Tamil News | Online Tamil News |
- பிரதமர் - அழகிரி திடீர் சந்திப்பால் பரபரப்பு: தி.மு.க., - காங்., பிரிவிற்காக வருத்தம்
- மக்கள் வரிப்பணத்தில் எம்.பி.,க்கள் அனுபவிக்கும் 'அடேங்கப்பா...' சலுகைகள்!
- இலங்கையில் நடந்த சண்டை தமிழர்களுக்கு எதிரானதல்ல: அதிபர் ராஜபக்சே விளக்கம்
- தேவயானி மீதான 'விசா' மோசடி வழக்கு தள்ளுபடி
- மாயமான மலேசிய விமானம் எங்கே? கூடுதலாக பறந்ததாக புதிய தகவல்
- தமிழக பா.ஜ., கூட்டணி: தவிக்கும் தலைவர்கள்
- காங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி
- ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்': ஜெயலலிதா கடும் தாக்கு
- வாரிசுகளுக்கு சீட் வழங்காதது ஏன்: கருணாநிதி விளக்கம்
| பிரதமர் - அழகிரி திடீர் சந்திப்பால் பரபரப்பு: தி.மு.க., - காங்., பிரிவிற்காக வருத்தம் Posted: தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி, நேற்று டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சி அலையையும், அரசியல் வட்டாரத்தில், திடீர் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. எதிர்கால நடவடிக்கை குறித்து, இரண்டு மாதத்தில் முடிவு செய்யஇருப்பதாக கூறியிருந்த அழகிரி, இப்போதே, தன் ஆட்டத்தை துவங்கி விட்டார் என்றும், அதற்கான அறிகுறிகள் தான் இந்த சந்திப்புகள் என்றும், அவரது ஆதரவு வட்டாரம் தெரிவிக்கிறது.கட்சித் தலைவரும், தந்தையுமான, கருணாநிதி, தன்னை, கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்த ... |
| மக்கள் வரிப்பணத்தில் எம்.பி.,க்கள் அனுபவிக்கும் 'அடேங்கப்பா...' சலுகைகள்! Posted: பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும், லோக்சபா, எம்.பி.,க்கள், அவர்கள் பதவி காலத்திலும், அதன் பிறகும், அனுபவிக்கும் சலுகைகளைப் பார்க்கும் போது, ஏழைகள் நிறைந்த நம் நாட்டின், மக்கள் பிரதிநிதிகள், எத்தகைய ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது தெரிய வருகிறது.எம்.பி.,க்களுக்கு, மாத சம்பளம், 16 ஆயிரம் ரூபாய்; தினப்படி, 1,000 ரூபாய்; பென்ஷன், குறைந்தபட்சம், 8,000 ரூபாய், தொகுதி நிதி, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இது போக, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இலவசமாக, 'ஏசி' முதல் வகுப்பு ரயில் பயணம். குடும்பத்தினருக்கும், இலவச விமான ... |
| இலங்கையில் நடந்த சண்டை தமிழர்களுக்கு எதிரானதல்ல: அதிபர் ராஜபக்சே விளக்கம் Posted: கொழும்பு: இலங்கையில் நடந்த போர், விடுதலை புலிகளுக்கு எதிரானது; தமிழர்களுக்கு எதிரானதல்ல,'' என, அந்நாட்டு அதிபர், ராஜபக்சே தெளிவு படுத்தியுள்ளார்.இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, 30 ஆண்டுகளாக நடந்த சண்டையில், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது மனித உரிமை மீறல் நடந்ததாகவும், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவர், நவநீதம் பிள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் தற்போது நடக்கும், சர்வதேச மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ... |
| தேவயானி மீதான 'விசா' மோசடி வழக்கு தள்ளுபடி Posted: நியூயார்க்: அமெரிக்காவுக்கான, மாஜி துணை தூதர், தேவயானி மீதான, விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம், ரத்து செய்துள்ளது.அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக, தேவயானி கோப்ரகாடே, 39, என்ற, பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரி பணியாற்றினார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, 'விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், தேவயானியை, அமெரிக்க போலீஸ், கடந்த டிசம்பரில், கைது செய்தது. கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட தேவயானியின், உடைகளை களைந்து, போலீசார் சோதனை செய்தனர். ... |
