாய அமைச்சராக உள்ளார்.தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டியில், அவர் ...

வதோதராவிலும் மோடி போட்டி: மதுரா தொகுதியில் ஹேமமாலினி

Posted:

புதுடில்லி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வதோதரா லோக்சபா தொகுதியிலும் போட்டியிடுவார்' என, பா.ஜ., நேற்று அறிவித்துள்ளது.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., மேலிடம், நேற்று வெளியிட்டது. இதில், 67 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ஏற்கனவே, உ.பி., மாநிலம், வாரணாசியில் மோடி போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கட்சியின் மூத்த தலைவர், அத்வானி, குஜராத் மாநிலம், காந்திநகரில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™