Tamil News | Online Tamil News |
- வாஜ்பாய் போல் மோடிக்கும் உதவி: லால்ஜி தாண்டன்
- சிவகங்கை தி.மு.க., வேட்பாளர்: காங்.,க்கு 'செக்' வைத்த கருணாநிதி
- கூட்டணிக்கு கட்சிகளே இல்லாமல் தமிழக காங்கிரஸ் பரிதாபம்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கருணாநிதி 'ஷாக்!'
- ஊழல் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை முடிக்க கெடு: ஓராண்டுக்குள் தீர்ப்பளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ராகுல் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவரா?பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி
- 'வீடியோ' பதிவில் அம்பலம்: விளம்பர பிரியர் கெஜ்ரிவால்
- வேட்பாளர் பட்டியல் மாற வாய்ப்பு: கருணாநிதி அறிவிப்பு
- தி.மு.க.,வில் பணம் படைத்தவர்களுக்கு 'ஜாக்பாட்':தஞ்சாவூரை பழனி மாணிக்கத்திடமிருந்து பறித்தார் டி.ஆர்.பாலு
- 'காங்., தனித்து விடப்பட்டதற்கு ஆசாத்தே காரணம்'ஆத்திரத்தில் பொங்கும் தமிழக தலைவர்கள்
- 'டாடா' மூடில் பா.ம.க., - பா.ஜ., 48 மணி நேர கெடு
- அரசியல் களத்தில் எதிரிகள்: சொந்த தொகுதியில் நண்பர்கள்
- மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை
| வாஜ்பாய் போல் மோடிக்கும் உதவி: லால்ஜி தாண்டன் Posted: லக்னோ: ''லக்னோ தொகுதியில், வாஜ்பாய் வெற்றிக்கு எப்படி பாடுபட்டேனோ, அது போல், இந்தத் தொகுதியில், மோடி போட்டியிட்டால், அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என, லக்னோ தொகுதியின், லோக்சபா, எம்.பி.,யும், உ.பி., மாநில, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, லால்ஜி தாண்டன் கூறினார்.பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான, முன்னாள் பிரதமர், வாஜ்பாய், உத்தர பிரதேசத்தின், லக்னோ லோக்சபா தொகுதியில் இருந்து, பல முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சார்பாக, அந்த தொகுதியில், நலப் பணிகளை மேற்கொண்டு, நல்ல பெயரை சம்பாதித்தவர், லால்ஜி தாண்டன். கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், ... |
| சிவகங்கை தி.மு.க., வேட்பாளர்: காங்.,க்கு 'செக்' வைத்த கருணாநிதி Posted: சிவகங்கை: சிவகங்கையில், தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பின் மூலம், அமைச்சர் சிதம்பரத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி 'செக்' வைத்துள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.சிவகங்கை, தி.மு.க., வேட்பாளராக மாஜி எம்.எல்.ஏ., சுப.துரைராஜ் அறிவிக்கப்பட்டார். காங்., தியாகியான இவரது தந்தை சுப்பையா அம்பலம், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். காங்., தனித்து போட்டியிடும் என, நிதி அமைச்சர் சிதம்பரம், நாசூக்காக தெரிவித்து வந்தார். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர், சிவகங்கை தொகுதியில், காங்., செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில், தொடர்ந்து மாநாடுகளை நடத்தியுள்ளனர். ... |
| Posted: தி.மு.க., தலைமையகமான, சென்னை அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவர், கருணாநிதி நேற்று, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, அதிரடியாக வெளியிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார்.அதனால், கூட்டணிக்கு கட்சிகளே இல்லாமல், தமிழக காங்கிரஸ், தனிமரமாக பரிதாபமாக நிற்பதோடு, தனித்துப் போட்டியிடும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 24ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் துவக்கி விட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலரான, ... |
| ஊழல் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை முடிக்க கெடு: ஓராண்டுக்குள் தீர்ப்பளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி: 'ஊழல் கறை படிந்த, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விசாரணையை, ஒரு ஆண்டுக்குள் முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்' என, கீழ் கோர்ட்டுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.அவசர சட்டம்: 'கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை, தண்டனை வழங்கப்பட்ட உடனேயே, பறிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை, நீர்த்து போகச் செய்வதற்காக, மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பிக்க முயற்சித்தது. ... |
| ராகுல் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவரா?பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி Posted: பாட்னா : ''காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல், செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல் பேசுகிறார். கடந்த, 10 ஆண்டு கால, காங்., ஆட்சியில், ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து தெரியாதவர் போல், மற்ற கட்சியினரை, அவர் குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பீகார் மாநிலம், பர்னேராவில் நடந்த, பிரசாரக் கூட்டத்தில், நேற்று பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:எவரெஸ்ட் அளவுக்கு அகம்பாவம்:பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, ... |