| மாயமான மலேசிய விமானம் எங்கே? கூடுதலாக பறந்ததாக புதிய தகவல் Posted: கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து, சீனா செல்லும் வழியில், மாயமான, மலேசிய நாட்டின் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான, தகவல் துண்டிக்கப்பட்ட பிறகும், நான்கு மணி நேரம் பறந்துள்ளதாக, தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்புகின்றனர். இதனால், அந்த விமானத்தின் நிலை குறித்து, குழப்பமான நிலை நிலவுகிறது.மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, 'மலேசியன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான, பயணிகள் விமானம், 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன், கடந்த, 7ம் தேதி இரவு, சீன தலைநகர், பீஜிங் நோக்கி, புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு ... |
| தமிழக பா.ஜ., கூட்டணி: தவிக்கும் தலைவர்கள் Posted: நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே, தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க., - 14, பா.ஜ., - 8, பா.ம.க., - 8, ம.தி.மு.க., - 7 என, தொகுதி பங்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில், என்.ஆர்.காங்கிரஸ், கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், எந்த கட்சிக்கு, எந்தெந்த தொகுதி என்பதை முடிவு செய்வதில் தான் சிக்கல் தொடர்கிறது. இதில், உடன்பாடு ஏற்படாததால், கூட்டணி அறிவிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது.கண்டறிவதில் சிக்கல்: தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில், லோக்சபா ... |
| காங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி Posted: ''தி.மு.க., கூட்டணியில், கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் அளிக்காதது அதிருப்தி அளிக்கிறது. காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைக்காவிட்டால், குறைவான ஓட்டுக்களில் தோற்கும் நிலை ஏற்படும்,'' என, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவரும், கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம் கூறினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், தி.மு.க.,வின் ஆசிபெற்ற கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:முன்னாள் பிரதமர் இந்திரா, அவசரநிலையை பிரகடனம் செய்த போது, தி.மு.க.,வினர், கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்கு எதிராக, பெரும் ... |
| ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்': ஜெயலலிதா கடும் தாக்கு Posted: ஈரோடு: தமிழகத்தில், பல முனை போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசார உரையில், மாற்றம் செய்துள்ளார். நேற்று, பேசும் போது, தி.மு.க.,வில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசா, தயாநிதி, ஆகியோர் மீண்டும் போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதை, கடுமையாக சாடினார்.ஈரோடு தொகுதியில், ஜெயலலிதா பேசியதாவது: மத்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களில், மிகப் பெரியது, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல். இது தொடர்பாக, ராசா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; நீதிமன்ற விசாரணை, நடந்து வருகிறது. 'குற்றம் சாட்டப்பட்டவர்களை, தேர்தலில் போட்டியிட, ... |
| வாரிசுகளுக்கு சீட் வழங்காதது ஏன்: கருணாநிதி விளக்கம் Posted: சென்னை: முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, வேலுவின் வாரிசுகளுக்கு, 'சீட்' கொடுக்க முடியாதது ஏன் என்பதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை: துரைமுருகன் என்னுடன், 24 மணி நேரம் இருப்பவர். அவர் மகனுக்கு வேலூர் தொகுதியை கேட்டு, தி.மு.க., வினர் விருப்பம் தெரிவித்தனர். 'அத்தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி; தற்போது எம்.பி.,யாக இருப்பவரே, மீண்டும் போட்டியிட விரும்புகிறார்' என, காதர்மொய்தீன், கேட்டபோது, மறுக்க முடியவில்லை. தஞ்சாவூரில் போட்டியிட விருப்பம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |