Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மாயமான மலேசிய விமானத்தை இந்தியா தீவிரமாக தேடுகிறது கூடுதல் கப்பல், விமானத்தை களமிறக்கியது

Posted: 15 Mar 2014 09:19 AM PDT

புதுடெல்லி,

மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவவேண்டும் என்று மலேசியா கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது போர் கப்பல்கள், விமானங்களை அந்தப்பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

இந்தியா தனது தேடுதல் வேட்டையை நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இந்தத்தேடுதல் பணியை தீவிரப்படுத்தும் விதத்தில் கூடுதல் போர் விமானங்களையும், கப்பல்களையும் இந்தியா ஈடுபடுத்தியது.

அந்த வகையில், சமீபத்தில் வாங்கிய 'பி–8ஐ' அதிநவீன விமானங்கள், 'சி130 ஜே' விமானம் ஆகியவற்றை வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலின் மேலே தேடும் பணியில் நேற்று இந்தியா களம் இறக்கியது. கடற்படை, கடலோரக் காவல் படையின் டோர்னியர் விமானமும், மாயமான விமானத்தை தேடுகிறது.

கடலோரக் காவல் படையும், கடற்படையும் 6 போர்க்கப்பல்களை மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூடுதலான விமானங்கள், கப்பல்களையும் ஈடுபடுத்த இந்தியா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

image: 

category:

News Group Category:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 19–ந்தேதி வெளியிடப்படும் திருச்சியில், தா.பாண்டியன் பேட்டி

Posted: 15 Mar 2014 09:10 AM PDT

திருச்சி

''இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 19–ந்தேதி வெளியிடப்படும்'' என திருச்சியில் தா.பாண்டியன் கூறினார்.

மாநிலக்குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாலையில் கூட்டம் முடிந்ததும் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

19–ந்தேதி வேட்பாளர்கள் பட்டியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் வேட்பாளர்கள் பெயரை மாவட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது. மாவட்டக்குழுவின் பரிந்துரை 17–ந்தேதி (அதாவது நாளை) மாநில நிர்வாக குழுவில் கூடி முடிவெடுக்கப்படும். மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பரிந்துரையை டெல்லியில் உள்ள மத்திய தலைமைக்கும் அனுப்பி ஒப்புதல் பெறுவோம். டெல்லி தலைமையில் ஒப்புதல் பெற்ற பின் 19–ந்தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் நாங்கள் போட்டியிடும் 18 தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியையோ எங்கும், எதற்கும் ஆதரிப்பதில்லை. மற்ற கட்சியினர் ஆதரவு கேட்டு வந்தால் அவர்களது கொள்கை, தகுதி பொறுத்து ஆதரவு தெரிவிப்போம். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் தங்களை ஆதரிக்குமாறு இதுவரை யாரும் கேட்கவில்லை. அதற்கான கேள்வியும் எழவில்லை. ஆம் ஆத்மி உள்பட யாராக இருந்தாலும் பரிசீலனை செய்வோம்.

கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?

அ.தி.மு.க.வுடான கூட்டணி நன்றாக தான் இருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர் தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 2 மாதங்களாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் போது மத்தியில் அமைகிற ஆட்சியில் பங்கேற்போம் என ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் அவர் பா.ஜ.க.வோடு சேரும் முயற்சியில் உள்ளார்.

எந்த கூட்டத்திலாவது பா.ஜ.க.வை தாக்கி ஜெயலலிதா பேசியுள்ளாரா?. எந்த கொள்கையை எடுத்தாரோ? அந்த முடிவில் இருந்து அவர் தடம்புரண்டு இருக்கிறார். அரசியல் நிலைப்பாட்டில் இருந்து அவர் மாறியிருக்கிறார். இதில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தொகுதி பிரச்சினைக்காக நாங்கள் வெளியேறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு வினியோகிக்கப்படும் துண்டுபிரசுரங்களில் கூட்டணி கட்சி தலைவர்களில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் படம் உள்ளதே? என்று தா.பாண்டியனிடம் நிருபர்கள் கேட்ட போது, ''அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தலைமை விரும்பவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இல்லை என அவர் முறையாக அறிவிக்காததால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்று பிரசுரம் வினியோகிக்கப்படுகிறது'' என்றார்.
 

category:

News Group Category:

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. விஜயகாந்துக்கு நரேந்திர மோடி நன்றி

Posted: 15 Mar 2014 08:17 AM PDT

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து போட்டியிடுகிறது.  இதற்கான உடன்பாடு இன்று ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது பாரதீய ஜனதா கூட்டணியில்  இணைந்ததற்காக விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அவர் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார்கள்.

இதேபோல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,  பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாரதீய ஜனதா கூட்டணியில்  சேர்ந்ததற்காக நன்றி தெரிவித்ததோடு, அவர் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தனர்.

image: 

category:

News Group Category:

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.விஜயகாந்துக்கு நரேந்திர மோடி நன்றி

Posted: 15 Mar 2014 08:13 AM PDT

Flash News Text: 
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.விஜயகாந்துக்கு நரேந்திர மோடி நன்றி

தேர்தல் கருத்து கணிப்புகள் வெறும் காமெடி ராகுல்காந்தி

Posted: 15 Mar 2014 08:03 AM PDT

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் நகைச்சுவை தான். காங்கிரஸ் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

100 இடம் கிடைத்தால்?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி Ôகூகுள்Õ வலைத்தளம் மூலம் கட்சி தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த முறையிலான கலந்துரையாடலை ஒரு காங்கிரஸ் தலைவர் கையாள்வது இதுவே முதல்முறை.

கருத்து கணிப்புகள் கூறுவது போல காங்கிரசுக்கு 100 இடங்கள் கிடைத்தால் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? என்று ஒரு தொண்டர் கேட்டார். அதற்கு ராகுல் அளித்த பதில் வருமாறு:

200-க்கு மேல் பெறுவோம்

காங்கிரசுக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் நகைச்சுவை தான் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமே உங்களை நம்பிக்கை இழக்கச் செய்வது தான். நீங்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்தால், நாம் அவர்களை தூக்கி எறிவோம்.
அப்படி எந்த சந்தேகமும் உங்கள் எண்ணத்தில் இல்லாமல் இருந்தால், நாம் 200 இடங்களுக்கு மேல் பெறுவோம். அவர்களது பிரசாரம் முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவது தான்.

கடினமான தேர்தல்

முதலில் நாம் 2004-ம் ஆண்டு தேர்தல் போட்டியிட்டபோது, ஒவ்வொரு கருத்து கணிப்பும் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்று தான் கூறியது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2009 தேர்தலிலும் கருத்து கணிப்புகள் நாம் தூக்கி எறியப்படுவோம் என்றது. நாம் இரட்டிப்பு வெற்றி பெற்றோம்.

இப்போது நாம் 3-வது தேர்தலை சந்திக்கிறோம். அவர்கள் காங்கிரஸ் நன்றாக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். கருத்துக்கணிப்புகள் தான் சட்டம் என்ற மனோபாவத்தில் நாம் தொடங்கக் கூடாது. நாம் கடினமான தேர்தலை சந்திக்கிறோம். எதிர்க்கட்சியின் வலையில் விழுந்துவிடக் கூடாது. முடங்கி இருக்காமல் வெளியில் வந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மோடி ஆட்சிக்கு வந்தால்...?

மோடியும் அவரது கட்சியும் ஆட்சிக்கு வந்தால், மதவாத சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் எப்படி போராடும்? என்று மற்றொரு தொண்டரின் கேள்விக்கு ராகுல் காந்தி கூறியதாவது:

நாம் தான் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறோம். அதனால் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்ற கேள்வியே இல்லை. அன்பு தான் எப்போதும் வெறுப்பை தோற்கடிக்கும். வெறுப்புணர்ச்சி சட்டத்தை, அன்பை வென்றதாக வரலாற்றில் ஒரு உதாரணம் கூட இல்லை. எனவே அன்பு இந்த முறையும் வெறுப்புணர்ச்சியை துடைத்தெரியும் என்றார்.

கூட்டணி கிடைக்காதது ஏன்?

சில மாநிலங்களில் வாக்குகளை அதிகம் பெற காங்கிரஸ் தன்னை எப்படி வலுப்படுத்தப் போகிறது? என்ற தொண்டரின் கேள்விக்கு, தமிழ்நாடு, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இதுÕÕ என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த முறை காங்கிரஸ் எந்த ஒரு கட்சியையும் கூட்டணி சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது ஏன்? என்ற தமிழக தொண்டர் ஒருவரின் கேள்விக்கு

ராகுல்காந்தி கூறியதாவது:

எதிர்காலத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நாம் ஒரு புதிய மாற்று சக்தியை, இளம் மாற்று சக்தியை உருவாக்க முடியும். நாம் அங்கு உண்மையில் நன்றாக செயல்பட்டு வருகிறோம். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஒரு நீண்டகால திட்டத்தை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

category:

News Group Category:

ஹோலி பண்டிகை: கவர்னர் சங்கரநாராயணன் வாழ்த்து

Posted: 15 Mar 2014 07:16 AM PDT

மும்பை,

மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் வெளியிட்ட ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2 வாரங்களாக மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது. அதனால் விலைமதிப்பற்ற சில மனித உயிர்களை நாம் இழந்துள்ளோம். அதேபோல் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் நாசமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே மராட்டிய மக்கள் இந்த ஹோலி பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாட வேண்டுகிறேன். இந்த பண்டிகை மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தர வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் என் ஹோலி வண்ணத்திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

category:

News Group Category:

மத்திய மந்திரி மணீஷ்திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 15 Mar 2014 07:11 AM PDT

புதுடெல்லி,

மத்திய  தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஷ்திவாரி  தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இருதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  48 வயதான மணீஷ்திவிவாரி கடந்த சில நாட்களாக உடல்நலம் இல்லாமல் அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் தொடர்பாக சிகிச்சை பெற்று  வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாப் மாநிலம் லூதியானர தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தொகுதியை மாற்றும் முடிவை கட்சி தலைமை எடுத்த வருவதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

பீகார் மாநிலத்தில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை எதிர்த்து சட்டமன்ற சபாநாயகர் போட்டி

Posted: 15 Mar 2014 06:37 AM PDT

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பாராளுமன்றத்தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 38 இடங்களில் போட்டியிடுகிறது. 2 இடங்களில் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய ஜனதாதளம் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, சசராம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை எதிர்த்து, அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் உதய் நாராயண் சவுத்திரி போட்டியிடுகிறார். இதேபோல், ஜாமூய், அவுரங்காபாத், கராகட், கயா மற்றும் நவடா ஆகிய இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஐக்கிய ஜனதாதளம் அறிவித்துள்ளது.

மேலும், குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

category:

News Group Category:

பால் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

Posted: 15 Mar 2014 06:09 AM PDT

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனியார் பால் நிறுவனங்கள் எல்லாம், கடந்த ஜனவரி மாதம் தான் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியிருந்தன. தற்போது மீண்டும் ரூ.2 உயர்த்தி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் ஆவின் பால் விற்பனை பெரும்பங்கு வகித்தாலும், தனியார் பாலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் தினசரி 13 லட்சம் லிட்டர் தானியார் பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல சிறிய, பெரிய டீ கடைகள், ஓட்டல்கள் தனியார் பாலைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல, பாக்கெட் தயிர், கப் தயிர் விலையும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்தகைய விலை ஏற்றம் ஏழை-எளிய மக்களை மிகவும் பாதிக்கும்.

எனவே மாநில அரசு தலையிட்டு, தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

ஊழலை எதிர்ப்தற்கான ஒரே சக்தி நரேந்திரமோடி தான் வேலூர் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரம்

Posted: 15 Mar 2014 06:02 AM PDT

வேலூர்,

ஆற்காட்டில் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறியதாவது; குஜராத்தில் 24 மணிநேரம் மின்சாரம் இருக்கிறது தமிழ்நாட்டில் மின்சாரம் இன்றி தவித்து வருகிறது. தமிழகத்தில் தண்ணீர்,மின்சாரம் இல்லாமல் விவசாயிகள்  எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் லோக் அயுக்தா கொண்டுவர தி.மு.க வும் அ.தி.மு.க.வும் எதிர்த்து வருகிறது. வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் வறுமையை ஏன் ஒழிக்க முடியவில்லை என்று கூறினார். ஊழலை எதிர்ப்தற்கான ஒரே சக்தி நரேந்திரமோடி தான் அவர்களுக்கு நீங்கள் ஓட்டுபோடவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுகொண்டார்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™