Tamil News | Online Tamil News |
- தமிழக பா.ஜ., கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது: நீண்ட இழுபறிக்கு பின் கட்சிகளுடன் உடன்பாடு
- தமிழகம் போல் ஆந்திராவிலும் காங்கிரஸ் தனிமை: தேர்தலில் கூட்டு சேர்க்க கட்சிகள் மறுப்பு
- தமிழகம் முழுவதும் ரூ.6.85 கோடி பறிமுதல் : திரும்ப பெற யாரும் விண்ணப்பிக்கவில்லை
- அடங்க மறுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் : ஊடகங்கள் மீது மீண்டும் விஷம் கக்கினார்
- காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா? ஒன்பது நாளாகியும் தகவல் தெரியாமல் தவிப்பு
- ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வாங்கிக் கொள்ளுங்கள்: விஜயகாந்த் பேச்சால் சர்ச்சை
- முதல்வர் கூறுவது விபரீதமான வேடிக்கை: கருணாநிதி
- தி.மு.க., தேர்தல் அறிக்கை பித்தலாட்டத்தின் உச்சகட்டம்: ஜெ., ஆவேசம்
- திண்ணை பிரசாரத்தில் கலக்க போகும் கழகங்கள் : அரண்டு போயுள்ள பா.ம.க., மற்றும் உதிரி கட்சிகள்
- லாலு மீதான ஊழல் வழக்குகளை கைவிடுவதில் எழுந்தது சர்ச்சை
- மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை
- வாரணாசியில் மோடி: புண்ணிய பூமியில் களம் இறங்குகிறார் : முரளி மனோகர் ஜோஷி கான்பூரில் போட்டி
| தமிழக பா.ஜ., கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது: நீண்ட இழுபறிக்கு பின் கட்சிகளுடன் உடன்பாடு Posted: பல நாட்கள் கஷ்டப்பட்டு, பா.ஜ., கட்டிய கூட்டணி எனும் தேன்கூட்டைக் கலைக்க நடந்த, காங்கிரசின் திரைமறைவு வேலைகள், தோல்வியில் முடிந்தன. 'பா.ஜ., கூட்டணியில் தான் நீடிப்போம்' என, தே.மு.தி.க., நேற்று திட்டவட்டமாக தெரிவித்ததுடன், தேர்தல் பிரசாரத்தில், நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதன் மூலம், கூட்டணியில் நிலவிய குழப்பத்திற்கு, முற்றுப் புள்ளி வைத்துள்ளது.இதையடுத்து, 'இன்று, தே.மு.தி.க.,வுடன் மீண்டும் பேச்சு நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்படும்' என, பா.ஜ., வட்டாரம் உறுதி அளித்தது.சோர்ந்த பா.ஜ.,இன்று, நாளை, இரண்டு நாட்களில் என, ... |
| தமிழகம் போல் ஆந்திராவிலும் காங்கிரஸ் தனிமை: தேர்தலில் கூட்டு சேர்க்க கட்சிகள் மறுப்பு Posted: ஐதராபாத்: "தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால், தன் கட்சியை காங்கிரசுடன் இணைக்கத் தயார்' என, அறிவித்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தற்போது, பா.ஜ.,வுடன், கைகோர்க்க தயாராவதால், தமிழகத்தைப் போல், ஆந்திராவிலும் காங்., தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.தனி மாநிலம்ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடிய, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியான, டி.ஆர்.எஸ்.,சின் தலைவர் சந்திரசேகர ராவ், "தனி மாநில அறிவிப்பை வெளியிட்டால், எங்கள் கட்சியை காங்கிரசுடன் இணைக்கத் தயார்' என, ஏற்கனவே வாக்குறுதி ... |
| தமிழகம் முழுவதும் ரூ.6.85 கோடி பறிமுதல் : திரும்ப பெற யாரும் விண்ணப்பிக்கவில்லை Posted: சென்னை:""தமிழகம் முழுவதும், வாகன சோதனையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, திரும்பப் பெற யாரும் விண்ணப்பிக்கவில்லை,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.தமிழகத்தில், அடுத்த மாதம் 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் பழக்கத்தை, அரசியல் கட்சியினர் துவக்கினர்.அதன்பின், பொதுத் தேர்தல்களிலும், பணம் கொடுக்க துவங்கினர். அனைத்து கட்சியினரும், வாக்காளர்களுக்கு, தங்களால் முடிந்த அளவு, பணம் கொடுக்கின்றனர். இதை தடுக்க, தேர்தல் ... |
| அடங்க மறுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் : ஊடகங்கள் மீது மீண்டும் விஷம் கக்கினார் Posted: பெங்களூரு:"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பேன்' என கூறி, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஊடகங்களுக்கு எதிராக, நேற்று, மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார். ""பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தின் உண்மையான நிலையை படம் பிடித்து காட்ட, ஊடகங்களுக்கு தைரியம் உள்ளதா?'' என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடும் கண்டனம்:டில்லி முன்னாள் முதல்வரும், "ஆம் ஆத்மி' கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், சமீப காலமாக, சர்வாதிகாரி போல, பேசி வருகிறார். நேற்று முன்தினம், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பேசிய அவர், ... |
| காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா? ஒன்பது நாளாகியும் தகவல் தெரியாமல் தவிப்பு Posted: கோலாலம்பூர் : ""சீனா செல்லும் வழியில், மலேசிய பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்,'' என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.ஒரு வாரம் கடந்தும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை.இந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த, சமூக சேவகர், சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடாவில் வசிக்கும், சேலத்தை ... |
| ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வாங்கிக் கொள்ளுங்கள்: விஜயகாந்த் பேச்சால் சர்ச்சை Posted: சென்னை:"ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என, தேர்தல் கமிஷன், மக்களிடம் பிரசாரம் செய்து வரும் நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "இது தொடர்பாக, புகார் வந்தால், ஆய்வு செய்யப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.பணப்புழக்கம் :தமிழகம் முழுவதும், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, நாடு முழுவதும் பேசப்படுகிறது. தேர்தலில், அதிக அளவு பணப்புழக்கம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது.எனவே, இம்முறை லோக்சபா தேர்தலில், ... |
| முதல்வர் கூறுவது விபரீதமான வேடிக்கை: கருணாநிதி Posted: சென்னை:"தமிழகத்தில், தொழில் வளர்ச்சி பெருகிறது என, முதல்வர் ஜெயலலிதா பேசுவது, விபரீதமான வேடிக்கை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா திருப்பூரில் பேசும் போது, தமிழகத்தில் மின் உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெருகிக் கொண்டு வருகின்றன என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளிமாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன; கர்நாடக மாநில முதல்வர் கோவைக்கு வந்து முதலீடுகளை ஈர்க்க, மாநாடு நடத்தியது பற்றி நான் ஏற்கனவே, சுட்டிக் காட்டியிருக்கிறேன். ... |
| தி.மு.க., தேர்தல் அறிக்கை பித்தலாட்டத்தின் உச்சகட்டம்: ஜெ., ஆவேசம் Posted: சென்னை:""தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகள் என்ற பெயரில், கருணாநிதி புளுகு மூட்டைகளை, அவிழ்த்து விட்டு உள்ளார்'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.கருணாநிதி தோல்வி:தூத்துக்குடியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பிரசாரம் செய்தார். பிரசார பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 98 தலைப்புகளில், வாக்குறுதிகள் என்ற பெயரில், கருணாநிதி புளுகு மூட்டை களை அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றின் மீது, கடந்த, 10 ஆண்டுகளில், தி.மு.க., எந்த நடவடிக்கையும் ... |
| திண்ணை பிரசாரத்தில் கலக்க போகும் கழகங்கள் : அரண்டு போயுள்ள பா.ம.க., மற்றும் உதிரி கட்சிகள் Posted: தர்மபுரியில், பா.ம.க.,வின் வியூகத்தை முறியடிக்க, களத்தில் இறங்கிய, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் உட்பட, பல்வேறு கட்சியினரும், இரவு பகல் பாராமல், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதே முறையை மற்ற தொகுதிகளில் பின்பற்றுவது குறித்தும், தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட, 10 தொகுதிகளுக்கு, பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்டவர்களை வேட்பாளராக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தர்மபுரி தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும், பா.ம.க., இளைஞர் அணி தலைவரான, அன்புமணி தான், தர்மபுரியில் ... |
| லாலு மீதான ஊழல் வழக்குகளை கைவிடுவதில் எழுந்தது சர்ச்சை Posted: புதுடில்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் மீதான, ஊழல் வழக்குகளை கைவிடுவது தொடர்பாக, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கும், சி.பி.ஐ., இயக்குனருக்கும், கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரான, லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில், முறைகேடு செய்ததாக, புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, லாலு பிரசாத்துக்கு எதிராக, பல வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இவற்றில் ஒரு வழக்கில், அவருக்கு, சமீபத்தில், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தற்போது, ... |
| மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை Posted: புதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது.டில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். இந்த வழக்கில், ஒரு குற்றவாளி, டில்லி திகார் சிறையில், தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மேலும் நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதை டில்லி ஐகோர்ட்டும் உறுதி ... |
| வாரணாசியில் மோடி: புண்ணிய பூமியில் களம் இறங்குகிறார் : முரளி மனோகர் ஜோஷி கான்பூரில் போட்டி Posted: புதுடில்லி: 'பா.ஜ., பிரதமர் வேட்பாளரான மோடி, உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார்' என்று நேற்றிரவு கட்சித்தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.குஜராத் முதல்வரான நரேந்திர மோடி, பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே, அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். தன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடுவார் என்று ஒரு தரப்பினரும், உ.பி., மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்தனர்.'உ.பி., மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |