Daily Thanthi |
- மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது; காங்கிரஸ் கட்சி
- மும்பை ரெயில்களில் ஓசி பயணம் செய்த 3 ஆயிரத்து 397 பேர் பிடிபட்டனர்
- கர்நாடக ஜனதா கட்சியில் இருந்த நடிகை சுருதி அதிருப்தி
- உடுப்பி–சிக்மகளூர் பாராளுமன்ற தொகுதியில் ஷோபா போட்டி?
- தானேவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணி
- பெண்கள் மெழுகுவார்த்தியை ஏந்தி சென்ற காட்சி
- அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மகளிர் தினம்
- மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டினத்தை கெஜ்ரிவால் பயன்படுத்திய காட்சி
- மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம்
- காங்கிரசில் சேருகிறார் இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கனி
| மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது; காங்கிரஸ் கட்சி Posted: 08 Mar 2014 07:37 AM PST புதுடெல்லி, மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. முதல் வேட்பாளர் பட்டியலில் 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளிட்டுள்ளது. வாஜ்பாயின் உறவினருக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது காங்கிரஸ் கட்சி. முத்ல் வேட்பாளர் பட்டியலில் சபாநாயகர் மீராகுமார் உட்பட 28 பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி சீட் வழங்கி உள்ளது. நந்தன் நீல்கனிக்கு பெங்களூர் தெற்கு பகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரெபரேலியிலும் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியிலில் 35 சதவீதனர் 50 வயதுக்கு உட்பட்டோர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. image: category:Tagging:News Group Category: |
| மும்பை ரெயில்களில் ஓசி பயணம் செய்த 3 ஆயிரத்து 397 பேர் பிடிபட்டனர் Posted: 08 Mar 2014 07:36 AM PST மும்பை, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 36 மணி நேரத்தில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 3 ஆயிரத்து 397 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. பெருகும் ஓசி பயணம் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம்செய்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டதாக புகார்கள் வந்து குவிந்தது. இதையடுத்து மேற்கு ரெயில்வே மும்பை மண்டல மேலாளர் ஷைலேந்திரகுமார் தலைமையில் 261 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் 32 ரெயில்வே போலீசாரின் துணையுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்தேரி ரெயில் நிலையம் முதல் போரிவிலி ரெயில் நிலையம் வரை இந்த சோதனை நடைபெற்றது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் டிக்கெட் பரிசோதகர்கள் அதிகாரிகளின் தலைமையில் அனைத்து வாசல் பகுதி மற்றும் நடைமேடைகளில் நின்று ஒருவரை கூட விடாமல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 36 மணி நேரத்தில் டிக்கெட் இன்றி ஓசி பயணம் செய்த 3 ஆயிரத்து 397 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. வரும் நாட்களிலும் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் இது போன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறினர். image: category:Tagging:News Group Category: |
| கர்நாடக ஜனதா கட்சியில் இருந்த நடிகை சுருதி அதிருப்தி Posted: 08 Mar 2014 07:01 AM PST பெங்களூர் பா.ஜனதாவில் முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்று அதிருப்தி எழுந்தது. எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்த நடிகை சுருதியும் தனது வேதனையை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'பெரிய தலைவர் ஒருவர் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது சகஜமாக இருக்கலாம். ஆனால், அவரை நம்பி வந்த நேர்மையான தொண்டர்களின் நிலை என்ன? எடியூரப்பா கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய குறுகிய நாட்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதும் தொண்டர்கள் மனதைரியம், உற்சாகத்துடன் செயல்பட்டனர். ஆனால், இப்போது அவர்களுக்கு உரிய பொறுப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். எங்கு செல்வது, என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் உள்ளனர். எப்படி இருந்தாலும் தொண்டர்களை எடியூரப்பா கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். image: category:Tagging:News Group Category: |
| உடுப்பி–சிக்மகளூர் பாராளுமன்ற தொகுதியில் ஷோபா போட்டி? Posted: 08 Mar 2014 06:52 AM PST பெங்களூர், பெங்களூர் வடக்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்–மந்திரி சதானந்த கவுடா, முன்னாள் துணை முதல்–மந்திரி அசோக், முன்னாள் மந்திரி ஷோபா ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இறுதியில், அந்த தொகுதி சதானந்த கவுடாவுக்கு ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடுப்பி–சிக்மகளூர் அல்லது மைசூர் தொகுதியில் போட்டியிடும்படி ஷோபாவிடம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் அறிவுறுத்தினர். அதை பரிசீலித்து உடுப்பி–சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட ஷோபா விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து ஷோபாவிடம் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் தலைவணங்குவேன். உடுப்பி–சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை' என்று கூறினார். image: category:Tagging:News Group Category: |
| தானேவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணி Posted: 08 Mar 2014 06:36 AM PST |
| பெண்கள் மெழுகுவார்த்தியை ஏந்தி சென்ற காட்சி Posted: 08 Mar 2014 06:31 AM PST |
| அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மகளிர் தினம் Posted: 08 Mar 2014 06:23 AM PST |
| மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டினத்தை கெஜ்ரிவால் பயன்படுத்திய காட்சி Posted: 08 Mar 2014 06:21 AM PST |
| மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் Posted: 08 Mar 2014 06:18 AM PST |
| காங்கிரசில் சேருகிறார் இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கனி Posted: 08 Mar 2014 06:10 AM PST பெங்களூர், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கனி நாளை காங்கிரசில் சேருகிறார்.இந்த தகவலை அவர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். நந்தன் நீலகனி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. நான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடபோவதால் நான் காங்கிரஸ்சில் இணைய விரும்பதாக கூறினார். பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதால் அதை சட்டபடி நான் மேற்கொள்வேன் என்று நந்தன் நீல்கனி கூறினார். image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




