Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆம்னி பஸ்களில் பார்சலாக கடத்தப்படும் கறுப்பு பணம்

Posted:

பல, ஆம்னி பஸ்களில், பயணிகளின் எண்ணிக்கையை விட, பார்சல்களின் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளது. அந்த பார்சல்களில், பணம், பொருட்கள் கடத்தப்படுவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் கண்காணிப்பு :அதிகாரிகள், வருமான வரித் துறையினர் பிடிக்குள் சிக்காமல் இருக்க, பணம், பொருட்களை, ஆம்னி பஸ்கள் மூலம் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள்,கடுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையிலும், சில அதிகாரிகள் ஆதரவுடன், பார்சல் வடிவில், பணம் கட்டுக்கட்டாக எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி ...

தி.மு.க.,வினருக்கு வாய்ப்பூட்டு!

Posted:

தேர்தல் பிரசாரங்கள் மந்தமாக நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்களோடு சந்திப்பு, காரசாரமான பேட்டிகள் என, அழகிரி மட்டுமே, கடந்த ஒரு வாரமாக தேர்தல் அரசியலுக்கு மசாலா சேர்த்து வருகிறார்.ஆனால், 'ஸ்டாலின் தி.மு.க.,'விற்கு எதிரான அழகிரியின் ஆட்டங்களுக்கு, தி.மு.க., தரப்பில் இருந்து எந்தவிதமான சலனமும் இல்லாதது, அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க., தரப்பினரும், 'எங்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதால், அழகிரி மீது கவனம் செலுத்த நேரம் இல்லை' என, பதிலளிக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க.,வில் ...

வலை வீசும் அ.தி.மு.க.,: ஓட்டம் பிடிக்கும் மாற்று கட்சியினர்: ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுக்க நிர்வாகிகள் தீவிரம்

Posted:

முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்திற்கு வரும்போது, அவர் முன்னிலையில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களை, கட்சியில் இணைக்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வினர், மாநிலம் முழுவதும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை, வளைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த, மாற்று கட்சியினர், அ.தி.மு.க.,வினரைக் கண்டதும், தலை தெறிக்க ஓடுகின்றனர்.ஒவ்வொரு தொகுதியாகதமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட்ட, முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 3ம் தேதி, காஞ்சிபுரத்தில், தேர்தல் ...

'ஆம் ஆத்மி'யா? அலறி ஓடும் வாசன், ஜெயந்தி: போட்டியிட மறுப்பதன் பின்னணி என்ன?

Posted:

தனித்துப் போட்டியிடும் காங்கிரசில், தலைவர்கள் எல்லோரும், களம் இறங்க மறுத்து, ஓட்டம் பிடிப்பது ஏன் என்பதற்கான, பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.கடந்த வாரம் டில்லியில், காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூடி, தமிழகத்திற்கான வேட்பாளர் தேர்வு குறித்து பரிசீலித்தது. அதில், 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறது. அந்த நேரத்தில் நடந்த விவாதத்தில், ஆரணி சிட்டிங் எம்.பி., கிருஷ்ணசாமி, தனக்கு பதிலாக மகன் விஷ்ணு பிரசாத்தை நிறுத்த விரும்புவதையும், சிவகங்கையில் சிதம்பரம் தனக்கு பதிலாக மகன் கார்த்தியை நிறுத்த விரும்புவதையும், குலாம் நபி ஆசாத், ...

திட்டத்தை முடக்குவது தான் ஜெ., யின் சாதனை: ஸ்டாலின் பேச்சு

Posted:

ராஜபாளையம்:"ஏற்கனவே இருந்த திட்டங்களை கிடப்பில் போடுவது மட்டும் தான் ஜெ., ஆட்சியில் நடக்கிறது," என, ராஜபாளையத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தென்காசி தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை (புதிய தமிழகம்) ஆதரித்து நேற்று, ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் தான் தாமிரபரணி குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் (ராஜபாளையம் தவிர) செயல்படுத்தப்பட்டது. அப்போது நான் உள்ளாட்சிதுறை அமைச்சர்; ராஜபாளையம் நகராட்சியில் இருந்து மட்டும், அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இன்று வரை தாமிரபரணி குடிநீர், ...

மத்திய அரசில் அ.தி.மு.க., இடம்பெற்றால் தமிழகம் மிளிரும்: ஜெ.,

Posted:

கள்ளக்குறிச்சி:""மத்திய அரசில், அ.தி.மு.க., வலுவான நிலையில் அங்கம் வகித்தால், தமிழகம் மிளிரும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜை ஆதரித்து, உலகங்காத்தான் பகுதியில், முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.எதையும் செய்யவில்லை :அவர் பேசியதாவது:தமிழகத்தின் தேவைகளை, மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது. அதற்கு, வரும் தேர்தலில் உங்கள் ஓட்டுகளை, அ.தி.மு.க.,விற்கு தாருங்கள் என, கேட்க வந்துள்ளேன்.காங்., தலைமையிலான மத்திய அரசில், ஒன்பது ...

"மக்கள் விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டி' : கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted:

பெங்களூரு:""மக்கள் விரும்பினால், வாரணாசி தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை எதிர்த்து, போட்டியிடத் தயார்,'' என, "ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.பிரசாரம்:ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, பெங்களூரில், பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, அவரிடம், "லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடும், நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ""இதுகுறித்து, இன்னும் ஒரு வாரம் கழித்து முடிவு ...

தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணிக்கு தயார்: காங்., துணை தலைவர் ராகுல் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:""தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உடன் நாங்கள் மீண்டும் கூட்டணி அமைத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அரசியல் லாபத்திற்காக, மதவாதம், பிரிவினைவாதத்தை தூண்டி விடும், கட்சிகளுக்கு எதிராக, ஓரணியில் திரளும் கட்சிகளுடன், நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்,'' என, காங்., துணை தலைவர், ராகுல் கூறினார்.மத்தியில், கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் தீவிர பிரசாரம், சில மாநிலங்களில், கூட்டணி கட்சிகள் வெளியேறியது ...

பா.ஜ., கூட்டணி குழப்ப அறிவிப்புகள் ஓயவில்லை: பா.ம.க., பட்டியலால் எழுந்தது பரபரப்பு

Posted:

பா.ஜ., கூட்டணியில் இன்னும் குழப்பம் ஓயவில்லை. தே.மு.தி.க.,வை தொடர்ந்து, பா.ம.க.,வும் நேற்று வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு, கூட்டணி குழப்பம் தொடர்பாக, புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சமாளிக்க, 'கூட்டணி பேச்சு சுமுகமாக நடக்கிறது; எங்களது தேசிய தலைவர், ராஜ்நாத் சிங், ஓரிரு நாளில் சென்னை வந்து, தொகுதி உடன்பாட்டை முறைப்படி அறிவிப்பார்' என, தமிழக, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.அதுவரைக்கும், பா.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில், 'ஜாலி'யான அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது. 'கூட்டணி உண்டா, இல்லையா' என்ற குழப்பத்திற்கு, நேற்று முன்தினம் தான், தே.மு.தி.க., ...

மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்

Posted:

கோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்கு முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை.இந்தியர்கள் : இந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த, சமூக சேவகர், சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடாவில் வசிக்கும், சேலத்தை ...

கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

Posted:

பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், "ஆம் ஆத்மி' கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, "கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்' என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, கர்நாடகாவின், 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்காக, இக்கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூரில், ...

சந்திரபாபுவுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி: ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் வியூகம்

Posted:

ஐதராபாத்: ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, ஜெகன் மோகன் ரெட்டி, களமிறக்கியுள்ளார். இதனால், இந்த தேர்தலில், சந்திரபாபு நாயுடுவுக்கு, கடும் சவால் எழுந்துள்ளது. ஆந்திராவில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் அமைந்ததும், தெலுங்கானா பகுதியில் வெற்றி பெற்றவர்கள், அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகவும், சீமாந்திரா பகுதியில் வெற்றி பெற்றவர்கள், அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகவும் கருதப்படுவர். இந்நிலையில், சீமாந்திரா பகுதியில், வெற்றி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™