| 'வீடியோ' பதிவில் அம்பலம்: விளம்பர பிரியர் கெஜ்ரிவால் Posted: புதுடில்லி:'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், விளம்பர பிரியர் என்பது, சமூக வலை தளங்களில், வெளியாகியுள்ள, 'வீடியோ' பதிவின் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது. 'ஏழைகள் மற்றும் சாமானிய மக்களுக்காக பாடுபடுவேன்' என, அறிவித்து, கட்சியை துவக்கிய கெஜ்ரிவால், 'பப்ளிசிட்டி'க்காக, எதையும் செய்வார் என்பது, அந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது' என, அதைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.திரும்ப திரும்ப:'யூடியூப்' சமூக வலைதளத்தில், வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தனியார், 'டிவி' ஒன்றின் நிகழ்ச்சியில், அந்த, 'டிவி' நிருபருடன், கெஜ்ரிவால் ... |
| வேட்பாளர் பட்டியல் மாற வாய்ப்பு: கருணாநிதி அறிவிப்பு Posted: 'அழகிரி பற்றி, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அறிவாலயத்தில், அவரது பேட்டி:தி.மு.க., துவக்கத்தில் இருந்து இதுவரையில், ஒவ்வொரு அசைவும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு இயக்கம். நான் இப்போது படிக்கும் இந்தப் பட்டியல், முற்றிலும் முழுமையானது என, நான் சொல்ல மாட்டேன்; ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக் கூடும். வந்தால், தலைமை நிலையத்தின் சார்பில், அந்தத் திருத்தங்களை வெளியிட்டு, அதுவும் இந்தப் பட்டியலில் இணையக் கூடும். கூட்டணிக் கட்சிகளுக்கு, ஐந்து தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளது. மீதி, 35 ... |
| Posted: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய ஐந்து தொகுதிகள் போக, மீதமுள்ள, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் பட்டியலில், பணம் படைத்தவர்களுக்கே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேட்பாளர்கள் பட்டியலில், 100க்கு, 100 சதவீதம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'கை' ஓங்கியுள்ளதால், இரண்டாம் கட்டத் தலைவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.35 தொகுதிகளுக்கு...:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றின், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ... |
| 'காங்., தனித்து விடப்பட்டதற்கு ஆசாத்தே காரணம்'ஆத்திரத்தில் பொங்கும் தமிழக தலைவர்கள் Posted: கூட்டணி எப்படியும் அமைந்துவிடும் என்று, கடைசி வரை, நம்பிக்கை கொண்டிருந்த சூழ்நிலையில், தங்களை கழற்றி விட்டுவிட்டு, வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., அறிவித்து விட்டதால், காங்., ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துஉள்ளது. கூட்டணி அமையாமல் போனதற்கு, குலாம்நபி ஆசாத்தின், குளறுபடியான அணுகுமுறையே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.உச்சகட்ட வேலைகள்:பொதுக்குழுவில், என்ன தான் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, தி.மு.க., அறிவித்தாலும், கடைசி நேரத்தில், எப்படியும் சூழ்நிலைகள் மாறும் என்று, எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலின் மட்டுமே, கடும் எதிர்ப்பு காட்டிக் ... |
| 'டாடா' மூடில் பா.ம.க., - பா.ஜ., 48 மணி நேர கெடு Posted: தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்; அதை ஏற்று, 12ம் தேதிக்குள், கூட்டணி முடிவை வெளியிட வேண்டும் என, அக்கட்சிக்கு, பா.ஜ., கெடு விதித்துள்ளது. அதேநேரத்தில், 12 தொகுதிகள் கேட்டு, பட்டியல் கொடுத்த, பா.ம.க., தற்போது, 10 தொகுதிகள் வேண்டும் என்றும், அந்த பத்தும், அக்கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும், ஒற்றைக்காலில் நிற்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு, தீர்வு காண, 12ம் தேதி வரை, அக்கட்சிக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.நீண்ட இழுபறிக்கு பின், தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான ... |
| அரசியல் களத்தில் எதிரிகள்: சொந்த தொகுதியில் நண்பர்கள் Posted: உத்தர பிரதேச மாநிலத்தில், காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், எதிரெதிர் அணிகளாக இருந்தாலும், சோனியா மற்றும் முலாயம் சிங் குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதிகள் விஷயத்தில், இரு கட்சியினரும் நண்பர்களாகவே உள்ளனர்.அதாவது, முலாயம் சிங் போட்டியிடும், மெயின்புரி மற்றும் அவரின் மருமகளும், முதல்வர், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் வெற்றி பெற்ற, கன்னவ்ஜி தொகுதியிலும்; ராகுலின் அமேதி மற்றும் சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், இரு குடும்பத்தினரும் ஒருபோதும், நேருக்கு நேர் மோதிக் கொண்டதே இல்லை.குறிப்பாக, சோனியா மற்றும் ராகுலை எதிர்த்து, ... |
| மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை Posted: கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து, 239 பேருடன், சீனாவுக்கு சென்ற பயணிகள் விமானம் மாயமாகி, மூன்று நாட்களாகியும், அதன் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் நிலை குறித்து, தீவிரமாக ஆராய்ந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |