Daily Thanthi |
- ஹோலி பண்டிகை:மன்மோகன்சிங், மோடி வாழ்த்து
- ஹோலி பண்டிகை
- மொய்லி வெற்றி பெற்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2ஆயிரமாக உயரும் கெஜ்ரிவால் பேச்சு
- பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
- வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம்
- ‘‘பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்’’ கலைஞர் தி.மு.க. பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி? மதுரையில் பரபரப்பு சுவரொட்டிகள்
- தென்காசியில் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி
- பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்
- முதல்-அமைச்சர் ஜெயலலிதா
- இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்கள் நாளை நாடு திரும்புகின்றனர்
| ஹோலி பண்டிகை:மன்மோகன்சிங், மோடி வாழ்த்து Posted: 16 Mar 2014 09:21 AM PDT புதுடெல்லி, பிரதமர் மன்மோகன்சிங், ஹோலி பண்டிகையையட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், Ôஇளவேனில் காலம் தொடங்குவதை குறிக்கும் ஹோலி பண்டிகை, நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை குறிக்கிறது. அது, அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளமையை அளிக்கட்டும் என்று கூறியுள்ளார். குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் எனது சகோதர, சகோதரிகளே, நாடு, தேர்தல் வண்ணத்தில் மூழ்கி உள்ளது. நாட்டின் தலைவிதியை மாற்ற இந்த ஜனநாயக திருவிழாவை கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 16 Mar 2014 09:12 AM PDT |
| மொய்லி வெற்றி பெற்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2ஆயிரமாக உயரும் கெஜ்ரிவால் பேச்சு Posted: 16 Mar 2014 09:11 AM PDT கோலார் தங்கவயல், ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிக்பள்ளாப்பூரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி வீரப்ப மொய்லியை அவர் கடுமையாக தாக்கி பேசினார். ''பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி லாபமடைய வேண்டும் என்பதற்காக பெட்ரோல் விலை, கியாஸ் விலை ஆகியவற்றை வீரப்ப மொய்லி உயர்த்திக் கொண்டே செல்கிறார். இந்த முறை நீங்கள் மொய்லியை தேர்ந்தெடுத்தால் கியாஸ் விலை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை'' என்று அப்போது கெஜ்ரிவால் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் Posted: 16 Mar 2014 09:06 AM PDT |
| வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் Posted: 16 Mar 2014 09:06 AM PDT |
| Posted: 16 Mar 2014 09:02 AM PDT மதுரை பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கலைஞர் தி.மு.க. என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி உதயம் என்று மதுரையில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நீக்கம் கடந்த ஜனவரி மாதம், மு.க.அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை மதுரை நகர் முழுவதும் ஒட்டினர். இதைத்தொடர்ந்து போஸ்டர் ஒட்டிய தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை மாநகர் தி.மு.க. கலைக்கப்பட்டு, பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.அழகிரியும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பெரும் பரபரப்பு இந்த நிலையில் மு.க.அழகிரி, பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று மு.க.அழகிரி திட்டவட்டமாக கூறியுள்ளார். கொடி ரெடி இதையொட்டி மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மீண்டும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சுவரொட்டியில் ''கலைஞர் தி.மு.க.வின் பொது செயலாளரே'', ''கட்சியும், கொடியும் ரெடி, பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்'' என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் மு.க.அழகிரி நடந்து வருவது போன்ற முழு உருவ படமும், அருகில் துரை தயாநிதியும் மற்றும் தி.மு.க. கொடியின் மத்தியில் கலைஞரின் படமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் மற்றும் சில நிர்வாகிகள் படமும் ஜீவாநகர் 91–வது வார்டு தி.மு.க. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| தென்காசியில் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி Posted: 16 Mar 2014 08:58 AM PDT |
| பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் Posted: 16 Mar 2014 08:57 AM PDT |
| Posted: 16 Mar 2014 08:54 AM PDT |
| இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்கள் நாளை நாடு திரும்புகின்றனர் Posted: 16 Mar 2014 08:47 AM PDT சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 140 தமிழ்க மீனவர்கள் நாளை இந்தியா திரும்புகின்றனர். 116 மீனவர்கள் காரைக்காலுக்கும், 24 மீனவர்கள் மண்படத்திற்கும் நாளை வந்து சேர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக சமீபத்தில் இலங்கை மற்றும் தமிழக சிறையிலிருந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





